உங்க பூர்விக வீட்டை மட்டும் போட்டியே, எங்க வீட்டையும் போடுனு நம்ம ரங்க்ஸ் சொல்லலை; என்றாலும் போட்டுட்டேன். ஏற்கெனவே போட்ட நினைப்பும் இருக்கு. வாசலில் பெரிய திண்ணை. படம் இருக்கு; ஹிஹிஹி,மனிதர்களும் இருக்காங்க. அவங்க கிட்டே அநுமதி வாங்காததால் அதைப் போட முடியலை. இன்னொரு சமயம் போறச்சே வாசல்லே யாரும் இல்லாத சமயமாப் பார்த்துப் படம் எடுத்துடறேன். ரேழி தாண்டி உள்ளே நுழைஞ்சதும் முற்றம் முற்றத்தைச் சுற்றிக் கூடம்.
கூடத்தின் ஒரு சிறு பகுதி. முதலில் தெரியும் அறைக்கு அடுத்துத் தூணுக்கு அருகே இருக்கும் அறையில் தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தார். இந்த வீடு அடுத்தடுத்து குடியிருப்பவர்களால் பராமரிக்கப் படுவதால் கொஞ்சம் இல்லை, நிறையவே பார்க்கும்படி இருக்கிறது. கூடத்திலேயே ஸ்வாமி அலமாரியும் உண்டு. அதெல்லாமும் இருக்கு; ஆனால் போட முடியாது. பார்த்து எடிட் பண்ணிப் போடறேன்.
கூடத்தின் ஒரு சிறு பகுதி. முதலில் தெரியும் அறைக்கு அடுத்துத் தூணுக்கு அருகே இருக்கும் அறையில் தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தார். இந்த வீடு அடுத்தடுத்து குடியிருப்பவர்களால் பராமரிக்கப் படுவதால் கொஞ்சம் இல்லை, நிறையவே பார்க்கும்படி இருக்கிறது. கூடத்திலேயே ஸ்வாமி அலமாரியும் உண்டு. அதெல்லாமும் இருக்கு; ஆனால் போட முடியாது. பார்த்து எடிட் பண்ணிப் போடறேன்.
பழைய காலத்து வீட்டின் அழகு ரசிக்க வைத்தது......
ReplyDeleteதூண்கள் என் மேல் ”சாஞ்சுக்கோயேன்” என அழைப்பது போல்...
அந்தக் கால வீடுகள்லே திண்ணை, ரேழி, பட்டாசல், நடு உள், பூஜை உள், பிறை, முற்றம், அடுத்த உள், சமையற்கட்டு, குடங்கு அல்லது கிடங்கு,
ReplyDeleteகிணற்றடி, கிணற்றடியைச் சுற்றி தாழ்வாரம் , கொல்லப்பக்கம் போற வழி, மாட்டுக்கொட்டகை எல்லாம் உண்டு.
எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 3000 ச்.அடி பரப்பு இருக்கும்.
நான் பிறந்த ஆங்கரை கிராம வீடும் ஒரு மூன்று கட்டு கொண்டது. இதை எல்லாம் எப்படி தினசரி பெருக்கி (அந்தக் காலத்துலே பசு மாட்டு சாணத்தாலே செவ்வாய் வெள்ளி சுத்தப்படுத்தவேண்டும்)
அந்தக் காலத்துலே பாத் அட்டேச்டு என்ற ஒரு கன்செப்டே கிடையாது. கொல்லப்பக்கம் ராத்திரி போகணும்னாலே
வைக்கப்போரத்தாண்டி போகறதுக்கே பயமா இருக்கும்.
காலம் மாறிப்போச்சு. டு பெட் ரூம் த்ரி பெட் ரூம் ஃபோர் பெட் ரூம் என்றெல்லாம் வசதியை அதிகரிப்பதாகச் சொல்லிக்கொண்டு வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை கம்மி பண்ணிவிட்டோம்.
நீங்கள் ஃபோட்டோ போட்ட வீடு மாதிரி தான் எங்க ஊர் ஆங்கரை அக்ரஹாரத்திலே கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே.
ஆனா இப்ப சில வருடங்களுக்கு முன்னாடி போய் பார்த்தேன்.
எல்லாமே உல்டா.
சுப்பு தாத்தா.
ஜயா என் தாத்தா கூட சொல்வார்கள். ஆங்கரை பெரியவர்களின் மாண்பை. எல்லாமே மாற்றம். ஆங்கரை அக்ரஹாரம் சிறந்த மனிதர்கள் வாழ்ந்த பூமி.
Deleteவெங்கட் சொன்னது போல் எனக்கு வேறு காட்சி தோன்றுகிறது. தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு வாங்க குழந்தைகளா என்று அன்பாய் அழைக்கும் பாட்டிகளின் முகம் தெரிகிறது வீட்டில்.
ReplyDeleteபல படங்களில் பார்த்த ஞாபகமும் வருகிறது...
ReplyDeleteசுப்பு தாத்தாவின் கருத்தும் ரசிக்க வைத்தது...
எங்கள் முதிய இல்லம் பதிவு இவ்வளவு நினைவுகளைக் கிளறி விட்டுள்ளதில் சந்தோஷமாக இருக்கிறது. இதே போன்ற வீட்டின் எதிரே என்னை வைத்து எடுத்த புகைப் படம் எங்கள் வீட்டிலும் உண்டு. வாசல் திண்ணை. ஒட்டிய அறைக்கு ஜன்னல் வெளியே தெரியும். ஆனால் உள்ளே செல்ல முற்றத்தின் இடது பக்கம் செல்ல வேண்டும். இலது வலமாக முற்றத்தைச் சுற்றி நடக்கலாம். வலது பக்கம் சமையலறை.....
ReplyDeleteநீளும் நினைவுகள்! :)
முத்தம் (முற்றம்) பற்றி நான் எழுதியுள்ள வரிகள் முநூலுக்கானவை!!! இங்கு பகிர முடியாது!
வாங்க வெங்கட், அந்தத் தூண்களைச் சுற்றிச் சுற்றி விளையாடும் ஆசை எனக்கு வரும், இப்போதும்! :))))))
ReplyDelete//அந்தக் காலத்துலே பாத் அட்டேச்டு என்ற ஒரு கன்செப்டே கிடையாது. கொல்லப்பக்கம் ராத்திரி போகணும்னாலே
ReplyDeleteவைக்கப்போரத்தாண்டி போகறதுக்கே பயமா இருக்கும். //
வாங்க சூரி சார், வருகைக்கு முதலில் நன்றி. ஆமாம், பாத் அட்டேச்டு கிடையாது தான். ஆனால் மதுரை போன்ற நகரங்களில் கொல்லப்புறம் தனியாகக் கழிவறை இருக்கும். அதுக்குப் போகவே பயம்ம்மா இருக்கும். :)))
கல்யாணம் ஆகிக் கருவிலி வந்தப்போ ராத்திரி ஏண்டா வருதுனு இருக்கும். கொல்லைப்புறம் மாட்டுக் கொட்டில் தாண்டி, இன்னொரு கதவு திறந்து வைக்கப் போர் தாண்டிப் போகணும். யாரையானும் துணைக்குக் கூப்பிடணும். ரொம்ப அவஸ்தை! :))))))))
தஞ்சை ஜில்லா (பழைய தஞ்சை) முழுதும் கிராமங்களில் அநேக வீடுகள் இன்னமும் பழமை மாறவில்லை சூரி சார்.
ReplyDeleteவாங்க கோமதி, பாட்டி எல்லாம் இருந்தால் அந்தக் கூடத்து ஓரமாகக் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டு அப்பளம் இடுவாங்களே அது நினைவுக்கு வருது.
ReplyDeleteவாங்க டிடி, இந்த வீடு படங்களில் வரலை. இது மாதிரி வேறே வீடா இருக்கும். :)))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இங்கேயும் வாசல் திண்ணையில் காமிரா உள்ளின் ஜன்னல் இருக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும், இங்கே இடப்பக்கமாய்க் கூடத்துப் படி ஏறணும். நேரே போனால் முற்றம் தாண்டி இரண்டாம் கட்டு, அது தாண்டிக் கொல்லைக்கட்டு, வெந்நீர் உள், அப்புறமாக் கொல்லை.
ReplyDelete//முத்தம் (முற்றம்) பற்றி நான் எழுதியுள்ள வரிகள் முநூலுக்கானவை!!! இங்கு பகிர முடியாது!//
ReplyDeleteஅது ஏன்? முகநூல் கோவிச்சுக்குமா? :))))
தேட வேண்டி இருக்கே. அப்டேட் ஆகமாட்டேன் என்கிறது. எங்கள் ப்ளாG வழியே வந்தேன்.
ReplyDeleteகண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி:)
வெகு அழகு. வேறு யாராவது இருக்கிறாகளா ங்கே.
நல்லது.வீடு பிழைக்கு. எங்கள் திருக்குறுங்குடி வீடும் நல்லபடி பராமரிக்கப் பட்டுவருவதாகத் தம்பி சொன்னார்.முகநூல்ல முத்தமா. ம்ஹூம் . கீதா.. மாட்டுகிறார் ஸ்ரீராம்:)
இதுபோன்ற பழைய காலத்து வீடுகள் அழகு.
ReplyDeleteநல்ல காற்றோட்டமாகவும் இருக்கும்.