கிருஷ்ண ஜெயந்திக்கு மாமியார், மாமனார் உடன் இருந்தவரைக்கும் அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மாமியார் மட்டும் இருந்தப்போக் கூட இரண்டு நாட்கள் முன்னாடியே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்போம். எங்க பையர் சொல்றாப்போல் பக்ஷணத் தொழிற்சாலை தான்! ஆனாலும் பக்ஷணங்கள் நன்றாகவே அமைந்தன. ஆனால் இந்த வருஷம்!!!!!!!!!!! மாமியார் கிருஷ்ண ஜெயந்தி அன்று பாயசம், வடை செய்ய மாட்டார். ஆனால் குழந்தை பிறப்பு என்று நான் செய்வேன். போன வருஷம் வெல்லச் சீடை உதிர்ந்து போய்ப் பின்னர் அப்பமாக்கினேன். அது போலெல்லாம் இந்த வருஷம் ஆகக் கூடாது என்றிருந்தேன். ஆனால் பாருங்க விதி விளையாடி விட்டது. எல்லாத்திலேயும் உப்பு அதிகம். சென்னையில் இருந்தாலாவது தண்ணீர் உப்புத் தண்ணீர்னு சொல்லலாம். இங்கே அதுவும் இல்லை. உப்பை அதிகம் போட்டிருக்கேன். :( நேற்றிலிருந்து மனசே சரியாக இல்லை. இத்தனைக்கும் ஒரு வேலை என்று ஆரம்பித்தால் அது முடியும் வரை பிற விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் ஒரே மூச்சாக அந்த வேலையை முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி ஆகி விட்டது. அதுக்காக என்ன பண்ணினோம்னு சொல்லாமல் இருக்கப் போவதில்லை. கீழே படங்களோடு பார்க்கவும்.
என்ன, ராமர் படம் போட்டிருக்கேனு பார்க்கறீங்க தானே! ராமருக்கு அப்புறமாத் தானே கிருஷ்ணர்! வருவார் மெல்ல, குழந்தை தானே!
கீழ்த்தட்டில் இருக்கும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாளுடன் அன்னபூரணி, ராகவேந்திரர், பாண்டுரங்கர் இத்யாதி!
இது நம்ம ரங்க்ஸ் எடுக்கச் சொல்லி எடுத்தேன். பக்கவாட்டில் கதவில் ஒட்டப்பட்ட சாமி படங்கள்.
பூக்களோட பாரத்தில் கிருஷ்ணர் முகமே மறைஞ்சிருக்கு!
நிவேதனங்கள், பால், வெண்ணெய் தயிர், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள் பாயசம், வடை முறுக்கு, தட்டை, உப்பு, வெல்லச் சீடைகள், அவல், வெல்லம்
நல்லவேளையாக வெல்லச் சீடைக்கு உப்புச் சேர்க்க வேண்டாம். இல்லைனா அதுவும் உப்பாகி இருக்கும். :P :P :P :P மறக்க முடியாத கிருஷ்ண ஜெயந்தி!
படங்களில் படங்கள் ஒவ்வொன்றும் அருமை அம்மா... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஇந்த முறை ஒன்னும் செய்யலை. அலங்கரிச்சதோடு சரி. அடுத்தவாரம் கொண்டாடிக்கலாம். அப்பம் செஞ்சால் ஆச்சு.
ReplyDeleteஉடல்நலம் முக்கியம் துளசி. உடம்பு சரியானதும் எல்லாம் பண்ணிக் கொள்ளலாம். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
Deleteஇந்த முறை ஒன்னும் செய்யலை. அலங்கரிச்சதோடு சரி. அடுத்தவாரம் கொண்டாடிக்கலாம். அப்பம் செஞ்சால் ஆச்சு.
ReplyDeleteகேட்டதும் கொடுப்பவர் - அந்த
ReplyDeleteகண்ணன் - அவரை
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம் - இந்த
கிருஷ்ண ஜெயந்தி நாளிலே!
ஹாஹா, வேறே வழி! :)
Deleteமோர்ல நிறைய பச்சை மிளகாய் நறுக்கி போட்டு, உப்பு அதிகமான பக்ஷணங்களை அதுல ஊற வச்சு சாப்பிடலாம் வேஸ்ட் ஆகாம .:)
ReplyDeleteஷோபா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
DeleteOru nallennathula idea kudutha kochukkarele :)
Deleteஹிஹிஹி, ஷோபா, உங்க ஐடியாவையும் இன்னிக்குச் செய்து பார்த்துடலாம்னு இருக்கேன். இது எப்பூடி இருக்கு! நாங்க யாரு??????
Deleteசெய்யும்போதே முதலில் உப்பு சரியா என்று பார்க்க மாட்டீர்களா? ஓ... கடவுளுக்குக் காட்டாமல் உப்பு கூடப் பார்க்கக் கூடாதோ. சில நேரங்களில் தமாஷாகப் பின்னூட்டமிடுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ReplyDeleteவிசேஷ தினங்கள் மட்டுமல்ல அன்றாடம் சமைக்கையில் கூட உப்புப்பார்க்கும் வழக்கம் இல்லை. சாப்பிடும்போது தான் தெரியும்! :) சின்ன வயசிலே சமைக்க ஆரம்பிச்சப்போ இருந்து அதான் வழக்கம்.
Deleteக்ருஷ்ணன் அப்படி ஒண்ணும் உப்பலைன்னு இப்படி உப்பு போடலமா? பேட் பேட்!
ReplyDeleteம்ம்ம்ம், என்ன செய்யறது! :(
Deleteகிருஷ்ணனுக்கு நன்றி இருக்கான்னு செக் பண்ணி இருக்கீங்க போல..!! :)))))
ReplyDeleteமோரில் ஊற வைத்துச் சாப்பிடுவது நல்ல ஐடியா. எங்க வீட்டு பட்சணங்களும் இந்தமுறை நாங்கள் ஒன்று நினைக்க அது ஒரு பெயரில் தயாராகி விட்டது! நீங்கள் உப்பேற்றி விட்டீர்கள். நாங்கள் ஒப்பேற்றி விட்டோம்!!
நீங்க வேறே ஶ்ரீராம். இப்போ ஒரு தட்டையை எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். மோசமில்லை! வேறே என்ன செய்யறது! மனசைத் தேத்திக்க வேண்டியது தான்! :(
Delete// மோரில் ஊற வைத்துச் சாப்பிடுவது நல்ல ஐடியா.// Sriram, Nanbaen ! :)
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறமா வைச்சுக்கிறேன்! ஶ்ரீராம் நண்பேன்டா வா! இருக்கும், இருக்கும்!
Deleteநிறைய செய்து பழக்கப்பட்டவர்களுக்கு எப்போதாவது இப்படி ஆகும். அதுக்கு என்ன விசாரம். சிறிது நிதானமாகக் காலியாகும். கூட ஏதாவது சேர்த்து மிக்சரா பண்ணட்டா போச்சு. ரொம்ப பிஸி இல்லையா? அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா! ஒரு முறை கோதுமை அல்வாவும் இப்படித் தான் காலை வாரி விட்டது. கமர்கட் மாதிரி ஆகிவிட்டது! போன வருஷம் வெல்லச் சீடை! பின்னர் அதை அப்பமாகக் குத்திச் சமாளித்தேன். இந்த வருஷம் உப்பு ஜாஸ்தி! :( நீங்க சொன்னாப்போல் எதையானும் கலந்து சாப்பிட்டுப் பார்க்கலாம் தான். சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
Deleteஉப்பு அதிகமானது படத்தில் பார்த்தாலும் தெரியப் போவதில்லை! அதனை மனதார வெளியில் சொன்ன உங்களின் தரும சிந்தனையை பாராட்டுகிறேன்!! உப்பு ஜாஸ்தியானதிற்கு கவலைப்படாதீர்கள்! பட்சணங்கள் செய்யும் போது பத்திரமாக செய்து விட்டீர்களில்லையா?!!
ReplyDeleteமிடில்க்ளாஸ் மாதவி, ஒரு வகையில் எனக்கு இதெல்லாம் கர்வ பங்கம்! படத்திலே தெரியாட்டியும் மனசாட்சினு ஒண்ணு இருக்கே. நேத்திலேருந்து அதோட குத்துத் தாங்கலை! கவலை எல்லாம் படலை. தப்புப் பண்ணிட்டோமேனு மன உறுத்தல்! அவ்வளவு தான். பத்திரமாகவே செய்துட்டேன். பொதுவா எல்லோருக்கும் உப்புச் சீடை வெடிக்கும். எனக்கு அதுவும் வெடித்ததே இல்லை. ஒரே ஒரு முறை வேறொருவர் மாவு கலந்து கொடுத்துப் போட்டப்போ வெடிச்சது. அதையும் அடுத்த ஈடு போடும்போது சரி பண்ணியாச்சு. இப்படி ஆனதில்லை. உப்புக் குறைவாத் தான் இருக்கும்! அதிகம் ஆனதில்லை. :(
Deleteகடைசி போட்டோவை பார்த்துக் கொண்டே இருந்தேன் ஹி ஹி ஹி
ReplyDeleteநல்லவேளை சாப்பிடலை! :))))) ஒருத்தருக்கும் கொடுக்காதேனு ரங்க்ஸ் ஆர்டர்! 144 தடை உத்தரவு! மீற முடியாது! :(
Deleteகிருஷ்ண ஜெயந்திக்கு தட்டை செய்வதுண்டா? எனக்குப் பிடிக்கும்!
ReplyDeleteதட்டை அடிக்கடி செய்வேன் வெங்கட். ஶ்ரீரங்கம் வந்துட்டுத் தொலைபேசியில் கூட அழைக்கலை! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :( எனக்கு வந்தது தெரியாது! வேலை மும்முரம். கொஞ்ச நாட்களாகவே இணையத்துக்கு அதிகம் வரமுடியாததால் எதுவும் தெரியறதில்லை.
Deleteசில சமயம் இப்படி ஆகறது வழக்கம் தான்ம்மா!.. வருத்தப்படாதீங்க.. கண்ணன் கட்டாயம் ரசிச்சு தான் சாப்பிட்டிருப்பான்!.. எனக்கு ரெண்டு வருஷம் முன்ன, கோகுலாஷ்டமிக்கு முறுக்கு, தட்டை எல்லாம் பொரிச்சப்ப க்ரிஸ்ப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.. நேரம் ஆக, ஆக, அரை வேக்காடு வெந்த மாதிரி சவக்குன்னு ஆயிப்போச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல... ரெண்டு நாள் முன்னாடி லட்டு செஞ்சேன்.. பூந்தி சரியாத்தான் பொரிச்சேன் சாஃப்ட்டா.. ஆனா லட்டு தின்னா எனக்கே பல்லு வலிக்குது.. என்ன தப்பு பண்ணினோன்னு இப்பவும் யோசிக்கிறேன்..
ReplyDeleteஉப்பு ஜாஸ்தின்னு ஓப்பனா சொன்ன உங்க குணம் ரொம்ப பிரமிக்க வைக்குது!..
சில பச்சரிசியிலே முதல்லே கரகரனு வந்துட்டு அப்புறமா சவுக்குனு ஆயிடுது பார்வதி. அதுக்குத் தான் எப்போவுமே நான் பக்ஷண அரிசினு கேட்டு ஐஆர் 20 அரிசியே வாங்குவது வழக்கம். இந்த வருஷம் வாங்கலை! போட்டு வாங்கிடுச்சு. லட்டிலே நீங்க பாகை முத்த விட்டுட்டீங்கனு நினைக்கிறேன். பூந்தி காரணமாத் தெரியலை. சர்க்கரைப் பாகு வைக்கையில் மிளகு போல் உருட்டும் பதம் இருந்தால் போதும். கூடப் போயிருக்குனு நினைக்கிறேன்.
Deleteஉப்பு ஜாஸ்தினு சொல்லாட்டி எப்பூடி! திடீர்னு யாரானும் வந்து தின்னு பார்த்துட்டுச் சொல்றதை விட நம்ம தப்பை நாமளே ஒத்துக்கறது நல்லது. மத்தவங்களும் காப்பாற்றப்படுவாங்களே! :))))
கிருஷ்ணன் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று செய்துட்டீங்களோ?! ம்ம் நல்லதுதான்! கெட்டித் தயிர்ல ஊற வைச்சு சாப்பிட்டுப் பாருங்களேன்...அந்த க்ரீம் இதோட சேர்ந்து சூப்பரா இருக்கும்...பிடித்தால்...உப்பு கூடவில்லை என்றாலும்கூட நான் அப்படிச் சாப்பிடுவது உண்டு...குறிப்பாக முறுக்கை...ரொம்ப நல்லா இருக்கும்..
ReplyDeleteகீதா
ம்ம்ம்ம்ம்ம், உங்க கருத்தைப் பார்த்ததும் ஒரு எண்ணம் மனசிலே வந்திருக்கு. செய்து பார்த்துட்டு விளக்கமாச் சொல்றேன். உங்களுக்கும் காமாட்சி அம்மாவும், ஷோபாவுக்கும் நன்றி. :)
Deleteஎனக்கும் என் சமையலைச் சாப்பிடும் வழக்கம் இல்லை. சைல பேர் செய்யும் போட்ஹே ஸ்பூனில் வேடுத்து ருசி பார்ப்பார்கள். வழக்கமில்லாமல் போச்சு.
ReplyDeleteகண்ணனுக்கு உப்பு போட்டது பிடிச்சிருக்கும் கீதா, எப்பவுமே மறக்க மாட்டான்.
பார்க்கப் பார்க்கப் படங்களும் ஸ்வாமிகளும் அழகு.
வாங்க வல்லி, எங்க அப்பா வீட்டில் உப்புப் பார்க்கவென்று வாயில் விட்டுக் கொண்டால் ஒரு பிரளயமே நடக்கும்! :)))))) ஆகையால் அதுவே பழக்கமாகிப் போச்சு! இப்போவும் உப்புப் பார்க்கத் தோன்றுவதில்லை. சாப்பிடுகையில் தான் எல்லாமும் பார்த்துச் சொல்லுவாங்க! கிருஷ்ணன் பிறப்புக்கு இது நிவேதனம் வேறேயே! :) ஸ்பூனில் எடுத்து ருசி பார்ப்பதையாவது ஒத்துக்கொள்ளலாம். ஒரு சிலர் ஸ்பூனிலிருந்து வாயில் விட்டு எச்சல் பண்ணிச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அதே கரண்டியை அதே கையால் மறுபடியும் மொத்த உணவுப் பதார்த்தங்களிலேயும் போடறாங்க! :( தொலைக்காட்சியில் சமையல் பற்றிய காட்சிகள் பார்த்தோமானால் மனோதிடம் வேண்டும்! :) தட்டில் போட்டுக் கொண்டு ஸ்பூனால் எச்சில் செய்து சாப்பிட்டுவிட்டும் மீதத்தை அதில் போடுவாங்க!
Deleteஎன்ன அ'நியாயமா இருக்கு.. கொஞ்சம் வெல்லச்சீடை தவிர (பாயசத்தைக் கணக்குல சேர்க்கலை) வேற இனிப்பு ஒண்ணும் கிடையாதா? 'டயபடீஸ்' உங்களுக்கா அல்லது கிருஷ்ணருக்கா?
ReplyDeleteஹாஹாஹா! முன்னெல்லாம் அரிசி கர்ச்சிக்காய், திரட்டுப் பால் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன். சில சமயங்களில் அப்பம், போளியும் இருந்திருக்கு. ரங்க்ஸுக்கு ஷுகர் வந்ததும் எல்லாம் கட்! :)
Deleteசொன்னா நம்பவே மாட்டீங்க. இதுல, நிவேதனப் படத்தைப் பெருசுபடுத்திப் பார்த்துட்டு, இனிப்பு வெல்லச்சீடை மாதிரி இருப்பதைத் தவிர வேற ஒண்ணுமே இல்லையே என்று எழுத நினைத்துவந்தால், அதே கமெண்டை அப்போ எழுதியிருக்கேன். ஹா ஹா. நீங்க சொல்லியிருக்கிற பதிலைப் பார்த்தால், நீங்க கிருஷ்ணருக்கு பண்ணின மாதிரி தெரியலை..மாமாவுக்குப் பண்ணின மாதிரித்தான் தெரியுது.
ReplyDeleteதித்திப்புப் பண்ணினால் செலவாகணும் இல்லையா? நானே எல்லாத்தையும் சாப்பிட முடியுமா? அம்பத்தூர் எனில் அண்ணா வீடு, அக்கம்பக்கம் வீடுகள், நாத்தனார் வீடுனு கொடுத்து விட்டுச் செலவு செய்துடுவேன். இங்கே அப்படிப் பண்டமாற்று அபூர்வம்.
Delete