எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, October 02, 2007
ஜெயிக்கப் போறது யாரு? டாமா? ஜெரியா?
அமெரிக்காவுக்குக் கிளம்பும்போதே ஒரு வாரம் முன்னாலேயே ஏசி. "அஸ்து" கொட்டி விட்டது. ரொம்ப நல்லதாப் போச்சுனு கம்ப்ரெசரைக் கழட்டி வச்சுட்டு நிம்மதியாக் கிளம்பினோம். அங்கே போன சில நாட்களிலேயே போர்வெல் மோட்டாருக்குச் சனி பிடிச்சிருக்கு. அதைச் சரி பண்ணி, சரி பண்ணி அலுத்துப் போன எங்க வீடு கேர் டேக்கர் ஒரு நிலையில் மனம் நொந்து போய், கிணற்றில் தண்ணீர் நிறையவே வந்திருப்பதால், கைவிட்டு எடுக்க முடியும், நான் அதை உபயோகித்துக் கொள்கிறேன், உங்க பாடு, உங்க மோட்டார் பாடுனு சொல்லிட்டார். திரும்ப இன்னும் ஒரு மாசம் இருக்கையிலே அவர் தயவு வேணுமேனு அவரை ஒரு வழியா சமாதானப் படுத்தி வச்சோம். இதுக்குள்ளே எங்க ரெண்டு பேருக்கும் எத்தனை சண்டைனு சொல்றீங்க?
"முதலில் இருந்தே சொல்லிட்டு இருந்தேன், கிணற்றுத் தண்ணீரே போதும், போர்வெல் வேண்டாம்னு" இது நான்.
"உனக்கென்ன தெரியும்? அங்கங்கே ஃப்ளாட் கட்டி தண்ணீரை உறிஞ்சறாங்க, நமக்குக் கிணற்றிலே கடும் கோடையிலே தவிக்குமேன்னு நான் முன் யோசனையுடன் செய்திருக்கேனாக்கும்" இது அவர். இப்படி ரெண்டு பேரும் மோதிக் கொள்வதில் எந்தப் பக்கம் யார் ஜெயிப்பாங்கனு சொல்ல முடியலை. யார் கை வேணும்னாலும் ஓங்கும்! ஹிஹி அடிக்கு எல்லாம் இல்லை. பயந்துடாதீங்க! ஒரு மாதிரி பயத்துடனேயே தான் ரெண்டு பேரும் சென்னை வந்தோம். இங்கே வந்ததும் இன்னும் என்ன என்ன போயிருக்கோனு, ஒரு வாத, விவாதமே நடந்தது. இதை சரியா மூடவிடலை, நீ, கடைசி வரை சமயல் அறையில் என்னதான் பண்ணினாயோ? என்று அவரும், சமையல் அறைப் பொருட்களை நான் வச்சால்தான் திரும்ப எடுக்கும்போது வசதியா இருக்கும்னு நானும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டோம். ஹிஹி, இதெல்லாம் சண்டை இல்லை. இனிமேல் வரும் பாருங்க!
ஆச்சு, வந்தாச்சு, வீட்டுக்குள்ளும் நுழைந்தாச்சு! வந்த கதை எல்லாம் தனியா வச்சுக்கலாம். வரும்போது இந்திய நேரப்படி மணி மூன்று ஆகி விட்டது. வீட்டுக்குக் காவல் இருந்தவரைப் படுக்கச் சொல்லி விட்டுப் பூட்டி இருந்த ஒவ்வொரு அறையாத் திறந்தோம். முதலில் பெரிய படுக்கை அறையும், சின்ன அறையும் திறந்து பார்த்து விட்டு, குப்பையா இருந்ததை மட்டும் சுத்தம் செய்தேன். அந்தச் சமயம் என் கணவர் போய்ச் சமையல் அறையையும், சாப்பிடும் அறையையும் போய்த் திறந்தார். சமையல் அறை பூரா ஒரே அரிசி வாரிக் கொட்டிக் கிடந்தது. என்னனு புரியாமல் விழிச்சால் ஒரு பெரிய சத்தம், தடால்னு பாத்திரம் வச்சிருக்கும் பகுதிக்குள். பாத்திரங்களை ஒரு பெரிய பையில் போட்டுக் கட்டி இருந்தோம். சரினு அதைப் போய்த் திறந்தால் "கீச், கீச், கீச்"னு ஒரே சத்தம். ஒரு பெரிய எலி வெளியே குதித்துத் தைரியமாக எங்களை முறைத்தது. உள்ளே சிறிய எலிக்குஞ்சுகள், இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. பாத்திரங்கள் இருந்த பைக்குள் எலியை வச்சுக் கட்டி இருக்கீங்களே? இது நான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் கட்டும்போது எலியே இல்லை, அதுக்கு முன்னாலேயே நீதான் உள்ளே விட்டு இத வளர்த்திருக்கே! இது அவர். பத்தாக் குறைக்கு அந்த எலி உப்பு இல்லாமல், புளி இல்லாமல் சாப்பிடாது போல! மிச்சம் இருந்த மளிகை சாமான்களைக் கட்டி வாச்சிருந்த பாக்கிங்கை எப்படியோ பிரிச்சு உள்ளே போய்ச் சரியாக உப்பு, புளியை மட்டும் வெளியே எடுத்து வாரி இறைச்சிருந்தது. நல்லவேளை சாம்பார் பொடி இல்லை, பருப்பு இல்லை. இருந்தால் அதையும் போட்டு சாம்பர் வச்சுச் சாப்பிட்டுட்டு எங்களுக்கும் வச்சுக் கொடுத்திருக்கும். அதுக்குள்ளே நாங்க வந்துட்டோமேனு அதுக்கு ஒரே ஆத்திரம். வேகமாய ஓடிப் போய் சமையல மேடைக்கு அடியிலே ஒளிந்து கொண்டது. இதை எப்படி விரட்டறது?
எலி இங்கே வந்து கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனமும் பண்ணி இருக்கே, அப்படின்னா முன்னாலேயே வந்திருக்கும்னு என்னோட மறுபாதி என்னைக் குற்றம், சாட்ட, அதெல்லாம் இல்லை, எலிக்குக் கர்ப்ப காலம் 45 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் தான், அதனால் அப்புறம்தான் வந்திருக்கும்னு நானும் சொல்ல ரெண்டு பேருக்கும் எலியை எப்படி விரட்டறதுங்கிறதிலே இருந்து பிரசனை எலியின் கர்ப்ப காலம் எவ்வளவுங்கறதிலே போயிடுச்சு! இப்போ தலையாய கேள்வியே அதுதான். யாராவது தெரிஞ்சா சொல்லுங்க, எலிக்குக் கர்ப்ப காலம் எத்தனை மாதம் அல்லது நாட்கள்?
இப்போதான், நாங்க ரெண்டு பேரும், எலியை யார் உள்ளே விட்டதுன்ங்கிற சர்ச்சையிலே ஒருத்தர் டாம் ஆகவும், இன்னொருத்தர் ஜெர்ரியாகவும் மாறி விட்டோமே. சண்டை தொடர்ந்தது. மிச்சம் நாளைக்கு, வரேன், இப்போ!
டாம் யாரு, ஜெரி யாருங்கறதை உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
வீட்டை கவனிச்சுக்கிட்டிருந்தவர் எலிகளுக்கு வாடகைக்கு விட்டுட்டார்னு நினைக்கிறேன்.
ReplyDeleteநல்லவேளை, வளைகாப்பு நடத்தவும் பிரசவம் பார்க்கவும் உங்கள கூப்பிடாம இருந்துதே அது வரைக்கும் சந்தோஷபடுங்க
ReplyDeleteவாழ்த்துகள் ஜெர்ரி.
ReplyDelete:-)
//டாம் யாரு, ஜெரி யாருங்கறதை உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்//
ReplyDeleteஇதுல என்ன ஊகம் வேண்டி இருக்கு? நீங்க தான் டாம், சாம்பு மாமா தான் ஜெர்ரி. :p
ஆனா என்னிக்குமே ஜெயிக்கறது ஜெர்ரி தான். :)))
ரொம்ப முக்கியம்
ReplyDeleteஜெயிக்கறவங்கதான் ஜெரி;-)))))
ReplyDeleteவீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறோமுன்னா இதுதான் பெரிய தொல்லை. எல்லா சாமான்களையும்
எடுத்து வைக்கிறது.
சரி. செட்டில் ஆனதும் சொல்லுங்க
????
சண்டை:-))))
எப்படியும் நீங்க தான் ஜெயிக்க போகிறீர்கள். சார் பாவம் விட்ருங்க!
ReplyDelete//கம்ப்ரெசரைக் கழட்டி வச்சுட்டு நிம்மதியாக் கிளம்பினோம்.//
எப்படி கழட்டுனீங்க?
இதுல என்ன சந்தேகம்? தலைவி தான் டாம்.
ReplyDeleteஏன்னா ஒட்டு மொத்த பல்புகளையும் யாருக்கும் தராம வாங்கிக்கறது டாம் தான்.
:)
இருந்தாலும் எலிக்கு ரசம் வைக்க தேவையான பொருட்களை வைக்காத தலைவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ReplyDeleteபாவம் பச்சை உடம்புகாரி...சின்ன குழந்தைகளை வச்சிக்கிட்டு அஜீரணத்துல அவதி பட்டிருப்பா.
:)
ingayum nan tha firsta..?
ReplyDeleteஇதுலே ஊகம் வேறயா? நீங்கதான் ஜெர்ரி. நாங்கதான் நேரிலேயே பார்த்திருக்கோம்ல
ReplyDeleteVaruga varuga,
ReplyDeletevaravu nalvaravu aagatum,
//
எலிக்குக் கர்ப்ப காலம் எத்தனை மாதம் அல்லது நாட்கள்?
//
Googleaaandavar 19-22 daysnu solraar...pakkathula irundhu paarthathuellai...so nammbithaan aaganum.
விக்கி பசங்க கிட்ட கேள்வியைக் கேட்காமல் தனிப் பதிவு போட்டு எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் பதிவருக்கு கண்டனங்கள்!
ReplyDeleteஎல்லார் வீட்டுலேயும் நடக்குற அன்புச் சண்டை தானுங்க - டாமாவது ஜெர்ரியாவது - இது இல்லேன்னா வாழ்க்கையே இல்லேங்க
ReplyDeleteகடைசில என்ன ஆச்சு கீதா.
ReplyDeleteசமரசமா:0))