இன்னிக்குப் புரட்டாசி மாத 2 ஆம் சனிக்கிழமை. வீட்டில் வெங்கடாஜலபதி சமாராதனை செய்தோம். மத்தியானமே பதிவு போடலாம்னு வந்தேன் ஆனால் மனசு சரியில்லாமல் போச்சு! அப்புறமா இப்போத் தான் கணினியைத் திறந்தேன். தெரியாமல் செய்த தப்புன்னாலும் தப்பு தப்புத் தானே. இன்னமும் உறுத்தல் இருக்கு. என்றாலும் எல்லாத்தையும் வெங்கடாசலபதிக்கு விட்டுட்டு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுட்டுப் பதிவைப் போடலாம்னு வந்தேன்.
அந்தக் காலத்துப் பழைய வெங்கடாசலபதி படம். இது முகத்தை மறைத்து நாமம் வரும் முன்னர் உள்ள படம்.
கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தது..
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம்ம ராமர் வழக்கம்போல்
ராமருக்குக் கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள் விக்ரஹம்
புரோகிதர் வழி நடத்துகிறார்.
பெருமாளுக்கு நிவேதனம் ஆன பின்னர் இங்கே ஸ்வாமி அலமாரியிலும் செய்த நிவேதனம். சர்க்கரைப் பொங்கல், எள்ளு சாதம், உளுந்து வடை, அன்னம் பருப்பு.
எல்லோரும் பிரசாதம் எடுத்துக்குங்க. இரண்டு நாட்களாக வரகு புழுங்கலரிசியில் தோசை, இட்லி செய்ததும் படம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னிக்கு அதைப் போடலை. இன்னிக்குப் பிரசாதங்கள் மட்டுமே.
ஆரத்தியை ஸ்வாமிக்கு முன்னே வைச்சாச்சு, நவராத்திரியில் வைக்கிறாப்போல் மனிதர்களுக்கு மட்டுமே ஆரத்தி சுற்ற வேண்டும். ஸ்வாமிக்கு இல்லை என்கின்றனர். ஆகவே ஸ்வாமிக்கு முன்னால் ஆரத்தியை வைப்பதோடு சரி!
நேத்திக்கே சொல்லிருந்தா
ReplyDeleteபறந்து வந்தாவது சமாராதனைலே பங்கு கொண்டு,
அந்த சக்கரை பொங்கலை ஒரு கை பிடித்திருப்பேன்.
உங்களுக்கும் ஒரு ஏழை த்விஜனுக்கு போஜனம் செய்வித்த பலன் கிட்டி இருக்கும்.
பரவாயில்லை. தக்ஷிணை மட்டுமாவது எம். ஒ. வில். அனுப்பி வைக்கவும்.
சர்வ மங்களானி பவந்து.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
வாங்க சுப்பு சார், போன வாரமே பண்ணி இருக்கணும். :) வாத்தியார் பிசி!
Deleteதப்பா... எங்கே ...என்ன தப்பு ?
ReplyDeleteமுகநூலில்! அப்புறமா மன்னிப்புக் கேட்டாச்சு!
Deleteதப்பு என்ன என்று எனக்குத் தெரியும். சமாராதனைப் படங்கள் ஜோர்.
ReplyDeleteம்ம்ம்ம்ம், எல்லோரும் படம் பார்த்துட்டுப் போயிட்டாங்க போல! + ம் பார்வையாளர்களும் இருக்கும் அளவுக்குக் கருத்து யாரும் சொல்லலை! ஆகவே கருத்துச் சொல்வதற்கும் பதிவுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லைனு நினைக்கிறேன்.
Deleteakka, romba pramaadham. naan last week panni vitten.
ReplyDeleteபோனவாரம் தான் பண்ண நினைச்சோம். வாத்தியார் பிசி. நல்லவேளையா முன்கூட்டியே சொன்னதால் இந்த வாரம் வேறே எங்கேயும் போகலை! :)
Deleteபிரசாதம் எடுத்துக் கொண்டேன்.....
ReplyDeleteநல்லா இருந்ததா?
Deleteபுரட்டாசி சனிக்கிழமைகள் ஒன்றில் இம்மாதிரி சமாராதனை செய்கிற வழக்கமா அம்மா!!.. சிலர் இல்லத்தில், சுபநிகழ்வுகளுக்கு முன்பாக சமாராதனை செய்வது தெரியும்... இப்போது தான் இம்மாதிரி பார்க்கிறேன்.. சுப்பிரமணிய ஸ்வாமி, ஸ்ரீ சாஸ்தா சமாராதனைகள் செய்வதும் வழக்கத்தில் இருந்தாலும், சமாராதனை என்றாலே பெருமாளுக்குத் தான் என்பது மாதிரியான பொது அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது... தப்பு, மன்னிப்பு என்றெல்லாம் எழுதுவது பார்த்து கஷ்டமாக இருக்கிறது. தவறுவது மனித இயற்கை தானே அம்மா!..
ReplyDeleteஆமாம், நல்லவேளையா இந்த வழக்கம் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலுமே உண்டு. சுப நிகழ்வுகளுக்கு முன் செய்வது தனி. இது வருஷா வருஷம் செய்வது. சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சமாராதனைனு பார்த்ததில்லை. சாஸ்தா ப்ரீதி தெரியும். வைக்கத்தஷ்டமி அன்றும் மதுரையில் நிறைய இடங்களில் சமாராதனை நடக்கும்.
Deleteபுரட்டாசி சமாராதணை ஜோர்! முகம் மறைத்து நாமம் இல்லாத வெங்கடாஜலபதி படம் சிறப்பு! இந்த படம் எங்கு கிடைக்கும்? நன்றி!
ReplyDeleteஇது நூறு வருடப் பழமையான படம்னு நினைக்கிறேன் சுரேஷ்! எங்க அப்பாவீட்டிலும் இதே போன்ற படம் இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உண்டு. அதைத் தான் சமாராதனைக்கு வைப்பார்கள். இப்போ அந்தப் படம் எங்கிருக்குனு தெரியலை. மாமனார் கிராமத்தைக் காலி செய்து ஊரிலிருந்து கொண்டு வந்தது எங்களுடைய படங்களோடு வைத்திருந்ததால் கிடைத்திருக்கிறது. இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை. படக்கடைகளில் கேட்டுப் பாருங்கள்.
Deletegrscustoms.blogspot.in/2012/06/blog-post_08.html
ReplyDeletegrscustoms.blogspot.in/2012/06/blog-post_08.html
ReplyDeleteJayakumar
நானும் கடலூர்காரன் தான்.
அப்படியா?
Deleteசர்க்கரைப் பொங்கல் ரொம்ப நல்லா வந்திருக்கு. நிச்சயம் நல்லா இருந்திருக்கும். நீங்கள் எள்ளுச் சாதத்துக்கு வெல்லம் போடுவீர்களா இல்லையா? எனக்கு கார எள்ளுச்சாதம் பிடிக்காது.
ReplyDeleteஎன் அப்பா வீட்டில் தான் எள்ளுப் பொடியில் வெல்லம் சேர்த்த சாதம். மாமியார் வீட்டில் காரம் போட்டது தான். :) மாமியார் வீட்டுப்பழக்கப்படி தானே செய்யணும்! :)
Deleteஎல்லாம் சரியாத்தான் தெரியறது! சரி!! அந்த போட்டோக்கு வலது எனக்கு இடது பக்க கார்னர்ல இருக்கிற மேடை cum பொட்டி மாதிரி இருக்கறது என்ன? சாளக்ராமம் பொட்டியா? தாத்தா வீட்டுல அப்படி பொட்டி ஒன்னு இருக்கும் .பாக்க throne மாதிரி, திறந்தா கீழ 5 1/2 பொட்டி மாதிரி பிரசாதம் சந்தானம் குங்குமம், டிரஸ் வஸ்திரம் வச்சு மூடி எடுத்துண்டு போறமாதிரி சாமி travel pack. அதுவா?? இல்லை அஹமதாபாத் கிருஷ்ணர் மேடையா
ReplyDeleteஎதைக் கேட்கறீங்கனு தெரியலை. வெங்கடாசலபதியை வைச்சிருக்கிறது நான் சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹாலாசனம் எல்லாம் செய்ய உதவிப்படும் ஒரு கருவி. இதுக்குன்னே தனியாச் செஞ்சு வைச்சிருக்கோம். :))) கீழே சுவாமி அலமாரின்னா ஒரு பக்கம் பூஜை சாமான்கள், மறுபக்கம் விளக்குத் திரி, கற்பூரம், சந்தனம் இத்தியாதி, இத்தியாதி!
Deleteசாளக்ராமம் எல்லாம் வீட்டில் வைச்சுப் பூஜை செய்யும் அளவுக்கு முடியாது. வெளியே எங்கும் போகக் கூடாது, வெளியிலே சாப்பிடக் கூடாது, தினம் நிவேதனம், அதோடு ரொம்ப மடி, ஆசாரம் பார்க்கணும். கொஞ்சமும் பிசகாமல் கடைப்பிடிக்கணும். அது எல்லாம் கஷ்டம் என்பதால் சாளக்ராமமே வைச்சுக்கலை! :) பூஜைனு பண்ணிண்டும் இருக்கிறதில்லை. தினம் இரண்டு வேளை விளக்கேற்றி ஸ்லோகம் சொல்வோம். அவர் சஹஸ்ர காயத்ரி, ராம ஜபம் பண்ணிட்டு ஸ்லோகம் சொல்வார். அவ்வளவு தான்! :)
Deleteபுரட்டாசி சனிக்கிழமை, ஸமாராதனை. பிரஸாதம் எடுத்துக் கொண்டேன். அன்புடன்
ReplyDelete