எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 26, 2010

சர்க்கரை என்னும் எதிரியை விரட்டுவோம் வாங்க

சர்க்கரை நோயாளிகளுக்கான வீட்டு மருந்து:

இது வரைக்கும் வியாதீஸ்வரி நானேனு பாடிட்டு ஜாலியா இருந்தேன். பாவம் ரங்க்ஸ், என்னை ஆச்சுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போறதே ஒரு நல்ல பொழுதுபோக்குனு நினைக்கிற அளவுக்கு மாறிட்டார். இப்படி இருக்கிறச்சே என்ன ஆச்சுன்னா, நான்தான் நோய்க்கு ஏகபோக உரிமைன்னு சந்தோஷத்திலே இருந்த எனக்கு சில நாட்கள் முன்னால் திடீர் அதிர்ச்சி. உயர் ரத்த அழுத்தமா? என்னை விட்டால் போட்டிக்கு ஆளே இல்லைன்னு இருந்தேனா திடீர்னு ஒரு நாள் நம்ம ரங்க்சுக்கு தொண்டையிலே வலி. என்னோட போட்டிக்கு வந்துட்டார். இப்போப் பாருங்க என்னைக்காவது நீங்க என்னோட சாட்டிலே இருக்கும்போது தும்மினீங்கனு வச்சுக்குங்க, உடனே எனக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும், தொலைபேசியிலே பேசும்போது ஒரு தரம் இருமினீங்கன்னா உடனே ஒரு மாசம் எனக்கு இருமல் வரும். இப்படிச் சந்தோஷமா நோயைக் கொண்டாடிட்டு இருந்தப்போ ரங்க்ஸுக்குத் தொண்டை வலின்னா எனக்கு உடனே ஜலதோஷம் பிடிச்சுக்கப் போறதேன்னு அவரை மருத்துவர் கிட்டே விரட்டினேன். எல்லாம் சுயநலம்தான்னு வச்சுக்குங்களேன்! :P

நான் விரட்டினதாலே பயந்துட்டாரோ என்னமோ தெரியலை, அன்னிக்குனு பார்த்துப் படபடப்பு ஜாஸ்தியா இருக்கவே மருத்துவர் ரத்த அழுத்தம் என்னனு பார்த்தால் ஹிஹிஹி, மே மாசம் அடிக்கிற அக்னி நக்ஷத்திர வெயிலை விட அதிகமாக் காட்டி இருக்கு. அந்த மருத்துவர் பயந்துபோக, என்னவர் தைரியமா வீட்டுக்கு வந்துட்டார். என்னிடம் விஷயத்தைச் சொல்ல ஏற்கெனவே மருத்துவப் பரிசோதனைக்காகப் போகணும்னு இருந்த நான் என்னோடு கட்டி இழுத்துப் போகத் தேவையில்லாமல் அவரும் எப்போவும் போல் உடன் வர, மருத்துவர் கிட்டே காட்டினால் அன்னிக்கும் படபபடபடபபப்படனு இருக்க, மருத்துவர் உடனே எல்லாப் பரிசோதனைக்கும் எழுதிக் கொடுக்க, பள்ளியிலே கூடப் பரிக்ஷைக்குப் பயப்படாத நான் இந்தப் பரிக்ஷைக்குப் பயந்துட்டே இருந்தேன். கடைசியிலே எனக்கும் சேர்த்து மருத்துவர் வைச்ச பரிக்ஷையிலே நான் முழு மதிப்பெண் எடுக்கலை. அவருக்கு வச்ச பரிக்ஷையில் அவர் எடுத்துட்டார். சந்தோஷமா இருந்த என்னை மறுநாள் ரத்தத்தில் சர்க்கரை இருக்கானு பார்க்க எடுத்த பரிசோதனை உன்னை ஒரு கை இல்லை எல்லாக் கையாலேயும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு கிடுகிடுனு இப்போதைய இந்திய விலைவாசி மாதிரி ஏறி உச்சாணியிலே நிற்கக் கொழுப்பு உனக்குனு சொன்ன சர்க்கரையைப் பார்த்துக் கொழுப்பும் போட்டிக்கு வந்து நிற்கத் தலையைச் சுத்தினது. அவருக்கில்லை எனக்கு! :(

பரிக்ஷை மதிப்பெண்களை எடுத்துட்டு மருத்துவர் கிட்டேப் போனோம். எதுவுமே சாப்பிடக் கூடாதுனு சொல்லிட்டார். தூக்கிவாரிப் போடப் பின்னே என்ன சாப்பிடறது? எப்படி உயிர் வாழறதுனு கேட்டோம். காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுங்கனு சொல்லிட்டார். பாவக்காயைப் பச்சையாகவா? கடவுளே! அதைப் பொன் முறுவலா வறுத்து வைனு சொல்லுவாரே! வெண்டைக்காய்? அதுவும் பச்சையா? சிவப்பிலே கூட வெண்டைக்காய் உண்டே! நேரம் தெரியாமல் ஜோக் அடிச்ச ரங்க்ஸைப் பார்த்து ஒரு முறை முறைச்சேன். பின்னே சமைக்கும் எனக்கில்லை தெரியும் அதோட கஷ்டம்! சரி, காபியைச் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பார்க்கலாம்னு கொடுத்தால், நம்ம ரங்க்ஸ் சர்க்கரை இல்லாமல் காபியும் ஒரு காபியா நோ காபினு சொல்லிட்டார். இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி நோ. நல்லவேளையா இட்லிக்கு சாம்பார் எஸ்ஸு. அதனாலே பிழைச்சது இட்லி. சமையலில் எண்ணெய் நோ. ஹிஹி, நான் ஏற்கெனவே கஞ்சமுட்டிக் கருப்பட்டி எண்ணெய் விஷயத்திலே. இப்போ என்ன இன்னும் ஜாலிதான். சோ நோ பிரச்னை! சாதம் நோ. ஒரு இரண்டு கைப்பிடி காக்காய்க்கு வைக்கிறாப்போல கொடுங்கனுட்டாரா? வந்தது பாருங்க கோபம். நான் காக்காயோட எல்லாம் போட்டி போட முடியாதுனு ரங்க்ஸ் சொல்ல, வேண்டாம் வேண்டாம்னு சமாதானம் செய்துட்டு, நிறையக் காய்கள், கீரை, சாலட், பருப்புச் சுண்டல்னு குழந்தைகளுக்குக் கொடுக்கிறாப்போல் கொடுத்துப் பார்க்க அப்பாடா, ஒரு வழியா அந்தப் பிரச்னை முடிஞ்சது. சாயந்திரம் நோ டீ, நோ காபி. பின்னே என்ன?? இருங்க அதைச் சொல்லத் தானே இவ்வளவு நீட்டி முழக்கறேன். ராத்திரி இரண்டே இரண்டு சப்பாத்தி, கூட்டு, தேவைப்பட்டால் ஏதானும் ஒரு தால். படுக்கும்போது ஆடை நீக்கிய பால். இப்போ விஷயத்துக்கு வருவோமா?

நேத்திக்கு மறுபடியும் பரிசோதனைக்கு மருத்துவர் வரச் சொல்லி இருக்க, திக், திக், திக், திக்னு அடிச்சுக்கப் பரிசோதனைக்குப் போனார். வெள்ளி, சனி இரண்டு நாள் வெளியே சாப்பிடும்படி சூழ்நிலை. குலதெய்வம் கோயிலுக்குப் போயிருந்தோம். சனிக்கிழமை ரயில் பயணம். என்னடா இது மதுரைக்கும், கும்பகோணத்துக்கும் வந்த சோதனைனு பயந்துட்டே போனார். என்ன ஆச்சரியம்? சர்க்கரை கணிசமான அளவில் குறைஞ்சிருக்கு. மருத்துவருக்கே ஆச்சரியம். இன்சுலின் போடணுமோனு நினைச்சேன். இதே மெயிண்டெயின் பண்ணுங்கனு சொல்லி இருக்கார். அப்படி என்ன செய்தோம்னு கேட்கறீங்களா? ரொம்ப சிம்பிள், எல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்குங்க மருந்துகள். நீங்க அலோபதியோ, ஹோமியோபதியோ, ஆயுர்வேதமோ, சித்த மருத்துவமோ எதுவேணா எடுத்துக்குங்க சர்க்கரை நோய்க்கு. கூடவே கீழ்க்கண்டவற்றையும் முயன்று பாருங்கள்.
************************************************************************************

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தும் வழக்கம் உள்ளவர்கள் அருந்தலாம். இல்லைனாலும் பரவாயில்லை.
க்ரீன் டீ டிஸ்போசபில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது வாங்கிக்குங்க.புதினா, எலுமிச்சை கலந்த க்ரீன் டீன்னா ரொம்பவே நல்லது. உங்க வீட்டிலேயோ, அக்கம்பக்கமோ இருக்கும் மாமரங்களில் இருந்து நல்ல இளம் மாவிலையாக நாலைந்து எடுத்துக்குங்க. துளசி கொஞ்சம் பூக்காரி கிட்டேச் சொல்லி வாங்கி வச்சுக்குங்க. வீட்டிலே நிறையத் துளசிச் செடி இருந்தால் அதிலே பறிக்கலாம். இல்லைனா வாங்கிக்கறதே நல்லது. மாவிலைகளைத் துண்டாக நறுக்கிக்கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன், அதே அளவு துளசி இலைகள், க்ரீன் டீ ஒரு பாக்கெட் போட்டு இருநூறு தண்ணீர் விடவும். கொஞ்சம் போல் மிளகு பொடி தூவவும். நல்லாக் கொதிக்க விடவும். பாதியாக வற்றும் வரைக்கும் கொதிக்கட்டும். பின்னர் வடிகட்டிச் சாப்பிடவும். கசக்கிறதுனு மூஞ்சியைச் சுளிக்கிறவங்க கொஞ்சம் போல் பனங்கற்கண்டு சேர்த்துக்கலாம். ஆனால் சேர்க்காமல் குடிக்கிறதே நல்லது.

இளம் கருகப்பிலை இலைகள் பத்து அல்லது பதினைந்து நன்றாக மென்று சாப்பிடவும்.

வில்வம், வேப்பிலை, துளசி மூன்றும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் இந்தக் கலவை உருண்டையை ஒரு கரண்டிமோரில் கரைத்துச் சாப்பிடவும். வெறும் தண்ணீரில் சாப்பிடுவது நல்லது. கசப்பு இருக்கும்கிறவங்க மோரில் சாப்பிடலாம். இது மூன்றையும் அடுத்தடுத்துச் செய்யலாம். பின்னர் ஒரு மணி நேரம் நல்ல நடைப்பயிற்சி. வீட்டுக்கு வந்ததும் சர்க்கரை இல்லாக் காபி பிடிச்சா அது, இல்லாட்டி, ஒரு தம்பளர் பால். பின்னர் அரை மணி, ஒரு மணிக்குள்ளாக நீங்க சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கும் மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னர் காலை உணவு. இட்லி, கேழ்வரகு தோசை, சோள தோசை, கம்பு அடை, முருங்கைக்கீரை அடை, சப்பாத்தி போன்றவை. சட்னி என்றால் தக்காளி, கொத்துமல்லி, புதினா இவைகளில் சட்னி அல்லது வெங்காயம் சேர்த்தால் வெங்காயச் சட்னி. சட்னி பிடிக்கலைனா சாம்பார். கண்டிப்பாக இரண்டு இட்லி, அதிக பக்ஷம் மூன்று இட்லி தான் சாப்பிடணும். தோசையும் மெலிசாக இருந்தால் மூன்று, கனமாக இருந்தால் இரண்டே இரண்டு தான். சப்பாத்தி காலை வேளைக்கு இரண்டு போதும், ஏதாவது காய்கள் போட்ட கூட்டோடு. இதோடு ஆடை நீக்கிய தயிர் கடைந்த மோர் ஒரு டம்பளர்.

பதினோரு மணிக்குக் கேப்பைக் கூழ் மோர் விட்டு ஒரு தம்பளர் அல்லது ஓட்ஸ் கஞ்சியில் மோர் விட்டு ஒரு டம்பளர். காய்கறிச் சாறு பிடிக்கும்னால் காய்கறிச்சாறு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு ஒரு டம்பளர். சாறு எடுக்கவேண்டிய காய்கறிகள்:

வாழைத்தண்டு, வெள்ளரிக்காய்,முள்ளங்கி, தக்காளி, புதினா, கொத்துமல்லி இலை,கீரைகளில் ஏதாவது ஒன்று ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது, இஞ்சி, தனியா, மிளகு, சீரகம், சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்தச் சாறு சாப்பிடலாம். அவங்க காரட், பீட்ரூட்டும் சேர்த்துக்கலாம். இது எல்லாமும் போட்டு அரைச்சுத் துணியில் வடிகட்டி எலுமிச்சம்பழம் பிழிஞ்சுச் சாப்பிடலாம். இதிலேயே உப்பு இருக்கும் என்பதால் உப்புப் போடத் தேவையில்லை. வேணும்னா கொஞ்சம் போல் தூவிக்கலாம்.

பனிரண்டரை மணிக்குச் சாப்பாடு. கீரை மசியல் ஏதாவது ஒன்று அல்லது பருப்புப் போட்டுச் சுண்ட வைத்த கீரை, வேக வைத்த காய்கள், சாலட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி எதாவது ஒன்றில். மிளகு பொடி உப்புப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி தூவிச் சாப்பிடணும். தட்டில் இவற்றை நிறைய வச்சுக்கணும். சாம்பார், ரசம், மோருக்கு ஒரு கைப்பிடி சாதம். சாதம் கட்டாயமாய்க் கஞ்சி வடிச்சிருக்கணும். புழுங்கலரிசி பழக்கமானவர்கள் அது சாப்பிடலாம். பச்சரிசினா நிறையத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கஞ்சியை வடிச்சுட்டுத் தான் சாப்பிடணும்.

சாயந்திரம் நாலு மணிக்கு மறுபடியும் மாவிலை, துளசி,க்ரீன் டீ போட்டுக் கஷாயம். அரை மணி கழிச்சு அல்லது பசி எடுத்தால் ஏதானும் ஒரு பயறுச் சுண்டல் அல்லது ஓட்ஸ் உணவு வகைகள். சர்க்கரை இல்லாத தேநீர் நல்லது. பிடிக்கலைனா பால் மட்டும் சர்க்கரை சேர்க்காமல். மறுபடியும் நடைப்பயிற்சிக்குப் போகணும். வேலைக்குப் போறவங்க ராத்திரி சாப்பாடு ஆனதும் நடக்கலாம். ராத்திரி ஏழரை மணிக்குள்ளாக சாப்பிட்டு முடிச்சுடணும். இரண்டு சப்பாத்தி, கூட்டு, தேவை என்றால் ஏதானும் ஒரு தால். ராத்திரி படுக்கும்போது இளம்சூடாக ஒரு தம்பளர் பால். நிச்சயமாய்ச் சர்க்கரை அளவு குறையும். குறைஞ்சுடுச்சேனு மறுபடி எல்லாம் சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. குறைந்ததை அப்படியே வச்சுக்கணும் இல்லையா? அதனால் இனிமேல் ஜென்மம் முழுக்க இதைக் கடைப்பிடிக்கணும். நடுவில் சர்க்கரை ரொம்பக் குறைஞ்சால் படபடப்பு, மயக்கம் வந்தால் எலுமிச்சைச் சாறு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, (வெல்லம் நல்லது) அல்லது ஒரு சாக்லேட், கடலை மிட்டாய் போன்றவை வாயில் போட்டுக்கணும்னு அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும்.

இந்தக் கஷாய முறையும் தெரிஞ்சிருக்கிறவங்க இதை இங்கே நான் இடுவதற்கு மன்னிக்கவும். இப்போதெல்லாம் குடும்பத்தில் இருவருக்காவது சர்க்கரை நோய் இருப்பதால் அனைவருக்கும் தெரிஞ்சே தான் இருக்கும். ஆகையால் தெரிஞ்சவங்க மன்னிக்கவும்னு மறுபடி கேட்டுக்கிறேன். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு சர்க்கரை நோயாளிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலாம். அனைவருக்கும் நோய், நொடியில்லாமல் இருக்கவும் வாழ்த்துகள். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கஷாய முறைகள் அவங்க என்ன மாதிரியான உணவு முறையைப் பின்பற்றினாலும் எடுத்துக்கொண்டு பலனடையும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லோரும் நலமாக வாழவும் வேண்டுகிறேன்.

17 comments:

  1. nice post maami. micchatha nan mail panren

    ReplyDelete
  2. ஆழ்ந்த அனுதாபங்கள்!
    :-)))

    ReplyDelete
  3. http://unavuulagam.blogspot.com/2010/07/blog-post_26.html

    Pls read this

    ReplyDelete
  4. ஒரு மாதம் முன்புதான் எல்லா சோதனையும் செய்து டாக்டர் சர்க்கரையை உறுதிப் படுத்தினார். சாப்பாட்டு முறைகளை மாற்றிக் கொள்வது பற்றி ஒரு பெண் அரை மணிநேரம் விலாவரியாக பாடம் நடத்தினார். சாப்பாட்டுக்காக அளவுக் குவளை கொடுத்தார்கள். இது அரிசியை அளக்க இல்ல. சோற்றை அளக்க என்று விவரம் வேற சொல்லியது அந்தப் பெண். என் கூட ஏழாப்பு படிக்கிற என் பையனும் வந்திருந்தான்.

    வெளியில் வந்து வேறு சோதனை எல்லாம் முடிந்து வந்தால், அப்போதுதான் நல்ல குண்டான ஒருவர் பாடம் கேட்டு விட்டு வெளியில் வந்தார். என் பையன் அவரைப் பார்த்து விட்டு சப்தம் போட்டு சிரித்து விட்டான். 'சே! என்ன பண்பாடு இது' என்று அவனை மெதுவாக திட்டினேன். அவன் 'இல்ல டாடி. அந்தக குவளையையும் அவரையும் நெனச்சேன் சிரிப்பு வந்திருச்சு' என்று சொன்னான். இதெல்லாம் அவருக்குத் தெரியாமல்தான் நடந்தது.

    அந்த குண்டானவர் நேராக எங்கள் எதிரில்தான் அமர்நதார். அவர் கைப்பையை துழாவி அதிலிருந்த அந்த குவளையை கையில் வைத்துக் கொண்டு அவர் சிரித்த சிரிப்பில் அந்த ஏரியாவே அதிர்நதது.

    நிற்க. ஏம்மா.நீங்கள் இப்படியெல்லாம் மருந்து சொன்னால் நாங்க துபையில் ஒர ஆள் போட்டால் கூட முடியாது போலிருக்கிறதே. :((
    டாக்டரே தேவலாம் போலிருக்கிறதே :))

    ReplyDelete
  5. வாங்க எல்கே நன்றிப்பா

    ReplyDelete
  6. திவா, அனுதாபங்கள் எதுக்கு? சிரிப்பு எதுக்கு? விளக்கம் தேவை. :P grrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  7. வாங்க ஏடிஎம் எங்கே இவ்வளவு தூரம்? :P

    ReplyDelete
  8. ராம்ஜி யாஹூ, இந்த தகவல் ஏற்கெனவே படிச்சேன் எதிலேனு நினைவில் இல்லை.

    ReplyDelete
  9. சுல்தான், வாங்க, பல நாட்களுக்கு பின்னர் வந்திருக்கிங்க, இனிப்பான செய்தி இல்லாட்டியும் பரவாயில்லை, சர்க்கரை இருக்குனு சொல்றிங்க? :(

    போகட்டும், விடுங்க, கிரீன் டீ கிடைக்கும் இல்லையா? காலை வெறும் வயிற்றில் க்ரீன் டீ எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடுங்க. மற்றபடி சாலடிற்கான காய்கள்கிடைப்பதில் ஒண்ணும் பிரச்னை இருக்காது. உங்க மருத்துவர் பழங்கள் எடுத்துக்கலாம்னு சொன்னால் பழ சாலடும் நல்லது. ஆப்பிள், கொய்யா, பப்பாளிப் பழங்களில் சாலட் சாப்பிடலாமே? ஓட்ஸ் கஞ்சியும் கஷ்டம் இல்லை. மைக்ரோவேவில் வைச்சால் இரண்டே நிமிஷம் தான்.

    பயத்தம்பருப்பு வெந்தயம் ஊற வைச்சு இட்லி போல் அரைச்சும் இட்லி செய்யலாம், அதிலேயே சுக்கு, மிளகு, ஜீரகம் சேர்த்துக் கடுகு உபருப்பு தாளிதம் செய்து கருகப்பிலை, கொத்துமல்லி, காய்கள் போட்டும் இட்லியாகச் செய்து சாப்பிடலாம். இவை எல்லாம் பசியை அடக்கும் உபகரணங்கள். அளவுக் குவளை எல்லாம் இங்கே நாங்க வச்சுக்கலை. ஆனால் இவ்வளவு அரிசிதான்னு ஒரு கணக்கு, கண்ணளவு, அவ்வளவு தான் சாதம் கண்ணிலே காட்டுவேன். :D

    பி.கு. நானும் இந்தச் சாப்பாடே தான் சாப்பிடறேன் என்ன? சர்க்கரைக்கான மாத்திரைகள் இல்லை. மற்றபடி இதே உணவு முறைதான். எடையும் குறையுமே!
    கருகப்பிலை கிடைக்காமல் இருக்காது. வெறும் வயிற்றில் கருகப்பிலையை மென்று சாப்பிடுங்கள். வேப்பம்ரம் அங்கே உண்டானு தெரியலை, இருந்தால் வேப்பிலைக் கொழுந்தும் சாப்பிடலாம்.

    சர்க்கரை குறைஞ்சிருக்குனு பழைய மாதிரி சாப்பிட ஆரம்பித்தால் அவ்வளவு தான். எங்கே போய் நிக்கும்னு சொல்ல முடியாது. ஆகவே உணவுக் கட்டுப்பாடு பொதுவாகவே நல்லது தானே? நான் எப்போவுமே உணவு கட்டுப்பாட்டோடு சாப்பிடுவேன். அப்படியும் சமைக்கும்போதே, சமையலைப் பார்த்ததிலேயே குண்டாயிடறேன். அதுக்கு என்ன சொல்றீங்க? :P :P

    ReplyDelete
  10. சுல்தான், வாங்க, பல நாட்களுக்கு பின்னர் வந்திருக்கிங்க, இனிப்பான செய்தி இல்லாட்டியும் பரவாயில்லை, சர்க்கரை இருக்குனு சொல்றிங்க? :(

    போகட்டும், விடுங்க, கிரீன் டீ கிடைக்கும் இல்லையா? காலை வெறும் வயிற்றில் க்ரீன் டீ எலுமிச்சம்பழம் பிழிஞ்சு சாப்பிடுங்க. மற்றபடி சாலடிற்கான காய்கள்கிடைப்பதில் ஒண்ணும் பிரச்னை இருக்காது. உங்க மருத்துவர் பழங்கள் எடுத்துக்கலாம்னு சொன்னால் பழ சாலடும் நல்லது. ஆப்பிள், கொய்யா, பப்பாளிப் பழங்களில் சாலட் சாப்பிடலாமே? ஓட்ஸ் கஞ்சியும் கஷ்டம் இல்லை. மைக்ரோவேவில் வைச்சால் இரண்டே நிமிஷம் தான்.

    பயத்தம்பருப்பு வெந்தயம் ஊற வைச்சு இட்லி போல் அரைச்சும் இட்லி செய்யலாம், அதிலேயே சுக்கு, மிளகு, ஜீரகம் சேர்த்துக் கடுகு உபருப்பு தாளிதம் செய்து கருகப்பிலை, கொத்துமல்லி, காய்கள் போட்டும் இட்லியாகச் செய்து சாப்பிடலாம். இவை எல்லாம் பசியை அடக்கும் உபகரணங்கள். அளவுக் குவளை எல்லாம் இங்கே நாங்க வச்சுக்கலை. ஆனால் இவ்வளவு அரிசிதான்னு ஒரு கணக்கு, கண்ணளவு, அவ்வளவு தான் சாதம் கண்ணிலே காட்டுவேன். :D

    பி.கு. நானும் இந்தச் சாப்பாடே தான் சாப்பிடறேன் என்ன? சர்க்கரைக்கான மாத்திரைகள் இல்லை. மற்றபடி இதே உணவு முறைதான். எடையும் குறையுமே!
    கருகப்பிலை கிடைக்காமல் இருக்காது. வெறும் வயிற்றில் கருகப்பிலையை மென்று சாப்பிடுங்கள். வேப்பம்ரம் அங்கே உண்டானு தெரியலை, இருந்தால் வேப்பிலைக் கொழுந்தும் சாப்பிடலாம்.

    சர்க்கரை குறைஞ்சிருக்குனு பழைய மாதிரி சாப்பிட ஆரம்பித்தால் அவ்வளவு தான். எங்கே போய் நிக்கும்னு சொல்ல முடியாது. ஆகவே உணவுக் கட்டுப்பாடு பொதுவாகவே நல்லது தானே? நான் எப்போவுமே உணவு கட்டுப்பாட்டோடு சாப்பிடுவேன். அப்படியும் சமைக்கும்போதே, சமையலைப் பார்த்ததிலேயே குண்டாயிடறேன். அதுக்கு என்ன சொல்றீங்க? :P :P

    ReplyDelete
  11. எல்லாம் சரிதான்.
    இப்படி மாங்கொத்து, துளசி, கருவேப்பிலை எல்லாம் சாப்பிட்டால்
    சுகர் போய்விடலாம் ஆனால்,
    தலையில் இரண்டு கொம்பு முறைக்காமல் பார்த்துக்கணும் :)

    ReplyDelete
  12. வாங்க தீக்ஷிதரே, அதெல்லாம் கொம்பு முளைக்கவும் செய்யாது, முறைக்கவும் செய்யாது! :))))))) மாங்கொத்து வேண்டாம், ஓரிரண்டு இலைகள் போதும்! மேலும் நம் வில்வம், துளசி, வேம்பு மூன்றும் முறையே மறைத்து அழிக்கும் ருத்ரன், காக்கும் விஷ்ணு, சாக்ஷாத் உமையவள் தான் என்றும் மூன்று இலைகளுமே அவர்கள் மூவருமே என்பதையும் தாங்கள் அறிவீர்கள் தானே? இவங்க மூணு பேரும் நமக்கு எப்போவும் நன்மையே செய்வாங்க. :)))))))

    ReplyDelete
  13. மொத்தத்திலே நல்லா மேயச்சொல்லியிருக்கீங்க. நாங்களும்...ஆமா..நானும் இப்போ எல்லைக் கோட்டிலே நிற்கிறேன், நீங்க சொன்னா மாதிரிதான் செய்றோம். என்ன கிரீன் டீ மட்டும் புதுசு. மும்மூர்த்திகளின் இலைகளும் புதுசு அதையும் விடுவானேன்? விழுங்கிடுவோம்.

    அப்பாவின் ஆடுற, அசையுற, நிற்கிற, நடக்கிற சொத்துக்கள் எல்லாம் வந்தாச்சு. அவர் உடம்பில் இருந்த சொத்துக்களில், வீசிங், க்ளாக்கோமா, பீப்பி எல்லாம் கொட்டு மேளத்தோட வந்தாச்சு. மிச்சம் உள்ள சர்க்கரையும் கொஞ்சங்கொஞ்சமா வந்தாச்சு. ஆகவே எல்லா சொத்துக்களுக்கும் நானே வாரிசு!!!!

    முதலில் சொன்னவை மட்டும்தான் வேண்டுமோ? இரண்டாவதையும் சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டேன்.
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னு இல்லை, ஹஹ்ஹஹ்ஹான்னு!!!

    அட ஒரு முழு பதிவும் பின்னூட்டமா
    வந்துடுச்சே!!!!!

    ReplyDelete
  14. வாங்க நானானி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! மேயல்லாம் வேண்டாம், சும்மா நறுக்கி உப்பு, மிளகு போட்டு வச்சுச் சாப்பிடுங்க. இதெல்லாம் சாப்பிட ஆரம்பித்தால் சர்க்கரை குறைந்து போகும் அபாயமும் உண்டு. ஆகவே பனங்கல்கண்டு, அல்லது வெல்லம் போட்டுச் சாப்பிடுங்க கஷாயத்தில்.

    ReplyDelete
  15. கீதாக்கா பேசாமல் ஒரு பாலிடால் வாங்கி குடிக்க சொல்லுங்கள். சுலபமாக செத்து விடலாம். இதெல்லாம் நடக்கற காரியமா!!!!!

    ReplyDelete
  16. தீட்டப்படாத சிவப்பு அரிசி வகைகள் பல உள்ளன. அவற்றை மிஷினில் கொடுத்து நொய்யாக உடைத்துக் கொண்டால் சாதம் செய்து கொள்ளலாம். இந்த சாதம் மிகச் சுவையாக இருக்கும். அளவு சிறிதாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

    ReplyDelete