எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 13, 2015

மீண்டும் பத்மநாபபுரம் மாளிகையில்!


மேற்கண்ட சுட்டியில் கடைசியாய் எழுதினது. இப்போது மாளிகையின் சில தோற்றங்கள்.

தர்பார் ஹாலுக்குச் செல்ல ஏற வேண்டிய படிகள். இது  மந்திரசாலை என்றும் சொல்கின்றனர். ஒவ்வொருத்தராகவே ஏற முடியும். அதிலும் ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் நடுவே குறைந்தது இரண்டு அடிகள்!!!!!!!!!!!! என்னால் ஏற முடியவில்லை. கீழேயே தங்கி விட்டேன். ஆனால் அப்படி மேலே ஏறி அந்தப் பக்கம் கீழே இறங்கணுமாம். அது எனக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு மேலே ஏறிய நம்ம ரங்க்ஸுக்கும் தெரியாது. அவர் நான் இருக்கும் பக்கமே வந்துட்டார். அப்புறமா அங்கிருந்த இன்னொரு வாயிலைத் (இது பாதாளம்) திறக்கச் சொல்லிக் கீழிறங்கினோம். எங்களுக்காகக் கீழிறங்கும் வழியைத் திறந்து விட்டார்கள். வேறு யாரையும் விடவில்லை.  கீழிறங்குவதும் கஷ்டமே! அந்தக் காலத்தில் எல்லோரும் ரொம்பவே உயரமா இருந்திருப்பாங்க போல! :)


நான் மட்டும்தான் மேலே ஏறலைனு நினைச்சால் எனக்குத் துணையாக இன்னும் சிலர் இருந்தனர். ஆனால் அவங்களை எல்லாம் எங்களை விட்டப் பாதாள வழியில் விடலை! :)







மந்திரசாலையைக் கடந்து கீழிறங்கும் இடம் மணி மாளிகை என்கிறார்கள். இங்கே ஒரு பிரச்னை என்னவெனில் தகுந்த வழிகாட்டி இல்லை. உள்ளூர் மக்களே தெரிந்தவர்களை அழைத்து வந்து அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றனர். அப்படித் தெரிந்து கொண்டது தான் சிலவற்றின் பெயர்.  இதற்கடுத்து அன்னதான மண்டபம் என்னும் பெரிய மண்டபம். அடுத்துத் தாய்க் கொட்டாரம் எனப்படும் பழைய மாளிகை


இந்த மாளிகையில் மின் விளக்குகளோ மின் விசிறிகளோ கிடையாது. மின் இணைப்பே இல்லைனு நினைக்கிறேன். பழமையைப் பாதுகாக்கவேண்டியும் இருக்கலாம்.


ஜன்னல் வழியே இயற்கையாகத் தெரியும் வெளிச்சம் தான் உள்ளேயும். ஜன்னலின் அமைப்பு மாதிரிக்கு.




பால்கனி போன்ற அமைப்பு. மர வேலைப்பாடுகளில் அசத்தி இருக்கின்றனர்.


16 comments:

  1. படங்களும் கருத்துகளும் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்பாவாணன்.

      Delete
  2. நாங்க பாதாளம் போகலையே:-(

    நிறைய பேர் வழிகாட்டிகளா அங்கங்கே இருந்தாங்க. அந்தந்த இடத்தைப்பற்றிச் சொன்னாங்களே தவிர, கூடவே வந்து வழி எல்லாம் காட்டலையாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க மந்திரசாலையிலிருந்து அந்தப்பக்கமா இறங்கி இருப்பீங்க. நம்ம ரங்க்ஸ் அப்படி இறங்கணும்னு தெரியாமலும், அதோடு நான் இந்தப்படிக்கட்டுப் பக்கம் காத்திருந்ததாலும் சென்ற வழியிலேயே திரும்பி வந்தார். ஆகவே எங்களுக்குச் சிறப்புப்பாதாள வழி! :) ஹிஹிஹி, வழிகாட்டிகள்னு இல்லை. ஒவ்வொரு அறையிலும் இரு ஊழியர்கள் இருந்தாலும் நாங்க போனது சாப்பாடு நேரம் என்பதாலும் அவர்களுக்குள்ளாக அன்றைய மாலை அலுவலர் சந்திப்புக் குறித்த கலந்தாலோசனைகளாலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

      Delete
  3. மர்ம மாளிகை! பார்க்கணும் ஒருதடவை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மர்மமும் காணோம். படிகள் எல்லாம் ஒவ்வொன்றும் என் உயரம்! :) நுழைவாயிலில் காவல் அலுவலர் கேட்டப்போ சாதாரணமா நினைச்சுட்டேன். :)

      Delete
  4. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் இந்த மாளிகை வந்ததோ என்று நினைக்கிறேன். ஒரு அம்மா தன் மகன்
    வருகிறானா என்று எதிர் நோக்கிக் காத்திருந்த சாளரம்.. படங்கள் மிக அழகு. கீதா.
    மலையாளம் தெரிந்தவர்களுக்கும் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி இருந்தால் என்ன லாபம்.
    அழகைப் பார்த்துட்டுப் போக வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படம் பார்க்கலை ரேவதி. அதனால் தெரியாது. தமிழிலும் சொல்றாங்க என்றாலும் வழிகாட்டிகள்னு யாரும் இல்லைனே நினைக்கிறேன். அந்த அந்த அறைகளில் அமர்ந்திருக்கும் அரண்மனைப் பாதுகாப்பு ஊழியர்கள் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்கிறார்கள்.

      Delete
  5. ஆவலைத் தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. இயன்றபோது பாருங்கள் சகோதரரே!

      Delete
  6. Replies
    1. எனக்குத் தெரிஞ்சு ஒரு மர்மமும் இல்ல ஸ்பை! சும்மா இருட்டா இருக்கு அம்புடுதேன்! :)

      Delete
  7. மர்ம மாளிகை. இங்கே செல்லவில்லை. அடுத்த பயணத்தில் பார்க்கலாம்னு விட்ட இடம்....

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சாப் போயிட்டு வாங்க வெங்கட், மர்மப்படம் எடுக்கிறதுக்கு வேணா இந்த மாளிகையைப் பயன்படுத்திக்கலாமோ என்னமோ! :)

      Delete
  8. நிறைய மலையாளப்படங்கள் இங்கே எடுத்துருக்கறாங்க. நான் பார்த்துருக்கேன். தமிழில் மணிச்சித்திரத்தாழ் எடுத்தபோதுகூட சந்த்ரமுகி 'என்ன கொடுமை சரவணன்... மூணு ஜன்னல் எல்லாம் இங்கத்து ந்ருத்ய ஸபா தான்.

    ReplyDelete
  9. Varsham 16 Tamizh padam inge eduthathu thaan !

    ReplyDelete