எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 24, 2015

இதெல்லாம் ஒரு பிரமாதமா!

கொஞ்ச நாட்களாகவே பிரச்னைகள், பிரச்னைகள். முக்கியமாய் எலக்ட்ரானிக் பொருட்களால் பிரச்னைகள்.  அதிலே முதல்லே வாஷிங் மெஷினில் வெளியேற்றும் நீர் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே வந்து கொண்டு தினமும் ஒரே அவதி! அதுவும் பொண்ணு வந்திருக்கிறச்சே அவ தான் அவங்க துணியைத் தோய்க்கையில் மாட்டிப்பா! :) நாங்களும் வாஷிங் மெஷினில் தான் பிரச்னைனு நினைச்சு ஹேயர் கம்பெனி ஆட்களைக் கூட்டி வந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்தும் சரியாச்சுனு நினைச்சால்! எங்கே! சரிஆகவே இல்லை! கடைசியில் பொண்ணு கண்டிப்பாச் சொல்லிட்டா! நான் ஊருக்குப் போறவரைக்கும் வாஷிங் மெஷின் நீரைக் குளியலறையில் வெளியேற்றிக்கறேன்னு! அப்படியே செய்தா! நானும் அது வசதியா இருக்கேனு அப்படியே வைச்சேன்.

ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு அதுக்குனு தனியா இணைப்பு இருக்கிறச்சே ஏன் இப்படிச் செய்யணும்னு ஒரே மண்டைக்குடைச்சல் தாங்காமல் மறுபடி வாஷிங் மெஷினின் நீர் வெளியேற்றும் குழாயை அதற்கான குழாய் இணைப்பில் கொடுக்கக் கொஞ்ச நாட்கள் எல்லாம் சரியாக இருந்தாற்போல் தான் இருந்தது. பார்த்தியா! நான் சரி பண்ணிட்டேன்னு அவர் பெருமையா மார்தட்டிக்கொண்டு சொன்ன  ஒரு நாள் இரவில் தற்செயலாகக் கணினி அறைக்குச் சென்ற நான் வழியெல்லாம் தண்ணீராக இருக்கக் கண்டு என்னனு பார்த்தால் வாஷிங் மெஷின் அடியிலிருந்து நீர்! ஆனால் மெஷினிலிருந்து  நீரை வெளியேற்றும் குழாய் சுத்தமாகக் காய்ந்து இருந்தது. ஏதேனும் பேய், பிசாசு வந்து நீரை ஊத்திட்டுப் போயிடுச்சாங்கற லெவல்லே  ஜிந்திக்க ஆரம்பிச்சோம். இரண்டு நாட்கள் தீவிர ஆய்விற்குப் பின்னர் கை கழுவும் வாஷ் பேசின் குழாயில் விடும் நீர் தான் திரும்ப வீட்டுக்குள்ளே வருகிறது என்பதை  வாஷ் பேசின் குழாயில் நீரைத் திறந்துவிட்டுப் பார்த்துக் கண்டு பிடித்தோம். பின்னர் இதைக் குழாய்க்காரர் தான் சரி பண்ணணும்னு அவரைக் கூப்பிட்டு அதைச் சரி பண்ணினோம். இரண்டு குழாய்கள் இணையும் இடத்தில் இருந்த அடைப்பைச் சரி செய்தார் அவரும். ஒரு அரை அடி நீளக் குழாய் அங்கே குப்பைகளோடு அடைத்துக் கிடந்திருக்கிறது. 

சரி அதான் போச்சுன்னா அடுத்து இன்வெர்டர்! அதுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளைக் கூப்பிட இருந்தார். ஆனால் முதல்நாளிலேயே எனக்கு அழுகிய முட்டை நாற்றம், கழிவறை சுத்தம் செய்யாமல் கிடந்தது போல் நினைவு! உட்கார முடியலை! என்னனும் புரியலை. மறுநாள் பாட்டரிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த பையர் பார்த்துட்டு பாட்டரீ லீக் ஆவதாகவும், அது தான் அழுகிய முட்டை நாற்றம் என்றும் இதைத் தொடர்ந்தால் மின்சாரமே பிரச்னை வேறேதும் விபத்து நேரிடலாம் என்றும் மேலும் மின்சாரக் கட்டணமும் அதிகம் ஆகும்படி மீட்டர் ஓடும் என்றும் தெரிவித்தார். உடனடியாகப் புது பாட்டரி வாங்கிப் போட்டு அதைத் திருப்தி செய்தாயிற்று. இப்போது ஒரு வாரமாக ஏ.சி. சீரியல் ஓடுது.  ஸ்ப்லிட் ஏசி! வெளியே இருக்கும் அவுட்டர் யூனிட்டில் வெளியேறும் நீரை ஒரு குழாய் மூலம் கீழே உள்ள தொட்டி வரை கொண்டு போகக் குடியிருப்புக் கட்டும்போதே யோசனை செய்து கட்டி இருக்காங்க.  ஏசி புதுசு  நிறுவும்போதே அதை எல்லாம் எடுத்துக் காட்டி நிறுவ வைத்தோம். மே மாதத்தில் இருந்து தான் புது ஏசி பயன்பாட்டுக்கும் வந்தது. ஞாயிற்றுக்கிழமை வரை பிரச்னை இல்லை. திங்களன்று சும்ம்ம்ம்மா அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் நீர் சொட்டிப் படுக்கை அறையில் ஈரமாக இருந்தது. உடனடியாக எல்ஜிக்குத் தொலைபேசி ஆளை வரவழைத்தோம். அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வந்தார். இந்த நேரம் அவுட்டர் யூனிட்டை எப்படிப் பார்ப்பீங்கனு கேட்டால் பார்ப்பேன்னு சொல்லிட்டுப் போய்ப் பார்த்துட்டு, குப்பை தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டு ஃபில்ட்ரை சுத்தம் செய்து மாட்டிட்டுப் போயிட்டார். அன்னிக்கு ஒண்ணும் இல்லை. மறுநாள் மழை மாதிரி தண்ணீர் கொட்டிப் படுக்கை அறையில் வெள்ளம்!

இதோ, இப்போது புகார் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்று வரை இந்த நிமிடம் வரை யாரும் வரவில்லை. இன்னொரு படுக்கை அறையில் உள்ள ஏசியைப் போட்டுக் கொண்டு படுத்தாலும் நேற்று அடிக்கடி மின்சார வெட்டின் காரணமாக இரவு 2 மணிக்கப்புறமாகவே மின்சாரம் தொடர்ந்து இருந்தது. கடும் சூடு காரணமாகச் சரியாகவே தூங்க முடியலை!  இந்த அழகில் சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போச்சு! சில குறிப்பிட்ட நிறம் போட்டால் அன்னிக்கு அரிப்பும், இம்சையும் தாங்கலை! :) ஹிஹிஹி, தம்பி வந்து ஒரே புலம்பல்னு திட்டப் போறார் டோய்!  இன்னிக்குப் பாருங்க, சோள ரவையில் உப்புமா செய்யவேண்டி தாளிதம் எல்லாம் போட்டு சோள ரவையையும் போட்டு வறுத்துக் கொண்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து ஊற்றினால் அலுமினியம் சட்டியில் வேகவே நேரம் எடுத்தது. அப்புறமாக் குக்கரில் மாற்றினேன்! :) இந்தக் கலாட்டாவில் படம் எல்லாம் எடுக்கலை! நேத்திக்கு எடுத்தக் கம்பு அடை படம் மட்டும் இருக்கு. அதை மட்டும் போடறேன்.  அதுவும் இப்போ இல்லை! அப்புறமாப் போடறேன். இப்போச் சமைக்கப் போகணும். புதுசா சமையல் கத்துட்டுச் சமைக்கிறாப்போல் இருக்கு. இன்னிக்கு ப்ரவுன் ரைஸில் சாதம் வைக்கணுமாம்! பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிட்டுச் சமைக்கப் போறேன்.  சமையல் என்ன ஒரு பிரமாதமானு சொல்லிட்டு இருந்த எனக்கு நல்லா வேண்டும். வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேண்டும். :)

வாழ்த்துங்க தோழர்களே, தோழியரே!

32 comments:

  1. ஹாஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஅஹ்ஹ்ஹாஆஆஆ!

    ReplyDelete
    Replies
    1. அதானே, வந்துடுவீங்களே வாய்ப்புக் கிடைச்சதுங்கற சந்தோஷத்திலே! :P :P :P :P

      Delete
  2. எப்ப பாத்தாலும் பொலம்பல்.....

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. நல்லா வேண்டும். வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேண்டும்.

    இப்படித்தானே வாழ்த்தச்சொன்னீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் வேண்டாம் போங்க!

      Delete
  4. மின் சாதனங்களால் என்றுமே பிரச்னைதான். ஆனால் ஒரே சமயத்தில் எல்லாம் கோளாறானால் வெறுப்பாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாஷிங் மெஷினில் பிரச்னையே இல்லை! நாங்களாப் பிரச்னைனு நினைச்சோம். என்ன ஒரு ஆறுதல்னா நாலு வருஷமா இங்கே ஶ்ரீரங்கம் வந்ததிலேருந்து செர்வீஸே பண்ணலை! இப்போப் பண்ணியாச்சு! :)

      Delete
  5. பிரச்சனைகளுடன் சரியான மல்லுக்கட்டுதான் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க! இன்னிக்கு ப்ரவுன் ரைஸை குக்கரில் வைச்சுட்டுக் கிட்டத்தட்டப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை வேண்டிக்காத குறை தான். ஆனால் சாதம் நன்றாகவே வந்தது. :)

      Delete
  6. அது என்ன பிரவுன் ரைஸ்
    கேரளா அரிசியா. இன்றைக்கு வேகப்போட்டுட்டு நாளைக்கு வடிக்கலாம்.
    வாஷிங் மெஷினுக்கும் எலிக்கும நல்ல உறவு உண்டு. எலி எதுவும் செய்யாமல் பார்த்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, கேரளா சிவப்பு அரிசியா! வேண்டாம் சாமி! :) இது சோனா மசூரி ப்ரவுன் ரைஸ்! ஆந்திராவிலிருந்து வந்திருக்கு! :)
      இங்கே எலி வர வாய்ப்பில்லை. நாங்க இருப்பது நாலாவது மாடி என்பதோடு கழிவு நீர் செல்லும் தண்ணீர்க்குழாய்கள் எல்லாம் நன்றாக மூடி இருக்கோம். வந்த புதுசிலே அம்பத்தூரிலிருந்தே வந்ததோ என்னமோ ஒரு எலி கண்ணில் பட்டது. அதுவும் நான் அலறிய அலறலில் தானாக நாலாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை பண்ணிக் கொண்டது. நண்டுவாக்கிளி, தேள் போன்றவை தான் இப்போதைக்கு இங்கே விசிட் செய்து வருகிறது. இன்னும் கண்ணில் பார்க்கவில்லை. :)

      Delete
  7. அழுகிய முட்டை நாற்றம்!!!!

    ~ உங்களுக்கு அழுகிய முட்டை நாற்றம் எப்படித் தெரியும்???????????. அதிலிருந்தே, நீங்கள் தான் குழாயினி என்று தெரிகிறது. எதற்கும் காவேரியில் தண்ணீர் குறைகிறதா என்று ஆராயவும்.
    இப்படிக்கு விஞ்ஞானி இன்னம்பூரான்

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி தான்! :) நாற்றம் என்பது என்னமோ தெரிந்தது! அழுகல் பழம் அல்லது அந்தக்காலச் சத்திரங்களில் சாப்பிட்ட இலைகளை எடுக்காமல் குவிச்சு வைச்சிருக்கிறச்சே வரும் நாற்றம் மாதிரி. மறுநாள் பாட்டரிக்கு நீர் நிரப்ப வந்த பையர் அழுகிய முட்டை நாற்றம் என்று குறிப்பிட்டார். ஆகவே இங்கேயும் புரிதலுக்காக அதுவே இடம் பெற்றது! :)))))

      Delete
    2. நல்ல கேள்வி தான்! :) நாற்றம் என்பது என்னமோ தெரிந்தது! அழுகல் பழம் அல்லது அந்தக்காலச் சத்திரங்களில் சாப்பிட்ட இலைகளை எடுக்காமல் குவிச்சு வைச்சிருக்கிறச்சே வரும் நாற்றம் மாதிரி. மறுநாள் பாட்டரிக்கு நீர் நிரப்ப வந்த பையர் அழுகிய முட்டை நாற்றம் என்று குறிப்பிட்டார். ஆகவே இங்கேயும் புரிதலுக்காக அதுவே இடம் பெற்றது! :)))))

      Delete
  8. பாயின்ட் ஒன்று: உட்கார்ந்து நல்லா குமுக்கி துவைச்சி அலசி காயப் போட்டால் துணியும் நல்லா இருக்கும்...
    எக்சர்சைஸ் பண்ணாப்போலையும் ஆச்சு.
    பாயின்ட் இரண்டு: இருபத்திநாலாவது மாடியிலே ஜன்னலைத் திறந்தால் காத்து கொட்டுமே? இன்வர்டரும் ஏசியும்
    எதுக்குங்கறேன்.?
    பாயின்ட் மூணு: ஏன்.. தினுசு தினுசா சமைக்கிறேன்னு சாப்பிடறவங்க பிராணனையும், அது நல்ல வரணுமேன்னு
    வேண்டிகிட்டு பிள்ளையார் பிராணனையும் வாங்கணும். தெரிஞ்சதை சமைக்கக் கூடாதோ..

    பாயிண்ட் நாலு: எதுக்கு கடலூர் காராளோட சண்டை போடறேள்? நாங்கல்லாம் அப்பாவிகளாச்சே!

    க்ஷேமமா இருங்கோ எல்லோரும்....

    ReplyDelete
    Replies
    1. @மோகன் ஜி! பார்க்கப் போனால் உட்கார்ந்து குமுக்காட்டியும் என்னோட துணிகளை நான் வாஷிங் மெஷினில் போடுவதில்லை. கையாலேயே துவைத்துவிட்டுப் பிழிய முடியாமல் அதிலே ஸ்பின்னரில் போட்டுப் பிழிந்து எடுப்பேன். செரியா?

      இருபத்திநாலாவது மாடியா? சரியாப் போச்சு போங்க! உங்க ஹைதை மாதிரி நினைச்சுட்டீங்க? இது நாலாவது மாடிங்க! வெறும் நாலாவது மாடி!

      அடுத்து தினுசு தினுசா எல்லாம் சமைக்கலை! ஒழுங்காச் சமைச்சுட்டு இருந்தேன். திடீர்னு ரங்க்ஸுக்கு மில்லெட் ஜுரம்! பார்க்கப் போனால் அவர் தான் என்னோட பிராணனையும், பிள்ளையாரோட பிராணனையும் வாங்கிட்டு இருக்கார்! :) ஆனால் பாருங்க இது சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா மத்தியானம் தூங்கறதில்லை! நோ சியஸ்டா! :) நானும் சொல்லிப் பார்த்து அலுத்துட்டேன், மத்தியானம் தூங்காதீங்கனு! இப்போ மில்லெட் அந்த வேலையைச் செய்துடுச்சு! :)

      என்னாது? கடலூர்க்காரங்க அப்பாவிகளா? அதுவும் வா.தி? சரியாப் போச்சு போங்க! அவரோட சண்டை போடலைனா எனக்கு ஜீரணமே ஆகிறதில்லை! நீங்க வேறே!

      Delete
    2. மோகஞி! சூடண்டி! இப்படி ஒரு அக்கா எனக்கு! வேஏஏஏஏ!

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சும்மாத் திட்டாதீங்க தம்பி, அக்கா, தம்பின்னா சண்டை போடாமல் எப்பூடி? :P :P :P :P :P

      Delete
  9. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் போல! எனக்கும் குரோம் பிரவுசர் தொல்லை கொடுத்து கொண்டு இருந்தது. எதையோ டவுண்லோட் செய்ய போக மேஜிகல் பைண்ட் என்றொரு ப்ரோக்ராம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகி குரோம் ஆன் செய்தாலே அது ஓப்பன் ஆகி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது பத்து நாளுக்கும் மேலாக நேற்றுதான் அது சரியானது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்படித் தான் ஸ்கைப் நண்பர் ஒருத்தர் சொன்னார்னு அன் இன்ஸ்டால் பண்ணிட்டு ரீ இன்ஸ்டால் பண்ணும்போது வேறே ஒண்ணு உள்ளே நுழைஞ்சு ஆறுமாசமாப் படுத்தி எடுத்துடுச்சு! நானும் அவதிப்பட்டேன். அப்புறமா ஒரு வழியா அதை வெளியே அனுப்பினேன் இப்போ ஸ்கைப் இன்ஸ்டால் பண்ணறதுனாலே பயம்மா இருக்கு! :)

      Delete
  10. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டாமோ? :)

      Delete
  11. வாழ்த்துக்கள். {சொல்லச் சொன்னீங்க :-)) }
    இன்வெர்டர் நாற்றம் அடித்தால் கவனம்! விஷவாயு நாற்றம் - மயக்கம் வந்து, பின்னர் விடாத இருமல் போன்ற தொந்தரவுகள் வரலாம் என்று முகநூலில் அறிவுறுத்தினார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நானும் படிச்சேன் மிடில்க்ளாஸ் மாதவி, சரியா எங்க இன்வெர்டரோட பாட்டரியை மாத்தினதுக்கு மறுநாள் இந்தச் செய்தி முகநூலில் கிடைத்தது. நல்லவேளை என நினைத்துக் கொண்டேன்.

      Delete
  12. சமயல் புதுசா செய்ய ஆரம்பிச்சா இப்படி தான். இனையம் எல்லாம் ஒழுங்கா வருதா? இல்ல, சும்மாதான் கேட்டேன். 😀

    ReplyDelete
    Replies
    1. தும்பி, வம்பி, @அம்பி, இந்தச் சமையல் புதுசு தான்! இணையம் ஒழுங்கா வரதில்லை! சந்தோஷமா இப்போ! கொண்டாடுங்க! :)

      Delete
  13. ஆவீன மழை பொழிய தான் நினைவுக்கு வருகிறது. வந்தால் எல்லாத்தொந்தரவும் ஒன்றாக வரும். எல்லாம் சரியாக என் பெஸ்ட் விஷஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நமக்கு அப்படித் தான் ராசி! :) கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது, கைவலியைத் தவிர! :(

      Delete
  14. தொந்தரவுகள்..... இதுவும் கடந்து போகும்....

    புதுச் சமையல் - நடக்கட்டும்... சென்ற பயணத்தில் இப்படி சிலவற்றை நானும் சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சிறுதானியச் சமையல் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிட்டு வருது! :) நேற்று கைக்குத்தல் அரிசியை நல்லாக் குழைய அதே சமயம் தனித்தனியாக வரும்படி சமைக்க வந்தது. மூன்று மணி நேரமாவது அரிசி ஊறணும்னு புரிஞ்சது! :)

      Delete
    2. நான் ஊருக்கு வந்தாலும் இதேதான். பாவம் அம்மா ஓட வாஷிங் மச்சினி (machine தமிழ் ல எழுதினா அதோட ஆட்டோ கரெக்ஷன் மச்சினி!!) எல்லாம் எனக்கு தான் லீக் ஆகும். மிக்ஸி எனக்கு தான் பழுதாகும். காஸ் நான் வந்தா தான் தீந்துபோய் காஸ் கிடைக்காம போகும். பால் காரன் extra போடமாட்டான் இல்லை வரவே மாட்டான். kitchen பாத்ரூம் விளக்கு எரியாது. மலையப்ப சாமியை கூட பிடிச்சுடலாம் எலெக்ட்ரிஷியன் பிளம்பர் பால்காரனை பிடிக்க முடியாது. கம்ப்யூட்டர், செல் connection கேக்க வேண்டாம்!! பாபையையே !! all the best with low carb taliban!!இன்னும் கொஞ்ச நாள்ல Mr Shivam உங்களுக்கும் lead மாட்டி.... ப்ப்பா ப்ப்பா னு தொட்டி கிட்ட இழுத்துண்டு போய் தண்ணிகாட்டாம இருக்க பிள்ளையாரை வேண்டிக்கறேன் ! கடவுளே யாரப்பா இந்த சிறுதானிய விவகாரத்தை கிளாரினவா! நம்ப கிட்டையும் ஒண்ணு இருக்கு!

      Delete