எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 04, 2013

இன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க

கண்ணாடி இன்னும் வரலை;  அநேகமா நாளைக்குக் கிடைக்கலாம்.  அது வரைக்கும் எழுத முடியலை.  ஆகவே (ஃபில்ம்) காட்டலாமேனு ஒரு எண்ணம்.   என் கணவரோட பிறந்த வீடு பார்த்தீங்க இல்லையா?  அந்த வீட்டுக் கூடத்தில் இருக்கும் ஸ்வாமி அலமாரி.  எடிட் பண்ணிட்டுப் போட்டிருக்கேன்.  ஹிஹி, ஆளுங்களை மட்டும் தான் நீக்கினேன்.  மத்தப்படி வேறே லைட்டிங்கில் எல்லாம் கை வைக்கலை.



இப்போ இருக்கிறவங்களும் சாமி அலமாரியாத் தான் பயன்படுத்தறாங்க. :)))

அடுத்தது 2011 ஜூனில் நடந்த எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்தில் கலசத்தில் நீர் ஊற்றும் பட்டாசாரியார்.  இந்தப் படம் நான் எடுக்கலை.  யார் எடுத்ததுனு புரிஞ்சிருக்கும். :)))) மேலே ஏறுவது என்றால் சாரத்தில் ஏறணும்.  என்னோட காலை வைச்சுண்டு எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் ஏறலை.  ரங்க்ஸ்தான் எடுத்தார்.

ஹிஹிஹி, படம் மாறிப் போயிருக்கு. கும்பத்திற்கு அபிஷேஹம் பண்ணும் படத்துக்குப் பதிலா இது வந்திருக்கு. :)))) விடுங்க. அப்புறமாப் பார்த்துக்கலாம்.  இப்போப் போறேன்.  மின்சாரம் போகப் போகுது. :)))))

14 comments:

  1. ஒரு தலை வாங்கிய அபூர்வமில்லா சிந்தா (பெண்)மணி

    ReplyDelete
  2. நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

    ReplyDelete
  3. தப்பு தப்பு. தலையை வாங்கினது மணியின் தலைவர் தம்பி வாசுதேவன்..

    சாமி அலமாரி எங்க சீனிம்மா வீட்டிலயும் இப்படித்தான் இருக்கும். நன்றிப்பா.

    ReplyDelete
  4. ஃபில்ம் - நல்லா இருக்கு...

    ReplyDelete
  5. ரிப்பேரான மின் நிலையங்கள் சரி செய்யப் பட்டு விட்டன, இப்போ வெளியூர்களுக்கு மின் வெட்டு நேரம் குறைக்கப் பட்டுள்ளது என்றெல்லாம் செய்தியில் பார்த்தேனே...பொய்யா?!

    ReplyDelete
  6. ஹாஹா, வாங்க வா.தி. அந்தப் படம் எடுத்தது நானில்லை. :)))) அவர் எடுத்த எல்லாப் படத்திலேயும் பட்டாசாரியாருக்கு நோ தலை! :))))

    ReplyDelete
  7. ஜாப்ஸ், நன்றி. உங்கள் ப்ரொஃபைலை முதல்லே கொடுங்க. ரகசியமா இல்ல இருக்கு! :)))))

    ReplyDelete
  8. வாங்க வல்லி, தலைவர் எடுத்தபடம் தான் தலையே இல்லாமல் வந்திருக்கு. :))))

    ReplyDelete
  9. வாங்க டிடி, ஃபில்மை ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. நீங்க வேறே ஸ்ரீராம், ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க. செய்திகளிலே வரதுக்கும் உண்மைக்கும் எப்போவுமே இமயமலைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள வேறுபாடு உண்டே! :)))))

    ReplyDelete
  11. இரண்டு பதிவுலயும் அருமையான photos. கிராமங்களில் இது போன்ற வீடுகள் இன்னும் இருப்பது ஆச்சரியம்.

    ஆமாம்.. நான் கூட கேள்விப்பட்டனே.. தமிழ்நாட்டுல மின்சாரமும் கொடுத்து அதை உபயோகிக்க பணமும் தராங்களாமே? எல்லாம் பொய்யா?

    ReplyDelete
  12. படம் பார்த்துவிட்டோம். :))

    விறாந்தையில் சுவாமி அலுமாரி நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  13. அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    //ஆமாம்.. நான் கூட கேள்விப்பட்டனே.. தமிழ்நாட்டுல மின்சாரமும் கொடுத்து அதை உபயோகிக்க பணமும் தராங்களாமே? எல்லாம் பொய்யா?//

    நல்லா இருக்கு போங்க! :)))))

    ReplyDelete
  14. வாங்க மாதேவி, அது வெராந்தா இல்லை. கூடம்னு சொல்லுவோம், இப்போல்லாம் ஹால்னு சொல்றாங்களே அது மாதிரி ஆனால் ஒரு கல்யாணமே நடத்தலாம், நூறு பேருக்குக் குறையாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு பெரிசா இருக்கும். அந்தக் கூடத்தின் நடுப்பாகம் இது. கூடத்தின் நட்ட நடுவே ஸ்வாமி அலமாரி வைப்பது தஞ்சை மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் வழக்கம். பழைய வீடுகளில் பார்க்கலாம். :)))

    இதை வைச்சுத்தான் அம்பத்தூரில் எங்க வீட்டிலும் கூடத்திலேயே நடுவாக ஸ்வாமி அலமாரி வைத்திருந்தோம். இப்போ இருக்கிறவங்களும் அந்த அலமாரியில் ஸ்வாமியைத் தான் வைச்சிருக்காங்க. :)))

    ReplyDelete