எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 04, 2007

என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!




கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருக்கலாம் போலிருக்கே? கமென்ட் மழை பொழிஞ்சிருக்கீங்க எல்லாரும்? உங்க பாசத்தை நினைச்சால்............ கண்ணீர் மழை போல் கொட்டுது!, இன்னும் "broadband connection" வாங்கலை, அதுக்கு ஒரு யுத்தம் நடந்துட்டு இருக்கு. ஆகவே உங்க எல்லாருக்கும் இப்போ ரொம்ப நல்ல நேரம்னு நினைக்கிறேன். எலியை ஒரு மாதிரியா விரட்டிட்டுப் பார்த்தால், அடுத்தது குளிர்சாதனப் பெட்டி. அதைச் சுத்தம் செய்துவிட்டுப் போட்டால் ஸ்டெபிலைசர் எரியவே இல்லை.
ச்டெபிலைசர் இல்லாமல் அப்படியே போட்டால் குளிரோ குளிர், அது தாங்காமல் காய், கனி, பால் எல்லாம் விறைச்சுப் போகுது. புத்தம்புது ஃப்ரிஜ். க்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ அது வேறே ரிப்பேர் பார்த்தாகணும். ஏற்கெனவே தண்ணீருக்கு மோட்டார் இல்லை, ஏ.சி. இல்லை, இப்போ ஃப்ரிஜும் இல்லையா? அடுத்துப் பால், காஃபி தான்! அதுக்கும் வந்ததே வினை!

எங்க வீட்டுக் காஃபி உலகப் பிரசித்தி பெற்றது! இங்கே வந்து ஒரு முறை சாப்பிட்டவர்கள் அந்தக் காஃபி பத்தி ஒரு புராணமே எழுதி இருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன். முன்பெல்லாம் பத்து வருஷங்கள் முன்பு வரை கொட்டையை வீட்டிலேயே வறுத்து, வீட்டிலேயே அரைத்து, வீட்டிலேயே மாடு கறந்து காஃபி! இது எல்லாம்தான் நடந்தது! ஆனால் இப்போ எங்கே? இருந்தாலும் பால் மட்டும் இந்தப் பாக்கெட் பால், ஆவின், ஆவின் இல்லாத பாவின், ஆரோக்கியா, ஆரோக்கியம் இல்லாதது வாங்கியதே இல்லை. சுத்தமான கறந்த புதுப் பால்தான் 6 மாதம் முன்பு வரை! அதுக்கும் வந்தது வேட்டு! இம்முறை எங்க பால்காரர் மாடு கன்னு போட்டுப் பால் நிறையக் கறந்தால் தான் பால் எடுத்து வரமுடியும்னு திட்டவட்டமாய் அறிவித்து விட்டார்.

வாழ்நாளிலேயே முதன்முறையாக பாக்கெட் பால் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு ஆறு மாசம் போனதுக்கே இப்படி ஆயிடுச்சு பாருங்க! லிட்டர் 12 ரூக்குப் பால் வாங்கிட்டு இருந்தது போய் இப்போ அரை லிட்டரே பத்து ரூபாய்க்கு வாங்கும்படி ஆயிடுச்சு! :( இதிலே போய்க் காஃபி வேறேயா? காஃபியையே ஒழிச்சுக் கட்டிடலாமானு இருக்கு! @அம்பி, இப்போ சந்தோஷமா? ஃபோனிலே கூட அண்ணனும், தம்பியும் காஃபிக்குக் கரிச்சுக் கொட்டினீங்களே, அது வாயிலேயும் மண்ணு இப்போ! ஆனால் இந்தப் பால் வராததுக்கு நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க முடியலை! அது கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும், அடுத்து ப்ராட்பான்டுக்கு இப்போ சண்டை நடந்துட்டு இருக்கு! அதிலே என்னனு புரியலை. இன்னிக்கு வரை எந்தக் கனெக்ஷனுக்கும் முயற்சி செய்யலை.

எனக்கு தெரியாத வேதாளத்தை விடத் தெரிந்த பேயான "டாட்டா இன்டிகாமே" பரவாயில்லைனு தோணிச்சு. பணம் வேறே அவங்க கிட்டே மிச்சம் இருக்கு! ஆனால் என்னவருக்கோ நான் என்ன சொல்றேனோ அதுக்கு மறுப்பு தெரிவிப்பது தான் முதல் வேலை ஆச்சே! ஆகவே, ம்ம்ம், சரி, பார்க்கலாம், நான் போய் நேரிலே பணத்தைக் கட்டிட்டு அவங்களை நாக்குப் பிடுங்கிக்கிறாப்பலே நாலு வார்த்தை கேட்டுட்டு வந்துடறேன்னு சொல்லிட்டாரா? நாம் மகிழ்ந்து போய் நிஜம்னு நம்பி எல்லாம் ஹெட் லெட்டர்! செவ்வாயன்று போகிறேன்னு சொன்னவர் இன்றுவரை அங்கே தவிர மற்ற இடங்களுக்கு எல்லாம் போய் விட்டுப் போன மற்ற வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டார். இது பற்றிய ஆய்வு இன்னும் நடந்துட்டு இருக்கு, ஒவ்வொருத்தரோடா பேசிட்டு இருக்கார். இன்னிக்கு ஏர்டெல், பி.எஸ்.என்.எல். எல்லாத்துக்கும் பேசிப் பார்த்தாச்சு, இன்னும் ஒரு முடிவும் செய்யலை, உன் இஷ்டம், உன் இஷ்டம்னு சொல்லிட்டே, கடைசியில் அவர் இஷ்டம் போல் நடத்திக்குவார். ஆனால் எனக்கு அது கடைசியில் தான் புரியும். என்னை மாதிரி ஒரு அ.ச.டி. யாரு இருப்பாங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ எனக்கே தெரியாது, வரப் போகிறது பி.எஸ்.என்.எல்.? ஏர்டெல்? டாட்டா இன்டிகாம்? இங்கே ஒரு பெரிய வாத விவாதமே நடந்துட்டு இருக்கு. போகிற இடங்களில் எல்லாம் தகவல் சேகரிக்கிறார்.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விட நான் இப்போது ப்ராட்பன்டுக்குப் போடப் போகும் ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு எனக்கே தோண ஆரம்பிச்சு இருக்கு! அந்த அளவுக்கு வேலை செய்யறார். என்ன முடிவுன்னு எனக்குத் தெரிஞ்சால் உங்களுக்கும் அது தானாவே தெரியும்! அது வரை விட்டேன் ஜூட்! அப்புறம் நான் தனித்தனியாப் பதில் போடலைனு யாரும் தப்பா எல்லாம் நினைச்சுக்க மாட்டீங்க, அப்பாடா தொல்லை விட்டதுன்னு தான் நினைச்சுப்பீங்க! நல்லாத் தெரியும், இருந்தாலும் ஒரு ஃபார்மாலிடிக்குச் சொல்றேன், யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம், வந்து வட்டியும் முதலுமாப் பதில் சொல்றேன், ஹிட் லிஸ்டாவது எகிறும்! விட்டுக்கு கனெக்ஷன் வரட்டும்னு பார்க்கிறேன். இன்னொருத்தர் வீட்டிலே எத்தனை நாள் உட்கார்ந்து மணிக்கணக்காய் வேலை செய்யறது? வல்லி, உங்க டெலிபோன் நம்பர் இங்கே கம்ப்யூட்டரிலேயே இருக்கா, அதான் உங்களுக்கு பதில் சொல்ல முடியலை. எங்க வீட்டிலே காலர் ஐடி இல்லை! :(

10 comments:

  1. Thalaipu eppadi superah...

    ஜெயிக்கப் போறது யாரு - 2 ? டாமா? ஜெரியா?

    ReplyDelete
  2. மறுபடியும் இந்தியா போயாச்சாங்க மேடம்.. ம்ம்ம்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.. இனி என் படையெடுப்பு இருக்கும் இடைவிடாதுங்க மேடம்

    ReplyDelete
  3. //, யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம், வந்து வட்டியும் முதலுமாப் பதில் சொல்றேன், ஹிட் லிஸ்டாவது எகிறும்!///


    நான் எப்படிங்க மேடம் தப்பா நினைப்பேன்.. இனிமேல் அடிக்கடி வரலாம்னு பாத்தா நீங்க அடிக்கடி எழுத மாட்டீங்க போல் இருக்கே.. என்னடா இது கொலம்பஸுக்கு வந்த சோதனை

    ReplyDelete
  4. நேற்று, இன்று இருநாட்களாக போனில் பேச 2-3 தரம் ட்ரைப் பண்ணினேன்....இதுதான் மேட்டரா?.

    ReplyDelete
  5. கனக்க்ஷன் லேட்டாவே வரட்டும். :p
    நாங்க வேணும்னா ஏர்டெல், BSNL காரங்க கிட்ட சொல்லி வெக்கறோம். நிறைய பேர் நிம்மதியா இருக்காங்க. :)))

    ReplyDelete
  6. ஒன்னும் அவசரம் இல்ல... பொறுமையா... ரொம்ப பொறுமையாவே வாங்க.....

    ReplyDelete
  7. போன பதிவுக்கு 13 கமெண்ட்டு - இதுக்கு 3 நாளாச்சு - ஒரு பின்னூட்டம் கூட காணும். எல்லார் வீட்டு டாமும் ஜெர்ரியும் யார் டாம் யார் ஜெர்ரின்னு விவாதிச்சுட்டு இருக்கறதாலே இங்கே வர முடிலே போல இருக்கு- இருக்கட்டும் இருக்கட்டும் -

    ReplyDelete
  8. /அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விட நான் இப்போது ப்ராட்பன்டுக்குப் போடப் போகும் ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு எனக்கே தோண ஆரம்பிச்சு இருக்கு!//

    :))

    //அப்புறம் நான் தனித்தனியாப் பதில் போடலைனு யாரும் தப்பா எல்லாம் நினைச்சுக்க மாட்டீங்க, அப்பாடா தொல்லை விட்டதுன்னு தான் நினைச்சுப்பீங்க//

    100% True!

    //யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம்//

    Che Che!

    ReplyDelete
  9. //ஆனால் என்னவருக்கோ நான் என்ன சொல்றேனோ அதுக்கு மறுப்பு தெரிவிப்பது தான் முதல் வேலை ஆச்சே! //

    நார்மலா இது ரிவர்ஸ் ஆச்சே!!

    ReplyDelete
  10. \\ "என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!"\\

    ஆரம்பிச்சிட்டிங்களா.....;))

    ReplyDelete