http://www.epicbrowser.com/
நேற்றோ முந்தாநாளோ அறிமுகம் செய்திருக்காங்க, முதல் இந்திய உலாவியை. எபிக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி இருக்கிறது. நேற்று மின் தமிழில் அதற்கான சுட்டி வந்திருக்கு. பார்க்கலை. இன்னிக்குப் பார்த்தேன், உடனேயே டவுன்லோட் செய்துட்டு, சாப்பாடு ஆனதும் மெதுவா அதில் மெயில் அனுப்பிப் பார்த்தேன். வேகம் நல்லாவே இருக்கு. டவுன்லோட் ஆனதும் இன்ஸ்டால் பண்ணியதும், உடனேயே நெருப்பு நரியிலே இருக்கும் குக்கீஸைச் சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிட்டு அப்படியே செய்திருக்கு. அதோட எந்த எந்தப் பதிவுகள் நான் இன்னிக்கு எழுதினதோ, சமீபத்தில் எழுதினதோ அதற்கான சுட்டி, அடிக்கடி செல்லும் பதிவுகளின் சுட்டி முதலியனவற்றை அதுவே சேமித்துவிட்டது. ஜிமெயிலில் தமிழில் அடிக்க வசதி இருக்கிறதால் மெயில் கொடுக்கும்போது சிரமம் தெரியவில்லை. பதிவுகளில் இனிமேல் தான் பார்க்கணும், எப்படிச் செய்யணும்னு. எப்படி இருந்தாலும் இது ஒரு அருமையான முயற்சி. முயன்று வெற்றிகரமாய்க் கொண்டு வந்த தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ரொம்பவே சந்தோஷமாய் இருக்கு. ஜிமெயிலின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டிருக்கேன். திறக்கும்போது தோகை மயில் வரும்படியான அமைப்பு. மயிலைப் பார்த்ததுமே மனதுக்கு மகிழ்வாய் இருக்கு.
இந்தப் படங்களும் அதன் மூலமாய் சேமித்தவையே. உடனேயே டவுன்லோடில் இருப்பதெல்லாம் இடப்பக்கம் வருகிறது. நல்ல வேகம் தெரிகிறது. இது தொடர வாழ்த்துகளுடனும், மனம் கொள்ளாப் பெருமையுடனும்.
ராம்ஜி யாஹுவின் ஆலோசனையின் பேரில் தலைப்பில் சின்ன மாற்றம். நன்றி ராம்ஜி யாஹூ!
தலைப்பை சற்று மாற்றலாம்-
ReplyDeleteஇனி என் உலாவல் இந்திய உலாவியிலேயே என்று.
நன்றி ராம்ஜி யாஹூ, தலைப்பை மாற்றிவிட்டேன்.
ReplyDeleteஇ கலப்பை மூலமும் தட்டச்ச முடியுது, கமெண்ட்ஸிலே மொழிக்கு ஆப்ஷன் இருக்கு. பதிவு போடும்போது இருக்கானு தெரியலையே.
ReplyDeleteபதிவு போடும் பொழுது வரவில்லை. இன்னும் பரிசொதிக்கணும் மாமி.
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு எல்கே
ReplyDeleteம்ம்ம்ம்ம்! லினக்ஸ்லே கூட வைன் மூலமா நிறுவ முடியுது. அனா அவ்வளோ சரியா வேலை செய்யலை. ரென்டரிங் பிரச்சினை இருக்கு.
ReplyDeleteதமாஷான் விஷயம் இடப்பக்கம் எந்த இந்திய மமொழியிலேயும் தட்டச்ச வசதி கொடுத்து இருக்காங்க. ஆனா அதிலேயே இருக்கிற டெக்ஸ்ட் எடிட்டரை திறந்தா அது வேலை செய்யலை.
ஆமா முன்னாடி என்ன தலைப்பு வெச்சீங்க?
வாவ்..........
ReplyDeleteஇப்பவே தரையிறக்கம் செய்து உபயோகப்படுத்த ஆரம்பிக்க வேண்டியது தான். ஆரம்பத்தில் சில பல குறைகள் கண்டிப்பாக இருக்க தான் செய்யும். நம்முடைய உலாவி என்ற எண்ணம் இருந்தால் அவர்களுக்கு தெரியபடுத்தி சரி செய்ய வைத்து தொடர்ந்து உபயோகப்படுத்துவோம் :)
ஆமா முன்னாடி என்ன தலைப்பு வெச்சீங்க?//
ReplyDeleteசொல்ல மாட்டேனே!
ஆனா அதிலேயே இருக்கிற டெக்ஸ்ட் எடிட்டரை திறந்தா அது வேலை செய்யலை.//
ReplyDeleteம்ம்ம்ம்??? நான் அதெல்லாம் பார்க்கலை, பார்த்துட்டுச் சொல்லுங்க, எதுக்கு விஷப் பரிட்சை?? இது தான் என்னைப் படுத்தாமல் சமத்தா இருக்கு, அதைக் கெடுத்துப்பானேன்!
வாங்க புலி, எனக்கு என்னமோ இது ரொம்பவே சுலபமாவும், வசதியாவும் இருக்கு, தேன் குடிச்ச நரி மாதிரித் துள்ளிட்டு இருக்கேன்! :)))))))))
ReplyDelete