எங்க வீட்டு ராமர் பிறந்த நாள் அலங்காரத்தில் காட்சி
கீழ்த்தட்டில் உள்ள விக்ரங்கள், ரெண்டையும் சேர்த்து எப்படியானும் எடுக்கணும். நிற்க இடம் பத்தலை. கொஞ்சம் பின்னாடி போகணும். அதான் முடியலை. கஷ்டம்! பார்ப்போம்.
சாதம், பருப்பு, வடை, பாயசம், சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம், பானகம், நீர்மோர்
எங்க அம்மா வீட்டில் வடைப்பருப்புனு பாசிப்பருப்பை ஊற வைத்து வடிகட்டி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கடுகு, மிளகாய் தாளித்து, மாங்காய், வெள்ளரிக்காய் நறுக்கிப் போடுவாங்க. இங்கே சுண்டலாகச் செய்யணும். :))))
வேணுங்கறவங்க எடுத்துக்குங்க. கொஞ்சமாத் தான் பண்ணி இருக்கேன். தீர்ந்துடும்.
ஆஹா ஆஹா..
ReplyDeleteதன்யனானேன். நமோ மாதா நமோ நமஹ (மயாபஜார் ரங்கா ராவ் ஸ்டைலில் வாசித்துக்கொள்ளவும்!!!!)
அருமையான படங்கள். வர்ணமயமான பதார்த்தங்கள்.
ஸ்ரீராமநவமி பிரசாதம் எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteஸ்ரீராம், ஜெயராம் ஜெய ஜெய ராம்.
க்ருஷ்ணருக்கு சீடைங்கற மாதிரி ராமநவமிக்குனு தனியா ஏதாவது உண்டா?
ReplyDeleteஐ... எனக்கு தான் முதலில்...
ReplyDeleteநன்றி அம்மா...
கொஞ்சம் தான் எடுத்துக்கிட்டேன்... அதற்குள்ளே தீர்ந்து விட்டதா...? யாராவது வந்திருப்பாங்களோ...! தெரியலேயே... ...ம்...
ReplyDeleteஸ்ரீராம நவமி வாழ்த்துகள்...
ReplyDeleteபாசிப்பருப்பை எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்?
ReplyDeleteவல்லிசிம்ஹன் பதிவில் போட்டோ பார்த்தேன். செய்து பார்க்கத் தோணுது.
காத்தாலையே சாப்ட்டாச்சு!
ReplyDeleteபடமெல்லாம் முன்னேயே பாத்தா மாதிரி இருக்கே!
ஸ்ரீ ராமனின் உள்ளம் குளிர்ந்திருக்கும் கீதா!
ReplyDeleteபானகம், நீர் மோர், வடை பருப்பு...
பாவம் இவரை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறார்கள்?
ஸ்ரீராமனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
பிரசாதத்திற்கு நான் தான் முதலா?
eduththuNdutten.Thanks :)
ReplyDeleteபிரசாதம் எடுத்துக் கொண்டேன்.....
ReplyDeleteபடங்களை வெர்டிகலா எடுத்திருந்தால் முழுதும் வந்திருக்குமென நினைக்கிறேன்....
ஜெய் ஸ்ரீராம்.
ReplyDeleteஅட்சயபாத்திரம் போல எல்லோரும் எடுத்துக் கொண்டபின்னும் எனக்கு இன்னும் மிச்சம் இருக்கே.... நன்றி!
வாங்க கடைசிபெஞ்ச், கடைசி பெஞ்சானாலும் முதல்லே வந்துட்டீங்க. இந்த வலைப்பக்கத்துக்கும் முதல் வருகை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteநன்றி கோமதி அரசு. ஸ்ரீராம், ஜெய ராம் ஜெய ஜெயராம்.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, கிருஷ்ணர் மழைக்காலத்தில் பிறந்ததால் அதுக்கேத்தாப்போல் பக்ஷணங்கள். ஸ்ரீராமர் வெயில் காலத்திலே பிறந்திருக்காரே, அதான் தாகம் தணிக்கும் சுண்டல், பானகம், நீர்மோர், வெல்லப் பாயசம். கிருஷ்ணனுக்குப் பால் பாயசம் பண்ணலாம். :)))))
ReplyDeleteஹிஹிஹி டிடி, நீங்க நான்காவது நபராக வந்திருக்கீங்க. :)))
ReplyDeleteகொஞ்சமாத் தான் எடுத்துட்டு இருக்கீங்க, இன்னிக்கு வந்த ஸ்ரீராமுக்குக் கூடக் கிடைச்சிருக்கே! :))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅப்பாதுரை, பாசிப்பருப்பை ஒருமணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கணும். அப்புறமா நல்லாக் கழுவி தண்ணீரைச் சுத்தமா வடிகட்டணும். :))))
ReplyDeleteவாங்க வா.தி. வருகைக்கு நன்னி. படங்கள் ஏற்கெனவே ஒவ்வொரு வருஷமும் போடறேனே! :P:P:P:P
ReplyDeleteஹிஹிஹிஹிஹிஹி, உங்களுக்கு வயசாச்சு இல்லை, அதான் மறந்து போச்சு. இந்த வீட்டுக்கு வந்து இப்போத் தான் முதல் ஸ்ரீராமநவமி கொண்டாடி இருக்கோம். :)))) நீங்க பார்த்தது எல்லாம் அம்பத்தூர் வீட்டிலேயும், அப்புறமாப் போன வருஷம் குடி இருந்த வீட்டிலேயும் எடுத்தது. :)))))
வாங்க ரஞ்சனி, ராவண வதம் முடிஞ்சு அயோத்தி திரும்பும் சமயம், அங்கே நந்திகிராமத்தில் பரதன் தீக்குளிக்கத் தயாராக் காத்துட்டு இருக்கிறச்சே, இவர் பாட்டுக்கு அநுமனை அனுப்பி, நான் வந்துண்டு இருக்கேன்னு சொல்லு, போனு அனுப்பி வைச்சுட்டு, பரத்வாஜர் ஆசிரமத்திலே விருந்துச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்துட்டார். பின்னே சாப்பாட்டு ராமன்னு சொல்லாம வேறே என்ன சொல்றதாம்? :)))))))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாள் கழிச்சு வருகைக்கும், பிரசாதம் சாப்பிட்டதுக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க வெங்கட், ஆமாம், தோணலை, வெர்டிகலா எடுத்திருக்கணும், ஒண்ணு எடுத்துப் போட்டுடலாம். :))))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், தாமதமான வருகை, சுண்டல் கெட்டுப் போகாமல் இருந்ததா? :))))வெங்கட்டுக்கும், உங்களுக்கும், ஜெயஸ்ரீக்கும் சுண்டல் கிடைச்சிருக்காது. :)))) வடையைத் தயிர் வடையாப் போட்டிருக்கேன். :)))))
ReplyDeleteஆகா! கொஞ்சம்தான் கிடைத்தது. :)
ReplyDeleteதாமதமாய் வந்தீங்க இல்லையா மாதேவி, அதான் கொஞ்சமாக் கிடைச்சிருக்கு. :)))
ReplyDelete