எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, October 13, 2007
ஆஹா வந்திடுச்சு, ஓடி வாங்க!
கொலுவுக்கு வந்து பார்த்து விமரிசனம் பண்ணின எல்லாருக்கும் நன்றி. ராத்திரி எல்லாம் பொம்மை எல்லாம் ஒரே சண்டை, பூசல், சச்சரவு. எங்க வீட்டுக் கொலுவிலேங்க, பொம்மை எல்லாம் இட நெருக்கடியில் தவிக்குது. ஒரு பெட்டி பொம்மையை எடுக்கவே இல்லை, பெரிய பொம்மை 2 அல்லது 3 தான் வச்சிருக்கு, அப்படியும் இந்த வெயிலில் எல்லாம் இப்படிப் போட்டு அடைச்சு வச்சிருக்கியேன்னு என் கிட்டே சண்டை, ஹிஹிஹி, தூக்கத்திலே தான், சொப்பனம்! நான் என்ன சொன்னேன் தெரியுமா? இது என்ன பெரிய இட நெருக்கடி, நாங்க லுஃப்தான்ஸா ஏர்வேஸில் வந்தோமே அதை விடவான்னு திருப்பிக் கத்தினேன். எல்லாம் வாயை முடிக்கிட்டது, அப்புறம் திறக்கவே இல்லையே!
சென்னை -ஃப்ராங்க்பர்ட், ப்ராங்க்பர்ட் -சென்னை வழியே லுப்தான்ஸா ஏர்வேஸில் எகானமி கிளாசில் பயணிக்கும் எங்களைப் போன்ற அல்ப ஜன்மங்கள் படும் அவதி இருக்கே சொல்லி முடியாது. போன முறை என்ன பண்ணிட்டாங்கன்னா, நடுவிலே உள்ள 4 பேர் உட்காரும் சீட்டில் நடு இரண்டு சீட்டைக் கொடுத்துட்டாங்க. யார் கிட்டே போய்ச் சொல்றது? இது என்ன ரயிலா டி.டி.ஆரிடம் சண்டை போட? ஆஹா, அந்த சுகம் வருமா டிடிஆரிடம் சண்டை போட்டு இடம் மாற்றிக் கொள்வது ஒரு அற்புத சுக அனுபவம். இங்கே என்ன செய்யறது வாயை மூடிக்கிட்டோம். அப்படியும் எங்க இரண்டு பேருக்கும் எல்லைப் பிரச்னை வந்துடுச்சு. இரண்டு பக்கத்திலேயும் உள்ளவங்களுக்கு மொழி புரியாதுனாலும் சண்டைனு புரிஞ்சு போய் ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. முறைப்புடன் அப்புறம் வச்சுக்கறேன்னு சொல்லி இரண்டு பேரும் வெற்றிகரமாய்ப் பின் வாங்கினோம். இம்முறை அதுக்கு வழியே இல்லாமல் என்னோட மறுபாதி டிக்கெட் புக் செய்யும்போதே போக வர, இரண்டு சீட்டுத்தான் வேணும்னு கேட்டு வாங்கிட்டார் ஏஜெண்ட் கிட்டே சொல்லி.
போகும்போது 22-ம் நம்பர்ங்கிறதாலே முன்னாலே கிடைச்சுடுச்சா, அதிகம் பிரச்னை இல்லை. என்ன இந்தக் கை வைக்கும் ஹாண்டில் பார் இருக்கே, அதிலே இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கையை வைக்க முயற்சி செய்வோம். இந்த வம்பே வேணாம்னு அதை எடுத்துவிட்டு, நாங்க தான் "ஆதர்சத் தம்பதிகள்" னு காட்டிக்கலாமேனு ஒரு அல்ப ஆசையில் உட்கார்ந்தோம். இப்போ வந்தது இடப் பற்றாக்குறை. எனக்கு இடமே இல்லை. எல்லாம் அவரோட ஆக்கிரமிப்பு, அநியாயம். அவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நகர்ந்து உட்காரச் சொன்னால், முறைப்பு. மிஞ்சிப் போனால், "நீ இத்தனூண்டு இருக்கே, இந்த இடம் போதும் உனக்கு, எங்க அம்மா என்னை இவ்வளவு உயரமும், பருமனுமாப் பெத்து வச்சுட்டாளே! என்னை என்ன பண்ணச் சொல்றே"ன்னு சொல்றார். என்னத்தைச் சொல்றது. சரினு இந்தத் தகராறே வேணாம்னு மறுபடியும் ஹாண்டில் பாரைப் போட்டு விட்டேன். அப்போ கை வைக்கிறதிலே மறுபடி சண்டை. இந்திய, பாக் பிரிவினைக்கு எவ்வளவு கஷ்டப் பட்டு எல்லைக் கோடு போட்டிருப்பாங்கன்னு இப்போத் தான் புரியுது! இரண்டு பேரும் கை வச்சுக்கலாம்னு சமாதான உடன்படிக்கை வாய் மொழியாக ஏற்பட்டது.
என்ன உடன்படிக்கை ஏற்பட்டாலும் என்ன? திரும்பி வரும்போது கடைசியில் போட்டுட்டாங்க, இரண்டு சீட்டுத் தான் என்றாலும், பின்னால் ஒரு "தமிழ்குடிமகன்" வந்து உட்கார்ந்து கொண்டு பியரால் தனக்குத் தானே அபிஷேஹம் செய்து கொண்டு வந்ததோடு அல்லாமல், என்னையும் கூப்பிட்டுக் கையை இப்படி வைக்காதே, தலையை நேராய் வைனு ஒரே தொந்திரவு. என் கையும், தலையும், என்னோட உடம்பில் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கும்னு அவருக்குப் புரிய வைக்க முடியாமல் கஷ்டப் பட்டேன். ஏகக் கூட்டமா, பசங்க எல்லாம் நின்று கொண்டே வந்ததில் சரிதான், ஸ்டாண்டிங் கூட அனுமதிக்கிறாங்க போலிருக்குனு ஆச்சரியப் பட்டேன். கடைசியில் பார்த்தால் எல்லாரும் இந்த 4 சீட்டில் உட்கார முடியாமல் அதுக்கு நிக்கலாம்னு முடிவு பண்ணி நின்னுட்டிருக்காங்க. தலையில் அடிச்சுக்கறதைத் தவிர வேறே வழியே இல்லை. இந்த லுப்தான்ஸாவில் சீட்டை அதிகரிச்சுட்டு, சாமான் எடுத்துப் போறதை எடை குறைச்சுட்டாங்க அநியாயமா! அதோட சாமான் எல்லாம் வேறே சென்னையில் இருந்து போகும்போது சரியா வரதில்லை. எங்க வீட்டிலே ஒரு சூட்கேஸ் கிட்டத் தட்ட ஒரு லட்சம் மதிப்பான பொருட்களுடன் வராமல் போய்க் கிளைம் பண்ணியதில் அல்பத் தனமா 22,000/- கொடுத்தாங்க.
இதை எல்லாம் ராத்திரி பொம்மைங்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வச்சதும் இப்போக் கொஞ்சம் பேசாமல் இருக்கு. கொலு படம் எங்க வீட்டுக் கொலு இல்லைன்னாலும், கொலு வச்சிருக்கறது, சுண்டல் செய்யறது எல்லாம் உண்மைதான். உங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை, என்ன செய்யறது. தலைப்புக்கும், பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்றவங்களுக்கு, இன்னிக்கு இணைய இணைப்பு வந்திடுச்சு, அதுக்குத் தான் தலைப்பு! அப்புறம் அம்பி, ஒரு விஷயம், பால்காரரும் பால் ஒரு வாரமாக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சுட்டார். ஆகையால் நல்ல காஃபி குடிக்கிறோம். உங்களுக்குத் தனியா பருத்திக் கொட்டை வாங்கி வச்சிருக்கேன். அதை அரைச்சுப் பால் எடுத்து வைக்கிறேன். கேசரிக்கும் விளக்கெண்ணெய் தயார். க்ர்ர்ர்ர்ர்,. பாட்டியா நான்? நல்ல பையன் சந்திரமெளலியைத் தூண்டியா விடறீங்க? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது! :P
Subscribe to:
Post Comments (Atom)
தேதியை மாத்தாமல் கொடுத்துட்டேன், அப்புறம் எடிட்டில் போய் மாத்தலாம்னால் அது என்னமோ வரவே இல்லை, சரினு விட்டுட்டேன். நம்ம blog form க்கு வந்துட்டுச்சு போலிருக்கு! அதான்! :P
ReplyDeleteஇதிலே அதிசயம் என்னன்னா பாக்கி எல்லாம் எடிட் பண்ண வருது, இந்த ஒரு பதிவு மட்டுமே தகராறு பண்ணுது! விசித்திரமா இல்லை?
ReplyDeleteகீதாம்மா!
ReplyDeleteதன் ஜாதி பைப்பிங் என்று டெயிலர் சொல்வார். அதாவது அதே துணியில்
பைப்பிங் வைப்பது. அதுமாதிரி
தன் ஜாதி கமெண்ட்களா?
சரி..கொலு வைத்திருக்கிறேன். வந்து
மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள்.
லூப்தான்சா அனுபவம் எங்களுக்கும் உண்டு குறிப்பாக கை வைக்கும் பிரச்சனை. நான் தான் ஒதுங்கிக்கொள்வேன். எதற்கு வம்பு என்று.
கீதாக்கா.... பதிவை படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் போங்க...
ReplyDeleteஅங்கிளுக்கு தினமும் ஒரு வேளை பட்டினி போடவும்.உடம்பு குறையும்.ஏதோ என்னால் முடிந்தது...பற்ற வைத்து விட்டேன்.
அங்கே யாரது என்னை அடிக்க ஓடி வருவது? ஐஐயோ..
சாம்பசிவம் அங்கிளா ? நான் ...எஸ்கேப்...
உங்களுக்கு மட்டும் எல்லாமே விசித்திரமா நடக்குது போல....
ReplyDeleteஅவ்வளவு மோசமா இருக்கு அந்த விமான சேவை....
நான் இது வரை அதில் போனது இல்லை... ஏர்ஹோஸ்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கேம்.... :)
ஒரு ரெண்டு நாள் வீக் என்ட் லீவுல போனா இவ்ளோ ஆட்டமா? கர்ர்ர்ர். :))
ReplyDeleteகொலுவை பத்தி சொல்லும் போது என்ன லுப்தான்ஸா புலம்பல் வேண்டி இருக்கு? :p
சபாஷ் புலி, நமக்கு எது முக்யமோ அந்த பாயிண்டை மட்டும் தான் பாக்கனும். :))
ReplyDeleteகை வைக்க இடம் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? :p
நானானி, நீங்க தான் 2 முறை கூப்பிட்டிருக்கீங்க, நான் "காட்டாறு"னு நினைச்சுட்டேன்.
ReplyDelete@ரசிகன், இப்போ டயட்டில் தான் இருக்கார். :)
@புலி, என்ன "ஜொள்ளு" அதிகமா இருக்கு? வேறே நினைப்பே கிடையாதா?
அது சரி, ஏர் ஹோஸ்டஸ் சூப்பரா இருக்கிறதா நினைச்சுட்டு லுப்தான்ஸாவுக்கு மாறாதீங்க! ஏமாந்து போயிடுவீங்க! எல்லாம் திராபை!
@அம்பி, பூரிக்கட்டை பத்தலை? ஜொள்ளு வேறேயா? க்ர்ர்ர்ர்., ரொம்பவே ஜொள்ளாதீங்க! சகிக்கலை! :P
லுப்தான்ஸா கொஞ்சம் கடியான ஃபிளைட் தான். கிட்ட தட்ட நம்ம MTC பஸ் மாதிரி தான்.
ReplyDeleteஆனா சீக்கிரமா போகனும்னா அது தான் சிறந்தது..
//சூட்கேஸ் கிட்டத் தட்ட ஒரு லட்சம் மதிப்பான பொருட்களுடன் வராமல் //
ஹ்ம்ம் same pinch.. நானும் சில பொருட்களை இழந்திருக்கேன்..
// ஏர்ஹோஸ்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கேம்.... :)//
ReplyDeleteசென்னையில் இருந்து செல்லும் லுப்தான்ஸாவில் எல்லாம் வேஸ்ட்.. :D :D
அப்பாடி நான் பதிவு போட ஒரு நாட் கிடைச்சுது:-)))))))))
ReplyDelete