வழக்கம் போல் ஶ்ரீராமர் படம் மேலே
கீழே மற்ற விக்ரஹங்கள்
பிள்ளையார்கள் மூணு பேர் அலங்கரிக்கப்பட்டு உட்கார்ந்திருக்காங்க. ஒண்ணு பூர்விகப் பிள்ளையார் வலப்பக்கம். நடுவில் களிமண் பிள்ளையார். இடப்பக்கம் வெள்ளை உலோகப்பிள்ளையார்.
கீழே நிவேதனங்கள், சாதம் பருப்பு, பாயசம், தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை, உளுந்துப் பூரணக் கொழுக்கட்டை இட்லி, வடை அப்பம், பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு. நிவேதனங்களில் இருந்த கரண்டியை நினைவா தளிர் சுரேஷை நினைத்துக் கொண்டே எடுத்துத் தனியாக வைத்தேன். :)
கற்பூர தீபாராதனை!
பிள்ளையார் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அருள்வாராக!
அருமை !
ReplyDeleteகொழுக்கட்டை தைரியமா எடுத்துக்கலாம் துளசி! :)
Deleteகணபதி சஹாயம்
ReplyDeleteஅருள் புரிவார்!
DeleteBesh, besh
ReplyDeleteஇவர் யாருனே தெரியலையே! :)
Deleteஅக்கரையுடன் எதோக்தமான பூஜை. விதரணையாக பக்திபூர்வமாக இருக்கு. அன்புடன்
ReplyDeleteஇங்குமிருந்தது அனைத்தும். பாஸருள்!
ReplyDeleteஹாஹா, கடைசியில் பாஸ் அருளோடு எல்லாமும் கிடைச்சதா?
Deleteவணக்கம்
ReplyDeleteபடங்களுடன் விளக்கம் நன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteஅருமை கொழுக்கட்டை எங்களுக்கு இல்லையா ? சகோ எனது தளம் பக்கம் வருவதில்லையே.... வரும் பொழுது கொழுக்கட்டை வைத்து விடவும்.
ReplyDeleteஇங்கேருந்து எடுத்துக்க வேண்டியது தான். விரைவில் அதற்கும் ஏதேனும் தொழில் நுட்பம் வரலாம்! :) உங்கபதிவுகளுக்கு வந்திருந்தேன்.
Deleteகொழுக்கட்டை எனக்கு.....
ReplyDeleteகிடைச்சதா? :)
Deleteசூப்பர்! இங்கும் கொழுக்கட்டை உண்டு...
ReplyDeleteஇம்முறை மாவு வீட்டில் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. வீட்டில் செய்தாலும் நன்றாக வரும். ஆனால் இம்முறை நளாஸ் மாவு வாங்கிச் செய்தேன் அருமையாக வந்தது. மிக மிக ம்ருதுவாக, உடைசல் இல்லாமல் நன்றாக வந்தது.
கீதா
பச்சரிசி இருந்தால் போதும் கீதா! கடையில் மாவெல்லாம் வாங்கவே வேண்டாம். முதல்நாளே மாவு தயார் செய்து கொண்டும் இருக்க வேண்டாம். காலை ஐந்து மணிக்கு ஒரு கிண்ணம் பச்சரிசியை நன்கு களைந்து நீர் விட்டு ஊற வைத்துவிட்டுப் பின்னர் ஏழு, ஏழரைக்குத் தோசை மாவு பதத்துக்கு நல்லா நைசாக அரைத்துக் கொண்டு அதை மாவு கிளறிக் கொழுக்கட்டை செய்யலாம். மிருதுவாகவும், விள்ளாமல், விரியாமலும் வரும். தைரியமாக மாவு கிளறலாம். :)
Deleteகேஸை மெலிதாகச் செய்யும்போது உடைந்து விடும் வாய்ப்பு அதிகம் கொழுக்கட்டை சுண்டல் விநியோகம் என் வீட்டிலும் இருந்தது.
ReplyDelete