இந்திரத்யும்னன் என்னும் பாண்டிய மன்னன் ஒருவன் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கையில் துர்வாசமுனிவர் அவனைக் காண வருகிறார். முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிடுகிறான் பாண்டியன். பாண்டியனுக்கு உள்ளூர தன் பக்தியின் காரணத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தைப் புரிந்து கொண்ட துர்வாசர் அவன் மதம் கொண்ட யானையாகப் பிறப்பான். பொய்கையில் முதலை பிடித்து ஆட்டி வைக்கும், என சாபம் கொடுக்க, மன்னன் பதறுகிறான். அப்போது நீ பலகாலம் மஹாவிஷ்ணுவை வேண்டித் துதிக்க உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் எனச் சொல்கிறார் துர்வாசர். அதே போல் கந்தர்வன் ஒருவன் குளக்கரைக்கு வரும் முனிவர்களின் கால்களைப் பிடித்து விளையாட தேவலர் என்னும் முனிவர் கோபத்துடன் முதலையாகப் பிறக்கும்படி கந்தர்வனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். கந்தர்வனும் தனக்கு எப்போது விமோசனம் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தால் விமோசனம் என்று சொல்கிறார். அந்தப்பொய்கையிலேயே முதலையாகப் பிறந்து தனக்கு விமோசனத்துக்குக் காத்திருந்தான் கந்தர்வன்.
.
இங்கே பாண்டியன் யானையாகப் பிறந்து யானைக் கூட்டத்துக்கே தலைவனாக ஆகிறான். அவன் தலைமையில் யானைகள் அனைத்தும் பொய்கையில் வந்து நீரருந்தி, மலர்கள் பறித்து எம்பிரானுக்குச் சூட்டி என அனைத்தும் செய்து வருவார்கள். இந்நிலையில் ஒரு நாள் பொய்கையில் பெரியதாய் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருக்க, அதன் மணமும், சுகந்தமும் யானைகளின் கவனத்தைக் கவர்ந்தது. பூவோ பொய்கையில் நட்ட நடுவில் மலர்ந்திருந்தது. அதை எப்படிப் பறிப்பது? தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது. பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது. ஆனால் கரையேற முடியவில்லை. என்ன இது? என்ன ஆயிற்று? அதன் கால்களை முதலை ஒன்று கவ்வித் தன் பற்களால் அழுத்திப் பிடித்த வண்ணம் இருப்பது அப்போது தான் தெரிந்தது. கால்களை உதறி முதலையிடமிருந்து விடுவித்துக்கொள்ள கஜேந்திரன் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கரையில் நின்ற மற்ற யானைகள் உதவிக்கு வர அப்போதும் முதலையின் பிடி விடவில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இரண்டுக்கும் நடுவே இந்தப் போர் நடைபெற்றது.
முதலையோ நீருக்குள் பலம் வாய்ந்தது. யானையோ நிலத்தில் சக்தி வாய்ந்தது. யானை நிலத்தில் இருக்க, முதலை நீருக்குள் இருக்கச் சுற்றி நின்ற யானைக் கூட்டம் தவிக்க, கஜேந்திரனுக்குத் தன் முற்பிறவியும், தான் பெருமாள் பக்தன் என்பதும் நினைவுக்கு வர, தன் நீண்ட துதிக்கையைத் தூக்கிக் கொண்டு, “ஆதி மூலமே, அபயம்!” என ஓலமிட்டது.
கஜேந்திரன் கூப்பிட வேண்டும் என்பதற்காகவே காத்திருந்த பெருமாள் அவசரம் அவசரமாய்க் கிளம்பினாராம். தன் பக்தன் இத்தனை நாட்கள் கஷ்டப் பட வைத்து விட்டோம். அவனுக்குத் தன்னுணர்வு வர வேண்டிக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இனியும் நேரம் கடத்தக் கூடாது எனக் கிளம்பினார். பெருமாளின் நோக்கம் அறிந்த கருடன் தானாகவே போய் பகவான் முன்னர் நின்றானாம். பெருமாளும் கருடன் மேல் ஏறிக்கொண்டு கஜேந்திரனை வந்து காப்பாற்றினார். முதலையாகிய கந்தர்வன் மேல் தன் சுதர்சனச் சக்கரத்தை எறிந்து அவனுக்கும் மோக்ஷம் கொடுத்து, கஜேந்திரனுக்கும் ஞானம் அளிக்கிறார்.
இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சித்ராபெளர்ணமி அன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. இவ்வருடமும் அவ்வாறே சித்ராபெளர்ணமி அன்று காலையே நம்பெருமாள் கோயிலை விட்டு வெளிக்கிளம்பி தெற்கு கோபுரம் வழியாக அம்மா மண்டபம் சாலையை அடைந்து அங்கே ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கி மரியாதைகளையும், வரிசைகளையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் மதியம் பனிரண்டு மணியளவில் அம்மா மண்டபத்தை அடைகிறார். அங்கே நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். மாலை வரை நம்பெருமாள் அங்கே இருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த வண்ணம் இருந்துவிட்டுப் பின்னர் மாலை சந்திரோதயம் ஆகும் சமயம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனின் பாகத்தை ஏற்றுக் காவிரியில் போய் நின்று பெருமாளைப் பிளிறி அழைக்கப்பெருமாளும் சென்று கஜேந்திரனைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுகிறார். கூட்டம் நெரிசல் ஆகையாலும், அன்றைய தினம் விருந்தினர் வருகையாலும் காவிரியாற்றில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்ய முடியாமைக்கு மன்னிக்கவும்.
கீழுள்ள இந்தப் படம் அம்மாமண்டபத்திலுள்ள காவிரி அம்மன் சந்நிதி.
.
பி.கு: இது போன வருஷமே எழுதி வைச்ச பதிவும், படங்களும். இந்த வருஷம் கஜேந்திர மோக்ஷத்தை நேரிலே பார்த்துட்டு எழுத நினைச்சேன். ஆனால் கூட்டம் நெரிசல் காரணமாகவும், பார்க்க வந்திருந்த ஜனங்களைப் பார்க்க விடாமல் தள்ளியதாலும் ஒண்ணும் முடியலை. அதோடு வெளிச்சம் வேறே பத்தலை. இன்றைய தினசரிப் பத்திரிகையிலும் ஸ்வாமியைப் பார்க்க ஆஸ்தானத்திலோ, அல்லது காவிரிக்கரையிலோ போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப் பட்டதைக் குறிப்பிட்டிருந்தனர். ரொம்பவே மனதை வருந்த வைத்த நிகழ்வாக ஆகிவிட்டது. பலரும் பார்க்க முடியாமல் தவித்தனர்.
இந்த வருஷம் படங்கள் எடுத்தேன். ஆனால் வெளிச்சம் இல்லாமையால் தெளிவாக இல்லை. சரி பண்ண முடியுமானு பார்க்கணும். இன்னும் அப்லோடே பண்ணலை! :(
அறிந்த நிகழ்ச்சி தான்... நன்றி...
ReplyDeleteஆனால் படங்கள் எதுவும் வரவில்லையே... கவனிக்கவும்...
(My Browser : Chrome)
நல்ல வர்ணனை. படங்கள்தான் எனக்கு ஓபன் ஆகவில்லை. என் கணினிக் கோளாறு! :)))
ReplyDeleteபடங்களைப் பெரிதாக்கி இருக்கேன். என் வரை நல்லாவே தெரியுது. உங்களுக்கெல்லாம் தெரியுதானு சொல்லுங்க டிடி&ஸ்ரீராம்.
ReplyDeleteஏற்கெனவே பார்த்திருப்பீங்க இந்தப் படங்களை. :)))
ReplyDeleteஇப்போது படம் வருகிறது அம்மா... நன்றி...
ReplyDeleteநன்றாகத் தெரிகிறது கீதா.
ReplyDeleteஎப்ப எழுதி இருந்ததாக இருந்தால் என்ன மா. நிகழ்ச்சி ஒன்றுதானே. பக்தன் அழைக்கப் பக்வான் வந்தே ஆக வேண்டும்.
நடுவில் இருப்பவர்கள் தீர்த்தம் கொடுக்கவில்லை.
என்று படித்தேன். விட்டுத்தள்ளுங்கள்
அவன் அரங்கன். அவன் பூமியில் நீங்கள் வசிக்கிறீர்கள்.அவனறியாமல் ஒன்றும் நடக்காது.நமக்கெல்லாம் சாமி வரம் கொடுப்பார்.
படங்கள் இப்போது(தான்) தெரிகின்றன. :))
ReplyDeleteலோக சாரங்க முனியையும், திருப்பாணாழ்வாரையும் ஸ்மரணம் செய்வோம்.
ReplyDeleteசுவாரசியமான பதிவு.
ReplyDeleteடிடி நன்றிப்பா.
ReplyDeleteவல்லி நன்றிம்மா.
"இ"சார், திருப்பாணாழ்வாரைத் தெரியும். லோக சாரங்கமுனியைக் குறித்து அவ்வளவாத் தெரியாது. எழுதுங்க நீங்களே.
ReplyDeleteவாங்க கடைசிபெஞ்ச், நன்றிப்பா/நன்றிம்மா. :))))
ReplyDelete"இ"சார், திருப்பாணாழ்வாரைத் தெரியும். லோக சாரங்கமுனியைக் குறித்து அவ்வளவாத் தெரியாது. எழுதுங்க நீங்களே.
ReplyDeleteஇது தெரியாதா கீதா சாம்பு,
ReplyDeleteதிருப்பாணாழ்வாரை கல்லால் அடித்தவர் தான் லோகசாரங்க்க் முனிவர்
படங்களுடன் படித்து ரசித்தேன்...
ReplyDeleteகதை தெரிந்ததுதான் உங்கள் நடையில் படிக்கும்போது நன்றாக இருந்தது.
ReplyDeleteபடங்களும் ரசித்தேன்.