நவம்பர் 5, 2005,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததொரு தேதி. கல்வெட்டுக்களில் இடம்பெற வேண்டிய செய்தி! ஹிஹிஹி, அன்னிக்குத் தான் என்னோட முதல் பதிவு வெளிவந்தது. ஆனால் ஆரம்பிச்சது ஒரு பெரிய கதை! யாருக்கு சாவகாசம் இருக்கோ அவங்க கேட்டு வச்சுக்குங்க. 2002-ம் வருஷம் காலில் பிரச்னை வந்து நடக்கமுடியாமல் போனதில் இருந்து கொஞ்சம் மனச்சோர்வு அதிகமாயிற்று. கணினி கற்றுக்கொண்டிருந்தாலும் அப்போ வீட்டில் கணினி இல்லை. வாங்கற எண்ணமும் இல்லை. பெண்ணோ, பையரோ, மெயில் கொடுத்தால் ப்ரவுசிங் செண்டர் போய்ப் பார்த்துட்டு வரதோடு சரி. அப்படியே நாட்கள் கழிய 2004- கடைசியில் யு.எஸ். முதல்முறைப் பயணம். அங்கே தான் இந்த வலைப்பதிவுகள் பற்றிப் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்பே சில பத்திரிகைகள் வாயிலாகவும், எழுத்தாளர் சுஜாதா மூலமும் வலைப்பதிவுகள் அறிமுகம் ஆகி இருந்தாலும் நானே படிக்க ஆரம்பிச்சது அப்போத் தான். அப்புறமா இந்தியா வந்த எங்க பையர் கணினி வாங்கிக் கொடுத்துட்டு,இதிலே ப்ரவுசிங் பண்ணினால் கொஞ்சமாவது உனக்கு மாறுதல் ஏற்படும்னு சொன்னார். ஆனாலும் என்னோட கணவருக்கோ முழு அளவில் பயன்பாடு இருக்காது, இது ஒரு அதிகப்படி என்ற எண்ணமே இருந்தது. அப்போக் கூடப் பதிவுகள் தொடங்கும் எண்ணம் என்பதே இல்லை.
அப்போத் தான் தினமலரில் ஒருநாள் தற்செயலாக துளசியின் பதிவு பற்றிப் பார்க்க நேர்ந்தது. பதிவு பற்றிய விமரிசனத்தில் எழுத்தில் துளசியின் மணம் வீசுவதாகவும் எழுதி இருந்தார்கள். அப்போ எனக்கு இருந்த ஆஸ்த்மா இருமலுக்கும், தொந்தரவுக்கும் துளசியின் மணம் என்றால் ஆஹா, எவ்வளவு நல்லது? போய்ப் பார்த்தேன். அங்கே இருந்து பல பதிவுகள். மெல்ல, மெல்லப் பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் ஆங்கிலத்தில் தான். தமிழில் அப்போ தட்டச்ச முடியலை. அது பத்திய தொழில் நுட்பம் புரியலை. என்றாலும் விடாமல் பின்னூட்டங்கள் கொடுத்துவந்தேன். சிலர் வெளியிட்டனர், சிலர் வெளியிடவில்லை. வெளியிட்டவர்களில் டோண்டு ராகவன், துளசி, நுனிப்புல் உஷா, குமரன், சிபி போன்றோர் முக்கியம். அப்போத் தான் கைப்புள்ள பதிவு ஆரம்பிச்சிருந்தார் என நினைக்கிறேன். ஆனால் என்னால் தமிழில் எழுதவே முடியலை. அம்பி நான் தமிழில் எழுத ஆரம்பிச்சதும் தான் வந்தார். அதுக்கு முன்னாலே எட்டிக் கூடப் பார்க்கலை. வெண்பா வடிக்கலாம் வானு கூப்பிட்டுட்டு இருந்த ஜீவ்ஸ் தான் இ-கலப்பையை அறிமுகம் செய்து வைச்சு எப்படிச் செய்யணும்னு ஒரு பின்னூட்டம் கொடுத்தார். ஆனால் அதற்கு முயல முடியாமல் வீட்டில் பலதரப்பட்ட வேலைகள், பிரச்னைகள். அதுக்கும் முன்னாலேயே வல்லி சிம்ஹன் பழக்கம் ஆகிவிட்டார். அவரும் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிச்சுத் தமிழுக்குத் தடுமாறிக்கொண்டிருந்தார். இந்த வலை உலகில் என் முதல் தோழி அவரே.
அப்போ வீட்டில் உறவினர் வருகை, அதோடு கல்யாணம் வேறே. போறாததுக்கு அந்த வருஷம் பெய்த அதீதமான மழையினால் என்னோட ஆஸ்த்மா தொந்திரவு அதன் உச்ச கட்டத்துக்குப் போயிருந்தது. டாக்டர் படுக்கையிலேயே இருக்கணும்னு சொல்ல, எனக்கோ வீட்டில் அப்போத் தான் வேலை அதிகம். அந்த வருஷம் ஆகஸ்டில் ஆரம்பித்தது டிசம்பர் வரை தொடர்ந்து கஷ்டப் பட்டேன். ஒரு நாள் நன்றாக இருந்தால் மறுநாள் மூச்சு விடமுடியாது. இடைவிடாத இருமலும் கூட. ஒவ்வொரு வருஷமும் இதே தொந்திரவு. ஆகஸ்டில் மழையோடு கூட வரும். டிசம்பரில் மழை போகும்போது தான் போகும். எங்க வீட்டில் இருமினேன் என்றால் அடுத்த தெருவில் உள்ள என்னோட அண்ணா வீட்டிற்குக் கேட்கும்.
மாசக்கணக்காக இருமல். யாராலும் கற்பனை கூடச் செய்யமுடியாது. இருமி, இருமி ரத்தமாய் வாந்தியும் வரும். அதோடு கூட டான்சிலிடிஸும் சேரக் குடும்ப மருத்துவருக்குத் தலையைப் பிச்சுக்கணும்போல ஆகி, பின்னர் எக்ஸ்ரே எடுத்துட்டு கார்டியாலஜிஸ்ட் கிட்டே அனுப்பிட்டார். அவர் பட்ட கஷ்டம் அவருக்குத் தானே தெரியும்?? ஏற்கெனவே இருந்த மனச்சோர்வு அதிகம் ஆகிவிட்டது. கார்டியாலஜிஸ்ட் அனைத்துப் பரிசோதனைகளும் பண்ணிட்டு, நுரையீரல் தான் பாதிப்பு என்றும், கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சரியாகும், எனவும், பூரணமாய் ஆஸ்தமாவில் இருந்து விடுதலை என்பது இல்லை என்றும், கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிட்டு, மருந்து, மாத்திரைகளை மட்டுமின்றி அனைத்தையும் ரேஷன் முறையில் ஆக்கினார்.2006-ம் வருஷம் ஜனவரியில் இருந்து மே வரைக்கும் தொடர்ந்து வைத்தியம் செய்தார். அதன் பின்னர் இரண்டு மாசத்துக்கு ஒருமுறை செக் அப் என்ற நிலைக்கு வந்து இப்போ மூன்று மாசம் ஆகி இருக்கிறது. (அந்த வருஷம் மட்டும் மழைக்காலத்தில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அதோடேயே கைலை யாத்திரையும் போயிட்டு வந்தாச்சு!) அப்போத் தான் திரு மஞ்சூர் ராஜா மூலமும், வெண்பா வடித்துக்கொண்டிருந்த ஜீவ்ஸ் மூலமும் தமிழில் எழுத முடிந்தது. அப்போவும் மனச்சோர்வோடு புலம்பலாகவே எழுதிக்கொண்டு இருந்த என்னை ஊக்கியவர் திரு சூப்பர் சுப்ரா. இந்த வலை உலகில் எழுத ஆரம்பிச்சதுமே என்னைத் தன் மூத்த சகோதரியாக ஏற்றுக்கொண்ட முதல் நபர். என்னிடம் இருந்த நகைச்சுவை உணர்வைத் தூண்டி விட்டவரும் அவரே.
அதன் பின்னர் எத்தனையோ பதிவுகள், எத்தனையோ பின்னூட்டங்கள், பல பாராட்டுகள், பல விமரிசனங்கள், பொதுவாகவே நான் வயதில் இளையவர்களிடம் கதை சொல்லுதல், வேடிக்கைப் பேச்சின் மூலம் பல அறிவுரைகள் கூறுவது என்று இருப்பேன். இது ஒரு இயல்பாகவே இருந்து வருகிறது. இப்போவும் இணையத்தின் மூலமாய் இளைய தலைமுறைக்கு ஏதாவது சொல்லணும்னே நினைச்சேன். அப்போத் தான் சிலரிடம் சாட்டிங், பின்னூட்டங்கள், பேச்சுக்கள் மூலம் அனைவருக்கும் புராணங்கள், இதிகாசங்களில் தவறான புரிதலும், தவறான கண்ணோட்டமும் இருப்பது தெரிய வந்தது. அதற்காகவே இந்தக் கதை சொல்லும் உத்தியைத் தேர்ந்தெடுத்தேன். மேலும் சின்ன வயசில் இருந்தே கதை சொல்லியாக இருந்திருக்கிறேன். என் அப்பாவின் கண்டிப்பான போக்கினால் என்னுடைய நண்பர்கள் என்னை விடவும் வயதில் சின்னக் குழந்தைகளாகவே இருந்திருக்கிறார்கள். அக்கம்பக்கம் உள்ள சின்னக் குழந்தைகள் எல்லாம் என்னோடு கூட இருந்து கொண்டு கதை சொல்லிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருக்கும். அவங்க அம்மா, அப்பாவும் நம்பிக்கையோடு என்னிடம் விட்டு வைப்பார்கள். அதையும் சொல்லணுமே! :D
என் குழந்தைகளுக்கும் கதை சொல்லி இருக்கிறேன். என் கணவரும் பலமுறை என்னை எழுதச் சொல்லி இருக்கிறார். சாதாரணமாக நான் கடிதம் எழுதினாலே நன்றாக இருப்பதாகவும், எழுத ஆரம்பித்தால் எனக்கு அது ஒரு மாற்றமாக இருப்பதோடு, நன்றாய் எழுதுவேன் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அப்போ எல்லாம் எழுதணும்னு ஆசை எல்லாம் கிடையாது. குடும்பத்தின் பல்வேறு பிரச்னைகளிலும் மூழ்கி முத்தெடுக்கவே நேரம் போதவில்லை. ஒவ்வொன்றையும் எழுதினால் பத்து பாகங்களுக்கும் மேல் வரும். ஆரம்பத்தில் எழுத ஆரம்பிச்சப்போ கூட இப்படித் தொடர்ந்து எழுதுவேனா என்றே எனக்கு சந்தேகம். ஆதலால் போகப் போகத் தான் இதில் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்தேன். அப்போ என்ன எழுதச் சொன்ன என் கணவர் இப்போ நான் என்ன எழுதறேன் என்பதை நான் சொல்லுவதோடு சரி, அவர் படிக்கிறதில்லை! :P.
என்ன எழுதணும் என்பது முடிவானதும் பலருடைய எண்ணங்களிலும் பதிந்திருக்கும் ராமாயணக் கதையினைத் தேர்ந்தெடுத்தேன். நம் இதிஹாச, புராணங்களின் தவறான புரிதலைப் போக்கவேண்டும் என்ற எண்ணம் ஒன்றோடு எழுத நினைத்தேன். அதற்கான அடித்தளம் முதலில் போட்டுக்கொண்டு இப்போ எழுதி வருகிறேன். படிக்கிறவங்க அதிகம் இளைய தலைமுறையே எனத் தெரிய வருகிறது. அதில் மிகவும் சந்தோஷமே. மொத்தமாய் இந்த வலைப்பக்கத்தில் மட்டும ஆயிரம் பதிவுகளுக்கும் மேல் எழுதி உள்ளேன். எழுதும் எல்லா வலைப்பக்கங்களையும் சேர்ந்தால் 2 ஆயிரத்துக்குக் கிட்டே வரும். ஒவ்வொருத்தர் போல் அர்த்தமுள்ள பதிவுகளை எழுதி உள்ளேன் எனச் சொல்லிக்கொள்ள முடியாது. இலக்கணமோ, இலக்கியமோ தெரியாது. எழுதவும் வராது. அதே சமயம் எழுதின வரையில் பலருக்கும் ஒவ்வொரு விதத்தில் மனதுக்கு மகிழ்வைத் தந்திருக்கிறது என்பதும் நிறைவைத் தருகிறது. அது போதும்.
அருமையான பதிவு. உங்கள் பதிவுலக சுயப் புராணம் அருமை மாமி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeletewell done Mrs Shivam. வாழ்த்துக்கள்!! ஊக்கமது கை விடேல்!!
ReplyDelete1000 வாலாவுக்கு வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteபெட்டக கணக்கு படி அளவு குறையுதே.. :)
ஆயிரத்துக்கு வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்.
ReplyDeleteஇவ்வளவு பதிவா என ஆச்சரியப் படத்தான் முடிகிறது. பாராட்டுக்கள்.
வாங்க எல்கே, நன்றிப்பா.
ReplyDeleteஅட, அதே மனசா??? நல்ல மனசு உங்களுக்கு, பல வருஷம் கழிச்சு வந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க/
ReplyDeleteஜெயஸ்ரீ, நன்றிங்க.
ReplyDeleteஅட பாலபாரதி??? வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க??
ReplyDeleteம்ம்ம்ம்ம்?? கணக்குக் கூட இல்லை இருக்கணும்?? இந்தப் பதிவுகளே ஆயிரத்து இருபது. ஆன்மீகப் பயணம் பக்கத்தில் முந்நூறை நெருங்குது. மற்றதெல்லாமும் இருநூறு! ஹிஹிஹி!
treat eppa atha sollunga
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteஅடிச்சு ஆடி 10000 க்கு வாங்க ;)
உங்களை வணங்கி , வாழ்த்துகிறேன்
ReplyDeleteஅம்மா! நிச்சயமா அபூர்வசிகாமணிதான் :) வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்!
ReplyDeleteஆரம்பம் முதல் ஆயிரம் வரை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎன் அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ஆயிரத்தை தாண்டிட்டாங்களாம். அக்கா(என்னாது)... வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇத்தனை வருஷத்துக்கு அப்புறம் என் பேரை நினைவு கூர்ந்து எழுதியதற்கு நன்றி :)
ReplyDeleteஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகள். 10000 பதிவுக்கு வாழ்த்து சொல்ல வரேன் அப்புறமா :)
இரண்டாயிரம் இடுகைகளா? நீங்க தொடங்குன அதே நவம்பர் 2005ல தான் நானும் தொடங்குனேன். இப்பத் தான் முக்கி முனகி 500 தாண்டியிருக்கேன். :-)
ReplyDeleteஇம்புட்டு கஷ்டங்களோடயும் தொடர்ந்து எழுதி வர்றதுக்கு மிக்க நன்றி 'கீதாம்மா' (திட்டாதீங்க நீங்க தான் இந்தப் பெயரை வச்சதுன்னு. ;-) ). இளைய தலைமுறையின் நன்றிகள் எப்பவும் உங்களுக்கு இருக்கும்.
கடுமையான உழைப்புக்குக் கிடைத்த எண்ணிக்கை. பட்ட சிரமம் தெரிகிறது. நடு நடுவே 'அந்த'க் கணினியுடன் செல்லமான மல்லாடல்கள் வேறே. வாழ்த்துக்கள்.
ReplyDelete1000 த்திற்கு நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கீதாம்மா.
ReplyDeleteஆஹா..... ஆயிரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteதினமலரில் பார்த்துட்டு ஆயிரம் வந்துட்டீங்க. இந்த மாசம் லேடீஸ் ஸ்பெஷலில் பார்த்துட்டு இன்னொரு ஆயிரம் வர வாழ்த்துகிறேன்:-)))))
வாழ்த்துக்கள் சாம்பு சார். :)
ReplyDeleteஆயிரம் பதிவு கீதா மேடத்தால(போனா போகுது) எழுத முடியுதுன்னா அதுக்கு உங்களின் தியாக குணமும், பொறுமையும் தான் காரணம். :P
எல்கே, எப்போ வேணாலும் கொடுங்க, நான் ரெடி. அது சரி, எடைக்கு எடை என்ன கொடுக்கிறதா உத்தேசம்?? சொன்னா எடையைக் கூட்டிக்கலாமில்ல?? :P
ReplyDeleteஅட?? புலியா இது?? பஸ்ஸிலே பார்த்து ஏதானும் கேட்டால் கூடப் பதுங்குவாரே? என்ன ஆச்சரியம்? என்ன ஆச்சரியம்?? வராதவங்க எல்லாம் வராங்கப்பா!
ReplyDeleteகனாக்காலம், வாழ்த்துக்கும், வணக்கத்துக்கும் நன்னிங்கோ!
ReplyDeleteகவிநயா, நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ரா.ல. ரொம்ப நாட்களாச்சு பார்த்து, ரொம்ப நன்றிம்மா.
ReplyDeleteஹிஹிஹி இளா, நல்லா இருக்குங்க (அக்கா தான் :D) நன்றிங்க. இப்போ எங்கே வாசம்????
ReplyDelete@ஜீவ்ஸ், அட ஆசான், வாங்க, அ, ஆ கற்றுக்கொடுத்த ஆசானை மறக்க முடியுமா? வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாங்க குமரன், நீங்க வச்ச பேருன்னு தான் நக்ஷத்திர வாரத்திலேயே சொல்லியாச்சே! இன்னிக்கு அகில உலகப் பேராயிடுச்சு! :D நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ஜீவி சார், வாழ்த்திற்கும், ரசிப்புக்கும் ரொம்ப நன்றி.
ReplyDeleteஅட?? கோவியாரா? ஆச்சரியம் தான், வாங்க, வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteதுளசி, நான் பார்த்த வரைக்கும் கணக்குச் சரியா இருக்குப்பா. நன்றி நினைவூட்டலுக்கு. :)))))))))) வாழ்த்துக்கும் நன்றி. மேலும் நான் இந்த எண்ணங்கள் பக்கங்களை மட்டும் எடுத்துக்கலை. :))))))
ReplyDeleteவாழ்த்துக்கள் சாம்பு சார். :)
ReplyDeleteஆயிரம் பதிவு கீதா மேடத்தால(போனா போகுது) எழுத முடியுதுன்னா அதுக்கு உங்களின் தியாக குணமும், பொறுமையும் தான் காரணம். :P//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பி, தும்பி, வம்பி. உங்களாட்டமாவா எல்லாரையும் நினைச்சுக்கிறது? நறநறநறநறநற
ம்ம்ம எல்லோரும் வந்தாச்சா...நான் தான் லேட்டா...;)) வழக்கம் போல ;))
ReplyDeleteதலைவி எப்போதும் நீங்கள் தலைவி தான் இந்த பதிவு எண்ணிக்கையில் கூட ;))
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
அம்பியின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்!
ReplyDelete:-))))
வாழிய, வாழிய, வாழிய!!!
ReplyDeleteஉங்கள் பணி மேலும் தொடர எல்லாம் வல்ல தில்லைக் கூத்தனை இடைவிடாது இறைஞ்சுகின்றென்.
n.d. nataraja deekshidhar
www.natarajadeekshidhar.blogspot.com
வாங்க கோபி, தாமதமானால் என்ன?? வாழ்த்தினவரைக்கும் நன்றிப்பா.
ReplyDelete@Thivaa, ET tu Brute??? grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteவாங்க தீக்ஷிதரே, ரொம்ப நன்றி உங்களோட பிரார்த்தனைக்கு.
ReplyDeleteஅப்பாடியோவ்! ஆயிரமா?
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நான் கொஞ்சம் விளக்கமா பேச வேண்டியிருக்கு. அதனால பின்ன வரேன். வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாங்க குமார், ரொம்ப நாட்கள் கழிச்சு வாழ்த்த வந்ததுக்கு ரொம்ப நன்றி. வாழ்த்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteஅபி அப்பா, என்ன சொல்லப் போறீங்க??
ReplyDeleteஆய்வு மகாநாடா? அது சரி, ஆய்வரங்கம் ஒண்ணு ஏற்படுத்திடலாம், உங்க ஆய்வுக் கட்டுரையை அங்கே படிங்க! :P
அதே மனசு தான்.மனசு எப்படி மறக்கும்.
ReplyDeleteரொம்ப லேட்டா வரேன் கீதா. நீங்க முன்னாலியே ஆயிரம் பதிவுகள் முடிச்சாச்சுன்னு நினைத்தேன்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் மா. உங்கள் உழைப்பும் பெருமையும் எப்பவும் மங்காம இருக்கணும்.
அதானே பார்த்தேன், மனசாவது மறக்கறதாவது?? நன்றிங்க! :D
ReplyDeleteநீங்க வேறே வல்லி, இந்த எண்ணங்கள் பக்கத்தின் பெட்டகத்தின் படி ஆயிரம் இல்லை தான். ஆனால் எனக்குத் தான் அவசரம் கொண்டாடிட்டேன். மொத்தப் பதிவுகள் எல்லா வலைப்பக்கங்களையும், தளங்களில் எழுதினதும் சேர்த்தால் ஆயிரத்துக்கும் மேல் போகுது. அதான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!
ReplyDeleteவணக்கம்! நான் அபிஅப்பா, கமிங் ஃபிரம் இண்கம்டாக்ஸ் ஆபீஸ்! பொய் கணக்கு காண்பித்து எல்லாரையும் ஏமாத்துவது போல என் கிட்ட நடக்காது. ஏன்னா நான் ரொம்ப ஸ்ரிக்டு ஸ்ரிக்டு ஸ்ரிக்டு...
ReplyDeleteகீதாம்மா என குமரனால் குட்டிகரணம் மன்னிக்கவும் நாமகரணம் சூட்டப்பட்ட உங்கள் பெயரில் இருப்பது மொத்தம் மூன்று கம்பனிகள்.
1.எண்ணங்கள்
2. ஆன்மீக பயணங்கள்
3. பக்தி
தவிர நீங்கள் பங்குதாரராக இருக்கும் கம்பனிகள் மொத்தம் மூன்று. அவை
1. ஆசார்ய ஹ்ருதயம்
2.மதுரை மாநகரம்
தவிர ஒரு வெள்ளைகார கம்பனி அதன் பெயர் Blog Union தவிர நீங்கள் பினாமி பெயரில் எத்தனை கம்பனி நடத்தி வருகின்றீர்கள் என்பதை தோண்டி கொண்டு இருக்கின்றோம்.
உங்கள் எண்ணங்கள் கம்பனியில் மொத்த வருவாய்
2005 ல் 1 கோடி
2006 ல் 171 கோடி
2007ல் 237 கோடி
2008ல் 286 கோடி
2009 ல் 187 கோடி
2010ல் 97 கோடி (இது நாள் வரை)
ஆக மொத்தம் 979 கோடிகள்
உங்கள் அடுத்த கம்பனி
ஆன்மீக பயணங்கள். அதில்
2006 ல் 52 கோடிகள்
2007 ல் 70 கோடிகள்
2008ல் 36 கோடிகள்
2009ல் 76 கோடிகள்
2010 ல் 43 கோடிகள் (இது நாள் வரை)
ஆக மொத்தம் 277 கோடிகள்.
உங்கள் மூன்றாவது கம்பனியின் பெயர் "பக்தி"
அதில் 2009 ல் 18 கோடிகள்
2010 ல் 2 கோடிகள்
ஆக உங்களின் மேற்கண்ட உங்கள் பெயரில் இருக்கும் சொந்த கம்பனிகளில் மொத்த வருவாய் 1276 கோடிகள். நீங்கள் பங்குதாரராய் இருக்கும் மற்ற மூன்று கம்பனிகளின் வருவாய் இது வரை கணக்கிடப்படவில்லை.
ஆனால் தாங்கள் 276 கோடிகளை கணக்கில் காட்டாமல் ஏமாற்றி ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் என ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கூறுவது கண்ணடிக்க பட வேண்டிய குற்றம்.
கேட்டாள் "கணக்கு பிழை" என சொல்லி தப்பிக்கக்கூடும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எனக்கு தமிழ் வாத்தியார் சரியில்லை. உங்களுக்கு கணக்கு வாத்தியார் சரியில்லை.
இப்படிக்கு
ஸ்ரிக்ட் ஆப்பீசர் அபிஅப்பா
தண்டனையை வாசகர்கள் அறிவிக்கவும்........... (ஜோடா ப்ளீஸ்)
ஹிஹிஹிஹி, அபி அப்பா, கெடுத்துட்டீங்களே?? ஒரு பதிவுப் பக்கம் யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன்! இப்படியா குடைஞ்சு பார்த்துத் தோண்டி எடுக்கிறது?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லவேளையா மத்தது உங்களுக்குத் தெரியலையோ பிழைச்சேனோ! :P:P:P:P:P
ReplyDeleteஅபி அப்பா, உங்க கமெண்ட்டை ப்ளாகர் ஏத்துக்காம என்ன?? நல்லா ஏத்துண்டு வெளியீடும் கண்டாச்சு!!! எஞ்சாய்!!!!!!!!!! :P:P:P
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் என்னமோ எனக்குப் பாராட்டு விழா எடுத்து எடைக்கு எடை ப்ளாட்டினம், (இப்போப் புதுசாக் கண்டு பிடிச்சிருக்காங்களே கொங்கு நாட்டு வெள்ளைத் தங்கம், அது!!) கொடுக்கப் போறதா நினைச்சு ஏமாந்துட்டேனே! போச்சே, போச்சே, போச்சே, சொக்கா, சொக்கா, மீனாக்ஷி, இது அடுக்குமா? நியாயமா?? தர்மமா???
இந்த வலை உலகே அறியுமே எனக்குக் கணக்கு, பிணக்கு, ஆமணக்குனு, நாங்கல்லாம் பாரதியோட சீடர்களாக்கும்! :P:P:P:P
ReplyDeleteதமிழும் கணக்கும் விவாத மேடையில் மோதிக் கொண்டது அழகு:))!
ReplyDeleteஅபி அப்பா தாங்கீஸ்! சமீப காலத்திலே 2 லட்சம் ஹிட் வாங்கின ப்லாக் எதுன்னு மண்டையை உடச்சுகிட்டு இருந்தேன்.
ReplyDeleteதெரிஞ்சு போச்சு.
அப்படி இவ்வளோ ஹிட் வாங்க என்ன ட்ரிக் பண்ணாங்கன்னு புலனாய்ஞ்சு சொல்லுங்க!
வாங்க ரா.ல. அபி அப்பாவுக்குத் தண்டனை காத்திருக்கே! :P:P:P
ReplyDelete@தி.வா. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஆயிரமா..அ..அ..ஆஆஆஆ...!
ReplyDeleteசிந்தாமணிக்கு வா...ழ்த்துகள்!
ஆயிரமா..அ..அ..ஆஆஆஆ...!
ReplyDeleteசிந்தாமணிக்கு வா...ழ்த்துகள்!