சமீபத்தில் தான் நம்ம தில்லையகத்து கீதா அவர்கள் பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரம் ஒன்றில் பெற்ற பெண்களை டென்ஷன் என அடையாளம் காட்டுவது குறித்து எழுந்த எதிர்ப்பைப் பற்றிப் பதிவு செய்திருந்தார். அதே போன்ற தங்க நகை விளம்பரம் குறித்துத் தான் இந்தப் பதிவும்.
ஒரு கிராம் ரூ.2,535-க்கும், பவுன் ரூ.20,280-க்கும் நேற்று தங்கம் விற்பனையானது.
மேலே சொல்லி இருப்பது தங்கத்தின் நேற்றைய விலை! ஒரு கிராம் கிட்டத்தட்ட 2,535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைவாக 2,500 என்றே வைத்துக் கொள்வோம். மை கல்யாண் விளம்பரத்தில் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் வைர நகை வாங்கலாம் என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தில் காட்டப்படும் நகைகளிலோ எல்லாம் வைரப் பதக்கங்கள் வைத்த மெல்லிய சங்கிலிகள், வைரங்கள் பதித்த காதுத் தொங்கட்டான்கள், ப்ரேஸ்லெட்கள் என இருக்கின்றன.
இவை எல்லாம் குறைந்த பட்சமாக 4 கிராம் தங்கத்திலிருந்து பத்து கிராம் தங்கத்திற்குள்ளாகவே செய்ய முடியும். நாலு கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தொங்கட்டான் என்றால் கூட தங்கம் விலை 2500x4 கிராம் என்னும்போது அதுவே பத்தாயிரம் ஆகிறது. அதன் பின்னர் தொங்கட்டான் செய்யும் தங்க நகை ஆசாரிக்குக் கூலி! குறைந்தது 2,000 ரூபாய் வாங்குவார். வேலைப்பாடு அதிகம் ஆக ஆகக் கூலியும் அதிகரிக்கும். அதன் பின்னர் வைரங்கள்! ஒரு சென்ட் வைரமே 2 ஆயிரம் முதல் ஆறு ஆயிரம் வரை வைரத்தின் குணாதிசயங்களைப் பொறுத்தும் தகுதியைப் பொறுத்தும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆக 2,000 ரூபாய் வைரம் என வைத்துக் கொண்டாலும் ஒரே ஒரு வைரக்கல்லுக்கே 2,000 ரூபாயும் அதைப் பதிக்கும் ஆசாரிக்கு(இதற்கெனச் சிறப்பு ஆசாரி உண்டு) தனியாகக் கூலியும் சேர்ந்து 3,000 வரை ஆகும்.
ஆனால் இங்கே நாலைந்து வைரக்கற்கள் பதித்ததாகக் காட்டுகின்றனர். அப்போது வைரங்களின் விலையே பத்தாயிரத்தைத் தாண்டும். அதன் பின்னர் அவற்றைப் பதிக்கும் கூலி தனி! பனிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை என வைத்துக் கொண்டாலும் தங்கம் தனியாக மதிப்பிடப்பட்டு அது ஒரு பனிரண்டாயிரம், வைரம் தனி மதிப்பு அது ஒரு பனிரண்டாயிரம் ஆக மொத்தம் 24,000 ஒரு சின்னக் காதணிக்கே ஆகி விடும். ஒரே ஒரு சென்ட் ஒற்றை வைரக்கல் வைத்த 1 கிராம் மூக்குத்தியே ஆறாயிரம் ஆகிறது. ஆக இந்த விளம்பரத்தை நம்பி (நம்புபவர்கள் இல்லை என்றே எண்ணுகிறேன்.) அந்தக் கடைக்குப் போனால் லட்சங்களில் தான் நகைகள் கிடைக்கும். ஆகவே இத்தகைய விளம்பரங்களை வெளியிடும் முன்னர் கடைக்காரர்களும் யோசிக்க வேண்டும். பொதுமக்களும் யோசிக்க வேண்டும்.
அடுத்துச் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் இப்போதெல்லாம் எழுத்துப் பிழைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆங்கில ஆசிரியர்களோ, தமிழ் ஆசிரியர்களோ, ஹிந்தி ஆசிரியர்களோ யாராக இருந்தாலும் எழுத்துப் பிழைகளைச் சர்வ சாதாரணமாகவே செய்கின்றனர். கேட்டால் இது சகஜம் தான்! யாருக்கு வரவில்லை எழுத்துப் பிழை என பதில் வருகிறது. நாங்கள் படிக்கையில் வாரம் இரண்டு நாள் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் டெஸ்ட் வைப்பார்கள். அதில் தப்புச் செய்பவர்கள் 100 முறை அதைத் திரும்ப எழுதிக்காட்ட வேண்டும். தமிழிலும் அப்படியே இருந்தது. ஆகவே எழுதும்போது கவனம் என்பது இயல்பாக வந்து விட்டது. அதனால் தானோ என்னமோ இப்போது இவற்றைக் கண்டால் மனம் பதைக்கிறது. ஆனால் திருத்த வேண்டியவர்கள் யாரும் இதைத் திருத்துவது இல்லை. ஏனெனில் அந்தத் தவறுகளை ஆசிரியர்களே இப்போது செய்கின்றனர். அவர்களிடம் படிக்கும் மாணாக்கர்களும் ஆசிரியர்கள் செய்வதைத் தான் செய்வார்கள். :(
தமிழுக்காக உயிரையே கொடுக்கும் பலர் நம் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஒருவருக்கும் இந்த எழுத்துப் பிழைகள் கண்களில் படவில்லை. நேற்று ரயில்வேயில் நடந்த ஒரு போராட்டத்தில், "ரயில் மறியல்!" என்பதற்கு "ரயில் மறியில்" என எழுதி இருந்தார்கள். அந்தப்புரம் என்பது "அந்தப்புறம்" ஆக மாறி எவ்வளவோ மாதங்கள்/வருடங்கள் ஆகிவிட்டன. உச்சரிக்கும் போதாவது சரியாகச் சொல்கின்றார்களா எனில் "இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்". என்று சொல்ல வேண்டியதை, "இதைச் செய்ய மாட்ரார்" எனச் சொல்லி மாட்டி விடுகின்றனர். தொலைக்காட்சித் தொடர்களின் பிரபல நாயக, நாயகியரின் உச்சரிப்பு இப்படித் தான் இருக்கிறது. மாட்றார் என்றாலோ, மாட்ரார் என்றாலோ மாட்டிக்கொண்டு திகைப்பதைக் குறிக்கும். மாட்டேன் என்கிறார் என்பதைச் சேர்த்துச் சொல்வதற்கு மாட்டேங்கிறாரா எனச் சொல்ல வேண்டும். ஆனால் அப்படிச் சொல்வதில்லை. அடுத்த தவறு "அழாதே!" என்பதை "அழுகாதே!" என்றே அனைவரும் சொல்கின்றனர். இதென்ன பழமா அழுகாமல் இருக்க? அர்த்தமே மாறுகிறதே என்பதை எவரும் கவனிப்பதில்லை! "அழாதே!" என்றே சொல்ல வேண்டும் என யாரும் வற்புறுத்துவதில்லை.
ஆனால் எனக்குத் தெரிந்து இத்தகைய தவறுகளைச் செய்பவர்களைப் பாராட்டுபவர்களும், ஆதரிப்பவர்களும் தான் நிறைய இருக்கிறார்கள். தவறுகளைச் சுட்டினால், நீ ஒழுங்காச் செய்கிறாய் என்பதற்காக எல்லோரிடமும் எதிர்பார்க்காதே எனச் சொல்லி விடுகின்றனர்! மொழி படும் பாடு வருத்தமளிக்கிறது. இது இரண்டு உதாரணங்கள் தான் இங்கே கொடுத்திருக்கேன். பல இருக்கின்றன.

உச்சரிப்பில் பிழை இருப்பதால்தான் பெரும்பாலான எழுத்துப்பிழைகள் நிகழ்கின்றன என்பது என் கருத்து. அது மட்டுமில்லாமல் அருகாமையில், முயற்சித்தான் என்று என்னனென்னமோ வார்த்தைகளை எல்லாம் எழுதுகின்றனர் பெரிய பெரிய எழுத்தாளர்களும் கூட. லாகவம் என்பதை கிட்டத்தட்ட எல்லாருமே லாவகம் என்றுதான் எழுதுகின்றனர். அப்புறம் பாடாப் பாடு படுத்த இந்த பண்ணு தமிழ் இருக்கு. ரிமம்பர் பண்றீங்களா, வாக்கிங் பண்றீங்களான்னு கேட்டாலே கூசும் தமிழ் அது. சொல்ல ஆரம்பித்தால் முடிவே கிடையாது.. :(
ReplyDelete//அருகாமையில், முயற்சித்தான் என்று என்னனென்னமோ வார்த்தைகளை எல்லாம் எழுதுகின்றனர் பெரிய பெரிய எழுத்தாளர்களும் கூட.//
Deleteஹிஹிஹி, கொத்து, இதுக்குப் பேர் தான் போட்டு வாங்கறதா? :P :P :P :P:P
பண்ணு தமிழ்... ரசித்தேன் :-)
Deleteநல்வரவு அப்பாதுரை.
Deleteinteresting. தமிழ்ச் சொற்கள் காலத்தில் மாறி பரிணாமித்தவையே (தமிழ் மட்டுமல்ல, பிற மொழிகளும்).
Deleteமுயற்சி செய்தான் என்பதன் அழகான ஒரு சொல் வடிவம் முயற்சித்தான். இதை இலக்கணப்பிழை என்பது ஏற்கமுடியவில்லை.
காலத்துக்கேற்ப மொழி வழக்குகள் மாறுவதை ஏற்றுக்கொண்டால் என்பது மொழி வளரும்.
தமிழ் என்றில்லை.. இந்தியிலும் இத்தகைய ஊடுறுவல்கள் பரவி வருடங்களாகின்றன. மொழிச் சுத்தக் கொடிகள் அங்கேயும் பறக்கின்றன. இஸ்தெமால் என்பது ஏறக்குறைய மறைந்து யூஸ் என்கிற சொல்லாகவே இந்தியில் பரவி விட்டதை உதாரணம் காட்டி டிவியில் ஒருவர் பேசியது நினைவில் தட்டுகிறது. தெலுங்கு கன்னடம் என்று எந்த மொழியிலும் இப்போது ஆங்கிலம் கலந்து மொழி மருவி வருகிறது. அதனால் என்ன என்பதே என் கட்சி.
Deleteபிழையும் அப்படித்தான். னை என்று முதலில் பார்த்தபோது பழைய ஐகாரத்தைப் பார்த்துப் பழகியவனுக்கு இந்தப் பிழை ஏற்க முடியாததாகவே தோன்றியது. இன்றைக்கு தலைச்சுழியுடன் கூடிய ஐகார எழுத்தே பிழையாகக் கருதப்படும் இல்லையா?
இலக்கணம் யார் எழுதியது? நாம் தான்! தொல்காப்பியம் தொடங்கி ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் அறிவுள்ளவர்கள் எழுதியது - அதுவும் அந்தக் காலக்கட்டத்தை ஒட்டி. கடவுள் நம்பிக்கை போல் இது தான் இலக்கணம் என்று கட்டிக்கொண்டிருந்தால் திருதிராஷ்ட்ரன் தூண் போல் நொறுங்கிப் போய்விடும் அபாயம் இருக்கிறது.
நல்ல தமிழ் படிக்கையில் கிடைக்கும் நிறைவு பிழையுருக்களில் கிடைப்பதில்லை என்பதை மறுக்கவில்லை. எனினும் இதுதான் சரி, இது பிழை என்று கோடிடவும் முடியவில்லை.
முயற்சி செய்தான் என்பதைச் சொல்லத்தான் முயன்றான்னு ஒரு சொல் ஏற்கனவே இருக்கே. அதை எந்த விதத்தில் இந்த முயல் சிக்கல் மேம்படுத்துது?
Deleteஅதுவும் சரிதான்!
Deleteஅழுகாதே என்பதும் அழுவாதே என்பதும் வட்டார பேச்சு மொழி . பேச்சு மொழியும் எழுத்திலும் வருகிறது பல காலமாகவே.
ReplyDeleteஇந்த பேச்சு மொழி வட்டாரம் மட்டுமன்றி அவரவர் சமூகத்திலும் மாறுபடத்தான் செய்கிறது. செய்யும். இதில் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
உதாரணமாக,
எங்கே போய்க்கொண்டு இருக்கிறாய் .. என்று எங்கேயும் கேட்பத்தில்லை.
எங்கன போகரீக... இது மதுரையில் நான் கேட்ட வழக்குத் தமிழ்.
எங்க போய்க்கினே கீறே... சென்னை
எங்க போறாப்பல... இது தஞ்சை, திருச்சி மாவட்டம்.
எங்க போயிண்டு இருக்கேள் ... சொல்லணுமா !!
இந்த மொழியின் உருச் சிதைவுகள் பற்றிய கருத்துக்கள், தமிழுக்கு மட்டும் அல்ல, எல்லா மொழிகளுக்கும் அவை பேசப்பட்டு வரும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
அண்மையில், ஆங்கிலம் பேசப்படும், புரிந்துகொள்ளப்படும் பல நாடுகளில் ஆங்கிலம் பேச்சு மொழியில் எவ்வாறு கையாளப்படுகிறது என்று வர்கீஸ் என்னும் ஆராய்ச்சியாளர் கட்டுரை ஒன்று படித்தேன்.
gonna , wannabe என்ற சொற்கள் என்ன சொல்கிறது என்றே முதலில் தெரியவில்லை.
கோயிங் டு , வாண்ட் டு பி என்று அர்த்தமாம்.
நல்ல வேளை . எனது ஆங்கில ப்ரொபசர் பாதர் சிக்வீரா இன்று இல்லை.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
அழுகாதே என்பது எனக்குத் தெரிந்து சினிமாக்கள் மூலமாயே மக்களுக்குப் பரவி இருக்கிறது. எந்த வட்டாரத்திலும் கேட்டதாய்த் தெரியவில்லை. எங்கன போறீக என்பதிலும் எங்கே போயிண்டு இருக்கேள் என்பதும் அர்த்தம் புரியறாப்போல் இருக்கு! ஆனால் அழுகாதே என்றாலோ, வர மாட்ரார், சொல்ல மாட்ரார் என்பதிலோ என்ன அர்த்தம் வருது?
Deleteநான் நினைச்சது நல்லவேளை எங்க தமிழ் ஆசிரியர் இன்னிக்கு உயிரோடு இல்லை! :( ஆனால் இதை எடுத்துச் சொல்லித் திருத்த நினைப்பவர்கள் மண்டையிலோ போடறாங்க பாருங்க ஒரு போடு! அதான் இன்னமும் தாங்கலை! :( நான் நிறைய வாங்கிக் கட்டிண்டு இருக்கேன். இனியும் வாங்கிக் கட்டிப்பேன். :(
சொல் வழக்கும் எழுத்துக் கோப்பும் வேறில்லையா?
Deleteஅழுவாதே வட்டார வழக்கு. அழுகாதே அனர்த்தம்.
Deleteஆமாம், அழுவாதே எனச் சிலர் பேச்சு வழக்கில் காண முடியும்.
Deleteஅருகாமையில், முயற்சித்தான் - இந்த வார்த்தைகளில் என்ன பிழை?
ReplyDeleteதொங்கட்டான் என்றால் என்ன?
ஏதோ கொஞ்சம் தமிழ் தெரியும்னு நினைச்சிட்டிருக்கேன்.. இவ்வளவு தானா?
தோடோடு சேர்த்துக் கீழேயும் தொங்கும் தொங்கட்டான் என்பது. படம் தேடி எடுத்துப் போடறேன். தோடு தனியா ஜிமிக்கி தனியாப் போட்டுக்காமல் தோட்டிலேயே காதுமடல்களில் தோடும், கீழே தொங்குவது போலவும் செய்யப்பட்டிருக்கும்.
Delete//முயற்சித்தல் என்ற வினைச் சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுவதே சரியாகும்
Deleteமுயன்றான், முயற்சி செய்தான் சரி
முயற்சித்தான் - தவறு//
பண்புடன் குழுமத்திலிருந்து பகிர்வு!
//தொங்கட்டான் என்றால் என்ன? //
Deleteதொங்கட்டான் ஒன்று தந்தத்தான்
பொங்கட்டான் மனம் குதிக்கத்தான்
எடுத்தான் கொடுத்தான் வடுத்தான் - கன்னத்தில்
எப்படி சொல்வேனடி.
சுப்பு தாத்தா.
1968 ஆடோ பயாக்ரபி லேந்து
//தோடோடு சேர்த்துக் கீழேயும் தொங்கும் தொங்கட்டான் என்பது.//தோடுடைய செவியன் படத்தை திரும்பவும் கூகிள் லே பார்த்தேன்.
Deleteஅதுலே தொங்கட்டான் ஒன்றும் இல்லையே !!
சு தா.
சுப்புத் தாத்தா, தொங்கட்டான் படம் போடுகிறேன். :) இன்னிக்கே போட்டால் இந்தப் பதிவுக்கு தேவுடு காக்கணுமே! பார்வையாளர்கள் என்னமோ நிறையக் காட்டுது தான்! :) கொஞ்சம் போணி ஆகட்டும்! :)உங்கள் மலரும் நினைவுகள் கவிதை அருமை.
Deleteஎன்னா கவித! என்னா கவித!
Delete(இலக்கண போலீஸ் உஷார்)
முயற்சித்தான் மாதிரிதான் அருகாமையும். அண்மைன்னு அழகா ஒரு சொல் இருக்கு. அதை விட்டுட்டு என்ன அருகாமை? முயற்சி செய்யாமல் இருப்பது முயலாமை. அது மாதிரி அருகிப் போகாம இருக்கிறது வேணா அருகாமையா இருக்கட்டும். அதைப் போய் ஏன் இப்படி ஒரு அர்த்தத்துல சொல்லணும்?
Deleteஅருகாமையின் அர்த்தமே மாறிப் போயிடுது பாருங்க அப்பாதுரை! :)
Deleteஅண்மையின் நேர்த்தி அருகாமையில் இல்லை. உண்மை தான்.
Deleteதொங்கட்டான் சொல்லுவதுண்டு....சகோதரி சொல்லுவது போல் முயற்சி செய்தான் என்பது இப்போது முயற்சித்தான் என்றுதான் பலரும் எழுதுகின்றனர். நீங்கள் முன்பு எப்படி எழுதுவீர்கள் இந்த வார்த்தைகளை....ஐயா, ஔவை இப்படித்தானே நாம் எழுதினோம். இப்போது அய்யா, அவ்வை என்று எழுதுவது போல் அது சரி என்றும் விளக்கப்பட்டது எங்கள் கேள்விக்கு......இப்படியாகிப் போனதோ என்னமோ....
Deleteஔவை தான் எனக்கும் எழுத வருகிறது. அதோடு "லை" "ளை" போன்றவற்றுக்கெல்லாம் பழைய எழுத்துத் தான் கையினால் எழுதுகையில் வரும்! இப்போதைய தலைமுறை அதைப்பார்த்துட்டுக் குழம்பும்! :(
Deleteஇலக்கிய சாரல் ஞானசம்பந்தன் அவர்கள் அவ்வப்போது தமிழ் வார்த்தைகளில் சரி எது தவறு எது என்று பதிவிடுகிறார்.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், குழுமங்களிலும் இது குறித்து விவாதங்கள் நடைபெறும். நானும் சில வார்த்தைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.
Deleteசெய்தித்தாள்களின் பிழைகளை பேராசிரியர் மா. நன்னன் மக்கள் டிவியில் எடுத்துக்காட்டி, தோலுரித்துக் கொண்டிருந்தார். எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, ஒரு வாக்கியத்தில் வார்த்தைகளை பொருந்தாத இடங்களில் போட்டு அர்த்தமே மாறுவது போலப் பிரசுரித்திருப்பார்கள்.
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், தொலைக்காட்சிச் சானல்களில் கீழே ஓடும் சிறப்புச் செய்திகளில் கூட நிறையப் பிழைகள் மலிந்து இருக்கும். :(
Deleteமன்னர்களைத் தாண்டி வளர்ந்த தமிழ் நன்னர்களைத் தாண்டியும் வளர்ந்து பெருகும்.
Deleteமன்னர்களைத் தாண்டினு சொல்லாதீங்க! இப்போல்லாம் சம்ஸ்கிருதம் இருந்தால் தமிழ் அழியும்னு கூப்பாடு போடறாங்களே! அந்தக்காலங்களில் சம்ஸ்கிருதப் பயன்பாடு இருந்து வந்ததையும் மீறி இத்தனை நூற்றாண்டுகளாகப் பிழைத்து வந்திருக்கும் தமிழ் இனியா அழியும். பெருகத் தான் பெருகும்!
Delete'முயற்சித்தானி'ல் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.
ReplyDeleteஇலக்கணப்படி தவறு! :)
Deleteஎது எப்படியோ இப்பொழுது பதிவுலகில் கல்யாண் நல்ல விளம்பரம் ஆகிறது உண்மையே.....
ReplyDeleteதமிழைப் பற்றிய குறிப்புகள் அருமை சகோ.
ஆமாம், கில்லர்ஜி! நகைக்கடை விளம்பரங்களில் அதிகமான கற்பனையைத் தூண்டி விடுகின்றனர் மக்களுக்கு! :( பின்னால் ஏமாந்து போவது மக்களே!
Deleteவிளம்பரங்கள் நிறைய ஏமாற்றுகின்றன! எழுத்துப்பிழை குறித்த தங்களின் ஆதங்கம் புரிகின்றது! இப்போதெல்லாம் பள்ளிகளில் வேர்ட் டெஸ்ட் வைப்பதாகவே தெரியவில்லை!
ReplyDeleteவாங்க சுரேஷ், அதான் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்னு கொண்டு வந்துட்டாங்களே! இது நன்மைக்கா, தீமைக்கானு தெரியலை! :( முதல்லே சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் மொழி சரளமாகவும், பிழையில்லாமலும் இருக்க வேண்டுமே!
Deleteஹிஹி.. "மொபைல் ஹேங்கிங் ஆகாமல் தடுப்பது எப்படி" என்று ஒரு பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழிலக்கணப்படி இது பிழையே. தமிழ் மொழி இந்த பயன்பாட்டால் மேம்பட்டிருக்கிறதா இல்லையா என்பது என் கேள்வி. இலக்கணம் என்பது மொழி வளர்ச்சிக்கு உரம். உரத்தை மட்டும் வைத்துக் கொண்டு பயிர் வளர்க்க முடியுமா?.
ReplyDeleteஉரமே இல்லைனாலும் பயிர் வளராது அப்பாதுரை. இலக்கணமில்லா இலக்கியம் ஒன்றைச் சுட்டுங்களேன்!
Deleteகிடையாது தான். இருந்தாலும் இலக்கணம் காலத்துக்கு ஏற்ப மாறினால் நல்லதே. (இலக்கியம் மாறுது இல்லையா?)
Deleteஇலக்கண மாற்றம் என்பது அடிப்படையையே அசைப்பது அப்பாதுரை! அது சரியா வருமானு தெரியலை! புதிய வார்த்தைகளைச் சேர்க்கலாம். ஆங்கிலம் பல மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெறவில்லையா!
Delete?அதுவரை நான் செய்த தமிழ் எழுத்துப் பிழைகளுக்கும்,இனிமேல் செய்தாலும் இப்பவே
ReplyDeleteமன்னிப்புக் கேட்டுக்கறேன்.
அட!!!!!!!!!!!!!! உங்களைச் சொல்லலை வல்லி! இது பொதுவாகச் சொன்னது. தொலைக்காட்சித் தொடர்களின் தமிழ் உச்சரிப்பைக் கேட்டு வந்த மனவேதனையாலும் தனி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்ட, அதுக்கு அவர் யார் தான் எழுத்துப் பிழையைச் செய்யவில்லை! இதெல்லாம் ஒரு குற்றம்னு சொல்லிக் கொண்டிருந்தால் உறவு மேம்படாது என எனக்கே அறிவுரை சொன்னார். வயதில் மிகச் சிறியவர்! அது தந்த மன வேதனையும் பதிவாயிற்று! :) பிழையின்றி எழுத வேண்டும் என்றே எங்களை எல்லாம் வலியுறுத்தி வந்த காலம் போய் இப்போது பிழை செய்தால் என்ன? எத்தனை பிழை இருக்கோ, அத்தனைக்கு மதிப்பெண்களைக் குறைச்சுக்குங்கனு சொல்லும் காலமாக ஆகிவிட்டது! :(
Deleteஉங்களைத்தான் சொன்னாங்க! உங்களைத்தான் சொன்னாங்க!
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteநல்ல பதிவு சகோதரி! விளம்பரங்கள் குறித்து.....யம்மாடியோவ் என்று இருக்கிறது விலை.....எங்கள் பதிவையும் சுட்டியதற்கு நன்றி. ஆனால் அது ஒரு ஆதங்கம் சிறு நையாண்டியில் எழுதப்பட்டது...விளம்பரங்கள் நாம் இப்படி எழுத எழுத ஒரு வேளை விளம்பரம் பெறுகின்றனவோ?!!!!!
ReplyDeleteதொலைக்காட்சியில் முன்னால் நன்னன் அவர்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டியதைப் பார்த்ததுண்டு...இப்போது ஊடகங்கள் நிறைய எழுத்துப் பிழைகளைச் செய்வதால்...பாருங்கள் அதை வாசிக்க வாசிக்க நமக்கும் அது தொற்றிக் கொண்டு விடுகின்றது...
வாழ்த்துகள், கருத்துகள் தான் சரி ஆனால் இப்போது வாழ்த்துக்கள், கருத்துக்கள் என்பதும் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதோ...தமிழ் ஆசிரியர் மணவை அவர்கள் இதில் முதலில் சொல்லப்பட்டவைதான் சரி என்றும் எழுதி இருந்தார்.
அதே போன்று அவ்வை, அய்யா என்பதும் சரி என்றே ஊமைக்கனவுகள் சொல்லி இருந்தார் எங்கள் கேள்விக்கு.
ஆனால் எங்களுக்குப் பெரும்பாலும் ஐயா ஔவை என்றுதான் எழுத வருகின்றது...
இன்னும் பல விளம்பரங்கள் இருக்கின்றன துளசிதரன்! நான் வாழ்த்துகள், கருத்துகள் என்று தான் எழுதுகிறேன். அதே போல் எல்லோருமே நன்றி"கள்" என்று எழுதி "கள்"ளைச் சேர்க்கிறார்கள். நன்றி என்பதே போதுமானது.
Deleteதொலைக்காட்சிகளில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் காதுக்கு கொடுமை தான். 'கொள்ளவேண்டும்' என்பது 'கொல்ல வேண்டும்' ஆகிவிடுகிறது. ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்று ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு மாணவன் கொடுக்கும் குறிப்புகளை வைத்து இன்னொரு மாணவன் அது என்ன சொல் என்று கண்டுபிடிக்க வேண்டும். 'ஆனி' என்ற சொல்லை குறிப்புத் தந்த மாணவன் 'ஆணி' என்று உச்சரிக்க எதிர் மாணவன் ஆணிவேர் என்றான். ஜேம்ஸ் வசந்தன் அந்த உச்சரிப்புப் பிழையை சுட்டிக் காட்டினார். இளம் வயதிலேயே உச்சரிப்புகள் திருத்தப்பட வேண்டும்.
ReplyDeleteபேசுவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் ஏகப்பட்ட பிழைகள். (இந்த பின்னூட்டம் போடும்போதே நான் என்னென்ன தவறுகள் செய்கிறேனோ என்று யோசித்துக் கொண்டேதான் எழுதுகிறேன் :)! என் உறவுக்காரப் பெண் ஒருமுறை சொன்னாள்: என் பிள்ளை நிறைய எழுத்துப் பிழை செய்கிறான் என்று அவன் ஆசிரியர் கூறுகிறார். இனிமே யார் மாமி எழுதப் போகிறார்கள்? எதிர்காலத்தில் பேப்பர், பென்சில் என்பதே இருக்காது. கணனியில் கேள்விகள் கேட்கப்படும். எல்லாமே multiple choice கேள்விகள்தான் . டிக் செய்யக் கற்றுக் கொண்டால் போதும்!'
இப்படிபட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் எழுத்துப் பிழையைப் பற்றிப் பேசி என்ன பயன்?
முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் கூட நன்றிகள் தவறு; நன்றி போதும் என்று சொல்லியிருந்தார். அவரும் நிறைய பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.