எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 13, 2013

தேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு! புத்தாண்டு வாழ்த்துகள்.


தமிழ் வருஷப்பிறப்பு சமையலைப் பத்தி மின் தமிழில் சுபாவும், பதிவர் சுப்பு சாரும் கேட்டிருந்தாங்க.  என்னத்தைச் சொல்றது?  என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை.  எந்தச் சமையலும் ஓகே.  சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும்.  பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும்.  பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க.  முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய்.  எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு.  மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை.  பிட்லை செய்தால்   மோர்க்குழம்பு முக்கியமா வேணும்.  அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம்.  வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க.  அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும்.  பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா.  செய்முறை தனியாத் தரேன்.

இதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா!  அன்னிக்கும் போளி இருக்கும்.  யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வெறும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.



து.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் .  மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும்.  ஊறினால் எண்ணெய் குடிக்கும்னு பயமே வேண்டாம்.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  நான் உறுதிமொழி கொடுக்கிறேன்.  அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது.  பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது.  அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும்.  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம்.  வடை மொறு மொறுவென வரும்.  எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க.  அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.

http://tinyurl.com/c6src6k  இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க.  நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன். 







இதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு.  அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான்.  தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும்.  எங்க மதுரைப் பக்கம்  நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை.  மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க.  காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும்.  முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க.  இங்கே அநேகமாய் சாம்பார் தான்.  அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க.  வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட்லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு.  ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும்.  தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க.  வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது.  அதைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.

சரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா?

பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

இந்தப் பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன்.  இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))

இதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள்.  பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும்.  புதுத்துணி உடுத்தலும் உண்டு.  கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.


போளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான்.  நம்ம வீட்டிலே நான் செய்தவையே.  அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))

32 comments:

  1. ப்லாக் படிக்கும்பொழுதே போளி அசலா வரமாதிரி டெக்னாலஜி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்!

    ReplyDelete
  2. செய்முறை குறிப்புக்கு நன்றி... ஜமாய்ங்கோ...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புகுந்தவீடு, பிறந்தவீடு, புத்தாண்டுசமையல்கள், புத்தாண்டு கொண்டாட்ங்கள் எல்லாம் அருமை.
    ஆமை வடை ஆமை ஓடு மாதிரி இருக்கும் ஊறவைத்து தான் சாப்பிடவேண்டும் என்றதை படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது .
    உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    வாழக் வளமுடன்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு ரசித்து வாசித்தேன்..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அப்பாதுரை, அதுக்கென்ன போட்டாப் போச்சு! :))))

    ReplyDelete
  6. வாங்க டிடி, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாங்க கோமதி அரசு, கல்யாணம் ஆகி வந்த முதல் வருஷம் புத்தாண்டு அன்னிக்கு எங்க மாமியார் பண்ணிய ஆமைவடையைச் சாப்பிட்ட அனுபவம் எழுத வைச்சது! :)) அதை வைத்துக் கொண்டு முழிச்சிருக்கேன். :)))) இப்போல்லாம் அவங்க நம்ம பழக்கத்துக்கு மாறிட்டாங்க. :)))))

    ReplyDelete
  8. வாங்க ஆசியா ஒமர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ஆஹா.... அப்பாதுரையின் கமெண்ட் உண்மையாக வழி உண்டா?

    எங்களுக்கு இந்த வருஷம் எந்தப் பண்டிகையும் கிடையாது. ஸோ, நோ போளி, நோ பாயசம், நோ வடை!

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  11. விஜய வருடத்தில் எல்லா நன்மைகளும் விஜயம் செய்து சந்தோஷங்கள் பெருக 'எங்கள்' வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. க்கும்....பாயசத்துல சர்க்கரை அதிகம். எனக்கு வாணாம்.

    ReplyDelete
  13. நானும் திரு அப்பாதுரை கட்சி தான்!
    இனிய விஜய வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாட் இஸ் பாசிப்பருப்பு? நாட் பயத்தம்பருப்பு? (தமிழ் டிவி பார்த்த பலன்)

    ReplyDelete
  15. வாங்க ஸ்ரீராம், பண்டிகை இல்லைனாலும் கொஞ்சம் போல் பாயசம் மட்டும் வைக்கலாம். நாங்க ஒரு வருஷம் விட்டால் 3 வருஷம் தொடரும்னு கொஞ்சம் கொஞ்சம் செய்வோம்.

    ReplyDelete
  16. வாங்க எல்கே, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அப்பாதுரை ஃப்ரொஃபைல் படம் மாறியாச்சு போல! :))) இப்போத் தான் கவனிச்சேன்.

    ReplyDelete
  19. வா.தி. வாங்க, இது வெல்லம் போட்டுச் செய்த பாயசம், ஒரு ஸ்பூன் டேஸ்ட் பாருங்க, ஒண்ணும் பண்ணாது. :)))

    ReplyDelete
  20. வாங்க ரஞ்சனி, போளியை நீங்களும் எடுத்துக்கலாம். :))))

    ReplyDelete
  21. அப்பாதுரை, தஞ்சை ஜில்லாவில் பயத்தம்பருப்பு, தென்மாவட்டங்களில் பாசிப்பருப்பு. இப்போ ஓகேயா? :))))) இரண்டும் ஒண்ணே தான்.

    ReplyDelete
  22. ஆமவடை, முதல் போளி இரண்டும் படத்தில் பார்க்கவே மிக அருமையாக உள்ளன. நாக்கில் நீர் சுரக்கிறது.

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. நல்ல குறிப்புகள்.

    தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    /போளி அசலா வரமாதிரி/

    இது நடந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான்:)!

    ReplyDelete
  24. தேங்க்ஸ். google செஞ்சு படத்தைப் பார்த்தேன். ஹிஹி.. இப்போ தான் எங்க அப்பா சைடுல இதை பாசிப்பருப்புன்னது ஞாபகம் வருது.

    ReplyDelete
  25. பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் வடை கூடவா நோ நோ?

    ReplyDelete
  26. பண்டிகை இல்லின்னா என்ன ஸ்ரீராம்.. அதுக்காக பாயசம் வடை கூடவா நோ நோ?

    ReplyDelete
  27. ஆம், செய்வதில்லை. என்னமோ அப்படியே பழகி விட்டது!

    ReplyDelete
  28. வடை போளி எடுத்துக்கொண்டோம்.

    அப்பாத்துரையின் கமெண்ட் ரசித்தேன்.:)

    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. வாங்க வை.கோ. சார், வரவுக்கும் போளி, வடையை ரசித்து ருசித்தமைக்கும் நன்றி. :)))))

    ReplyDelete
  30. வாங்க ரா.ல. போளியோட வாசமும், சுவையும் உங்களையும் இழுத்திருக்கு! :))) போளி அசலா வராப்போல் டெக்னாலஜி இன்னும் கொஞ்ச நாட்களில் வந்தாலும் வரும். :))))

    ReplyDelete
  31. ஸ்ரீராம், சுவாமிக்கு எப்படியும் நிவேதனம் செய்யணுமே? அதுக்காகக் கொஞ்சம் போல் பாயசம் வைக்கலாம். வடை, போளியை மாலை டிஃபனுக்குப் பண்ணிக்கலாம். எல்லாத்துக்கும் மனம் தான் காரணம். :)))))

    ReplyDelete
  32. வாங்க மாதேவி, போளி, வடை ருசி நல்லா இருக்கா? பிடிச்சிருக்கா? உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete