எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 01, 2013

கண்ணுக்குத் தெரியாதா?

கண்ணைப் பத்தி எழுதறச்சேயே நினைச்சேன், இதையும் எழுதணும்னு.  பதிவு ரொம்பப் பெரிசாயிடும்னு எழுதலை. கண்ணைக் காட்டப் போறச்சே அந்த மருத்துவர் குறித்து சாமானிய மக்கள் என்ன நினைக்கிறாங்கனு கேட்டால் மட்டும் போதாது.ஏனெனில் சாமானிய மக்கள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்துட்டே போறாங்க.  நான்கு வருடங்கள் முன்னால் என்னோட வழக்கமான கண் மருத்துவர் வரச் சில மாதங்கள் ஆகும்னு தெரிஞ்சு, சும்மா பவர் தானேனு வேறொருத்தர் கிட்டே போனேன்.  அவங்களை என் கணவரோட அலுவலக நண்பர் ரொம்பவே சிபாரிசு செய்திருந்தார். வீட்டுக்கும் கிட்டக்க.  சரினு அவங்க கிட்டே போனால், எல்லாச் செக்கப்பும் முடிஞ்சு காடராக்ட் வர ஆரம்பிச்சிருக்கு; ஆறு மாசத்திலே ஆபரேஷனு சொல்லிட்டாங்க. எனக்கோ திக், திக், திக்.

சரினு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தாற்காலிகமானு அவங்க கொடுத்த கண்ணாடியைப் போட்டால் நல்லாவே கண் தெரியுது.  காடராக்ட் காரங்க கிட்டே காடராக்ட் வந்தால் என்னென்ன செய்யும்னு கேட்டு ஒரு சர்வே நடத்தினேன்.   அவங்க சொன்ன எதுவும் எனக்கு இல்லை.  சில நாட்களில் இந்த மருத்துவர் கிட்டேயே சந்தேகம் வந்துடுச்சு.  ஆறு மாதங்கள் கழிச்சு வழக்கமான செக்கப்புக்காக என்னோட பழைய கண் மருத்துவர் கிட்டேயே போனேன்.  அவரிடம் அவர் இல்லாதப்போ வேறொருத்தர் கிட்டே போனதைச் சொல்லி, அவர் இம்மாதிரிச் சொல்கிறாரேனு கேட்டேன்.  சிரித்த மருத்துவர் எல்லா சோதனைகளையும் முடிச்சுட்டு, "உங்களுக்கு பவர் ஒண்ணுதான் பிரச்னை.  கண்ணாடி போட்டாலே போதும்.  இத்தனை பேர் வராங்களே, யார், யாருக்கு காடராக்ட் பண்ணணுமோ அவங்களுக்குத் தான் பண்ண முடியும்.  சும்மாவானும் உங்க கண்ணைத் தோண்டுவோமானு கடுமையாவே சொன்னார். அதுக்கப்புறமா அவர் கொடுத்த கண்ணாடி உதவியில் ஒரு வருஷத்துக்கும் மேல் ஓடியது.

சென்னையில் இருக்கும் ஒரு கண் மருத்துவமனையில் இப்படித்தான் எல்லாருக்கும் ஆபரேஷன்னு சொல்லிடறாங்க. என்னோட நாத்தனார் போயிட்டு ஆபரேஷன் செலவு மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேல் போய், அவங்களுக்கு வைச்ச லென்ஸும் சரியில்லையாம். அவங்க கண்ணுக்குப் பொருந்தலையாம்.  அதுக்காக ஸ்பெஷல் கண்ணாடினு சொல்லி அந்த மருத்துவமனையில் கண்ணாடிக்கு வேறே பத்தாயிரத்துக்கு வாங்கினாங்க.   கண்ணாடியையும் வெளியே வாங்கிக்கக் கூடாதாம். அங்கே தான் வாங்கணுமாம்.  நிஜம்மாவே ஆபரேஷன் பண்ணினாங்களானு எனக்கு சந்தேகம் இன்னிவரை தீரலை.  ரேவதி நரசிம்மனுக்கும், அட நம்ம வல்லிதாங்க, இந்தக் கண் ஆபரேஷனால் பிரச்னை தான் ஆகி இருக்கு.  ஆகவே கண்ணைக் காட்டும் முன்னர் நல்லா யோசிச்சுக் காட்டுங்க.  ஒருத்தருக்கு இரண்டு பேர் கிட்டே காட்டி, இரண்டு பேரின் கருத்தும் ஒத்துவருதானும் பார்த்துக்குங்க.  சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு கண் மருத்துவமனை சிறப்பான சேவையை உலகத்தரத்துக்கு அளிக்கிறது.   

20 comments:

  1. நம் அலங்காரங்களை வைத்து 'கல்லா' கட்டுவார்கள்... + தொழில், வருமானம், ..., ..., etc.,

    இது எனது அனுபவத்தில் கூறுவது... கவனம்...

    ReplyDelete
  2. உண்மை. ஆனால் கண்ணில் விளையாடுவார்களா என்ன? அதனால்தான் 'அங்கு' போக வேண்டாம் என்று சொல்லியிருந்தீர்களா? பொதுவாக இந்த விதி எல்லாவகை உடல் 'செக்-அப்'புக்குமே பொருந்தும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  3. //ஏனெனில் சாமானிய மக்கள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்துட்டே போறாங்க. //
    நீங்கள் சொல்வது போல் விளம்பரங்களை கண்டு மயங்காமல் நல்ல மருத்துவரைப் பார்த்து அவரிடம் கண்களை கவனித்துக் கொள்வது நல்லது தான்.

    ReplyDelete
  4. நல்ல மருத்துவர் யார்னு தான் தெரியவில்லை.
    என்னைப் பொறுத்தவரைக்கும் மோஹன் ராஜன் க்ளினிக் இப்பப் பொருந்திவருகிறது.
    ஆனால் ஏற்கனவே கண்ணைக் கெடுத்தவர்களை என்ன செய்ய முடியும். பிரபலம் என்று பெயர் வாங்கி,
    இன்ஷுரன்ஸ் இல்லாதவர்களைக் கணித்து ஏமாற்றுவதாகச் சமீபத்திய புகார்.

    படிப்பறிவு உள்ள நானே(!!!)
    சரியான கேள்விகளைக் கேட்காமல் கண்மூடி வைத்தியத்திற்குச் சம்மதித்தால் இதுதான் கதி.
    ஸ்ரீராம் சொல்வது போல எல்லா செக் அப்புக்கும் இது பொருந்தும்.

    ReplyDelete
  5. அரவிந்த் மருத்துவ மனைக்கு போகலாம். சென்னையில் தனியார்கிட்ட பார்க்கணும்ன்னா எனக்கு எழுதுங்க. என் க்ளாஸ்மேட் நல்லபடி செய்யறார்.

    ReplyDelete
  6. வாங்க டிடி, நீங்க சொல்வது சரியே. கவனம் நிச்சயம் தேவை.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், காடராக்ட் வந்த கண்ணைவிட்டுட்டு மற்றொரு கண்ணில் ஆபரேஷன் நடந்த சம்பவத்தைப் பத்திரிகைகளில் படிச்சிருப்பீங்க தானே? கண்ணில் விளையாட மாட்டாங்க தான். ஆனால் காசு பண்ணுவாங்க. எல்லா வகை உடல் செக்கப்புனு சொல்லி இருப்பது சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு இருதய நோய் மருத்துவமனையைப் பற்றி நண்பர் பகிர்ந்ததுக்குச் சரியா இருக்கு. :)))

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, நல்ல மருத்துவர் னு அடையாளம் காண முடியலைனு வல்லி சொல்றாங்க பாருங்க. :))) என்னைப் பொறுத்தவரையிலும், நம்ம குடும்ப மருத்துவர் அல்லது நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுக்கலாம். தி.வா. அதான் நம்ம வா.தி. மாதிரி மருத்துவர்கள் சொல்லுவதையும் நிச்சயமாக் கேட்டுக்கணும். :)))))

    ReplyDelete
  9. //படிப்பறிவு உள்ள நானே(!!!)//

    இதான், இதான் எங்க நாத்தனாருக்கும் நடந்தது. அதோடு இல்லாமல் கண்ணில் விடுவதற்கென விதவிதமான சொட்டு மருந்துகள் அரைமணிக்கொரு தரம், பத்து நிமிடத்துக்கு ஒருதரம்னு ஒரு பவுச் நிறையக் கொடுத்திருந்தாங்க. அந்தப் பவுச் இலவசமாம். நோயாளிகள் அதிலேயே மயங்கி இருப்பாங்களோ! :((((


    //சரியான கேள்விகளைக் கேட்காமல் கண்மூடி வைத்தியத்திற்குச் சம்மதித்தால் இதுதான் கதி.
    ஸ்ரீராம் சொல்வது போல எல்லா செக் அப்புக்கும் இது பொருந்தும்.//

    வழக்கமான குடும்ப வைத்தியரை ஆலோசனை கேட்டிருக்கலாம் வல்லி. அல்லது இரண்டாவது ஆலோசனைனு வேறு ஒரு சாதாரணக் கண் மருத்துவரிடம் போயிருக்கலாம். :((( வா.தி. சொல்லி இருப்பது போல் அவரைக் கேட்டிருந்தாலே சொல்லி இருப்பார். :(

    ReplyDelete
  10. வாங்க வா.தி. அரவிந்த் மருத்துவமனையில் வேலை பார்த்தவங்க தான் நான் இப்போக் காட்டிய கண் மருத்துவர். நிச்சயமாச் சென்னையில் கண் மருத்துவம் பார்க்கிறதுன்னா உங்களைத் தான் ஆலோசனை கேட்போம். நன்றி.

    ReplyDelete
  11. பல ஆஸ்பத்திரிகளில் இதே நிலை. திருச்சியில் ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் அம்மா ஆபரேஷன் செய்துகொண்டு நிறைய பிரச்சனை....

    ReplyDelete
  12. நானும் உங்களை மாதிரி தான்.

    இந்த ஷணமே பண்ண வேண்டும் என்று சொன்னதை நான்கு வருடங்களாக கண்ணாடி மாற்றி சமாளித்து வருகிறேன். வேறு வழியில்லை செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று நான் உணரும் பொழுது நிச்சயம் அதற்கான சிகித்சை மேற்கொள்வேன்.

    அதற்காக மருத்துவர் கருத்தை டோட்டலா தப்பு என்று சொல்வதற்கில்லை.

    காட்ராக்ட் சிகித்சையை ஒத்திப் போடலாமே தவிர, முற்றிலும் புறகணிப்பதற்கில்லை. வளர்ந்த சதை முழுவதுமாக பார்வையை மறைப்பது நமக்கே தெரியும். அந்த ஸ்டேஜில் பண்ணிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    1. ரொம்ப வயதானால் கொஞ்சம் கஷ்டம்.
    2. சதைத்திரை வளர்ந்த பிறகு பின்னாடி செய்து கொள்வதற்கு, இப்பொழுதே செய்து கொண்டு மறைத்தல் இல்லாத க்ளியர் பார்வையை பெறுங்களேன் என்ற கருத்தில் மருத்துவருக்கு மருத்துவர்
    வித்தியாசப்படுவதாக நான் நினைக்கிறேன்.

    வல்லிசிம்ஹன் போன்று காட்ராக்ட் சிகித்சை மேற்கொண்டவர்கள் கூட சிகித்சைக்கு முன் எப்படி பின் எப்படி
    என்று பார்வை மேம்பாட்டைப் பற்றிச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் பாருங்கள், அதான் இந்த மாதிரியான
    சிகித்சை பற்றி குழப்பமான கருத்துக்களுக்குக் காரணம்.

    ஒவ்வொருவர் உடல் நலன் ஒவ்வொரு மாதிரி.எந்த சிகித்சையையும் ஒருவரை வைத்து ஒருவர் முடிவெடுக்கக் கூடாது.

    எந்த நோய்க்கான தீர்வுக்கும் முன்னால் முழு பரிசோதனைகள் செய்து கொண்டு, அதன் தீர்வு பற்றி முழுமையான KNOWLEDGE நாம் பெற வேண்டும். எது ஒன்றுனாலும் விஷய அறிவிற்கு இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. இந்த தகவல் களஞ்சிய காலத்தில் கூட பொத்தாம் போக்கில் எது பற்றியும் கருத்து கொள்ளக் கூடாது என்பதும் முக்கியம்.

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், பலருக்கும் ஆபரேஷனுக்குப் பின்னர் சில நாட்கள் பிரச்னை இருக்கும் தான். லேசர் சிகிச்சை என்றால் நிச்சயமாய் லென்ஸ் பொருந்தி வர வரைக்கும் அவங்களுக்குப் பிரச்னையே. என் மாமியாருக்கு அகர்வாலில் பண்ணிண்டதும் அப்படித்தான் இருந்தது. மூன்று மாதம் கஷ்டப்பட்டு கண்ணே போயிடுச்சுனு புலம்பிட்டார். இப்போ கண்ணாடி இல்லாமலேயே தொலைக்காட்சி விளம்பரங்களைக் கூடப் படிக்க முடியும். :))))) ஆனால் சிகிச்சையே பிரச்னை என்றால் என்னத்தைச் சொல்வது? :((((((

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார், எனக்கு காடராக்ட் இல்லை என்பதை நிச்சயமாக உணர்கிறேன். நான்கு வருஷம் முன்னாடி ஆரம்பம் எனில் இப்போ நல்லா வளர்ந்து முழுக்கண்ணையும் மறைச்சிருக்கணுமே.அதெல்லாம் எதுவும் இல்லை. கண்ணாடி போடாமல் கூட ஊசியில் நூல் கோர்க்கக் கொஞ்சம் கஷ்டத்தோடு முடியும். :))))படிக்கவும் வரும். க என்றால் "ச" என்று தெரியும்., "ர" என்றால் "த" என்று தெரியும். அம்புடுதேன்! :)))))

    அதோடு நான் இரண்டு மூன்று கண் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு எல்லாம் ஒத்து வந்தப்புறமாத் தான் இதைச் சொல்றேன். ஒரு சிலர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்வது பணத்துக்காகவே. அது மட்டும் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்.

    வல்லி தான் தான் முன்னர் செய்து கொண்ட சிகிச்சையின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டதைப் பதிவாகவே போட்டுட்டாங்களே! இப்போவும் கண்ணில் பிரச்னை தான்.

    ReplyDelete
  15. //வல்லிசிம்ஹன் போன்று காட்ராக்ட் சிகித்சை மேற்கொண்டவர்கள் கூட சிகித்சைக்கு முன் எப்படி பின் எப்படி
    என்று பார்வை மேம்பாட்டைப் பற்றிச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் பாருங்கள், //

    நல்லா விவரமா சொல்லிட்டாங்க. நானும் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டவங்க எல்லாரிடமும் பேசி இருக்கேன். எங்க வீட்டிலேயே முப்பது பேருக்கு மேல் தேறும். :)))) ஆகவே அது குறித்து ஓரளவுக்குப் புரியும் தான்.

    ReplyDelete
  16. இது எல்லா மருத்துவத்துக்கும் பொருந்தி வரும் என்பதும் ஏற்கக் கூடியதே. அதிலும் மாற்றம் இல்லை. அதையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். :)))) சாதாரணக் கால்வலி, ஜுரம்னு வர குழந்தைக்கே இங்கே ஒரு மருத்துவர் தைராய்ட் டெஸ்ட் பண்ணச் சொல்றார். அவரோட சொந்த பரிசோதனைச் சாலை. ஃபீஸ் 2,500 ரூபாய். இதிலே ரத்தப் பரிசோதனை இல்லை எனில் 500ரூ திரும்பத் தருவோம்னு கன்செஷன் வேறே சொல்வாங்க. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ரத்தப் பரிசோதனையும் இருக்கும். :)))))) அங்கே போறவங்க எல்லாருக்கும் இந்தப் பரிசோதனை கட்டாயம். :))))))

    ReplyDelete
  17. ஆழ்வார் பேட்டைல ல உதி ஐ ஹாஸ்பிடல் டாக்டர் ரவீந்தரன் எனக்கு தெரிஞ்சவாளுக்கு பண்ணின வரைக்கும் நல்ல வகைல பண்ணறார். ரொம்ப reasonable நு எனக்கு தோணியது.

    எந்த வைத்தியத்தையும் வைத்தியரையும் சொல்லறத விட நம்ப மீனமேஷம் எப்படி இருக்கோ, நம்ப 9 வும் என்ன குணாதிசயத்துல இருக்கோ அப்படித்தான்னு எனக்கு தோனும்.
    ஆனா தேவையே இல்லாம ஹாஸ்பிடல் facility இருக்குங்கறதுக்காக misuse பண்ணற மருத்துவம் கொஞ்சம் இப்ப நடைமுறைல பரவலாகிண்டு வரது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்

    ReplyDelete
  18. வாங்க ஜெயஸ்ரீ, நீங்களும் ஒரு மருத்துவர் என்பதால் இதைக் குறித்து இன்னும் அதிகத் தகவல்கள் தர முடியும் உங்களால்.

    பொது மருத்துவத்தில் மட்டுமல்லாது எல்லாத்திலேயும் வியாபாரம் ஆகிக் கொண்டு வருகிறது. எனக்கு இதிலே சொந்த அனுபவமே உண்டு. தெரிஞ்சவங்களுக்கு Bone Typhoid வந்த நோயாளிக்கு ஸ்கான் எடுக்கச் சொல்லிக் கையில் சர்ஜரினு சொல்லிட்டார் ஒரு எலும்பு முறிவு மருத்துவர். அப்புறமா second opinion கேட்க இன்னொரு பிரபல சிறப்பு எலும்பு முறிவு மருத்துவர், (ஸ்டான்லி மருத்துவமனை)பார்த்துட்டு இது எலும்பில் டைபாய்ட் மாதிரித் தான் இருக்கு. அதுக்கு முதலில் வைத்தியம் செய்யறேன். பின்னர் மீண்டும் சோதனைகள் செய்துட்டுப் பார்க்கலாம்னு சொல்லி மருத்துவம் செய்தார். பதினைந்து நாட்களில் சரியானது. மீண்டும் சோதனை பண்ணிப் பார்த்ததில் பாஸ்! இது ஒரு பத்துப் பனிரண்டு வருடம் முன்னர் நடந்தது. அந்தப் பதினைந்து நாட்களும் கொடிய நரகம்! :(((((

    ReplyDelete
  19. எனக்கு நாலு வருடத்திற்கு முன் காடராட் அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு கண்களுக்கும் பண்ணிக் கொண்டேன். இரண்டு கண்களிலும் லென்ஸ் வைத்திருக்கிறார்கள்.

    இதுவரை எந்தவித தொந்திரவும் இல்லை. Touch Wood!

    நீங்கள் செய்திருக்கும் எச்சரிக்கை தேவையான ஒன்று தான்.

    நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது அந்த மருத்துவர் கூறியது: காடராட் சிலருக்கு லென்ஸின் நடுவில் ஆரம்பிக்கும். அப்போது உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். எனக்கு அப்படித்தான் - கொஞ்சம் தான் வளர்ந்திருந்தாலும் கண் பார்வையை மறைத்தது.
    சிலருக்கு வெளியில் ஆரம்பித்து பிறகு நடுவில் வரும்போது கண்பார்வையை மறைக்கும்.
    அப்போது சிறிது நாட்கள் அறுவை சிகிச்சையை ஒத்திப் போடலாம்.
    அறுவை சிகிச்சைக்குப் பின் bi-focal கண்ணாடி போடாமல் progressive glasses போடுவது நல்லது. இந்தவகை கண்ணாடிகளால் -கண்ணாடியை மேலே/கீழே தள்ளிக் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. கொஞ்சம் விலை அதிகம்.கணணியை சம பார்வையிலேயே பார்க்கலாம்.


    ReplyDelete
  20. வாங்க ரஞ்சனி, காடராக்டின் இந்த இருவிதம் குறித்து நானும் கேள்விப் பட்டிருக்கேன். நீங்க சொன்ன அந்த வெளியே ஆரம்பிக்கிற வகை கூட இல்லை னு சொல்லிட்டாங்க எனக்கு. கடவுள் அருளால் பிழைச்சேன். இப்படியே இருக்கவும் பிரார்த்தனைகள். ப்ரொக்ரெசிவ் கண்ணாடி தான் வாங்கறோம். :)))))

    ReplyDelete