எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 14, 2013

புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டை ஒட்டி வியாழக்கிழமை வரையிலும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.  பிழைச்சுக் கிடந்தால் வியாழனன்று பார்ப்போம். அனைவருக்கும் "விஜய" வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

20 comments:

  1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வியாழன் வரை விடுமுறை ஓக்கே..!அதன் பின் என்ன விரக்தி.? உடல் நலம்தானே. ? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. ஓ! வியாழன் வரை விடுமுறையா?
    எங்க போட்டிப் படம் காணோமேன்னு பார்த்தேன்.
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதாம்மா.

    'பிழைத்துக் கிடந்தால்' மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தை. இறைவனிடம் மனமுணர்ந்த முழுமையான சரணாகதி.

    எங்கள் வீட்டுப் பெரியவர்கள் வெகு சாதாரணமாய் இந்த வார்த்தையைச் சொல்வார்கள். தஞ்சாவூர் ஜில்லா
    வழக்கு மொழியோ?..

    ReplyDelete
  7. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாங்க டிடி, நீங்க சொல்லும் அனைத்துப் பேறுகளும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாங்க மாதங்கி, வரமுடியலை! மன்னிச்சுக்குங்க. :))))

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், விரக்தியெல்லாம் இல்லை. நாளைக்குனு சொல்லக் கூடாதுனு சின்ன வயசிலே இருந்து சொல்லிக் கொடுத்தது. எங்க மதுரைப்பக்கம் "பிச்சைக்காரனுக்கு"னு சொல்வாங்க. இங்கே பேச்சிலே நாங்க அப்படித்தான் சொல்வது வழக்கம். அது இப்போ எழுத்திலும் புகுந்து கொண்டது. பிழைச்சுக் கிடந்தால் என்று சொல்வது தஞ்சை ஜில்லா வழக்கம். :))))
    ஒவ்வொரு நிமிடமும் இறைவன் கொடுத்த வரம் அல்லவா? அடுத்த நிமிடம் இருப்போமா என்றே தெரியாதிருக்கையில் நாளைக்கு என நிச்சயமாய்ச் சொல்வது கூடாது எனப் பெரியவங்க சொல்வாங்க. :)))))

    ReplyDelete
  11. தன்னிடம் யாசகம் வந்த ஏழையிடம் தர்மபுத்திரன் நாளை வா எனச் சொல்ல, பீமன் என் அண்ணா அனைத்தையும் வென்று கடவுளை விட உயர்ந்து விட்டார் என தண்டோராப் போடச் சொன்னதாகவும், திகைத்த தர்மர் காரணம் கேட்க, இன்று இல்லை என வந்த ஏழையை நாளை வரச் சொன்னாயே? நாளை இந்த உடலில் உயிர் இருப்பதோ, அல்லது இந்த ராஜ்யம் நம்மிடம் இருப்பதோ நிச்சயமாய் உனக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்ததால் தானே நாளை வா என்றாய்! அதனால் சொன்னேன். என பீமன் மறுமொழி கொடுக்கத் தன் மடத்தனத்தை நொந்த தர்மர் அந்த ஏழையை அழைத்து வேண்டிய தானங்கள் செய்து அனுப்பினதாக மஹாபாரதம் சொல்லும்.

    தர்மரின் மூலம் நமக்கும் இது ஒரு பாடம்.

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ரா.ல.

    ReplyDelete
  15. வாங்க ரஞ்சனி, நான் படமே பார்க்கலை! :)))) உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. வாங்க ஜீவி சார், புரிதலுக்கு நன்றி. ஆமாம், தஞ்சை ஜில்லா வழக்கு மொழி தான். மதுரைப்பக்கம் பிச்சைக்காரனுக்கு என்றே சொல்வார்கள்.

    ReplyDelete
  17. வாங்க வெங்கட், உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  19. நன்றி டிடி, போய்ப் பார்த்துவிட்டேன். :)

    ReplyDelete