எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 25, 2013

அரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்! :(

ஸ்ரீரங்கம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.  தேதிப் படி நாளையும், கிழமைப்படி நேற்றும் ஒரு வருடம் ஆகி உள்ளது. போன வருடம் இங்கே வந்ததும் பார்த்த முதல் திருநாள் சித்ரா பெளர்ணமியின் கஜேந்திர மோக்ஷம் தான்.  மாலை ஏழு மணி அளவில் காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெறும்னு சொன்னாங்க.  அவ்வளவு நேரம் இருக்க முடியாததால் வந்துட்டோம்.  இந்த வருடமாவது போய்ப் பார்க்கலாம்னு நினைச்சால் அதுவும் முடியலை.  சரினு நம்பெருமாளையாவது போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். கிட்டக்க அம்மா மண்டபத்துக்கே வந்திருக்காரேனு காலையிலே வெளியே போக வேண்டி வந்தது;  மதியம் திரை போட்டுடுவாங்க.  ஆகையால் ஐந்து மணிக்குக் கிளம்பிப் போனோம்.

மின்சாரம் இல்லை.  ஒரே இருட்டில் நம்பெருமாள் காட்சி கொடுத்தார். பட்டாசாரியார்கள் சுறுசுறுப்பாகத் தெரிந்தவர்களை மட்டும் கயிற்றுத் தடுப்புக்கு அந்தப் பக்கம் கூப்பிட்டுப் பிரசாதம், சடாரி, தீர்த்தம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.  ஸ்வாமியைப் படம் எடுக்க முடியுமானு பார்த்தால் சும்மாவே பட்டாசாரியார் தலை தான் வரும்.  இன்னிக்கு சுத்தம் வெளிச்சமே இல்லை. :(  என்றாலும் முயன்று பார்த்தேன்.  பாண்டியன் கொண்டையில் நீலப்பட்டாடையில் காட்சி அளித்தான் அரங்கன்.  அவன் என்னமோ எளிமையானவன் தான்.  யார் கூப்பிட்டாலும் உடனே அவங்க இருப்பிடம் தேடிப்போயிடுவான்.  அவ்வளவு எளிமை.  ஆனால் சுத்தி இருக்கிறவங்க பண்ணும் அலட்டல் தான் மனதைக் காயப் படுத்துகிறது.

இன்னிக்கு முடிந்தவரை நம்பெருமாளை நன்கு பார்த்துவிட்டுப்பின்னர் கஜேந்திரனாக நடிக்கப்போகும் ஆண்டாளம்மாவைத் தேடினால் அவங்க அங்கே இல்லை.  எங்கேயானும் போயிருப்பாங்க போல.  மாலை வருவாங்களா இருக்கும்.  சரி, வீட்டுக்குத் திரும்பலாம்னு பார்த்தப்போ ஒரு பட்டாசாரியார், எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கும் சடாரி சாதித்துக் கொண்டிருந்தார்.  அவரிடம் போய் சடாரி சாதித்துக் கொண்டு, பின்னர் தீர்த்தம் கொடுக்குமிடம் போனோம்.  எனக்கு முன்னாடி ரங்க்ஸ் வாங்கிக் கொண்டார். அப்புறமா நான் வாங்கிக்கணும். கையை நீட்டிக் கொண்டிருந்தேன்.  அவர் துளசி கொத்தாக இருந்ததை எடுத்து வெளியே போட்டுவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார்.  அதை வாங்கிக் கொண்டு நகரும் முன்னர் பின்னாலிருந்து ஒருத்தர் வந்து கையை நீட்டிக் கொண்டு என் கையில் இடிக்க தீர்த்தம் கொட்டி விட்டது.  திரும்பக் கேட்டால், அந்த பட்டாசாரியார், நான் ஏதோ பிச்சை கேட்கறாப்போல அலக்ஷியமாக போம்மா, போ, போ, அப்படினு விரட்டிட்டு எனக்குக் கொடுக்கவே மாட்டேன்னு மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.

நான் விடாப்பிடியாக நின்னுட்டு இருக்க, என்னை இடித்தவர் வந்து, சாமி நான் தான் அந்த அம்மா கையிலே இருந்த தீர்த்தத்தை இடித்துக் கொட்டிட்டேன்.  திரும்பக் கொடுங்கனு சொல்ல, அந்த ஆளை முறைத்துவிட்டுப் பின்னர் ஒரு சொட்டு, சொட்டு என்றால் சொட்டுத்தான். கையில் திட்டமாகச் சொட்டிவிட்டு அந்த தீர்த்தத்தை மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.  கையிலே இருக்கும் தீர்த்தம் சாப்பிடும் அளவுக்கு  இல்லை.  கையை நீட்டிக் கொண்டே இருந்தேன்.  ஆனால் கையைத் தள்ளி விட்டுட்டுப்போறியா இல்லையானு விரட்டி விட்டார்.  அரங்கா நீயே பார்த்துக்கோ எல்லாத்தையும்னு சொல்லிட்டு, நிஜம்மாவே சொல்லிட்டு வந்துட்டேன்.  மனசு வேதனை தாங்கலை.

தீர்த்தம் கிடைக்காதது கூட வருத்தமில்லை.  அவர் கண்ணெதிரேயே இன்னொருத்தர் என் கையைத் தட்டித் தீர்த்தம்  கொட்டியதைப் பார்த்தும் விரட்டிவிட்டாரே அதான் வருத்தம்.  ஆண்டவன் கண்ணெதிரே எல்லாரும் சமம் சமம்னு சொல்வாங்களே, அது தெரியலையே அவருக்குனு வருத்தம்.   பெருமாள் கோயில்களிலே வைணவர்களுக்கே முதல் மரியாதை என்பது தெரியும் என்றாலும் இது என் தப்பு இல்லையே, வேணும்னு திரும்பக் கேட்கலையே?  ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா? புரியலை!

23 comments:

  1. இடித்தவர் பட்டாசாரியாரை ஒரு இடி இடித்திருக்கணும்...!

    ReplyDelete
  2. தேவை இல்லாத குழப்பம். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காததால் வந்த வினை. ஒவ்வொருவர் உள்ளேயும் உறைந்திருக்கும் உயிரோட்டம்தான் கடவுள். கவலைப் படாதீர்கள், நடப்பவை யாவும் நன்மைக்கே!

    ReplyDelete
  3. உங்கள் வருத்தம் எங்களுக்கும் வருத்தத்தைத் தருகிறது. ஆனாலும், இவர்கள் தீர்த்தம் தரா விட்டால் என்ன, அரங்கன் அருள் கிடைக்காதா என்ன? விடுங்கள். சாமிக்கும் ஆசாமிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் அரங்கனின் அருகில் இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. //ஆனால் சுத்தி இருக்கிறவங்க பண்ணும் அலட்டல் தான் மனதைக் காயப் படுத்துகிறது.//

    சுத்தியிருக்கிறவர்களை மறந்தால் தானே எதற்காக போனமோ அந்தக் காரியமே சித்தியாகும்! எனக்குத் தெரிந்த வழி, போகாமலும் சித்தியாகும். எதற்கும் உங்களவரை ஒரு வார்த்தை இதுபத்தி கேட்டுக்கங்க..:))

    //ஆண்டவன் கண்ணெதிரே எல்லாரும் சமம் சமம்னு சொல்வாங்களே, அது தெரியலையே அவருக்குனு வருத்தம்.//

    அந்த 'சம லிஸ்ட்'டில் அவரையும் நீங்கள் சேத்துக்காததின் விளைவு தான் இந்த வருத்தம்.

    மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலக் காட்சிகள் டி.வி.லே சேனலுக்குச் சேனல் கொடிகட்டிப் பறக்கிறதே.. மின்சாரம் கிடைச்ச நேரத்தில் நொந்த மனசுக்கு ஆறுதலா..

    ReplyDelete
  5. வருத்தம் புரிகிறது, கீதா. அடுத்தமுறை சேர்த்து வைத்து அரங்கன் கொடுக்கப் பண்ணிவிடுவான்.
    இதைதான் சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்றாங்க போல இருக்கு.
    அரங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். வருத்தம் போய்விடும்.

    ReplyDelete
  6. வருத்தம் புரிகிறது, கீதா. அடுத்தமுறை சேர்த்து வைத்து அரங்கன் கொடுக்கப் பண்ணிவிடுவான்.
    இதைதான் சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்றாங்க போல இருக்கு.
    அரங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். வருத்தம் போய்விடும்.

    ReplyDelete
  7. வேணும்னு திரும்பக் கேட்கலையே? ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா? புரியலை!//

    தட்டில் நிறைய பணம் போட்டு விட்டு தீர்த்தம் வாங்க கைஏந்தினால் மீண்டும் மூன்று உத்தரணி தீர்த்தம் விடுவார்.

    எல்லா இடங்களிலும் இது தான் நடக்கிறது. பணம் உள்ளவர்கள் ,இல்லாதவர்கள்.

    ReplyDelete
  8. வருத்தம் வேண்டாம். மனிதனின் தவறு. கடவுள் என்ன செய்வார் பாவம். பெரும்பாலும் நெரிசல் காலங்களில் நான் செல்லும் கோவில்களில் எல்லாம் கரச்சல்கள்தான். எல்லாம் இந்த பணியாளர்களின் பிரச்சினைகள். அவர்கள் பணியாளர்கள் அல்லர். பிணியாளர்கள்.

    ReplyDelete
  9. வாங்க டிடி, அவர் திரும்பிப் போனவர் மெனக்கெட்டுத் திரும்ப வந்து பட்டாசாரியாரிடம் விபரமாக விளக்கினார். ஆனாலும் பட்டாசாரியாருக்கு என்னமோ தெரியலை! :(

    ReplyDelete
  10. வாங்க கெளதமன் சார், பூசாரி வரம் கொடுக்காததால் எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை. மனிதரை மனிதராக மதிக்கவில்லையே என வருத்தம் தான். எல்லாரையும் படைத்துக் காத்து ரக்ஷிப்பது பெருமாளே என்னும்போது என்னையும் அவர் தானே படைத்திருக்கிறார். இறைவன் படைத்த உயிர்களிடத்தில் பாரபட்சம் காட்டுவது தான் அவர் சொல்லிக் கொடுத்த உபதேசமா? :((((

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், அரங்கன் அருள் பரிபூரணமாய் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து வருகிறேன். இவங்களோட பாரபட்சமான மனோநிலை தான் மாறவில்லையே என வருத்தம். :((((((

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், சுத்தி இருக்கிறவங்க நம்மைத் தொந்தரை செய்து கொண்டே இருந்தால் அவங்களை எங்கே மறக்கிறது? சாமியைப் பார்த்துக் கொண்டு ஒரு நொடி கூட நின்றால் கையைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். அதே சமயம் தெரிந்தவர்கள், பணமுள்ளவர்கள் எனில் கயிற்றுக்குக் கீழே உள்ளே அழைக்கின்றனர். வெளியே நின்று தரிசனம் செய்யும் உரிமை கூட சாதாரண மனிதர்களுக்கு மணிக்கணக்குப்படித் தான் என அரங்கனா வந்து சொன்னான்? :((((( போக வேண்டாம்னு தான் எண்ணம். ஆனால் இங்கே அம்மா மண்டபத்துக்கே வரார். கூட்டமும் அதிகம் இருக்காது. இதே அம்மாமண்டபத்தில் மாலை நேரத்தில் ஸ்வாமி புறப்பாட்டின்போது கூட்டம் சேர்ந்துவிடும். கூட்டத்தில் போவதில்லை. மதிய நேரமாக ஸ்வாமியும் ஒழிஞ்சாப்போல் சாவகாசமா இருக்கிறச்சே தான் போறோம். அப்போவும் இப்படின்னா! :((((((

    ReplyDelete
  13. நொந்த மனசுக்கு ஆறுதலா வல்லி சிம்ஹனின் பதிவிலேயும் எங்கள் ப்ளாக் பதிவிலேயும் பார்த்துட்டேன். நேத்து அழகர் ஆத்திலே இறங்கறதைத் தான் பார்க்கமுடியலை. அதனால் என்ன பரவாயில்லை. படங்கள் பார்த்தாச்சு. பச்சைப்பட்டுடுத்தி அழகர் ஆத்திலே இறங்கி இருக்கார். :))))

    ReplyDelete
  14. வாங்க ரஞ்சனி, இனிய சொற்களுக்கு நன்றி. அரங்கன் ஒரு குறையும் வைக்கவில்லை. இந்த மனிதர்கள் படுத்தும் பாடுதான்! :)))))

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, தட்டில் பணம் போடாவிட்டாலும் ஆளைப் பார்த்துக் கொண்டு தீர்த்தம்,சடாரி சாதிக்கின்றனர். :)))) அநேகமா எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இதே கதை தான் என்றாலும் கையைப் பிடிச்சுத் தள்ளினது தான் மனதுக்கு வருத்தம். :((((((

    ReplyDelete
  16. வாங்க கடைசி பெஞ்ச், கடவுள் பெயரில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அவர் பெயரால் செய்யப்படுகிறது. இதனால் எத்தனை பேருக்கு பேச்சுக்கு இடம் என்பதை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை. கடவுளா இப்படி எல்லாம் வித்தியாசம் பார்க்கச் சொன்னார்? இல்லவே இல்லை.

    ReplyDelete
  17. எங்க என் கமெண்ட்

    ReplyDelete
  18. ஜேஜே, உங்க கமென்ட் இது ஒண்ணு தான் இருக்கு. ஸ்பாமிலும் நல்லாத் தேடிட்டேன். வேறே எதுவும் இல்லையே?:(

    ReplyDelete
  19. கஜேந்திர மோட்சம் நீங்க பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேனே மாமி...

    ரங்கனுக்கு வித்தியாசம் பார்க்கத் தெரியாது....சுத்தி இருக்கறவங்க பண்ற அலம்பல் தான்...:((

    பரவாயில்லை விடுங்கோ மாமி... எப்போதும் நடக்கறது தானே...பிடிச்சு தள்ளி விடறது, பாரபட்சம் பார்ப்பது....

    ReplyDelete
  20. ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் என்னை ஒரு தடவை விஸ்வரூப தரினசத்தின் போது பாப்பான்கள் இடிச்சு தள்ளினார்கள்.அதை சொன்னேன்

    ReplyDelete
  21. மிக வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  22. கண்டிப்பாக அப்படி இல்லவே இல்லை எந்த கோவில்லேயும் எல்லோரையும் சமமாக பார்ப்பதே இல்லை என்பது தான் இந்து மதம் இறக்கத்திற்கு முக்கிய காரணம் பூரி ஜெகந் பொய் இருகீங்களா அங்கே இதைவிட அட்டகாசம் பண்ணுவார்கள் எதோ அவர்களே கடவுளை உருவாக்கனத நினைத்து கொள்ளகிறார்கள் போல

    ReplyDelete
  23. வருத்தம் புரிகின்றது. ரங்கன் வேறு பூசாரிகள் வேறு.

    ReplyDelete