ஹிஹிஹிஹி, ப்ளாகர் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிடுச்சு போல. அபி அப்பாவின் கமெண்ட்டுகளை நான் மெயிலில் இருந்து பப்ளிஷ் பண்ணினால் மாடரேட் ஆயிடுச்சுனு நேத்தி பதில் வந்தது. ஆனால் அவரோட கமெண்ட்ஸ் ஃபுல் பேஜ் ஆப்ஷனில் தான் வருது. சரினு பார்த்தால் இன்னிக்கு ஒரு கமெண்ட் கொடுத்தார் ஏன் போடலைனு. அது பப்ளிஷே ஆகலை. கமெண்ட்ஸ் பக்கத்துக்கு வந்தால் இட்ஸ் கான், போயிந்தி,போயே போச்ச்ச்ச்ச்!!! எங்கே னு யாருக்குத் தெரியும்?? ஹிஹிஹி, மறுபடி மெயிலில் போய் காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டால் என்ன ஆச்சரியம், சமர்த்தாய் பப்ளிஷ் ஆயிடுச்சு. என்னோட ஆன்மீகப் பயணம் பக்கத்துக்கு இன்னிக்குப் போட்ட போஸ்டுக்கு(?) தெரியலை, யாரோ இரண்டு பேரு கமெண்டி இருந்தாங்க. அதுக்கு நான் மெயில் லிங்க் கொடுக்கலையா? கமெண்ட்ஸ் பக்கத்திலிருந்தே காயப், காணோம், போயே போச்ச்ச்ச்ச். இனிமேல் காணாமல் போனவர்கள் பத்தின அறிவிப்புத் தான் கொடுக்கணும்.
இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா ப்ளாக் சொந்தக்காரங்களைத் தவிர மத்தவங்களை உள்ளே விடக் கூடாதுனு கண்டிப்பா இருக்கு ப்ளாகர்னு புரிஞ்சு போச்சு. ஆனால் அந்த சந்தோஷம் போகறதுக்குள்ளே அபி அப்பா அநானியா கமெண்டிட்டு, அநானியை ஏத்துக்குதேனு குதிக்கிறார். என்னத்தைச் சொல்ல? ப்ளாகரின் துரோகத்தையா? அபி அப்பாவின் சந்தோஷத்தையா?? இதுக்கு நடுவிலே நடராஜ தீக்ஷிதர் கமெண்ட்ஸே போடமுடியலையேனு மெயில் கொடுத்தார். இருந்திருந்து இன்னிக்கு நாள் பார்த்து அவரோட பதிவிலே கமெண்டினேன். அப்புறமா அவரும் காப்பி, பேஸ்ட் பண்ணினார். அதிலேயும் பாருங்க மொத்தம் மூணு கொடுத்ததில் ஒண்ணு தான் போயிருக்கு போல. மாயவரத்திலே அபி அப்பாவுக்கும் வரலை. நெய்வேலியிலே தீக்ஷிதருக்கும் வரலை, மைலாப்பூரில் ரேவதிக்கும் கமெண்ட்ஸ் போகலையேனு அப்செட் ஆயிட்டாங்க. அவங்களுக்கும் வரலை. இங்கே அம்பத்தூரில் எனக்கும் வரலை. ஆஹா, ஆஹா, ஜாலிதான் போங்க, இன்னும் வேறே யாருப்பா இருக்கீங்க?
இதிலே வயித்தெரிச்சல் என்னன்னா, அம்பியோட ப்ளாகிலே யாருமே கவனிக்காமல் இருந்த அவரோட நமீதாவின் பாட்டு பத்தின பதிவுக்கு ஒண்ணரை மணிக்கே முதல் ஆளாப் போய் புளியோதரை வாங்கிட்டு, ச்சீச்சீ,கமெண்ட்ஸ் கொடுத்துட்டு வந்தால், ஜி3 சாவகாசமா 2 மணிக்கு அப்புறமா வந்து நான் தான் பர்ஷ்டுங்கறாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன அநியாயம் இது??? ப்ளாகர் கூடவா ப்ரூட்டஸ்?????
maami ellar blaglaium ithe problemthaannn
ReplyDeletewhere is your mannivakkam sivan temple post. I have posted 1 comment on that post.
ReplyDeleteMannivakkkam should be near vandalur, Tamabarm side, Bus route 55 B it seems.
அட நீங்க வேற, நானே கடுப்பில இருக்கேன். எனது வலைப்பக்கத்தில் என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு, பதில் பின்னூட்டமிட்டால், சில விணாடிகள் தெரிகிறது அதன் பின் காணாமல் போய் விடுகிறது. ஆனால் மற்றவர்கள் பின்னூட்டாமிட்டால் என் பதிவில் சேர்ந்து விடுகிறது!
ReplyDeletehttp://lawforus.blogspot.com
ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது!":
ReplyDeletewhere is your mannivakkam sivan temple post. I have posted 1 comment on that post.
Mannivakkkam should be near vandalur, Tamabarm side, Bus route 55 B it seems.//
என்னத்தைச் சொல்ல?? நீங்க கொடுத்த அந்த கமெண்ட் ஆன்மீகப் பயணம் பக்கத்துக்கு. அதைக் காணோம், காக்கா கொண்டு போச்சு போல! என்ன செய்யறது?? :))))))))
எல்கே, உங்க கமெண்ட் கிடைச்சா நாளைக்குப் போடறேன், ஓகேயா?? எங்கே போச்சுனு தெரியாதுப்பா! ப்ளாகர் காக்கா தான் தூக்கிண்டு போயிருக்கு!
ReplyDeleteதிரவிய நடராஜன்
ReplyDeleteto me
show details 7:48 PM (1 hour ago)
திரவிய நடராஜன் has left a new comment on your post "வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது!":
அட நீங்க வேற, நானே கடுப்பில இருக்கேன். எனது வலைப்பக்கத்தில் என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு, பதில் பின்னூட்டமிட்டால், சில விணாடிகள் தெரிகிறது அதன் பின் காணாமல் போய் விடுகிறது. ஆனால் மற்றவர்கள் பின்னூட்டாமிட்டால் என் பதிவில் சேர்ந்து விடுகிறது!
http://lawforus.blogspot.com //
ஹிஹிஹிஹி, அதனால் என்ன?? ஜாலியாய் எஞ்சாய் பண்ணறதை விட்டுட்டு??? நமக்கு இப்படி எல்லாம் வரது வழக்கமா? ரொம்ப நாளா இபப்டி நடக்கவே இல்லையேனு கவலைப்பட்டுட்டு இருந்தேன், இன்னிக்குத் தான் பூரண திருப்தி! :)))))))))))))))))))
ப்ளாகரே நீ எங்கள் தலைவியை இப்படி இம்சிப்பது ஏனோ!!!?? ;))
ReplyDeleteஎல்கே, இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா? ப்ளாகர் என்னோட ப்ளாகிலே இருந்து பதிவுகளையே தூக்கிட்டுப் போயிருக்கு. இதெல்லாம் எந்த மூலைக்கு?
ReplyDeleteராம்ஜி, போட்டுட்டேன் பாருங்க, இன்னிக்குக் காலம்பர முதல் வேலை உங்க கமெண்ட்ஸைத் தேடினதுதான். :)))))
ReplyDeleteவாங்க திரவிய நடராஜன் அவர்களே, முதல் வரவுக்கும், வர வைச்ச ப்ளாகருக்கும் நன்றிங்க. இன்னிக்குச் சரியாப் போயிருக்குமே! :D
ReplyDeleteகோபிநாத், இதை இம்சைனு நினைக்கலையே?? :))))))))
ReplyDeleteஅட ஒரு 12 மணி நேரம் பிரச்சினைன்னா லபோ திபோ ங்கிறாங்க!
ReplyDelete:P:P:P:P
இன்னைக்கு காலை முதல் ஒழுங்கா எல்லாம் போகுது.
வாங்க தி.வா. இன்னிக்குக் காலம்பரலேருந்து எல்லாம் சரியாத் தான் இருக்கு! :)))))))
ReplyDeleteஅய்யய்யோ இத்தன சீக்கிரம் சரியாகிடுச்சா? என்ன கொடுமை ஆண்டவா இதல்லாம்?:-)
ReplyDeleteஅப்பாவி தங்கமணி said - மாமி இது நிச்சியமா உள்நாட்டு சதி தான்... சிபிஐ விசாரணை முடுக்கி விடபட்டுள்ளது... விரைவில் (ஒரு பத்து வருசத்துக்குள்ள) அறிக்கை வரும்...
ReplyDeleteஉங்கள் பதிவில்(முகப்பு பக்கத்தில்) பின்னூட்டம் இட்டவர்கள் பெயர் தெரியாமல் said என்று காண்பிக்கிறது.இது பழைய பிரச்சனை இன்னுமா தீர்க்காம வைத்திருக்கிறீர்கள்.
ReplyDelete