பெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது. அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும். இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள். பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள். பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு.
பிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர். இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது. இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு. அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர். இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பார். அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார். நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும். தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல். உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார். அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம். அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது. இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.
இதை என்னவென்று சொல்ல முடியும்? நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்; அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ? நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள். இதுவும் பார்த்தேன்; கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வேண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு. பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.
"இன்னாருக்கு இன்னார் என்று
எழுதி வைத்தான் இறைவன் அன்று"
என்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா?
இதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன. பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர். ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை. அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா?
பல அடாவடித் தனங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...
ReplyDeleteஇரு மனங்களை இணைத்து வைப்பதில்லை... (இணைவதும் இல்லை... அது வேறு கதை...!) பணங்களை, வசதிகளை, இன்னும் பலவற்றை இணைத்து வைப்பதால் அதிகமாகிக் கொண்டே போகிறது விவாகரத்து வழக்குகள்...
மும்பை பெண்ணின் பிடிப்புக்கும் துணிச்சலுக்கும் ஒரு பெரிய சபாஷ்.
ReplyDeleteநிச்சயதார்த்த விழா நிறைய மாறிவிட்டது. என் நண்பர் தம்பி மகன் நி விழாவில் ஷேம்பெயின் வழங்கினார்கள். சாஸ்திரிகள் கூடப் பருகினார்! தமிழ்நாடு தானா?!
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று அறிய் அவா. அப்பாதுரையின் தம்பி மகன் நி. விழாவை நழுவ விட்டேனே. சமீபத்தில் எனக்க்த் தெரிந்த உறவு குடும்பத்தில் கல்யாணம், அமெரிக்காவில். இத்ன வீட்டு சம்பந்தி மாமாவும் . அந்த வ்ழிட்டு சம்பந்தி மாமியும், விகல்பமில்லாமல் டான்ஸ் ஆடினர்.
ReplyDeleteதிருமணம் வரை சென்று நின்ற திருமணங்களை நானும் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteதிருமணம் என்பது பெரிய விஷயம்.
ReplyDeleteஆயிரங்காலத்துப் பயிரிடல். அப்படி இருக்கையில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்வீட்டார்-பிள்ளை வீட்டார் இருபக்க இணக்கமும், இளகலும் இதற்கு மிகவும் அவசியம். நிச்சயதார்த்தம் என்று ஆனபிறகு அப்படி நிச்சயமானது நிறைவேறுவதற்கு இருபக்க பொறுமையும், நிதானமும், கண்ணியமும், ஒத்துழைப்பும் எவ்வளவு முக்கியம் என்பது சொல்லித் தெரிவதல்ல..
நீங்கள் எழுதி வருவதில் கூட பெண் வீட்டாரின் தீர்மானங்களுக்குத் தான் பிள்ளை வீட்டார் இணங்குவது போல
அப்படி இணங்க வேண்டும் என்பது போல ஒரு தோற்றம் தெரிவதாக எனக்குப்படுகிறது. அது என் பார்வையின் பிழையாகக் கூட இருக்கலாம். அப்படி இருக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்பதற்காகச் சொன்னேன். யார் பெரியவர் என்று காட்டிக் கொள்வதற்கான நேரமில்லை இது. பெண் வீட்டாரின்-பிள்ளை வீட்டாரின் விருப்பம் இது என்று எந்தத் தனிப்பட்ட விருப்ப நிறைவேற்றலுக்கான தருணமும் இல்லை. சிறு விஷயங்களையெல்லாம் முக்கியப் படுத்தி முக்கிய விஷயத்தைக் கோட்டை விட்டு விடக்கூடாது.
இலட்சியம் முக்கியம்.
வாங்க டிடி, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. சுடும் உண்மையும் கூட. :(
ReplyDeleteஅப்பாதுரை, உங்க சபாஷ் எனக்கு வியப்பை அளித்தது. அந்தப்பெண்ணை நான் பழி சொன்னதாக ஒரு மடல். ஹிஹிஹி, கீழே ஜீவி சாரின் பார்வை வேறு விதம். :)))))
ReplyDeleteதமிழ்நாட்டில் தான் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறதே அப்பாதுரை! சாஸ்திரிகள் உண்மையான அத்யயனம் பண்ணினவராய் இருக்கமாட்டார். பஞ்சத்துக்கு ஆனவராக இருப்பார். :)))))
வாங்க "இ"சார், அவ்வப்போது பதிவுக்கும் வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று விபரங்கள் சேகரிக்கிறேன். அப்பாதுரையின் நண்பரின் தம்பி மகன் நி.வி. சென்னையில் அல்லவோ நடந்திருக்கணும், நீங்க எப்படிக்கலந்து கொண்டிருக்க முடியும்?:)))))
ReplyDeleteஅமெரிக்காவில் நடக்கும் இந்துத் திருமணங்களின் வரவேற்பு விழாவில் ஷேம்பெயின் போன்ற பானங்கள் பரிமாறப்படுவதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
வாங்க ஸ்ரீராம், நானும் நிறையப்பார்த்திருக்கேன். :)))
ReplyDelete//நீங்கள் எழுதி வருவதில் கூட பெண் வீட்டாரின் தீர்மானங்களுக்குத் தான் பிள்ளை வீட்டார் இணங்குவது போல
ReplyDeleteஅப்படி இணங்க வேண்டும் என்பது போல ஒரு தோற்றம் தெரிவதாக எனக்குப்படுகிறது. //
நான் பொதுவாக நடுநிலையாக இந்தப்பக்கம் சொல்வதையும், அந்தப் பக்கம் சொல்வதையும் பார்த்ததும், கேட்டதும், அறிந்து கொண்டதுமே எழுதி வருகிறேன். அப்படி ஒரு தோற்றம் உங்களுக்குத் தெரியுமானால் அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? :)))) நான் பெண்களுக்கு ஆதரவாக எழுதவில்லை என்று ஒரு சாரார் குற்றம். ஆக மொத்தம் இரு சாராருக்கும் குற்றமாகவே தெரியறதால் நான் யாருக்கும் சார்பாக எழுதவில்லை என்பது என்வரையில் நிச்சயமாய்த் தெரிகிறது. :)))))
ஹிஹிஹிஹி
//ஆக மொத்தம் இரு சாராருக்கும் குற்றமாகவே தெரியறதால் நான் யாருக்கும் சார்பாக எழுதவில்லை என்பது.. //
ReplyDeleteநான் சொன்னது வேறே.
பெண் வீட்டார்- பிள்ளை வீட்டார் இந்த இரு பகுதியினரும் ஒருத்தருக்கொருத் தர் புதுசு. முன்னே பின்னே தெரிந்தவர்கள் இல்லை. ஆகையால் இருபக்கமும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து இந்த திருமணம் என்கிற விஷயத்தை ஒப்பேத்தி விட்டால், பின்னாடி எந்த பேச்சுக்கும் இடமிருக்காது. அது பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நாம் செய்கிற உதவி.
திருமணம் என்பதும் ஒரு நாள் கூத்து இல்லை. ஒரு அதிருப்தியோ, விதண்டாவாதமோ,அவமரியாதையோ தூக்கியெறிதலோ பின்னாடி நடக்கறப்போகிற எதற்கும் காரணமாக அமையலாம். அதற்காகச் சொல்ல வந்தேன். தொடருங்கள்.
//பெண் வீட்டார்- பிள்ளை வீட்டார் இந்த இரு பகுதியினரும் ஒருத்தருக்கொருத் தர் புதுசு. முன்னே பின்னே தெரிந்தவர்கள் இல்லை. ஆகையால் இருபக்கமும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து இந்த திருமணம் என்கிற விஷயத்தை ஒப்பேத்தி விட்டால், பின்னாடி எந்த பேச்சுக்கும் இடமிருக்காது. அது பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நாம் செய்கிற உதவி.//
ReplyDeleteநீங்க சொல்றது சரியே. ஆனாலும் தெரிஞ்சவங்களா இருந்தாலும் நிறையவே அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. இதிலே பெண்ணும், பிள்ளையும் சம்பந்தப்படாமல் இருந்தாலே பெரிய விஷயம். மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா மாதிரி ஆயிடும் அப்புறமா! :((((
பின்னால் மனைவியிடம் இது பற்றிப் பேசிச் சண்டை போடும் கணவனையும் தெரியும். மனைவியும் விட்டுக் கொடுக்காமல் கணவன் வீட்டாரைக் குறை சொல்வதையும் கண்டிருக்கிறேன். ஆக மொத்தம் கல்யாணங்களில் திருப்தி என்பது மனதைப் பொறுத்தே! :)))))
திருமணம் நிச்சயம் முடிந்து மிகவும் தள்ளிப் போட கூடாது திருமணத்தை.
ReplyDeleteஇங்கு ஒரு பையன் திருமணம் நிச்சயம் ஆனவுடன் இடைபட்டக் காலத்தில் பெண்ணுடன் அலைபேசியில் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறான்.
தன்னைவிட பெண் அதிக சம்பளம் வாங்குவது அறிந்து பெண்ணுக்கு தாலி கூறைப்புடவை வாங்கும் சமயத்தில் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
இருவீட்டு பெரியவர்க்ளுக்கும் தர்மசங்கடம்.
’கடவுள் அமைத்து வைத்தமேடை இணைக்கும் கல்யாணமாலை இன்னாருக்கு இன்னாரன எழுதி வைத்தான் தேவன் அன்று’ என்பது உண்மைதான் என்று நம்ப சொல்கிறது மனது.
//தன்னைவிட பெண் அதிக சம்பளம் வாங்குவது அறிந்து பெண்ணுக்கு தாலி கூறைப்புடவை வாங்கும் சமயத்தில் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
ReplyDeleteஇருவீட்டு பெரியவர்களுக்கும் தர்மசங்கடம்.//
கஷ்டம் தான். எங்களுக்குக் குழந்தையிலிருந்து தெரிந்த ஒரு பெண் கணவன் சம்பளம் தன்னுடையதை விடக் குறைந்தது ஐந்தாயிரமாவது கூட இருக்கணும்னு கன்டிஷன். அதோடு நாத்தனார் இருக்கும் இடம் என்றால் வேண்டாம். வேலைக்குப் போக அநுமதிக்கும் மாமனார், மாமியார் இருந்தால் மட்டும் போதாது; அவங்க தான் குழந்தை பிறந்தால் பார்த்துக்கணும்.
இப்படி ஏக கண்டிஷன்கள் போட்டாள்.
மற்ற இனத்தில் எப்படியோ, எனக்குத் தெரிந்து பிராமணர்களில் பெண்களை விடப் பெண்ணின் பெற்றோர்கள் போடும் நிபந்தனைகள் மயக்கமே வருகிறது. :)))))
ReplyDeleteகல்யாண மாலைகள் சுவாரஸ்யம்.
ReplyDelete