எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 24, 2013

மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு! :)))

மாலை மூன்று மணிக்கு டிபன் கொடுக்கப்படும். இரவு ஏழு மணி வரையிலும் வரவங்களுக்குக் கொடுக்கச் சொல்லிப் பெண் வீட்டார் கட்டளை. ஆகவே அது வரைக்கும் டிபன் கொடுக்கப்படும்..


ஸ்வீட் அசோகா,



 ஜாங்கிரி (பெண் வீட்டார் விருப்பம் 2 ஸ்வீட்)

அடை, அவியல்

போண்டா, சட்னி

சேமியா கிச்சடி, கொத்சு,

காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால்.



இரவு உணவு  ஏழரை மணியிலிருந்து பத்து மணி பத்தரை மணி வரை.

பால் பாயசம்

வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி,

பாசிப்பருப்பு கோசுமலி

கடலைப்பருப்பு கோசுமலி(இனிப்பு)

முட்டைக்கோஸ் கறி

கத்தரிக்காய்  ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,

பூஷணிக்காய்க் கூட்டு,

உருளைக்கிழங்கு வறுவல்,

அப்பளம்

ஆமைவடை,

போளி,

மைசூர்ப்பாகு,

எலுமிச்சை ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

வெண்டைக்காய், குடைமிளகாய், முருங்கைக்காய் போட்டு சாம்பார்

தக்காளி ரசம்,

மோர்.

ஆமவடை, போளியும், மைசூர்ப்பாகும் நம்ம கைவண்ணம் தான். பயப்படாமல் சாப்பிடலாம். :))))








மடிச் சமையல் சாப்பிடும் பெரியவங்களுக்காகத் தனியாகக் கேசரியும், வாழைக்காய் பஜ்ஜியும் போட்டுக் கொடுக்கப் பட்டது.

அம்பி, கேசரி படம் போட்டாச்சு, வந்து பாருங்க! :)))))))))) கேசரி நம்ம வீட்டிலே பண்ணினதாக்கும், நிறைய மு.ப.போட்டு, நெய்யைக் கொட்டி....... நல்லவேளையா உங்களுக்குக் கொடுக்கலை. :))))))))))


மத்ததுக்கு நன்றி கூகிளாண்டவர்!





28 comments:

  1. அடடா என்ன மெனு என்ன மெனு.!
    டிபன் சாப்பீட்டாலே போதும் . நான் வீட்டுக்கு வந்துவிடுவேன்:)
    அதுக்கு மேல அமர்க்கள சாப்பாடு. என்னய்யா இது!!படு கோலாஹலம் தான். ரொம்பநல்லா இருக்கு கீதா.
    எப்போ முஹூர்த்தம். சத்திரத்தில எனக்கு தனி கட்டில் மெத்தை ஏசி எல்லாம் வேணும்.சொல்லிட்டேன்.:)

    ReplyDelete
  2. மனது நிறைந்து விட்டது...! ஏவ்...!

    ReplyDelete
  3. மாலை டிபன் ஹெவியாகி விட்டது. அதனால் இரவு சரியாகவே சாப்பிட முடியவில்லை. ;)))))

    அழகான பதிவு ... ருசியானதும்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஹூம்.... சாம்பார் சாதமும் மோர் சாதமும் (பொரியல் ஒண்ணும் பண்ணலை...அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க) என்று சாப்பிட்டு விட்டு வந்து பதிவைப் பார்த்தால் படத்தில் மட்டும் கலர் கலராய், டிசைன் டிசைனாய்... என்னமோ போங்க!

    ReplyDelete
  5. ஜமாயுங்கள்! என்னிக்கோ கட்டின களை, பதிவுக்கு பதிவு கட்டிண்டே இருக்கு..

    மைசூர்பாகா, பாக்கா?.. ஆளையே மிரட்டுதே! சூட்டோட சூடா பாத்தி வெட்டி, கீறி ஸ்லைஸ் ஸ்லைஸா துண்டு போட்டிருக்கணும். இப்போ போடப்போனா கத்தி வளையாதோ?..
    கத்தியும் ஜாக்கிரதை, கையும் ஜாக்கிரதை!

    ReplyDelete
  6. ஹை எனக்கு பிடிச்ச அசோகா அல்வா. மெனு சூப்பர். நானும் வல்லிம்மா கூட ஒண்டிக்கறேன். :))

    ReplyDelete
  7. வாங்க வல்லி, பலரும் அப்படித் தான் டிஃபன் போதும்னு போயிட்டாங்க! :)))) சாப்பாடு மிஞ்சிப் போகப் போறது.
    உங்களுக்குத் தனி அறை இருக்கு! :)))

    ReplyDelete
  8. அப்பாடா, டிடி, நீங்களாவது ஒழுங்காச் சாப்பிட்டீங்களே! நன்றிப்பா. :)))

    ReplyDelete
  9. அட வைகோ சார், அடை போட்டதே உங்களுக்காகத் தான்! :)))) ராத்திரிக்கு ஏதோ பேருக்கு இலையில் உட்கார்ந்து எழுந்துவிட்டீர்களோ??:)))))

    ReplyDelete
  10. வாங்க ஶ்ரீராம், உலக மஹா சோகத்திலே இருக்கீங்க போல! ஏன் பொரியல் ஒண்ணும் இல்லை?? எங்க வீடுகளிலே கறி என்று சொல்வோம்.:))))

    ReplyDelete
  11. ஜீவி சார், மைசூர்ப்பாகு இப்படித் தான் வரணும்னு திட்டம் போட்டுச் செய்ததாக்கும்! இதைச் சாப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு துண்டையும் ரசிச்ச ரிஷபன் சாரைக் கேட்டுப் பாருங்க! :))))துண்டெல்லாம் சூடாய் இருக்கிறச்சேயே போட்டாச்சு. தட்டின் ஓரத்தில் இருப்பதைக் கீறினது தான் கொஞ்சம் ஷேப் இல்லாமல் தெரிகிறது. :)))))))

    ReplyDelete
  12. வாங்க புதுகை, நீங்களும் வல்லியுமாத் தங்கிக்குங்க! அசோகா நல்லா இருந்ததா? அதோட குறிப்பைக் கூட எழுதணும்னு! ஆனால் வீட்டிலே ஸ்வீட்டே பண்ணறதில்லையா! படம் எடுக்க முடியாது. இந்தப் படத்து மைசூர்ப்பாகு 2012 தீபாவளிக்குப் பண்ணினது! :))))

    ReplyDelete
  13. மாப்பிள்ளை அழைப்பு டிபன் அருமை. தேவையானதை மட்டும் இலையில் பரிமாற சொல்லி எடுத்துக் கொண்டேன்.
    அத்தனையும் அருமை மாப்பிள்ளை வீட்டார் குறை சொல்லாமல் பாராட்டி இருப்பார்கள்.

    ReplyDelete
  14. ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... [இதுக்கு உங்களுக்கு ராயல்டி கிடையாது....]

    இத்தனை ஐட்டங்களையும் சாப்பிட்டு வந்த ஏப்பம்! :)

    ReplyDelete
  15. //கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,//

    Odd man out :))

    Evening tiffin - where is Kesari..? :D

    Rest is fine.

    ReplyDelete
  16. இது அத்தனையும் சாப்பிட்டா ரெண்டு நாளைக்கு எழுந்திருக்க முடியாது. ஆகவே வல்லிம்மா ரூமுக்குப் பக்கத்துல எனக்கும் ஒரு ரூம் போட்டுருங்க :-))

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, டிஃபன் உங்களுக்குப் பிடிச்சிருக்கிறது குறித்து சந்தோஷம். :)))))

    ReplyDelete
  18. வாங்க வெங்கட், ஏப்பம் சப்தம் அதிர வைச்சுடுச்சு!

    ஹிஹிஹி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கு மட்டும் தான் ராயல்டி! இதுக்கெல்லாம் கிடையாதாக்கும்! :))))))

    ReplyDelete
  19. ஆஹா அம்பி,

    happy to know you are still existing!கத்தரிக்காய் ஸ்டஃப் செய்த எண்ணெய்க்கறி பத்தி எழுதறச்சே, உங்களைத் தான் நினைச்சுண்டேன்.

    கேசரி உண்டு, உண்டு, அது இல்லாமலா? அதெல்லாம் மடிச்சமையல் சாப்பிடறவங்களுக்கு மட்டும் லிமிட்டாப் பண்ணி இருக்கு. ஸோ அம்பிக்கு நோ கேசரி! :)))))

    ReplyDelete
  20. வாங்க அமைதி, உங்களுக்கும் தனி ரூமா??? கிடைக்குதா, பாருங்க! :))))

    ReplyDelete
  21. உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்.. நானாம் எனக்கு . அப்புறம் வாரம் முழுக்க cross trainer எவ பண்ணுவா. ஆமா ! அந்த வட்ட தட்டு சிவப்பழகி என்ன அது?? புதுசா?

    ReplyDelete
  22. // Jayashree said...
    உய்யோ !! வா வாங்கறதே!! உஹும்.. நானாம் எனக்கு . அப்புறம் வாரம் முழுக்க cross trainer எவ பண்ணுவா. ஆமா ! அந்த வட்ட தட்டு சிவப்பழகி என்ன அது?? புதுசா?//

    இதற்கான விடை இந்த என் ப்திவினில் விபரமாக உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

    பயப்பட வேண்டாம். அது ஆண்கள் செய்வதற்காக ம்ட்டுமே எழுதப்பட்டுள்ளது. பெண்கள் உட்கார்ந்து ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதுமானது.

    தலைப்பு:

    அடடா என்ன அழகு !
    அடையைத்தின்னு பழகு !!

    பரிசு பெற்ற படைப்பு:

    மேலும் விபரங்களுக்கு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  23. போண்டா சட்னி, இரவுவிருந்தை இந்தப்பக்கம் தள்ளுங்க:)) வருகிறேன்.

    ReplyDelete
  24. டிபனே ஹெவியாக போய் விட்டது. இதில் சாப்பாடு வேறு ஜோர். ஒருபிடி பிடித்து விட்டேன்...:))

    வல்லிம்மா உங்களுடன் ஒண்டிக் கொள்ள நானும் இதோ வந்துட்டேன்...:)

    ReplyDelete
  25. வாங்க ஜெயஶ்ரீ, முதல்லே இருக்கிறது தானே! அதான் அசோகா! செய்முறை எழுதணும்னு நினைச்சுப்பேன். ஆனால் ஒரிஜினல் படம் வேண்டும். வீட்டிலே இப்போ நோ ஸ்வீட்! அதான் போடலை! :)))))

    ReplyDelete
  26. வைகோ சார், அவங்க அசோகாவைக் கேட்கிறாங்கனு நினைக்கிறேன். நன்றி. :)))

    ReplyDelete
  27. வாங்க மாதேவி, போண்டா, சட்னி பிடிச்சதா? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  28. வாங்க கோவை2தில்லி, டிஃபன் எல்லாமும் கிடைச்சதா? வல்லியோட ரூமிலே தங்கறீங்களா?? ஓகே, ஓக்கே, தங்குங்க, தங்குங்க!

    ReplyDelete