எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 26, 2007

ஐகாரஸ் கேட்டதுக்காக ஒரு விமரிசனம்!

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தாப்பலே, இந்த ஐகாரஸ் வந்து, சினிமா விமரிசனம் எழுதுனு சொன்னாரா? :P சரி, வராத மனுஷன், அவரெல்லாம் நம்ம வீடு தேடி வரப்பட்டவர் இல்லை, பெரிய மனுஷன், வந்து நம்ம பதிவையும் மதிச்சுக் கேட்டிருக்கார். விமரிசனம் பண்ணுங்கனு, :P அதுவும் ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி படமாக் கேட்கறாரேனு "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முதலாக"க் காட்டற படங்களிலே வரும் பார்க்கலாம்னு பார்த்தா ஒரு வாரமா முடியவே இல்லை. கட்டாய ஓய்வு எடுக்க வேண்டியதாப் போச்சு! அம்பி வேறே தியாகராஜ பாகவதர் காலத்துப் படத்தைப் பத்தி ஆசையாக் கேட்டிருந்தார். அவர் வயசுக்கு இன்னும் முன்னாலே "பேசாத படம்" தான் கேட்டிருக்கணும். பொதிகையிலே தினம் மத்தியானம் பழைய படம் பத்திப் போடறாங்கனு பார்க்கலாம்னா அதுக்கும் முடியலை. இந்த ஐகாரஸ் வந்து ஏற்கெனவே வச்ச கண்ணு பத்தாதுனு நான் சினிமா பார்க்கிறதை, பார்க்கிறதை என்ன பார்க்கிறதை, பார்த்ததைக் கிண்டல் அடிச்சுட்டுப் போனாரா? என்னாலே இப்போ எல்லாம், "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" வரும் படங்களைக் கூடப் பார்க்க நேரம் இல்லை. எல்லாம் யு.எஸ்ஸிலே பார்த்ததோடு சரி! :P

ஆனால் என்னோட் ம.பா.வுக்கு வேறே கவலை. ஆறு மாசத்துக்கு முன்னாலே அவர் பார்த்துட்டிருந்த சீரியல்கள் எல்லாம் இன்னும் புதுக்கருக்கு அழியாமல் தொடருகிறதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுட்டு இருந்தாரா? இந்த நவராத்திரி சமயத்தில் "ஆனந்தம்" தொடரில் வரும் டெல்லி குமாரின் மனைவியாக நடிப்பவரை இறந்து விட்டதாய்க் காட்டினாங்க, சரியா 9 நாளும் தினம் சாயங்காலம் 7 மணிக்கு அழுதுட்டு இருப்பாங்க எல்லா வீட்டிலேயும், நவராத்திரிக்கு வரும் பெண்களும் சேர்ந்து! :P பாருங்க, அதுக்கப்புறம் தான் அவர் சோகத்தின் உச்சிக்கே போயிட்டார். அந்த அம்மா இறந்ததுக்கு எல்லாம் இல்லை, அவங்க கலைஞர் டி.வி.யிலே வேறே மெகாத் தொடருக்கு நடிக்கப் போயிட்டாங்க போலிருக்கு, இதிலே சாகடிச்சுட்டாங்களாம். அவர் தான் சொன்னார். இந்த லேட்டஸ்ட் மெகாத் தொடர் நியூஸெல்லாம் அவருக்குத் தான் அத்துபடி! சோகக் கதையின் காரணம் கேட்கலையே!



ஆனந்தம் தொடரில் அவங்களுக்கு 2 பொண்ணுங்க இருப்பாங்க! 2 பொண்ணோட மாப்பிள்ளைங்களும், அந்த அம்மா செத்தப்போ வந்திருக்காங்களாம், சம்மந்திகளோ, பொண்ணுங்களோ வரலையாம். மாப்பிள்ளைங்க 2 பேரும் வந்திருக்கும்போது பொண்ணுங்க அம்மா செத்தப்போக் கூட வரலையேனு அவருக்குத் தலையைப் பிச்சுக்கணும் போலிருக்கு. சண்டை போட்டுட்டுப் போன மூத்த மருமகள் ஆன அபிராமி கூட வந்துட்டாளாம். அவளோட தம்பி, தங்கை வரலையாம். அப்புறம் சேர்ந்து இருக்கும் மருமகள் வரலையாம். வெளியூர் எங்கேயோ போயிட்டாங்களாம். அவங்க என்ன ஆனாங்கனு ஒரே கவலை. அது மட்டுமா? கோலங்களில் அபிக்கு அடி எப்படிப் பட்டது? இந்த தீபா வெங்கட்டுக்கு ஒரு குழந்தை இருந்துச்சே அது என்ன ஆனது? அப்புறம் அனுவாக நடிக்கிற பொண்ணு மாசமா இருந்தாளே, அவ குழந்தை என்ன ஆனதுனு ஒரே கவலை! மலர்கள்னு ஒரு தொடர் வந்துட்டு இருந்ததே, அது எப்படி முடிஞ்சதுனும் ரொம்பவே கவலைப்படறார். "கஸ்தூரி"யை இன்னும் எத்தனை நாட்களுக்குக் கஷ்டப் படுத்தப் போறாங்கனு வேறே கவலை. என்ன ஒரே ஆறுதல்னா அவளோட மாமியார், மாமனார் கஸ்தூரிக்கு ஆறுதலா இருக்காங்களாம். மத்தபடி கதை எங்கே போகுதுனு புரியவே இல்லையாம். யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

இந்த லட்சணத்திலே நான் சினிமா என்னத்தைப் பார்க்கிறது? மத்தியானம் போடற ஏதாவது படம் பார்க்கலாம்னு இன்னிக்கு உட்கார்ந்தா ஒரு ஜெய்சங்கர் படம் கேடிவியிலோ, சன் டிவியிலோ ஓட்டிட்டு இருந்தாங்க. அது ஜெய்சங்கர் வில்லனா நடிக்க ஆரம்பிச்சப்புறம் வந்த படம். ஐகாரஸ் கேட்டது அது இல்லையே. இப்படி சானல் மாத்தினேனா, ராஜ் டிவியிலே "கர்ணன்" படம் போட்டாங்க. நான் பார்த்ததே இல்லை. சிவாஜி நடிச்ச பல படங்கள் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடிச்சது, அவர் நடிக்காத ஒரே படமான "முதல் மரியாதை" மட்டும் தான். கர்ணன் படம் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்.

வெறும் வாயை மென்னுட்டு இருக்கிற எனக்கு அவல் கிடைச்சாப்பலேன்னு என்னோட ம.பா. கிண்டல் செய்ததையும் பொறுத்துட்டுப் படம் பார்த்தேன். அதிலே எனக்குச் சிலசந்தேகங்கள் வந்துடுச்சு. .

1.கர்ணன் தன்னோட் கவச, குண்டலத்தைப் பாண்டவர் வனவாசத்துக்குப் போகும் முன்னரே இந்திரனுக்குத் தானம் கொடுக்கிறானா? அல்லது யுத்தம் ஆரம்பிக்கும் முன்னரா? வியாச பாரதத்தில் இப்படி இருக்கிறதா?

2.கர்ணனுக்குப் பையன் பிறப்பதாயும் அந்தப் பையன் யுத்தத்தில் இறந்து போவதாயும் காட்டுகிறார்கள். அதுவும் மகாபாரதத்திலே உண்டா? வியாசர் இப்படி எழுதி இருக்கிறாரா?

3.குந்தி ஏதோ புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு தான் கர்ணனின் தாய் என நிரூபிப்பதாய் வருகிறது. அதுவும் உண்டா? இந்தப் புடவை விஷயம் வியாசர் எழுதின மகாபாரதத்தில் படிச்ச நினைப்பு இல்லை.

4. துரியோதனன் கர்ணனை அங்க தேசத்து அரசனாக்கிய பின்னர் தான் கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக் கொள்ளச் சென்றானா?

5.பானுமதி (துரியோதனன் மனைவி)க்கும், கர்ணனுக்கும் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையும் "எடுக்கவோ, கோர்க்கவோ" என துரியோதனன் கேட்டதும் வில்லி பாரதத்தில் உண்டு. வியாச பாரதத்தில் உண்டா?

ஒரே குழப்பமா இருக்கு. யாராவது வந்து தெளிய வைங்களேன், ப்ளீஸ்! ஐகாரஸ், இதுவும் விமரிசனம் தான், இனிமேல் விமரிசனம் பண்ணுங்கனு கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன். :P

24 comments:

  1. ஐய்யோ.. கீதா ஆண்டி, எனக்கு மயக்க மயக்கமா வருது.. ஐகாரஸ் பிரகாஷ் அங்கிள் ஒழிக! :(

    ReplyDelete
  2. \\அவருக்குத் தலையைப் பிச்சுக்கணும் போலிருக்கு\\

    எங்களுக்கும் தான் தலைவி முடியல விட்டுடுங்க..;(

    \\5.பானுமதி (துரியோதனன் மனைவி)க்கும், கர்ணனுக்கும் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையும் "எடுக்கவோ, கோர்க்கவோ" என துரியோதனன் \\

    துரியோதனன் மனைவியாக வருவது பானுமதியா?? இல்ல சாவித்திரியா??

    ReplyDelete
  3. //சோகக் கதையின் காரணம் கேட்கலையே!
    //

    நாங்க தான் கேக்கலயே.. அப்புறமும் ஏன் ?? :) :)))

    //அல்லது யுத்தம் ஆரம்பிக்கும் முன்னரா//

    யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு தான் படித்த மாதிரி ஞாபகம்..

    ReplyDelete
  4. நம்ம கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்தில் ஒரு மூலையில் இப்படிப்போட்டிருந்தேன்:

    சீரியல் பாத்திரங்களின் தொடர் சாவுக்கு கலைஞர் டிவி வருகையே காரணம் -- சன் டிவி (21)

    மத்தபடி, ஐகாரஸ் இனிமே கேக்கமாட்டார்னு நானும் உறுதியாவே சொல்லிக்கறேன் :)

    ReplyDelete
  5. baleh, ஐகாரஸ் ketaru ketarunu sollitu, kadaisila idhuvum vimarsanam thaanu potinga paarunga, eppa saami, kanna katudhey idhukey....
    Nalla Jaangiri suthuvinga pola....;)

    mathapadi
    பினாத்தல் சுரேஷ் sonna adhey vaarthai "மத்தபடி, ஐகாரஸ் இனிமே கேக்கமாட்டார்னு நானும் உறுதியாவே சொல்லிக்கறேன் :)"
    naanum vazhimozhigiraen

    ReplyDelete
  6. @பொடியன், ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஐகாரஸை அங்கிள்னு சொன்னப்போ, தாத்தானே சொல்லி இருக்கலாம், நீங்க பொடியன் தானே! :)))))))

    @கோபிநாத், கோபிநாத், இப்போ எனக்குத் தான் தலையப் பிச்சுக்கணும் போல இருக்கு. துரியோதனன் மனைவி பேரு "பானுமதி" அந்தப் பாத்திரத்திலே நடிச்சது தான் "சாவித்திரி" அப்பா, ஒரு பட விமரிசனத்துக்கு இவ்வளவு சந்தேகமா? :P

    @சிங்கம், வாங்க, அடிக்கடி வராப்பலே இருக்கு? நல்வரவு, நல்வரவு,
    ஹிஹிஹி, எந்த யுத்தம்னு சொன்னா கொஞ்சம் தெளிவா இருக்கும். எங்க ரெண்டு பேருக்குள்ளே வரதையும் "மஹாபாரத யுத்தம்"னு சொல்லிக்கிறது தான் வழக்கம்! :P

    @பெனாத்தல், ஆமாம் இல்லை, நான் தான் மறந்துட்டேன், நீங்க எழுதினதை! வழக்கம்போல் படிச்சுட்டுப் பின்வாங்கிட்டேனா? அதான் மறந்துடுச்சு! நினைவு படுத்தினதுக்கு டாங்ஸு!
    ஐகாரஸைப் பத்தி உங்களுக்குத் தெரியாம வேறே யாருக்குத் தெரியும்? :))))))

    ReplyDelete
  7. ஹிஹிஹி ஆணி, பாம்பின் கால் பாம்பறியும்! இல்லை? :)))))))))
    நல்லாவே எழுதி இருக்கீங்க உங்க பதிவுலேயும்! மெதுவா வந்து கமெண்டறேன். :P

    ReplyDelete
  8. கீதா, எனக்கு தலயப் பிச்சிக்கலாம் போலெ இருக்கு. கர்ணனை விமர்சனம் செய்ய எவ்ளோ விசயம் இருக்கு. அத விட்டுட்டு கேள்வி மேல கேள்வி. என்னா இது ? படம் எடுத்தவர்கள் படம் வியாச பாரதத்தின் அடிப்படையில் எடுத்தது எனக் கூறினார்களா ? பின்னே என்ன ?

    படம் மகிழ்ச்சியாப் பாக்கணும். அதிகம் சந்தேகப்படக்கூடாது. ஆமா

    ReplyDelete
  9. ஜகாரஸ் அவர்களுக்கு ஒரு வாரம் தொடர்ந்து டீவி மெகா சீரியல் பார்க்க தண்டனை விதிக்க பரிந்துரை செய்கிறேன்..

    ReplyDelete
  10. // குந்தி ஏதோ புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு தான் கர்ணனின் தாய் என நிரூபிப்பதாய் வருகிறது//
    ஒருவேளை அது நாகாசு பட்டு பொடவையாயிருக்குமோ?.ஹிஹி.....

    ReplyDelete
  11. //"அதிலே எனக்குச் சிலசந்தேகங்கள் வந்துடுச்சு. "//
    கீதா அக்கா,தயவு செஞ்சி இந்த மெகா டவுட்களுக்கு பதில இம்போஷிசன் கொடுத்துறாதிங்க.. இப்பவே..
    நாலுதடவ கேள்விகள படிச்சதுல..
    கண்ணனின் கவசகுண்டலம்,கர்ணன் எழுதிய மகாபாரதம் -ன்னு ஒருமாதிரியா ஆகிடுச்சு...ஹிஹி..

    ReplyDelete
  12. சீடனுக்கு டவுட்டு வந்தா குருகிட்ட கேக்கலாம்..
    அந்த குருவுக்கே கொழப்பம் வந்தாக்காஆஆஆஆஅ..[தங்கப்பதக்கம் சிவாஜி கணேசன் மாதிரி படித்து என் நிலமையை புரிஞ்சிக்கவும்]ஹிஹி....

    ReplyDelete
  13. @சீனா, எதுக்குத் தான் தலையைப் பிச்சுக்கறதுனு இல்லையா? :P

    @ரசிகன், சாரி, சிஷ்யனே!, அது "நகாசு" பட்டா? அட, எனக்குத் தோணாமப் போயிடுச்சே? உங்களை மாதிரித் தாத்தா இதுக்குத் தான் வேணும்னு சொல்றது! :P

    அப்புறம் FYI "தங்கப் பதக்கம்" பார்க்கிற பாக்கியம் எனக்கு இன்னும் கிடைக்கலை, "கர்ணனே" நேத்தித் தான் பார்க்க முடிஞ்சது! :P

    ReplyDelete
  14. நேத்திகு நானும் யதெச்சையா கர்ணன் பார்த்தேன்.

    நீங்க கேட்ட கேள்விகளுக்கு யாரு பதில் சொல்றது:)))இது சினிமா பாரதம். அவ்வளவு தான். இல்லாட்ட சிவாஜி பாரதம்னு வேணும்னு சொல்லிடலாம்.
    கர்ணனுக்கு குழந்தை என்று கேட்கவே அதிசயமாக இருந்தது.
    ஆனால் ஒன்று... இதே படத்தைப் பதினைந்து வயதில் பார்த்தபோது ஒரு சந்தேகமும் வரவில்லை. நான் மிக ரசித்த படங்களில் கர்ணனும் ஒன்று.

    ReplyDelete
  15. படத்தை பார்த்த அனுபவிக்கனும்.. இப்படி ஆராய கூடாது....

    ReplyDelete
  16. தெய்வமே.......

    *சாஷ்டாங்க நமஸ்காரம்*

    ReplyDelete
  17. @valli, ம்ம்ம்ம்., எனக்கு இப்போத் தான் முதல் சான்ஸே கிடைச்சது. ஆனால் இது "தேரோட்டி மகன்" என்ற நாடகம் ஒண்ணு, யார் எழுதினதுனு நினைப்பில்லை, அதைத் தழுவி எடுத்திருக்காங்கனு நினைக்கிறேன். அந்த நாடகம் படிச்சிருக்கேன்.

    புலி, என்னதான் நடிச்சது "சிவாஜி"னாலும் லாஜிக்கா இருக்கணுமில்லை?

    @ஹிஹிஹி, ஐகாரஸ், அது!!!!!!!!!

    ReplyDelete
  18. @வேதா, என் வழி தனீஈஈஈஈஈஈஈஈஇ வழி! தெரியாது? :P

    ReplyDelete
  19. கீதா,அடுத்து ஒரு பின் நவீனத்துவ கட்டுரை வரைக, அல்லது நவீன கவிதை படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  20. @உஷா, இந்தக் கட்டுரையையே பின்னாலே திரும்பிப் பார்த்துக் கொண்டே நவீனமா இருக்குனு சொல்லிடுங்க, பின் நவீனத்துவமா ஆயிடும். வார்த்தைகளை உடைச்சுப் போட்டால் ஒரு பெரிய கவிதையே வந்துடும். எப்படி ஐடியா? முயன்று பார்க்கவும். :P

    ReplyDelete
  21. //தேரோட்டி மகன்" என்ற நாடகம் ஒண்ணு, யார் எழுதினதுனு நினைப்பில்லை//

    பி.எஸ்.ராமையா

    ReplyDelete
  22. ஐகாரஸ், என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்னு நிரூபிச்சுட்டீங்க பாருங்க, எனக்கு எழுதினவர் பேர் நினைப்பிலேயே இல்லை. பள்ளி நாட்களிலே, பள்ளியில் போட வேண்டிய நாடகத்துக்கு எனப் படிச்சதா? அப்புறம் இந்தப் படம் முன்னாலேயே பார்த்திருந்தால் ஒருவேளை நினைப்பு இருந்திருக்குமோ என்னமோ! , என்ன இருந்தாலும் இத்தனை வயசுக்கும் :P நீங்க நினைப்பு வச்சுட்டு இருக்கீங்களே! :)))))))

    ReplyDelete
  23. //@பெனாத்தல், ஆமாம் இல்லை, //

    ஒரு பின்னூட்டம் படிச்சே இப்படி கன்பியூஸ் ஆகறீங்க. படம் பார்த்து உங்களுக்கு இவ்வளவு கேள்வி வரது நியாயம்தான். :))

    ReplyDelete
  24. வாங்க இ.கொ. இப்படி அடிக்கடி வந்து போங்க. ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை தான் போங்க! நேத்திக் கொஞ்ச நேரம் "இந்தியன்" படம் பார்த்தேனா, அதிலே சில,பல சந்தேகங்கள், யாரைக் கேட்கிறதுனு யோசிக்கிறேன். நீங்கதான் சரியான ஆள், அடுத்து உங்களைத் தான் கேட்கப் போறேன்! :)))))))))))

    ReplyDelete