நான் எழுதி முடிக்கிறதுக்குள்ளே கொலுவே முடிஞ்சுடும் போலிருக்கு. இரண்டு நாளா ரொம்ப பிசி. ஞாயிறு அன்று கொஞ்சம் வெளியே போயிட்டேன்.சாயந்திரம் சுண்டல் போட முடியலை. அன்னிக்குன்னு 4 பேர் வந்து மானத்தை வாங்கினாங்க. திங்கள் அன்று சுண்டல் போட்டுட்டு உட்கார்ந்திருந்தால் "போணி"யே ஆகலை. சரினு மறுநாள் வேர்க்கடலை கொஞ்சம் போலப் போட்டுட்டு உட்கார்ந்தேன். அன்னிக்குனு பார்த்து சுண்டல் விநியோகம் ஏக பிசி. நான் விநியோகம் செய்ததிலே பழம், பாக்கு, வெற்றிலை, சுண்டல்னு எல்லாம் காலியாகி, நான் வசூல் செய்த சுண்டல் வகைகளும் விநியோகம் செய்யப் பட்டது. இதிலே யாருக்கு அவங்க வீட்டுச் சுண்டலே திரும்பிக் கொடுத்திருக்கேனோ தெரியாது! :D நேத்திக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு.
எங்க வீட்டுச் சுண்டல் என்னன்னு அந்தப் பருப்பு வகைகளை நனைக்கும்போது நான் பார்த்தது தான் அப்புறம் ஒரு பருப்பு கிடைக்கலை. :P நேத்திக்கு நம்ம வேதா(ள்), வீட்டுக்கு ஜி3 வரதா இருந்திருக்காங்க. அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P புதன் கிழமை நான் வரப்போறேன்னு செவ்வாயன்றே வேதா(ள்) வீட்டுக்குப் போய் விருந்து எல்லாம் சாப்பிட்டுவிட்டு, (வேதா(ள்) எனக்கு ஒண்ணுமே கொடுக்கலை, தனியாக் கவனிச்சுக்கறேன். அப்புறம் ஜி3யை எஸ்கேஎம் கூப்பிட்டு இருக்கிறதாலே அவங்க எஸ்கேஎம். வீட்டுக்குப் போகப் போவதாய் உளவுத்துறைத் தகவல் தெரிவிச்சது. சரி, அவங்க வரலைனா பரவாயில்லை, அவங்க மிதிச்ச புண்ணிய பூமியையாவது நாமளும் மிதிப்போம்னு நேத்திலே இருந்து வேதா(ள்) கிட்டே இதோ வந்துட்டேன், வந்துட்டே இருக்கேன், வரப் போறேன், வந்தே விடுவேன்னு பூச்சாண்டி காண்பிச்சுட்டே இருந்தேன். அவங்களும் வேறே வேலை இல்லாமல் நான் வரப் போவதை எதிர்பார்த்து, தோரணவாயில், அலங்கார வளைவுகள், குழந்தைகள் கூட்டம் எல்லாம் ஏற்பாடு பண்ணி வச்சுட்டு, என்னோட எடைக்கு எடை தங்கமும் கொடுக்க முடிவு செய்து அதுக்கும் ஏற்பாடு செய்தாங்க. இந்த இடத்திலே என்னோட எடை 100 கிலோனு ரொம்ப அடக்கமாத் தெரிவிச்சுக்கறேன்.
அடுத்து என்னைக் கூப்பிடறவங்களுக்குத் தங்கமோ, வெள்ளியோ வாங்கறதுக்குத் தெரியணுமே? அதுக்குள்ளே எடை அதிகரிக்கவும் சான்ஸ் இருக்கு. அது அப்படியே இருக்கட்டும். மெதுவாய் ஒரு வழியாய் இன்னிக்கு வேதா(ள்) வீட்டுக்குப் போனேன். ரயிலடிக்கே மலர்மாலை, பூச்செண்டு, பொன்னாடை வகைகளுடன் என்னை எதிர்பார்த்து வேதா(ள்) வந்ததைப் பார்த்த என்னோட மறுபாதி அசந்து போயிட்டார். அப்புறம் அவர் போகவேண்டிய சிட்கோ நகருக்கு அவர் கிளம்பிப் போகவும் கூட்டம் தாங்க முடியாமல் மெதுவாக நாங்கள் போகவேண்டி வந்தது. மெதுவாய்ப் போய் வீட்டில் இறங்கினேனோ இல்லையோ வருணபகவான் சந்தோஷமடைந்து மழையாகப் பொழிய ஆரம்பிக்கவே மக்கள் கூட்டம் ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)
மெதுவாய் மாடிக்குக் கூட்டத்தை மீறிக்கொண்டு என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தார் வேதா. அங்கே அவர் பாட்டி என்னோட வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவரிடம் வணக்கம் தெரிவிச்சபின்னர், வேதாவிற்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலான பேச்சு, வார்த்தை நடந்து ஒரு முடிவுக்கு வந்தோம், இருவரும். (என்ன, காபியா, டீயானு கேட்டதுக்கு, டீயே மதுரம்னு சொன்னேன், அதான்! :D) வேறே ஒண்ணையும் கண்ணிலே காட்டலை, பொம்மையைத் தவிர, க்ர்ர்ர்ர்ர், ஜி3க்கு மட்டும் பிஸ்கட், ஸ்வீட், இத்யாதி, இத்யாதியா? அதுக்குப் பின்னர் நல்ல கொட்டுகிற மழையில் மக்கள் கூட்டம் என்னைக் காண அலைமோதுவதைத் தெரிந்து கொண்டு வெளியில் வந்து தரிசனம் தந்துவிட்டுப் பின்னர் அம்பத்தூருக்குத் திரும்பினேன். வேதா, நீங்க சொன்ன மாதிரியே பதிவு போட்டாச்சு, சரியா? :P
என்னத்தைச் சொல்றது வேதா(ள்), நான் தலைமறைவா இருக்கிறப்போ வந்து பின்னூட்டம் போட்டவங்கல்லாம் இப்போ ஆளே காணோம்! :P
ReplyDeleteஹலோ கீதா மேடம்,
ReplyDelete//இதிலே யாருக்கு அவங்க வீட்டுச் சுண்டலே திரும்பிக் கொடுத்திருக்கேனோ தெரியாது!//
இதுல்லாம் வழக்கமா நடக்கறது தானே...
//அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.//
அட நீங்க சும்மாவா விட்டீங்க அவங்களை? ஒரு பிடி பிடிச்சிருக்க வேண்டாமா? சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே
ஹலோ மேடம்,
ReplyDelete//வேறே ஒண்ணையும் கண்ணிலே காட்டலை, பொம்மையைத் தவிர, க்ர்ர்ர்ர்ர், ஜி3க்கு மட்டும் பிஸ்கட், ஸ்வீட், இத்யாதி, இத்யாதியா?//
இதுல ஏதோ சதி இருக்கு? அம்பி ஏதாவது சதி திட்டம் தீட்டி குடுத்து இருப்பார் னு நினைக்கிறேன்.
//ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)//
ReplyDeleterishyya sringi?
அதான் நான் இருக்கேன்ல அப்புறம் என்ன?
ReplyDeleteஉங்கள தெரியாதுனு காய்த்ரி சொல்லிட்டாங்களா....
தலைவலிய தெரியாது அவங்க சொல்லிட்டாங்களா... என்ன கொடுமை இது எல்லாம்...
இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவோமா?
\\அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P\\
ReplyDeleteபதிவுலகில் ஜி3யின் புகழை பரப்பி வரும் எங்கள் தலைவியை தெரியாது என்று சொல்லிய ஜி3க்கு என் கண்டனங்கள். ;)
\\(கொஞ்சம் ஓவரா இருக்கோ?)\\
ReplyDeleteரொம்ப ஓவரா இருக்கு...;))
//அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்.. குருவின் குருவே.. இதை நம்பாதீங்க.. என் குரு வேதா தப்பா ஏதோ போட்டு குடுத்துட்டாங்க :( நான் தெரியாதுன்னெல்லாம் சொல்லவேஏஏஏஏஏஏஏஏஏ இல்லை.. என் பேருக்கு இம்புட்டு விளம்பரம் குடுக்கற உங்கள போய் தெரியாதுன்னு சொல்லுவேனா?? :(
என்ன கொடுமை இது சரவணா! :P நல்ல நல்ல பதிவுக்கெல்லாம் தலையைக் காட்டாதவங்க ஜி3 பத்தி எழுதின மொக்கைக்கு வந்துட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்.... எல்லாரையும் தனித் தனியா வச்சுக்கறேன். :P
ReplyDelete@அம்பி, இது உங்க சதியா தெரியாமப் போச்சே! நான் என்னமோ "சுண்டல்" பக்குவம் ஆகலைனு பூரிக்கட்டை வேகமா விழுந்த அதிர்ச்சியிலே தான் நீங்க தலை காட்டலைனு நினைச்சேன். :P
ReplyDelete@ஜி3, அதானே, அதூஊஊஊஊஊ! அந்த பயம் இருக்கட்டும்! :P கொலுவுக்கு வராட்டியும் இங்கே வந்து எட்டிப் பார்த்துக் கடமை உணர்ச்சி தவறாமல் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே! உங்க கடமை உணர்ச்சிக்குப் பாராட்டுக்கள். :P
ReplyDelete//அன்னிக்குன்னு 4 பேர் வந்து மானத்தை வாங்கினாங்க.//
ReplyDeleteவெரிகுட். வெரிகுட். படிக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு. :p
//ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)//
ரொம்பவே ஓவர் இது. பாவம் ரிஷ்யசிருங்கர். கேட்டா ரொம்பவே வருத்தப்டுவார். :))
@ஜி3, மொக்கயர் அணித்தலைவ(லி)யையே தெரியாது!னு தில்லா சொன்ன உங்க தைரியத்தை நான் பாராட்டுறேன். ஒன்னும் பயப்படாதீங்க. நாங்க எல்லாம் இருக்கோம். :)))
ஜி3-ய வீட்டுக்கு வான்னு சொன்னா வருவாங்களா?? நீங்களும் வேதா மாதிரி ப்ளாக் மக்கள் சார்பா வந்து சுண்டல் வாங்கிக்கோன்னு சொன்னா தான் வருவாங்க..அட்லீஸ்ட், சுண்டல்னு ஒரு வார்த்தையாவது சொல்லி இருந்தீங்கன்னா அடிச்சு பிடிச்சு வந்திருப்பாங்க.. :D :D
ReplyDeleteம்ஹும், இந்த மொக்கைக்கு இத்தனை பின்னூட்டமா? :P சிங்கம் கூட இப்போல்லாம் அடிக்கடி வந்து உறுமுதே? சிங்கம், சுண்டல்னு நானே சொல்லியும், எழுதியும் தான் பார்த்துட்டு இருக்கேன். எனக்கே கிடைக்காத ஒன்றை ஜி3 -க்கு எப்படித் தரேனு சொல்றது?
ReplyDelete@சுமதி, உங்க தீர்க்கதரிசனத்தை என்ன சொல்றது? இதோ அம்பியே வந்து வழக்கம்போல் எங்கப்பா குதிருக்குள்தான் இருக்கார்னு சொல்லியாச்சு, ஒருவேளை, நீங்க அங்கேயும், போயிட்டு, இங்கேயும் வரீங்களோ? சந்தேகமா இருக்கே?
சிவா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? தலைவியாக இருந்த நான் இன்னிக்கு நாலு பேருக்கு அறிமுகம் செய்துக்க வேண்டி இருக்கு! :(( எல்லாம் தொண்டர் பற்றாக்குறை தான். சீக்கிரமே கட்சிக்கு ஆள் சேர்க்கணும். :)
@மெளலி, ஹிஹிஹி, நல்லா இல்லை?, ரிஸ்யசிருங்கியும் நல்லாவே இருக்கே? :)))
@கோபிநாத், உங்களை மாதிரி உண்மைத் தொண்டர் இல்லாமல் கட்சியே தடுமாறுது. சீக்கிரமே ஜோதியில் ஐக்கியம் ஆகிடுங்க!
ReplyDelete@அம்பி, கேட்கவே சந்தோஷமா இருக்கா? நறநறநற, நேத்திக்குக் கேசரி பண்ணினேன், நல்லவேளை உங்களுக்கு வைக்கலை, சாப்பிட்டுட்டேன், நானே!
@வேதா(ள்), என்ன இது? ஜி3 குருவை நம்பினா, நீங்க உங்க குருவை நம்பவேணாமா? ஹிஹிஹி, நல்லா இல்லை? :P