எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 29, 2013

ஜோதிடம் பொய்யல்ல!

ஜோசியம் பொய்யல்ல.  ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்பதாலேயே.  இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு, மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர்.  அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும்.  ஏனெனில் சந்திரனின் ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப் படித்திருக்கோம் இல்லையா?  அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்கின்றனர்.  சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.

ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே.  இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே.  நம் மூலமே நம்முடன் வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும் பரவியுள்ளது எனலாம்.  இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.  பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர், இடைக்காடர்  போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர்.  அகத்திய நாடி மிகவும் சிறப்பானது.  ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால் பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவார்கள் என எண்ணுகிறேன்.  ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர்.  இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் (இப்போ இருக்கா?) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக இருந்தது/இருக்கிறது.  http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.

ஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது.  கல்வி கற்றுக் கொடுப்பதும், மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும் தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு. இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன.  வான சாஸ்திரம் குறித்த விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து வந்திருக்கிறது.  ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத் துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள்.  ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில் பார்க்கலாம்.  இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக் குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப் படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல.  உண்மையான ஜோதிடர்கள் இன்றும் இருப்பார்கள்.  அவர்களைக் கண்டறிய வேண்டும்.  ஜோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும்.  கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள்.  என்னைப் பொறுத்த வரையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை.  அதே போல் ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன்.  இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும் நடக்கிறதைப் பார்க்கிறேன்.  ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை.  அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))


49 comments:

  1. ஜோதிடத்தைப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என்பது நல்ல ஐடியா தான். ஆனால் குழந்தைகள் எவ்வளவுதான் படிப்பார்கள்!

    பொதுவாகவே ஜோதிடத்தில், குறிப்பாக நாடி ஜோதிடத்தில், இதுவரை நடந்தது எல்லாம் ஓரளவு சரியாகவே சொல்வார்கள். இனி நடக்கப் போவது என்று அவர்கள் சொல்வதுதான் பெரும்பாலும் நடப்பதில்லை. அப்பாதுரை சொன்னது வி.வி போலும்!

    ReplyDelete

  2. ஜோதிடம் . வான சாஸ்திரம் எல்லாம் பொய் என்று சொல்ல மாட்டேன். எனக்கு அது பற்றிய விஷயங்கள் தெரியாது. ஆனால் நம்பிக்கை உள்ளவர்களின் gullibility-யை பயன் படுத்தி ஏமாற்றுக் காரர்கள் பெருகிவிட்டார்கள் என்பதுதான் நிஜம். கைரேகை பற்றிக் கொஞ்சம் படித்தேன். உளவியல் சிறிது தெரிந்தால்போதும் மக்களை நம்ப வைக்கலாம். போனபதிவின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தேன். ஆதிகாலத்தில் division of labour முறையில் ஏற்படுத்தப் பட்ட வர்ண பேதங்கள் பெரும்பான்மையினரை அடக்கி வைக்க உபயோகிக்கப் பட்டதுபோல் ஜோசியம் மக்களின் அறியாமையிலும் அவர்கள் மேல் அவர்களுக்கே இல்லாத நம்பிக்கையிலும் திளைக்கிறது, வளர்கிறது. எச்சரிக்கை தேவை.

    ReplyDelete
  3. அவரவர் நம்பிக்கையை பொறுத்தது... ஆனால் எந்த செயலுக்கும், இவைகளை பார்ப்பவர்களை கண்டுதான் அஞ்சுகிறேன்... அவர்களுக்கு மனதில் ஒருவித குழப்பமே இருக்கிறது என்றும் அறிவேன்... GMB ஐயா சொன்ன எச்சரிக்கை கருத்தும் அருமை...

    ReplyDelete
  4. நடந்தவைகளைச் சொல்வது ஒரு ஜோதிடமா ஸ்ரீராம்? தெரிந்ததைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

    ReplyDelete
  5. ஜோதிடம் வேறே, வானசாத்திரம் வேறே.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இரண்டுக்குமான வேறுபாடுகள் புரியாமல், கடவுள் மத குழப்படி சாமிகள் மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு இரண்டுக்குமான தெளிவான வேறுப்பாடுகளை விரும்பினால் கண்டறியலாம். அறிந்தும் ஒன்றே என்பவர்களை எதுவும் சொல்வதற்கில்லை.

    பொய் மெய் என்பது இங்கே பொருந்தாது என்று நினைக்கிறேன். ஜோதிடம் கடவுளல்ல. தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் இரண்டு நாளில் ஜலதோஷம் பிடிக்கலாம் என்று சொல்வது ஜோதிடமா அறிவியலா? தெளிக்குட்பட்டதை வைத்து தெளிவில் எல்லைக்கப்பாலிருப்பதைச் சொல்வது வித்தை. ஜோதிடம் ஒரு extreme. அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். ஜோதிடத்தால் ஒவ்வொரு முறையும், தேர்ந்த ஜோதிடர் என்றாலும், சரியாகக் கணிக்க முடியவே முடியாது. அந்த வகையில் அது பொய்யின் அருகே இருக்கும் ஒரு வித்தை.

    ஜோதிடத்தை மெய்யென்று நம்புவோரிடத்தே இருக்கும் அறியாமை, பொய்யென்று நம்புவோரிடத்தே இருக்கும் அறியாமையை விட அதிகம். ஜிஎம்பி சொல்வது ஏற்புடையது.

    ReplyDelete
  6. //எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால்..

    நானறிந்தவரை பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்களே. நம் அச்சங்களையும் குழப்பங்களையும் மேயும் ஜோதிட எருமை மாடுகள்.

    எங்கோ ஒரு சிலர் தான் பிழைப்புக்காகச் செய்யாமல் இருக்கிறார்கள். எனக்குக் குறி சொன்னக் கிழவி ஒரு காசு கூட வாங்கவில்லை. என்னிடம் ஒரு பான்சாய் செடியும் செர்ரிப் பழம்ம் பரிசாகக் கொடுத்து அனுப்பிவைத்தார்.

    ReplyDelete
  7. நாலந்தா பல்கலைக்கழக இழப்பு கொடியது. அலெக்சேந்த்ரியா நூலக இழப்பும்.
    ஒவ்வொரு அரசனும் முதல் வேலையாக மக்களின் அறிவை மழுங்கச் செய்யும் முயற்சிகளில் இறங்கியது வரலாற்றில் நிறைய பார்க்கலாம். மூர்க்க அரசர்கள் செய்ததை இப்பொழுது மதகுருக்கள் செய்து வருகிறார்கள் :)

    ReplyDelete
  8. ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே.

    உண்மை, உண்மை.

    //சோதிடகலையில் வானியலும் அடங்கி உள்ளது.

    கோள்களில் உள்ள வேகம் அதன் காந்த அலை தன்மைகளும் வானியல் ஆகும். அவற்றால் மனிதர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் ஏற்படும் விளைவுகளின் கணிப்பே சோதிடமாகும்.//

    ---வேதாத்திரி மகரிஷி.

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், குழந்தைகளுக்குச் சின்ன வயசில் சீக்கிரம் எதுவும் மூளையில் பதியும். அதோடு இதை விருப்பப் பாடமாக வைக்கலாம். குறிப்பிட்ட மதம் சார்ந்தது என ஒதுக்கக் கூடாது. :( இனி நடக்கப் போவதை எல்லாருமே சொல்வார்கள், சொல்லி இருக்கிறார்கள். சூசகமாகத் தான் பலரும் சொல்வார்கள். மிகச் சிலரே ஆணி அடித்தாற்போல் சொல்வார்கள். அப்படிச் சொல்லி பலித்ததில் ஒன்று ராஜிவ் காந்தியின் மரணம்.

    ReplyDelete
  10. z தமிழில் மருத்துவ சோதிடம் சொல்கிறார். இன்று விருச்சிக லக்கினம், விருச்சிக ராசிக்கு சொன்னார்.
    கோள்களுக்கும் ராசிகளுக்கும் மருத்துவ சம்பந்தம் சொல்கிறார்.
    பாரம்பரிய வைத்தியமும் சொல்கிறார்.
    கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.



    ReplyDelete
  11. வாங்க ஜிஎம்பி சார், இன்றைய நாட்களில் கல்வியில் இருந்து மருத்துவத்தில் இருந்து எல்லாமும் வியாபாரம் ஆகி விட்டது. அதுக்காகக் கல்வியை ஒதுக்கறோமா? மருத்துவ சோதனைகளை ஒதுக்கறோமா? இவற்றிலும் ஏமாற்றுபவர்களைப் பார்க்கத் தானே செய்கிறோம். அதுக்காகக் குழந்தைகளைப் படிக்க வைக்காமலா இருக்கோம்???

    இந்த ஜோசியமும் அப்படியே ஒரு சிலர் கைகளில் மாட்டிக்கொண்டு பலராகப் பல்கிப்பெருகிவிட்டது. அதோடு வர்ணபேதங்கள் எப்போதும் பெரும்பான்மையினரை அடக்கி வைக்கவெல்லாம் இல்லை. ஒரே குடும்பத்தில் தந்தை பிராமணனாகவும், ஒரு மகன் க்ஷத்ரியனாகவும், இன்னொரு மகன் வைசியனாகவும், இன்னொருவன் பிராமணனாகவும் இருந்திருக்கின்றனர். வர்ண பேதங்கள் என்று சொல்வதே தவறு. வர்ணாசிரமம் ஒரு வாழ்க்கை முறை. அது தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. அதன் உன்னதமும் அனைவருக்கும் புரியும் நாள் வரும். அது வரை காத்திருப்போம்.:))))

    ReplyDelete
  12. வாங்க டிடி, நீங்க சொல்வது போல் ஒவ்வொன்றுக்கும் ஜோசியத்தை நம்புவது ஆபத்தே. இங்கே தான் பகுத்தறியும் திறமை வேண்டும். இந்தப்பகுத்தறிவானது இப்போ நாத்திகர்களுக்கான கிரீடமாக மாறிவிட்டது துரதிர்ஷ்டவசமானது! :)))))

    ReplyDelete
  13. வாங்க அப்பாதுரை, உங்களிடமிருந்து இந்த பதிலைத் தான் எதிர்பார்த்தேன். :)))) என்றாலும் ஒரு விஷயத்தில் உங்களோடு ஒத்துப் போகிறேன். எது தெரியுமா?


    //நானறிந்தவரை பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்களே. நம் அச்சங்களையும் குழப்பங்களையும் மேயும் ஜோதிட எருமை மாடுகள். //

    இங்கே ஒத்துப் போகிறேன். உண்மையான ஜோதிடர்கள் நிச்சயமாய் வியாபாரம் செய்ய மாட்டார்கள்.

    //எங்கோ ஒரு சிலர் தான் பிழைப்புக்காகச் செய்யாமல் இருக்கிறார்கள்.//

    இதுவும் உண்மை. இப்படிச் சொல்பவர்களைக் கண்டறிவது மிகக் கடினம், எளிதில் வாய் திறக்க மாட்டார்கள்.

    //எனக்குக் குறி சொன்னக் கிழவி ஒரு காசு கூட வாங்கவில்லை. என்னிடம் ஒரு பான்சாய் செடியும் செர்ரிப் பழம்ம் பரிசாகக் கொடுத்து அனுப்பிவைத்தார்.//

    என் கல்யாணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோசியரும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. இத்தனைக்கும் சாப்பாடுக்கே திண்டாடும் குடும்பம் அது. ஒரு முறை ஒருத்தர் ஜாதகத்தைப் பார்த்தால் போதும், பின்னர் மீண்டும் பார்க்க வேண்டாம். அப்படியே மனப்பாடமாக அனைத்தையும் கூறுவார்.

    ReplyDelete
  14. // மூர்க்க அரசர்கள் செய்ததை இப்பொழுது மதகுருக்கள் செய்து வருகிறார்கள் :)//

    ஆதாரங்கள் கொடுங்க அப்பாதுரை! :)))))

    ReplyDelete
  15. வாங்க கோமதி அரசு, சில தனிப்பட்ட காரணங்களால் எனக்குச் சில ஜோசியர்கள் கூறியதையும் அவை அப்படியே நடந்ததையும் சொல்ல முடியாது. :( ஆனால் இதில் அற்புதமானதொரு கணித முறை இருக்கிறது. துல்லியமாய்க் கணக்குப் போடத் தெரிந்தவர்கள் வெகு சிலரே என்பதும் தெரியும். என்னளவில் நான் எப்போதும் ஜோசியரைத் தேடி அலைந்ததில்லை. வருகிறதை அப்படியே எதிர்கொள்வேன்.

    ReplyDelete
  16. பஞ்சபூதநவக்கிரகதவம் என்று சொல்லி தந்து இருக்கிறார் வேதாத்திரி மகரிஷி.
    பஞ்சபூதங்களிலிருந்தும், நவகோள்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். என்று சொல்கிறார்.
    நவகோள்களிலிருந்து வரும் காந்த அலைக்திர்கள் நம் உடல் உறுப்புகளுடன் சமபந்தபட்டது.
    ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு உறுப்புகளுடன் சமந்தபட்டது.நமக்குநல்லதே செய்யட்டும் என்று வணங்கும் போது நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை.
    நவக்கிரக பாடல்கள் பாடியும், விளக்குகள் ஏற்றி வணங்குவது போன்றுதான் இதுவும்.

    ReplyDelete
  17. //நடந்தவைகளைச் சொல்வது ஒரு ஜோதிடமா ஸ்ரீராம்? தெரிந்ததைத் தெரிந்து கொள்வதால் என்ன பயன்?//

    அதேதான் என் கேள்வியும்!
    எனக்கு நடந்தது எனக்கே தெரியும்போது காசு கொடுத்து அதையே தெரிந்து கொள்ள வேண்டுமா?!! :)))

    பிழைப்புக்காக செய்பவர்களே அதிகம். உண்மையாகத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

    ஜோதிடத்தில் வாக்குக் காலம் என்ற ஒன்று உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த நேரத்தில் சொன்னது பெரும்பாலும் பலிக்கும், அல்லது பலிக்கக் கூடியதைச் சொல்வார்கள்!

    பணத்துக்காகச் செய்யும்போது அல்லது பணம் என்று இதற்கு வாங்கும்போது அர்த்தமில்லாமல் போகிறது.

    //அப்படிச் சொல்லி பலித்ததில் ஒன்று ராஜிவ் காந்தியின் மரணம்.//

    யார் சொன்னார்கள்? நாஸ்ட்ரடாமஸ்? சூசகமாகச் சொல்வதில் அப்புறம் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு! :))))

    ReplyDelete
  18. வர்ணாசிரமங்களில் இருந்தே வர்ண பேதங்கள் கிளை விட்டிருக்கின்றன. நீங்கள் கூறுவது exceptions களாக இருக்கலாம். இன்றைய ஜாதி மத பேதங்களுக்கு ஆதார காரணமே இந்த பேதங்கள்தான். வேறு காரணங்கள் காணவில்லை. ஜோசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களே ஜோசியரைத்தேடிப் போவதில்லை, என்பதே அதன் நம்பகமில்லாத்தன்மையைக் காட்டுகிறது. என் பின்னூட்டத்தையும் கடைசி வரிகளையும் மீண்டும் படிக்கவும்.

    ReplyDelete
  19. கோமதி அரசு, Z தமிழா, ஜி தமிழா? பொதுவாக நான் தொலைக்காட்சியில் நேரம் செலவழிப்பதில்லை. அதுவும் இந்த ஜோசியம் போன்ற நிகழ்ச்சிகளை எப்போவானும் காலை வேளையில் என் கணவர் பார்த்தால் அப்போக் காதில் விழுவது தான். நீங்க சொல்வது எனக்குப் புதிய செய்தி! ஜோதிடம் பார்த்து மருத்துவம் செய்வது குறித்துச் சொல்கிறார்கள் என்றால் எந்த நேரம், கிழமை போன்றது சொல்லுங்க. இங்கே அந்த நேரம் மின்சாரம் இருந்தால் பார்க்கலாம். :)))) என்ன தான் சொல்றாங்கனு ஒரு ஆர்வம் தான்.

    ReplyDelete
  20. //நவகோள்களிலிருந்து வரும் காந்த அலைக்திர்கள் நம் உடல் உறுப்புகளுடன் சமபந்தபட்டது.
    ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு உறுப்புகளுடன் சமந்தபட்டது.நமக்குநல்லதே செய்யட்டும் என்று வணங்கும் போது நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை.//


    வேதாத்ரி மஹரிஷியின் உபதேசங்களைக் கேட்காவிட்டாலும் இந்த விஷயம் குறித்து அறிந்திருக்கிறேன். எனினும் விரிவான ஆழமான அறிவு கிடையாது. சாதாரணமாக வீட்டிலே பேசும்போது கூட அறச் சொல் சொல்லக் கூடாது எனப் பெரியவங்க சொல்வாங்க. திக் தேவதைகள் ததாஸ்து சொல்லிவிடும் என்பார்கள். இது குறித்து என் இரண்டு தாத்தாக்களும் விரிவாகச் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  21. //யார் சொன்னார்கள்? நாஸ்ட்ரடாமஸ்? //

    வாங்க ஸ்ரீராம், நாஸ்ட்ரடாம்ஸ் புத்தகம் இருக்கு, பையர் படிக்கச் சொல்லி வைத்துவிட்டுச் சென்று வருடங்கள் பல ஆகின்றன. ஆனாலும் படிக்கவில்லை. :))))))))

    ராஜிவ் காந்தி இறந்ததுமே இது குறித்து ஜோசியர் சொன்னதும், ராஜிவ் காந்தி அதை அலட்சியம் செய்ததும் துக்ளக்கில் வந்திருந்தது. சோவே ஒரு முறை இது குறித்து விரிவாக எழுதி இருந்தார் என நினைவு. கேரளத்து நம்பூதிரி ஒருத்தர் சொல்லி இருந்தார். உடல் சிதறி இறக்க நேரிடும் என்றே சொல்லி இருந்தாராம்.

    //சூசகமாகச் சொல்வதில் அப்புறம் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு! :))))//

    இல்லைனே நினைக்கிறேன். எப்படியாவது புரிய வைச்சுடுவாங்க. உண்மையான ஜோசியர்கள்னா கட்டாயமாப் புரிய வைப்பாங்க. பணம் பண்ணும் ஜோசியர்கள் வேண்டுமானால் அப்புறமா எப்படி வேண்டுமானாலும் மாத்திப்பாங்க.

    ReplyDelete
  22. //வர்ணாசிரமங்களில் இருந்தே வர்ண பேதங்கள் கிளை விட்டிருக்கின்றன. நீங்கள் கூறுவது exceptions களாக இருக்கலாம். இன்றைய ஜாதி மத பேதங்களுக்கு ஆதார காரணமே இந்த பேதங்கள்தான். வேறு காரணங்கள் காணவில்லை.//

    வாங்க ஜிஎம்பி சார், மறு வரவுக்கு நன்றி. வர்ண பேதங்கள் என்பது கிடையாது. ஜாதியெல்லாம் கடந்த ஐநூறு ஆண்டுகளில் உருவானவையே. அதுவும் அந்நியப் படையெடுப்புகளுக்குப் பின்னரே இத்தகைய பேதங்கள் தலை தூக்கி இருக்கின்றன என்பதும் நிதரிசனம். அப்படி பேதங்கள் இருந்திருந்தால் நம் நாட்டில் எந்த அரசனாலேயும் இப்படி அழகான கோயில்களும், அரண்மனைகளும், கோட்டைகளும் கட்டி ஆண்டிருக்க முடியாது. இந்தச் சண்டையைத் தீர்த்து வைக்கவே நேரம் சரியாக இருந்திருக்கும்.

    நம் பக்தி இலக்கியங்களில் கூட தாழ்ந்த குலத்தவரானாலும் இறைவன் அருள் பரிபூரணமாகக் கிடைத்து வந்தது என்றே சொல்லி வந்திருக்கின்றனர்.

    ReplyDelete
  23. //ஜோசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களே ஜோசியரைத்தேடிப் போவதில்லை, என்பதே அதன் நம்பகமில்லாத்தன்மையைக் காட்டுகிறது. என் பின்னூட்டத்தையும் கடைசி வரிகளையும் மீண்டும் படிக்கவும்.//

    ஜோசியம் குறித்த அறியாமை எதுவும் எனக்கு இல்லை. நான் கேளாமலே என் எதிர்காலம் குறித்து எனக்குச் சொன்ன சில ஜோசியங்கள் பலித்திருப்பதையும் கண்டு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை கடவுள் மேல் அசையாத நம்பிக்கை உண்டு. அவனருளால் தான் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை. என் பக்தியும் மூடத்தனமாய்த் தெரியலாம். ஆனால் கடவுள் எனக்குக் கொடுக்க நினைக்கும் எதுவும் கூடவோ குறையாமலோ எனக்குக் கிடைத்தே தீரும். யார் தடுத்தாலும் கிடைக்காமல் போகாது. அது போல எனக்குத் தேவையில்லாதது எனில் அதைக் கடவுள் எனக்குத் தரவும் மாட்டார்.

    இரு முறை நல்ல அலுவலகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தும் என்னால் செல்ல முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்டிருந்தேன். அதே போல் சேர்ந்த வேலையிலும் தொடர்ந்து இருக்க முடியவில்லை. இதை எனக்கு முன்பே சொல்லி இருந்தனர். ஆனாலும் அதையும் மீறித்தான் வேலைக்குப் போய்க் காட்டுகிறேன் என்று போனேன். கடைசியில் ஜோசியத்தில் நான் எப்போ வேலையை விடுவேன் என்று சொல்லப் பட்டதோ அப்போது தான் வேலையை விடும்படி ஆனது.

    ஆனால் வேலையை விடும்போது இதை எல்லாம் யோசிக்கவில்லை. அந்த மாதிரி சூழ்நிலை இல்லை. அப்போதும் தர்மசங்கடமான நிலை. விட்டே ஆகவேண்டும் என்ற தீராத கஷ்டமான சூழ்நிலை. ஆனால் வேலைக்குப் போனால் அப்போதிருந்த பணத் தட்டுப்பாடுக்கு வசதி. என்றாலும் வேலையை விட்டேன்.

    ReplyDelete
  24. நான் ஜோசியர்களிடம் செல்லாததற்குக் காரணம் சும்மாச் சும்மா கிரஹங்களின் நிலைமையைச் சோதனை செய்வது கூடாது என்பது மட்டுமல்ல, நாம் ஜோசியத்திற்கு அடிமை ஆகக் கூடாது. இறை அருள் இருந்தாலே போதும் என்ற கடவுள் நம்பிக்கையும் காரணம். ஜோசியத்தின் மேல் நம்பகத்தன்மை இல்லாமல் அல்ல.

    பொதுவாம நாம் ஒண்ணு நினைச்சு எழுதினாலோ, பேசினாலோ வேறுவிதமாக அர்த்தம் கொள்ளப் படுகிறது. :))) அவரவர் பார்வையின் கோணம் வித்தியாசப் படுகிறது அல்லவா?

    ReplyDelete
  25. Z தமிழா, ஜி தமிழா? இரண்டும் ஒன்று தான் என்று நினைக்கிறேன்.
    நானும் எப்போதாவது தான் பார்ப்பேன் தொடர்ந்து பார்ப்பது இல்லை. 8.30 என்று நினைக்கிறேன்.
    இன்று பார்த்தேன். அன்னாசியின் மருத்துவ பலன் சொன்னார் அடுத்து விருச்சிக ராசி, விருச்சிக லக்கினம் உள்ளவர்களுக்கு உடல் சார்ந்த தொந்திரவு என்ன வரும் என்பது போல் சொல்லிக் கொண்டு இருந்தார். அங்காரகனை வழிபடவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

    நீங்கள் எழுதிக் கொண்டு இருக்கும் பதிவுக்கு உதவியாக இருக்குமே என்று சொன்னேன்.

    ReplyDelete
  26. எல்லோருடைய கருத்துக்களையும் படித்தேன்.

    நான் சோதிடம் பார்ப்பதில்லை. எதுநடந்தாலும் அதன்போக்கிலேயே விட்டுவிடுவேன்.

    ReplyDelete
  27. வாங்க கோமதி அரசு, ரெண்டும் வேறேனு நினைக்கிறேன். :))) அது எப்படியோ இருக்கட்டும், காலம்பர எட்டரை மணிக்கா? சான்ஸே இல்லை! :))) அந்த நேரம் தொலைக்காட்சி பார்க்க முடியாது. :))) என்னிக்கானும் நேரம் வாய்த்தால் பார்க்கலாம். :))))

    ReplyDelete
  28. மாதேவி, அருமையான கருத்தைப் பதிந்துள்ளீர்கள். நன்றிம்மா.

    ReplyDelete
  29. நவகோளின் காந்த அலையா? ராகு கேது கோளா? எந்தக் கோள்? pluto ஒரு கோளே இல்லை என்றாகிவிட்டது. இருந்தாலும் plutoவின் காந்த அலைகள் இங்கே வந்து மனிதர்களை பாதிக்கும் வரை மனிதருக்கு எத்தனை வயதாகும் என்று நினைக்கிறீர்கள்? அப்படி அலைகள் தாக்கினாலும் தாக்கும் நேரத்தில் கிரகத்தின் நிலை மாறியிருக்கும். புது நிலையின் அலைகள் தாக்கும் நேரம் நபரின் நிலை மாறியிருக்கும். இது ஒரு loop. unless நபர் கிரக நிலைகளுக்கும் அலைகளுக்கு தொடர்பில்லை என்றாலொழிய. எனில், கிரக சஞ்சாரங்களை வைத்தே ஜோசியம் ஜாதகம் எல்லாம் கணிக்கப்படுகிறது. இதனால் தெளிவாவது யாதெனில் கிரக காந்த அலைகள் நம்மைத் தேடிவந்து பாதிக்கும் என்பது கப்சா கப்சா கப்சாவன்றி வேறொன்றுமில்லை. இதை கப்சா பெருங்கப்சா மாபெருங்கப்சா என்றும் சொல்லலாம். மகரிஷி சொன்னாலும் சரி மணிரத்னம் சொன்னாலும் சரி. nothing personal against மகரிஷி. ஆதாரம் #1 இது :)
    மிச்ச ஆதாரங்களை அப்பப்போ சொல்றேன் - நல்லா மாட்னீங்க.

    ReplyDelete
  30. ராஜீவ் காந்தி மரணம் ஜோசியத்தால் சொல்லப்பட்டதா? விவரம் தெரிந்தால் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  31. கடந்த ஐனூறு ஆண்டுகளில் உருவானவைனு எப்படி சொல்றீங்க?
    பிராம்மணன், சூத்ரன் என்பதெல்லாம் ஜாதியில்லையா அப்போ? ஜாதிங்கறதுக்கு வசதியான டெப்னிஷன் குடுக்குறோம் அவ்வளவுதான். தொழில்முறையில் பிரிக்கப்பட்ட வர்ணங்களும் ஜாதி தான். உங்கள் டெபனிஷன்படி ஜாதி என்றால் என்ன? மதத்தை ஒட்டியதா? அப்படியெனில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவம் வைஷ்ணவம் சமணம் என்று இந்துக்களுக்குள்ளேயே இருந்ததே?.

    ReplyDelete
  32. ஜோதிடம், கைரேகை இரண்டையும் நம்புபவள். நம்பாத காலத்தில், பிடிவாதமாக, தனியளாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட போது, ‘அவள் பயணத்தை நிறுத்த முடியாது, பல வேலை மாத்துவாள் அங்க’னு சொன்ன கேரள சோழி ஜோதிடருக்கு நன்றி;-) 30வயதுக்குமேலே வாழ்க்கைப் பாடம் நான் கற்கத் தொடங்கியபின் ஜோதிடத்தில் நம்பிக்கை வந்தது. முதல்ல ஜோதிடம் சொன்னவங்க சொன்னது எதுவும் நடக்கல; இரண்டாவதாகச் சொன்னவர் (வயிற்றில் உருவாகியிருக்கும் மகவு ஆணா/பெண்ணா, நிறம், மகவின் ஜாதக விசேஷம், நாங்கள் குடியிருக்கப் போகும் ஊர்கள்) அத்தனையும் பலித்தது.
    அதற்கப்புறம் இக்கிளியூண்டு நானே ஜோதிடம் படித்துக் கொண்டேன். சென்ற இந்தியப் பயணத்தின்போது, ஜாதகம் பார்த்து கணவருக்கு பயணத்தில் குறிப்பிட்ட தினம் ஆபத்துனு சொல்லியிருந்தேன்; இந்தியாவில இருந்திருந்தா அடிபடமாட்டார்னும். விபத்து குறிப்பிட்ட தினம் நடந்தது; அடிபடலை.

    கூடப் பணிபுரிபவர் கைரேகை பார்த்து பிழைப்பார்னு சொன்னேன். புற்றுநோயில் பலி. அவர் மனைவிக்கு அரைமில்லியன் டாலர் கடன்:-((((

    ’மத்தவங்களுக்கு ஜோதிடம் பார்க்கிறவங்க வீட்டில பிரச்னை இருக்கும்’னு எங்க பிறந்த வீட்டு மூத்தவர் சொல்வார்கள்.

    ReplyDelete
  33. அப்புறம்:
    1. ராஜீவ்காந்தி கொலை ஜோதிடத்தால் முன்கூட்டியே சொல்லப்பட்டது பற்றி நானும் படிச்சிருக்கேன்.
    2. தமிழ்/சமஸ்கிருதத்தில் கிரகம்/கோள் என்பதை planetary bodyனு என் புரிதல்...
    3. ராகு/கேது=Sun/Moon's interaction with Earth..? (நான் சரியாச் சொல்றேனா?) அதனாலேயே ’இவற்றால் கிரகணம் ஏற்படுகிறது’னு சொல்லிருக்காங்கனு தமிழ்ப்பதிவுகளில் பாடம் படித்த நினைவு;-)

    ReplyDelete
  34. அப்பாதுரை, ராகு, கேது சாயா கிரஹங்கள் என்றே சொல்லப் படுகின்றன. :))) உங்க மத்த விளக்கங்களுக்கு பதில் என் கிட்டே இருக்குன்னாலும் இப்போ தேடிக் கொடுக்க முடியலை. டாகுமென்டெல்லாம் சரியாத் திறக்க முடியாமல் இருக்கு. அதோடு எதிலே சேமிச்சேன்னும் தெரியலை. பிசியில் தேடிப் பார்க்கணும். இப்போதைக்கு உங்களால் முடிஞ்சா வகுப்பறை என்னும் பதிவுகள், சுப்பையா வாத்தியாரின் பதிவுகளை நேரம் இருக்கிறச்சே படியுங்கள்.

    எனக்குக் குறிப்புகள் கிடைச்சதும் சொல்றேன். இல்லாட்டியும் வாத்தியார் விரிவா எழுதி இருக்கார். அவரும் ஒரு காலத்திலே ஜோசியத்தை நம்பாதவர் தான். :)))))

    ReplyDelete
  35. அப்பாதுரை, ராஜிவ் காந்தி மரணம் குறித்து அவரிடமே நேரில் எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்குப் போக வேண்டாம்னும் சொல்லி இருக்காங்க. இவை எல்லாம் பழைய துக்ளக் 1990-91 இதழ்களில் கிடைக்கலாம்.

    ReplyDelete
  36. அதோடு பூவால் மரணம் ஏற்படும்னும் சொல்லி இருக்காங்க.

    ReplyDelete
  37. //கடந்த ஐனூறு ஆண்டுகளில் உருவானவைனு எப்படி சொல்றீங்க?
    பிராம்மணன், சூத்ரன் என்பதெல்லாம் ஜாதியில்லையா அப்போ? ஜாதிங்கறதுக்கு வசதியான டெப்னிஷன் குடுக்குறோம் அவ்வளவுதான். தொழில்முறையில் பிரிக்கப்பட்ட வர்ணங்களும் ஜாதி தான். உங்கள் டெபனிஷன்படி ஜாதி என்றால் என்ன? மதத்தை ஒட்டியதா? அப்படியெனில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவம் வைஷ்ணவம் சமணம் என்று இந்துக்களுக்குள்ளேயே இருந்ததே.//

    அப்பாதுரை, ஒரே வீட்டிலேயே சைவனும், வைணவனும் அண்ணன், தம்பியாக இருந்திருக்கின்றனர். அதுவும் தெரியும் இல்லையா? இந்தப் பிரிவினை எல்லாமே பிற்பாடு வந்ததே. :))) இதை எழுதப் போனால் கல்யாணம் குறித்த பதிவுகள் தாமதம் ஆகும். கொஞ்சம் கொஞ்சமாய் நேரம் இருக்கையில் சொல்கிறேன்.

    வர்ணம் வேறே, ஜாதி வேறே.ஒரே தகப்பனுக்கு நான்கு வர்ணத்துத் தொழில்களையும் செய்யும் சகோதரர்கள் இருந்திருக்கின்றனர். இது அவரவர் விருப்பப் படி தான் நடந்து வந்திருக்கின்றன. யாரும் எவரும் யாரையும் எவரையும் பிரிக்கவில்லை. பிரிவினை எல்லாம் அந்நியப் படையெடுப்புக்குப் பின்னரே! :)))))

    ஜாதிக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதன் விளக்கம் பின்னர் கொடுக்கிறேன். வர்ணாசிரமம் வேறே, ஜாதி வேறே. விரிவான விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் யோசிக்க வேண்டி இருக்கு.

    ReplyDelete
  38. ஒரு பிரமசாரி நான்கு வர்ணத்துப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். எந்தத் தடையும் இருந்ததில்லை. :))))

    ReplyDelete
  39. கெபி, தொப், தொப், டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!:)))))

    ReplyDelete
  40. மயங்கி விழுந்துட்டேன் கெபி. உங்களைக் காணோம்னு அப்பாதுரை தேடிட்டு இருந்தார். :))))

    நல்ல முறையில் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்பவர்கள் வீடுகளில் உண்மையாகவே பிரச்னை இருக்கும். அதோடு வறுமையும் இருக்கும்.

    எனக்கு ஜோசியம் பார்த்த மூவரும் முதல் குழந்தை பெண் தான் என அடித்துச் சொன்னார்கள். முதலில் கைரேகை பார்த்தவர் சொன்னப்போ நான் பள்ளி மாணவி. இரண்டாம் முறை பார்த்தவர் சொன்னப்போ திருமணப் பேச்சே ஆரம்பிக்கலை. மூன்றாம் முறை தான் கல்யாணப் பொருத்தம் பார்த்த ஜோசியர். அவர் எங்கள் வாழ்க்கையில் சொன்னது எல்லாமே பலிச்சிருக்கு. :))))

    ReplyDelete
  41. அவசரமில்லே நேரம் கிடைக்குறப்ப எழுதுங்க.. சுவாரசியமான விஷயத்தை சுவாரசியமா எழுதுறீங்க. இதை மட்டும் இப்ப சொல்லிடுங்கோ - ஐயர் ஐயங்கார் இது ஜாதியா இல்லையா?

    கெக்கேயா.. நிஜமாவா?

    ReplyDelete
  42. கப்ஸா என்று சொல்லத் தோன்றுமளவுக்கு என்னால் ஜோசியத்தை நம்பக்கூடாது என்று சொல்ல முடியவில்லை என்பதும் என் அனுபவத்தில் கண்டது.

    ராஜீவ்காந்தி மரணம் பற்றி ஜோசியம்னு நினைச்சேன்.. தமிழ்நாட்டுக்குப் போகாதீங்கனு யார் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாமே? அந்த நிலவரம் அப்படி. ஜோசியம்னு சொன்னா விவரங்கள் சொல்லவேண்டாமோ? இருந்தாலும் ஆர்வத்தைக் கிளறிட்டீங்க, மேட்டரை தேடிப்படிச்சுப் பார்க்கிறேன், நன்றி.

    மரண ஜோசியம் பத்தி எதுக்குக் கேட்டேன்னா.. பொதுவாவே மரணஜோசியம் யாரும் அதிகமா சொல்லமாட்டாங்க. அதிலயும் ஒரு பிரதமர் கிட்டே அப்படி சொல்றதுன்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதான் யாருக்கு அந்தத் துணிச்சல் வந்ததுனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

    எனக்குக் கிழவி சொன்ன இரண்டாவது குறி மரணஜோசியம் தான். 'இங்கே போகாதே வாகனத்தால் ஆபத்து உடம்புல இந்தக் கோளாறு வரும்' என்றெல்லாம் சொல்லவில்லை கிழவி. நச்சுனு இன்ன வயசுல இன்ன கிழமையில இப்படியாகும்னு சொன்னப்ப சாதாரணமாத்தான் எடுத்துக்கிட்டேன். அப்புறம் மறந்தும் போச்சு - முதல் குறி பலிக்குற வரைக்கும். சாகும் நாள்/முறை தெரிஞ்சா மனுசங்க என்ன செய்வாங்கனு யோசிக்க ஆரம்பிச்சேன். (இத வச்சு அந்தம்னு பூத்தூரிகைல ஒரு கதை எழுதினதுக்கு மேட்டராச்சுனு வைங்க)

    ReplyDelete
  43. என்னைப் பொறுத்தவரை ரேகை ஜோசியம் பலித்திருக்கிறது. என்ன், சொன்னது ஒரு இருபதுவயது இளைஞன்.
    என் வயது 7.நாற்பது வயது வரைசிரமதசை.
    அதுக்கு அப்புறம் இவள் யாரையும் லட்சியம் செய்யமாட்டாள். என்று வேறு சொல்லிவிட்டார்.என் நான்கு மாமாக்களுக்கு மஹா ஜாலி.
    எங்களைக் கண்டுக்கோம்மான்னு கேலி.
    நான் மாறினேனா தெரியவில்லை:(
    எனக்கு மனிதர்களுடன் நல்ல தொடர்போடு இருக்கத்தான் ஆசை.
    நான்கு குழந்தைகள் உண்டு என்றும் சொல்லி இருந்தார்.ஹ்ம்ம்.!!அந்தக் குழந்தை வரவில்லை. இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.

    ReplyDelete

  44. சமீபத்தில் கேட்டது " நீ போறயே தகடு மோதிரம் யந்திரம் தந்திரம் பரிகாரம் ஜாதகம் ஜோசியம்னு! அந்த ஜோசியக்காரர் ஏன் இதெல்லாம் தான் செஞ்சு பயன் பெறவில்லைனு ஒருதடவையாவது யோசிச்சிருப்பையா? நாள் கோளை மாத்த "அவனே" வந்தாத்தான் உண்டு. அதோட நீயும் உன் பாங்க்ல புண்ணியம் சேமிச்சு வச்சிருந்தா உண்டு . " ன்னு அவர் ஹிந்தில சொன்ன விதத்தை .கேட்க்கும் போது found it amusing .
    ஜாதகம் க்ரஹ நிலைமை எல்லாம் முன்னோர் கணித்தது நம் பதவி பூர்வ புண்யம் கணக்கில் வாஸ்தவம் தான் . பரிகாரம் செய்யினு ஏமாற்றுபவர்கள் வலையில் விழும்போதுதான் கஷ்ட்டம். Ah well ! அதுவுமே என்ன எழுதின என்ன கணக்கோ :)
    .

    ReplyDelete
  45. அப்பாதுரை, ஐயர், ஐயங்கார் என்பது தனித்தனி ஜாதியே இல்லை. அவரவர் வழிபடும் முறையே அது. மனித மனத்தின் துவேஷங்கள் கால, நேரம் போன்றவற்றால் இவை எல்லாம் மாறி விட்டன. ஒரே வீட்டில் அப்பா வைணவராகவும், பிள்ளை சிவனை வழிபடுபவனாகவும் இருந்தது உண்டு. :(

    ReplyDelete
  46. ஆமாம், அப்பாதுரை, தமிழ்நாட்டுக்குப் போகாதேனு யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம் தான். ஆனாலும் இங்கே இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பது அவரிடம் சொல்லப் பட்டது.

    //மரண ஜோசியம் பத்தி எதுக்குக் கேட்டேன்னா.. பொதுவாவே மரணஜோசியம் யாரும் அதிகமா சொல்லமாட்டாங்க. அதிலயும் ஒரு பிரதமர் கிட்டே அப்படி சொல்றதுன்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதான் யாருக்கு அந்தத் துணிச்சல் வந்ததுனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.//

    யாரும் சொல்ல மாட்டாங்க, ஆனால் இந்தியா ராஜிவ் காந்திதான் பிரதமர் ஆகப் போகிறார் என அப்போது மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தானே தமிழ்நாட்டுக்கே வந்தார்! அவர் பிரதமராக மீண்டும் ஆகவேண்டும் என நம்பியவர்களால் சொல்லப் பட்டிருக்கலாம். இது குறித்து மேலும் படிக்க பழைய துக்ளக் இதழ்களைக் கண்டு பிடியுங்க! :))))))

    ReplyDelete
  47. ராஜிவ் காந்தி இறந்தப்போ பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். :))))

    ReplyDelete
  48. வாங்க வல்லி, ஜோசியப் பலன்கள் சொல்பவர் குறித்து என் மாமனார் சொல்வது

    "பால ஜோசியம்
    வ்ருத்த வைத்தியம்" என்று சொல்வார்.

    ReplyDelete
  49. வாங்க ஜெயஶ்ரீ, பரிகாரம் அது இதுனு சொல்லிப் பணம் பிடுங்கறவங்க உண்மையான ஜோசியர்கள் அல்ல.

    ReplyDelete