எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 11, 2006

59.ஆரியக் கடவுள்கள்-ஒரு பார்வை.

தருமி சார்,
நான் எதுவும் சொல்ல வேணாம்னுதான் இருந்தேன். ஆனால் சில விஷயங்களுக்கு மட்டும் நீங்க பதில் சொல்ல முடியுமா?
சமணரான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில், கண்ணனைப் பற்றிய பாட்டு வந்தது எப்படி?
கன்று குணிலாக்கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையத் தீங்குழல் கேளாமோ தோழி
கொல்லையஞ்சாரற் குருந்தொசித்தமாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லயந்தீங்குழல் கேளாமோ தோழி
என்றும் வருகின்றது.
மேலும் மதிப்புக்கு உரிய எம்.எஸ். அம்மா அவர்கள் ஒரு சிலப்பதிகார வரிப்பாடலைப் பாடியுள்ளார். அவற்றில் இருந்து சில வரிகள்.:

பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல வுந்தியிடை விண்ணவனைக்கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணா வென்னா நாவென்ன நாவே!

சமண முனிவரான இளங்கோவடிகள் காலம் எது? கூற முடியுமா? சங்க காலமா? அதற்கும் முந்தியதா? சங்க காலம் என்றால் சங்க காலத்திலேயே இவை எல்லாம் தமிழில் கவிதை எழுதும் ஒரு சமண முனி எப்படி அறிந்தார். பிற்பாடு வந்ததா? அப்படி என்றால் எப்போது வந்தது? அதிலும்ம் மஹா பாரதத்தில் நிகழ்ந்த கம்ச வதம், மற்றும் பாண்டவர்க்குத் தூது போனது எல்லாம் எப்படித் தெரிந்தது? கூற முடியுமா? மேலும் எல்லாருக்கும் தெரிந்த ஒளவைப் பிராட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பாரியின் மக்களான அங்கவை, சங்கவையைக் காத்தார் ஒளவை தான். பாரி சங்க காலத்தைச் சேர்ந்த கடை எழு வள்ளல்களில் ஒருவர். அந்த ஒளவை தான் விநாயகரைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்றால் சங்க காலத்திலேயே விநாயகர் வழிபாடு இருந்துள்ளது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமே! மேலும் நக்கீரர் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சங்கப் புலவர்களுள் முதன்மையானவர். அவர் முருகப் பெருமானிடம் அவர் கொண்டிருந்த பக்தி தெரியும். முருக பக்தி எப்போது வந்தது? முருகன் தமிழ்க்கடவுள் என்றால் தாய் தந்தையர்? தேவி மீனாக்ஷிக்கும், சுந்தரேசருக்கும் பிறந்த திருக்குமாரர் "உக்கிரக் குமார பாண்டியர்" என்று ஒத்துக் கொண்டாலும் மீனாக்ஷியை மணந்தது சிவன் தானே? அவர் எங்கிருந்து வந்தார்? நாம் தான் பிரிக்கிறோம்.
திருவிளையாடல் புராணம் எழுதிய "பெரும்பற்றப்புலியூர் நம்பி" என்பவர் தன் நாட்டு வாழ்த்தில் இவ்வாறு கூறுகிறார்.
"ஆவியந் தென்றல் வெற்பின்
அகத்தியன் விரும்பும் தென்பால்
நாவலந் தீவம் போற்றி
நாவலந் தீவம் தன்னுள்
மூவர்கட்கரியான் நிற்ப
முத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி" இதில் நாவலந் தீவு என்பது பாரத நாடு மொத்தத்தையும் குறிக்கும் என்பது புரிந்திருக்கும். இதில் எங்கே இருந்து வந்தது திணிப்பு?
மேலும் நாட்டார் தெய்வங்கள் என்று இப்போது நீங்கள் பிரித்திருக்கும் தெய்வங்கள் தான் எத்தனையோ வந்தேறிகளின் குல தெய்வமாக உள்ளது. சொள்ள மாடன், சுடலை மாடன், சடையன், சடைச்சி, மாரியம்மாள், காளி, பட்டாள அம்மன், பெரிய காண்டி அம்மன், கறுப்பு, முனியாண்டி, மாயாண்டி, மலையாளக் கறுப்பு, பேச்சி அம்மன், செல்லத்தம்மன், படவட்டம்மன், பிரமன், மாயன் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இங்கெல்லாம் பூசாரிகள் செய்யும் பூஜையைத் தான் வந்தேறிகள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். பிரித்தது நம்மை ஆள வந்தவர்கள். சாதி ரீதியாகப் பிரித்து ஆள நினைத்தவர்கள் இப்போது ஓரளவு அதில் வெற்றி காணத் தொடங்கி விட்டார்கள். அப்போது யாருக்கும் புரியவில்லை. நாட்டுச் சுதந்திரம் தான் முக்கியமாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் அரசியல்வாதிகளால் பிரிக்கப் படுகிறோம். நஷ்டம் நமக்குத் தான். இன்னும் சொல்லப் போனால் சில தெய்வங்களுக்கு மதுக்குடம் எடுக்கும் வழக்கம் கூட உண்டு என்றும் சொல்லுவார்கள். தென் மாவட்டங்களில் அது பரவலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பிரமன் - பிரம்மா
பேச்சி அம்மன் -சரஸ்வதி
மாரி அம்மன் -ரேணுகா தேவி
மாயாண்டி -சிவனும், விஷ்ணுவும் இணைந்தவர்.
சுடலை மாடன் - ருத்திரன்.
இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு பூர்வப் பெயர் உண்டு. ஆனால் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். சமணமும், புத்தமும் கூட வட நாட்டில் இருந்து வந்தது தான். நம் நாட்டில் மதம் என்று கூறும் எல்லாமே வெளியில் இருந்து வந்தவைதான். சநாதன தர்மத்தைத் தவிர. எல்லாக் கடவுளும் ஒன்று.

ஒரே கடவுள் வாழ்த்துப் பாடி எல்லாக் கடவுளும் ஒன்று என்று புரிய வைத்தார், செய்குத் தம்பிப் பாவலர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பாவலர், சதாவதானி. அவாரிடம் கடவுள் வாழ்த்துப் பாடச் சொல்லவும் என்ன பாடினார் தெரியுமா? "சிரம் மாறு உடையான்" என்று ஆரம்பித்துப் பாடினார். யாரைக் குறிக்கிறது என்று கேட்டதற்கு எல்லாரையும் என்றார். எப்படி என்றார்கள். பாவலர் சொன்னார்:
"விநாயகர் மாறுபட்ட சிரம் உடையவர் ஆதலால் அவர் சிரம் மாறு உடையார்.
முருகன் என்றாலோ சிரம் ஆறு உடையவன். ஆகையால் சிரம் ஆறு உடையோர்.
சிவனோ என்றால் தலையில் கங்கை ஆறு கொண்டவர். ஆகவே அவர் சிரத்தின் மேல் ஆறு(நதி) உடையவர்.
திருமாலோ ஆற்றின் நடுவில் தலை வைத்து (காவிரி, கொள்ளிடம் நடுவே ஆற்றில்) படுத்திருக்கிறார். ஆகவே அவரும் சிரம் ஆற்றில் உள்ளவர்." என்றார். கூட்டத்தினர் "எல்லாம் சர், இஸ்லாமியரான நீர் இந்துக் கடவுள் களைப் பற்றி எப்படிப் பாடலாம்" என்றனர்.
அதற்கு அவர் எல்லாம் ஒன்று தான். அல்லாஹ் என்ற பேரருளாளன் உலகுக்குத் தலையாய (சிரம்) வழியாக (ஆறு) மார்க்கத்தை அருளியவன். எனவே இது அவருக்கும் பொருந்தும் " என்றார். இது தான் உண்மை. நாம் தான் அடித்துக் கொள்கிறோம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
இப்போது இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள் என்போருக்கு:
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள், விருப்பங்கள். சிலருக்கு அமைதி, சிலருக்கு ஆடம்பரம், சிலருக்குப் படிப்பு, சிலருக்குப் பணம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி அவரவர் தெய்வ வழிபாடும் செய்யலாம். இது வெறும் வசதிக்குத் தான். நோக்கம் ஒன்றே. ஆனால் எல்லாரும் ஞானத்தால் பண்பட்ட மனிதர்கள் இல்லையே. இந்த லெளகீகத்தில் உழல்பவர்கள் எல்லாருக்கும் ஆறுதல், பற்றுக்கோடு, நம்பிக்கை இறை உணர்வுதான். அதை சநாதன தர்மம் நம்மிடம் உனக்கு விருப்பமானதை நீயே தேர்ந்தெடு என்று கூறுகிறது. உங்களை மாதிரி எல்லாம் கடந்து விட்டவர்களுக்கு ஞானம் விரைவில் சித்திக்கும்.

22 comments:

  1. அரசாணைகளை முன் தேதியிட்டு வெளியிடுவது போல் மிக பழங்காலத்தை முன் தேதியிட்டு எழுதப்பட்டவை தான் இராமாயணம் ,மகா பாரதம் போன்ற இதிகாசங்கள் எனவே அவற்றை வைத்து காலக்கெடு எல்லாம் பார்க்காதீர்கள்.இங்கே மதம் என்ற சப்ஜெக்ட் உள் நான் செல்லவில்லை நீங்கள் கூறும் மேற்கோள்கள் முரண்பட்டவை என்பதை சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன்

    இளங்கோ அடிகள் சங்க புலவர் அல்ல சங்க காலாம் முதல் நூற்றாண்டுடன் முடிவடைவது! இவரத்து காலம் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டு தான் இருக்கும் சரிப்பார்க்க தற்சமயம் நூல்கள் ஏதும் இல்லை விரைவில் சரியான காலம் சொல்கிறேன்.

    அவ்வையார் என்பது ஒரு பொது பெயர் அத்தகைய பெயரில் நிறைய பெண் புலவர்கள் இருந்து இருக்க கூடும் என ஒரு கருத்து உண்டு. நாஞ்சில் நாடு எனப்படும் குமரியில் அவ்வை எனப் பெயர் வைப்பது வெகு சகஜம்.இன்றும் கூட அம்மாவின் அம்மாவை அவ்வா பாட்டி என்ரே பொதுவாக சொல்வது அங்கே வழக்கம். என்வே அவ்வை வைத்தும் கால நிர்ணயம் செய்ய இயலாது. அது போன்றே அகத்தியரும். அகத்தியரை தொல்காப்பியர்க்கே குரு என ஒரு கதை சொல்கிறார்கள் ஆனல் தொல்காப்பியர் முதலாம் தமிழ் சங்க காலத்தை சேர்ந்தவர் , அதாவது முதல் நூற்றாண்டு காலத்தியவர்.

    அகத்தியர் பற்றி அதிகம் குறிப்பிடப்படுவது 6 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் எனவே அவர் 6 நூற்றாண்டுகு பிறகு வந்தவர் ஆக இருக்ககூடும் , கைலாயத்தில் சிவனின் திருமணத்தால் அதிகம் கூட்டம் கூடியதால் வடக்கு பக்கம் தாழ்ந்ததாகவும் அதனை சரி செய்ய அகத்தியரை தென் முனைக்கு போக பணித்ததாகவும் கூறுகிறார்கள்,இது ஆரியர்கள் தென் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்ததின் குறியீடு என வரலாற்று ஆசிரியர்களே கூறுகிறார்கள்.அகத்தியர் தமிழர் அல்ல, ஆனால் அவரை தமிழர் என காட்ட ஒரு முனைப்புடன் இலக்கியத்தில் திரித்துள்ளார்கள் என சர்ச்சை உண்டு! புறத்தியார் வெளியில் இருந்து வந்தவர் எனப்பொருள் அதனை இல்லை என மறுக்கவே அகத்தியர் என பெயர் வைத்து ஆரியர்கள் இங்கேயே உள்ளவர்கள் என நிருபிக்க முயற்சி செய்வது தான் அகத்தியர் வரலாறு!

    எனவே நீங்கள் மேற்கோள் காட்டி நிறுவ நினைக்கும் கருத்துக்கள் ஆதாரத்தின் அடிப்படையிலும் ,சர்ச்சைக்கு அப்பாற்பட்டும் இருந்தால் நலம்.அதை விடுத்து கட்டுக்கதைகளின் அடிப்படையில் எதனை நிலைநிறுத்தப்பார்க்கிறீர்கள்!

    ReplyDelete
  2. ஆஹா.... தப்ப போச்சே.....

    நான் உங்க வயசு 61 நினைச்சேன் இதெல்லாம் பார்த்தால் 91 ஆ இருக்கும் போல???? -:))))))))

    ReplyDelete
  3. வவ்வால்,
    முதல் வருகைக்கு நன்றி. எனக்கு ஆதாரம் திரு உ.வே.சாமிநாத ஐயரின் நினைவு மஞ்சரிதான். அவர் கூறுகிறார், சங்க காலத்தில் கூட மஹாபாரதம் ஒன்று இருந்ததாக. ஆனால் அவர் காலத்திலேயே அதில் சில செய்யுட்கள் தாம் இருந்தனவாம். பிறகு "தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன்" காலத்தில் ஒன்று இயற்றப் பட்டதாகக் கூறுகிறார். அதுவும் வழக்கொழிந்து போகப் பிற்காலத்தில் வந்த "வில்லி பாரதம்" நிலை பெற்றது. அதற்கும் முன் மஹேந்திர பல்லவன் காலத்தில் மஹா பாரதம் இருந்தது என்பதற்கு மாமல்லபுரமே அழியாத சாட்சி. மணிமேகலை புத்த சமயத்தைச் சேர்ந்த நூல் என்பதையும் கண்டு ஆராய்ந்து அவர்தான் பதிப்பித்து இருக்கிறார். மற்றபடி நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமே இல்லை. உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. நண்பர்களாகவே இருப்போம். நன்றி.

    ReplyDelete
  4. மனசு, 91-ஐத் திருப்பி போடுங்க. 19 தான் வரும். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  5. வணக்கம் கீதா சாம்பசிவம்!

    //சமண முனிவரான இளங்கோவடிகள் காலம் எது? கூற முடியுமா? சங்க காலமா? அதற்கும் முந்தியதா? சங்க காலம் என்றால் சங்க காலத்திலேயே இவை எல்லாம் தமிழில் கவிதை எழுதும் ஒரு சமண முனி எப்படி அறிந்தார். பிற்பாடு வந்ததா? அப்படி என்றால் எப்போது வந்தது? அதிலும்ம் மஹா பாரதத்தில் நிகழ்ந்த கம்ச வதம், மற்றும் பாண்டவர்க்குத் தூது போனது எல்லாம் எப்படித் தெரிந்தது? //

    நீங்கள் எப்படி எடுத்துகொண்டீர்கள் எனத்தெரியவில்லை ,நான் குறிப்பிட்டது இளங்கோவடிகள் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் அவருக்கு எப்படி மகாபாரதம் தெரியும் என நீங்கள் கேள்வி கேட்டது முரண்பாடக உள்ளது.இளன்கோ அடிகள் மகாபாரதம் எல்லாம் இயற்றப்பட பிறகு வந்தவர் தானே ,நீங்கள் புதிதாக அவரை கேல்விக்குள்ளாக்குவதால் கேட்டேன் ,அவ்வாறு கேட்பதின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

    மேலும் நீங்கள் கூறிய எடுத்துகாட்டுக்கள் எல்லாம் ஆணித்தரமானவை அல்ல DISPUTED எடுத்துக்காட்டுகள் என சொல்லவே நான் அவ்வாறு கூறினேன் ,மகாபாரதம் உண்டா இல்லையா என எல்லாம் விவாதிக்கவில்லை.

    மேலும் மகா பாரதம் சில 1000 ஆண்டுகள் தொண்மையானது ,ஆனால் அதில் கூறப்பட்டது போல பல லட்சகணக்கான ஆண்டுகள் தொண்மையானது என சொல்வீர்களா?ஏன் எனில் நியான்டர்தால் மனிதன் தோன்றியே ஒரு லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது என தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் ,அவனுக்கு மொழி அறிவே அப்போது இல்லை ,மொழி என்ற ஒன்று வடிவம் பெற்றது சுமார் 3000 ஆண்டுகள் தான் ஆகி இருக்கும்,பிறகு தானே இலக்கியம் எல்லாம். எனவே தான் மகாபாரதம் போன்றவற்றில் கூறப்படும் லட்சக்கணக்கான ஆண்டு கால நிர்ணயம் எல்லாம் உடான்ஸ் என சொல்கிறேன்!

    பல்லவர்கள் சிற்பங்கள் மகாபாரதத்தை சித்தரிக்கலாம் அல்லது இயல்பானவையாகவும் இருக்கலாம் ,ஏன் எனில் இவை எல்லாம் மகாபாரததினை சித்தரிக்கிறது என அவர்கள் கல்வெட்டுக்கலோ தாமிர பட்டயங்களோ எழுதி வைத்து விட்டு செல்லவில்லை.ஒரு பெரிய உருண்டையான கல்லை காட்டி கிருஷ்ணாவின் வெண்ணை பந்து சொல்கிறார்கள் இத்தனைக்கும் அந்த பாறை ஒரு இயற்கையான அமைவு,எனவே மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்களைப்பற்றி கூறப்படும் கதைகள் பெரும்பாலும் மக்களின் interpretation தான்!

    ReplyDelete
  6. பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் :

    91-ஐ திருப்பி போடுங்க.. 16 வரும்... இது.....இது எப்படி இருக்கு?!

    ReplyDelete
  7. கீதா, மவுண்ட் அபுக்கு அருகில் இருக்கும் மிக பழைமையான தில்வாரா கோவிலில் கண்ணன், பிள்ளையார், சிவன், பார்வதி, மகாலஷ்மீ உட்பட அனைத்து தெய்வங்களும் செதுக்கப்பட்டு இருந்தன. அவை தெய்வங்களாகவும், தீர்த்தங்கர்களை
    வண்க்குவதும் ஜைனர்களின் பழக்கம்

    ReplyDelete
  8. மாயவரத்தாரே,
    ஒரிஜினல் தானா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டேன். நன்றி. என் வலைப்பூவிற்கு வந்ததற்கு.

    ReplyDelete
  9. வவ்வால்,
    என்னுடைய வாதம் மஹாபாரதமும், ராமாயணமும் இந்த நாட்டோடு பின்னிப் பிணைந்தவை என்பது தான். அதற்குத்தான் இளங்கோவடிகளையும், பல்லவரையும் துணைக்கு அழைத்தேன். மேலும் நீங்கள் முன் தேதியிட்டு எழுதப்பட்டவை என்று வேறு கூறி இருக்கிறீர்கள். அதனாலும் அதை மறுத்துச் சொன்னேன். துவாரகாவில் கடலுக்கு அடியில் கிருஷ்ணர் இருந்த துவாரகை கண்டுபிடிக்கப்பட்டு அதன் மாதிரி இப்போது உள்ள துவாரகையில் வைக்கப் பட்டு உள்ளது. மற்றபடி நான் உங்களை என் கருத்தை ஏற்கும்படி வற்புறுத்தவில்லை. ரொம்ப நன்றி வவ்வால். இதை வைத்தாவது என் வலைப்பூவிற்கு வந்தீர்களே.

    ReplyDelete
  10. அப்புறம் வவ்வால், பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. தாமிரப்பட்டயம் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் ஆரம்பித்தது. அதுவும் அவர் காலத்தில் தான் மெய்க்கீர்த்தி என்றும் ஆரம்பித்தது. ராஜ ராஜ சோழன் 10-ம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. ரொம்ப நன்றி உஷா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும். நீங்கள் சொன்ன கோயில் நான் பலமுறை போய் இருக்கிறேன். ராஜஸ்தானில் 7 வருஷம் இருந்ததால் ஓரளவு தெரியும்.

    ReplyDelete
  12. கீதா, எதுவும் இடம் மாறி வந்து விட்டேனா.................

    91 திருப்பி போட்டா 16 தாங்க வருது. மாயாவரத்தான் கில்லாடி தான். வர்க்கார்ந்து யோசிப்பாரோ

    ReplyDelete
  13. சிவா,
    இடம் மாறி எல்லாம் வரலை. சரியாத்தான் வந்திருக்கீங்க. அதனால் என்ன? இதுவும் தெரிஞ்சுக்குங்க. எனக்கு 16 தான்னு ஒத்துக்கிட்டதுக்கு உங்களுக்கும், மாயவரத்தாருக்கும் நன்றி. விசேஷம் என்னன்னா, இன்னிக்கு என்னோட நட்சத்திரப் பிறந்த நாள். அதுலே நீங்க இரண்டு பேரும் இந்த மாதிரி வாழ்த்தறீங்க.

    ReplyDelete
  14. அப்புறம் வவ்வால்,
    திடீர்னு மின் விநியோகம் போய்ட்டதாலே பாதிலே விட வேண்டியதாப் போச்சு. நீங்க சொல்றது மாதிரி இளங்கோவடிகள் 8 அல்லது 9-ம் நூற்றாண்டுனு ஒத்துக்கிட்டாலும் எங்கேயோ இடிக்குதே? சிலப்பதிகாரம் நடைபெற்ற காலம் பூம்புஹார் இருந்திருக்கு. அந்தப் பூம்புகார் அப்புறம் கடலுக்குள் போய் விட்டது. முதலாம் நூற்றாண்டுக்குப் பின் அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் வரலாறில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிலப்பதிகாரம் நடை பெற்றபோது சோழ மன்னர்கள் செல்வாக்குடன் இருந்த நேரம் வேறு. எனக்குத் தெரிந்து விஜயாதித்தன் காலம் வரை வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் தொல்லை கொடுத்த காரணத்தால் சோழர்களால் தலை எடுக்க வே முடியவில்லை. அந்தச் சமயம் பாண்டிய நாட்டை நெடுஞ்செழியனும் ஆண்டதாகச் சரித்திரம் இல்லை. ஒருவேளை பின்னால் இளங்கோவடிகள் இருந்து எழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அப்போது இல்லை. அவன் இல்லாமல் இளங்கோவடிகள் எழுதினாரா? அவன் தான் இளங்கோவடிகளுக்கு உதவி செய்தது. அப்போது மலை நாட்டில் மலைவாழ் மக்கள் கண்ணகி சினத்துடனும் அறுபட்ட ஒரு மார்புடனும் வந்ததாகவும், அவளை விண்ணில் இருந்து வந்த விமானம் ஒன்று ஏற்றிச் சென்றதாகவும் அரசனிடம் கூறி அந்த இடத்தில் தான் சேரன் கோவில் கட்டியதாகப் படித்தேன்.இப்போது என்ன செய்யலாம்?

    ReplyDelete
  15. வணக்கம் கீதா சாம்பசிவம்!

    நீங்கள் கேட்டது இளங்கோவடிகளுக்கு எப்படி தெரிந்தது மகாபாரதம் என, அந்த கேள்வியே அர்த்தமற்றது அதனால் தான் அவ்வாறு சொன்னேன்!

    மேலும் இது போல கால நிர்ணயம் செய்வதில் இலக்கியங்கள் சரிவராது என்பதால் தான் முன் தேதியிட்ட ஒன்று என சொன்னேன். விஞ்ஞான புனைவு படங்களில் 2000 ஆண்டில் எடுக்கும் போதே கி.பி.3000 என டைட்டில் கார்டு போட்டு படம் காட்டுவார்கள் பிற்காலத்தில் படம் வந்த ஆண்டைப்பார்க்காமல் பார்த்தால் அதனை கி.பி.3000 ஆண்டு என தவறாக சொல்வதாகிவிடுமே!

    துவாரகை கதையே உறுதியாக யாரும் சொல்லவில்லை,அதனை ஆழ்கடல் அகழ்வாரய்வு செய்து நிருபிக்கவில்லை.கடந்த பி.ஜே.பி ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி ஒரு ஆய்வு செய்ய சொன்னதாக சொல்லி ஒரு அறிக்கை சமர்ப்பித்தார் அதனை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் கடல் கொண்ட நகரங்கள் கண்டிப்பாக எல்லா கடலோரத்திலும் உண்டு ஆனால் அதனை கிருஷ்ணாவின் பிறப்பிடம் என கூறுவது இந்துத்வா வாதம் என மறுத்துவிட்டார்கள்.

    //பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. தாமிரப்பட்டயம் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் ஆரம்பித்தது//

    பல்லவர் காலத்திலேயே தாமிர பட்டயம் உண்டு ,சிம்மவிஷ்னு(555கி.பி - 590கி.பி) காலத்தைய தாமிர பட்டயங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    மதுரையை நெடுன்செழியன் ஆண்ட காலம் கிபி.765 - கிபி.815 ,எனவே சிலப்பதிகார காலம் என்பது இது தான் , இலக்கியம் என்பதால் ,சரியான கால வரையை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கலாம். விஜயலாய சோழன் கி.பி 850 இல் இருந்து இரண்டாவது சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான். இரண்டாவது சோழர்கள் கிபி 1173 வரை ஆண்டுள்ளார்கள்.

    //இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அப்போது இல்லை. அவன் இல்லாமல் இளங்கோவடிகள் எழுதினாரா? அவன் தான் இளங்கோவடிகளுக்கு உதவி செய்தது//

    இளங்கோவடிகள் சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி ஆவார் .மூத்தவர் இருக்க இளையவன் அரசன் ஆவன் என நிமித்திகர் சொன்னதால் அவர் வாக்கை பொய்யாக்க இளங்கோ(meaning young prince) துறவரம் பூண்டார். அவர் கவிதை புனைய யாரும் உதவ வேண்டியதில்லை. மேலும் முதல் கண்ணகி கோட்டம் எழுப்பியது சேரன் செங்குட்டுவனே!கனக விஜயர்களை கல் சுமக்க வைத்தது அதற்கு பின்னரே! எனவே இவை தான் உண்மையான கால கட்டம் இலக்கியத்தில் காலங்கல் முன் பின்னாக மாறி இருக்கும் என்பதே நான் சொல்ல வந்தது.

    ReplyDelete
  16. வவ்வால்,
    "சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் மன்னர் மகன் என்றும், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும், பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த கதைகளையும், ஆய்வாளர்களின் கருத்தையும் முற்றிலும் நிராகரித்து, இளங்கோவடிகள் வணிகக்குலத்தில் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் யார்? என்ற நூலில் மெய்ப்பித்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.(திரு தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் உடன் பிறந்த தம்பி) இந்த நூலுக்கு இது வரை யாராலும் மாற்றுக் கருத்தை வைக்க முடியவில்லை. ஈரோட்டில் அவருக்கு 2001-ம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது."
    எழுதியது: பாரதி ரகுநாதன். பக்கம் 291. 4-வது பாரா.
    புத்தகம்; கலைமாமணி பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலர்.
    Sri T.M.C. Ragunathan has so far held many responsible posts and positions including member of the Advisory Boad for Tamil for Sahithya Acadami (1988-93), member of the Senate, Manonmaniam Sundaranar University, Tirunelveli (1993-95) and member of Jury for Sahithya Akademi Award in Tamil, 1994.
    Page 290-Same book.
    Ragunathan's monumental work Ilangovadikal yaar, an inter disciplinary, Marxist socio-historical analysis of the first great Tamil epic CHILAPPATHIKARAM, IS REGARDED AS A THOUGHT-PROVOKING STUDY OF THAT EPIC, EXPLORING MANY MYTHS WOVEN AROUND IT.
    It is also from the same book page no 289 para-3.

    ReplyDelete
  17. //இளங்கோவடிகள் வணிகக்குலத்தில் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் யார்? என்ற நூலில் மெய்ப்பித்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.(திரு தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் உடன் பிறந்த தம்பி) இந்த நூலுக்கு இது வரை யாராலும் மாற்றுக் கருத்தை வைக்க முடியவில்லை//

    இந்த நூலை ஆய்வாளர்கள் யாரும் ஒரு பொருட்டாக கருதாமல் இருந்து இருக்கலாம். நான் கூட தேச துரோகி காந்தி என நூல் எழுதி நானே வெளியிட்டுக்கொண்டு அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை என மார்தட்டிக்கொள்ளலாம் :-))

    நான் கூறிய தகவல்களை இன்றளவும் பல்கலைக்கழகங்களில் பாடமாக மாணவர்கள் படித்து வருகிறார்கள்.எனவே பல்கலையில் தவறாக பாடம் நடத்துகிறார்களா?

    சரி நீங்கள் மன்னர் கதையை விடுங்கள் மற்ற விளக்கங்கள் எல்லாம் என்னவாயிற்று ,எனவே இளங்கோவடிகளுக்கு மகாபாரதம் தெரியுமா என நீங்கள் கேட்டது பொருளற்றது என்பது புரிந்தால் சரி. நான் குறிப்பிட்ட கால நிர்ணயம் வரலாற்று ரீதியானது ஆனால் இலக்கியங்கள் கொஞ்சம் காலத்தை தூக்கி விழுங்கிவிட்டு முன் பின் ஆக இருக்கும் எனவே இலக்கியம் சொல்லும் ஆண்டுகளை எல்லாம் கணக்கில் வைத்தல் குழப்பம் தான் மிஞ்சும் என்பது புரிந்தால் சரி!

    ReplyDelete
  18. எங்கள் பக்கத்தில் ஒரு சொல் வழக்கு வீட்டிலே பெத்ததாய் குலைபட்டினியாம் பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். நாங்க அங்கே தவிசுகிட்டு இருக்கோம் இங்கே ரண்டக்க ரண்டக்கலே ஜாலியா இருக்கீங்களே தர்மம்தானா இது.சரி என்னபண்ணறது முதலுதவி பெட்டியுடன் காத்திருக்கிறேன். உள்ளே வர சரக்கு இல்லை.தி.ரா.ச

    ReplyDelete
  19. Hello TRC Sir, Welcome to my blog. I am also from the same city by marriage. So please wait. I will write in a day or two. The blogger is giving me lot of troubles and the current supply went out today afternoon from 1-30 P.M. till 5-00P.M. After that I used to do my usual homework only, and I am not sitting by the computer. In the night I used to check the mails occasionally. Please do not mistake me.Here daily afternoons there is power cut for 1 to 2 hours without announcement.

    ReplyDelete
  20. he hee, Discussions are sooo technical.. i used to leave these silapathikarams as choice in exams. amma nalla nimitaampazham kuduppa..(kochukaatheenga Mrs.Geetha)

    anyway Belated Birthday wishes...so stepping into 17.. :)(appadi, enimevaavathu 16, 16 nu solla maatingaa)

    ReplyDelete
  21. அம்பி.. உங்க பின்னூட்டத்தை ஏன் காணலைனு கேட்டதுக்காக எனக்கு இந்த மாதிரி துரோகம் செய்வீர்கள் என்று எதிர்பாரக்கவே இல்லை. என்வயது 17ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    என்ன கொடுமை இது? என்றும் 16 ஆன எனக்கு இது வேணும் தான்.எல்லாருக்கும் வயசு ஏறினால் எனக்கு மட்டும் இறங்கும் தெரிஞ்சுக்கங்க.

    ReplyDelete
  22. if my words anyway offended u r feelings (though the same is not written with such intention)i seek unconditional appology from u madame.In the lighter spirit only i have commented. yaa kaavaa raaayinum naa mattum allamal kaiyum kaakavendum endru thirinthu konden TRC

    ReplyDelete