எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 12, 2007

கொலு வச்சிருக்கேன், எல்லாரும் வாங்க!




என்னடா, கமென்ட்ஸ் எல்லாம் வந்திருக்கு ஒண்ணுமே பதிலைக் காணோமேன்னு நினைக்காதீங்க. வழக்கம் போல் உ.பி.ச. கமென்ட்ஸ் பப்ளிஷ் பண்ணறாங்க கடமை உணர்ச்சியோட! அவங்களுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ! இப்போ எங்க வீட்டுக் கொலு பத்திச் சில வரிகள். அம்மா வீட்டிலேயும் கொலு வைக்கிற பழக்கம் உண்டு, கல்யாணம் ஆகி இங்கே வந்தும் தொடருது, இன்னும் சொல்லப் போனால் ராஜஸ்தான், குஜராத்திலே எல்லாம் கூட நம்ம கொலு ஒரு கலக்கு கலக்கி இருக்கு. இங்கே கேட்கணுமா? ஆனால் பாருங்க, கொஞ்ச நாளாவே என்னாலே இந்தக் கீழ் அலங்காரம், அதான், பார்க், தெப்பக்குளம், மலை எல்லாம் கட்ட முடியறதில்லை, ஒவ்வொரு வருஷமும் சரியாக் கொலு சமயம் எல்லாரும் பாட்டுப் பாட பயிற்சி எடுத்துட்டால் நான், இருமல் வராமல் இருக்கப் பயிற்சி எடுத்துப்பேன். அப்போதான் மழையும், வெயிலுமா மாறி மாறி வருமா? எல்லார் வீட்டுக்கும் போனால் நம்ம இருமல் தான் பாட்டுக் கச்சேரி செய்யும். அதனால் என்னோட மறுபாதி ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டாச்சு, பேசாமல் படியில் நாலு பொம்மையை வைச்சுட்டு உட்காருன்னு. நானும் சேர்ந்து உட்கார்ந்தால் படி தாங்காதேனு தோணும். இருந்தாலும் அந்த மாதிரித் தான் செய்துட்டு வரேன். ஹிஹிஹி, படியில் உட்காருவது இல்லை. பேசாமல் பொம்மையை வச்சுட்டுக் கீழே மேலே எல்லாம் அலங்காரம் செய்யறதை விட்டாச்சு.

இந்தப்படி கட்டறதுக்கு ஒவ்வொரு வருஷமும், நாங்க படற கஷ்டம் இருக்கே, ஊஞ்சலைக் கழட்டிப் பலகையை எடுத்துப்போம். உட்காரவும், படுக்கவும் உள்ள தீவானையும் எடுத்துக்குவோம். அப்புறம் அக்கம்பக்கம் வீடு கட்டினாலோ அல்லது, தெரிஞ்சவங்க கிட்டேயோ சொல்லி வச்சு 100 செங்கல் வாங்கி வச்சுக்குவோம். வீட்டிலே உள்ள ப்ளைவுட் எல்லாம் எடுத்துத் தயாரா வச்சுப் படி கட்டுவோம். அப்படியும் 5 படி தான் வரும். அந்த 5 படிக்குள்ளே எல்லா பொம்மையையும் வைக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். அப்படியும், மரச்சொப்புக்கள், பித்தளை, வெங்கலப் பாத்திர செட்டுக்கள், செட்டியாரின் கடைபோடும் செட்டுகள், சங்கு, கிளிஞ்சல் வகைகள், மற்ற இதர அலங்காரப் பொருட்களை வைக்க முடியாது. பொம்மை எல்லாமே இட நெருக்கடியில் தவிக்கும். சாஸ்திரப் படி மேல் படியில் முதலில் தசாவதார செட் வைக்கணும். நான் பிறந்தப்போ (ஹிஹிஹி, நிஜம் தான்) வாங்கினாங்களோ என்னமோ தெரியலை, அது ரொம்பவே சின்ன செட்டா இருக்குமா, பக்கத்தில் உள்ள பெரிய பொம்மைகள் மறைக்கும். சரினு குருவாயூரப்பன் பொம்மையை விராட புருஷனா உருவகம் செய்து நடுவில் வச்சுட்டுப் பக்கத்தில் தசாவதாரத்தை வரிசைப் படி வச்சால், இந்தக் கூர்மாவதாரத்துக்குக் கோபம் வந்து, மூக்கில் இருக்கும் பூமி உருண்டையை உடைச்சு வச்சுடுச்சு. மற்றப் பொம்மைகளும் பயங்கர இட நெருக்கடின்னு கோவிச்சுட்டு திரும்பிக்கிட்டது. என்ன செய்யறதுன்னு புரியலை.

புலி பக்கத்தில் மானையும், கருடன் பக்கத்தில் கிளியையும் வைக்க வேண்டி இருக்கு. பொம்மையின் அமைப்பு அந்த மாதிரி இருக்கு. ஏதோ ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி வச்சால், ராத்திரி எலி வந்துடுது. இது நிஜ எலி. எலியோட ஒரு என்கவுன்டர் நடத்தி அதைச் சாகடிக்கலாம்னால் அது "எதிரி" படத்திலே மாதவன் தப்பிக்கிற மாதிரி கூட்டத்தோடு கூட்டமா ஓடிப் போயிடுச்சு. ஒரே தலை சுத்தல். அப்புறம் எலியை விஷம் வச்சுத்தான் கொல்லணும்னு முடிவு செஞ்சிருக்கோம். ரகசியமா அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. இத்தனை அமர்க்களத்திலேயும் இன்னும் மோட்டார் சரியாகலை, ஏ.ஸி.னு எழுதிப்பார்த்துட்டு இருக்கோம், ஃபிரிட்ஜ்னால் என்ன சீட்டாட்டமானு கேட்டுட்டு இருக்கோம். பி.எஸ்.என்.எல். காரங்க கிட்டே இன்டெர்னெட்டுக்குப் போனால் (அம்பி, வேறே வழியே இல்லை, சொல்லித் தான் ஆவேன், நீங்க இதைப் படிக்காமல் தாண்டிப் போய்க்குங்க) அங்கே நாங்களே செர்வெர் ஓவர்லோடிலே இருக்கிற கனெக்க்ஷனை டிஸ்கனெக்ட் செய்துட்டு இருக்கோம், எதுக்கும் அப்ளிகேஷனை வாங்கி எழுதிக் கொடுங்க, ஒரு மாசத்திலே சரியாப் போச்சுன்னால் உங்களுக்கு கனெக்க்ஷன் வரும்னு சொல்லிட்டாங்க, சரினு ஏர்டெல்லுக்குப் போனால் இதோ வீட்டுக்குப் ப்ளானை எடுத்துட்டு வரோம்னு சொன்னாங்க, இன்னும் வீட்டைத் தேடிட்டு இருக்காங்க, போலிருக்கு, பத்து நாளா வரலை, தலை விதியை யாரால் மாத்த முடியும்னு, முந்தாநாள் என்னோட மறுபாதி வி.எஸ்.என்.எல்லுக்குப் போய்ப் பணம் கட்டிட்டு வந்துட்டார். இதோ, வந்துடும்னு மூணு நாளா சொல்லிட்டு இருக்காங்க, மூணு நாளா வீட்டை விட்டு வெளியே போக முடியலை. யாராவது வீட்டிலே இருக்க வேண்டி இருக்கு. அதான் ஓ.சி. கணினியிலே வேலை செய்யக் கூட வர முடியலை. எதிர்க் கட்சிகளுக்கு சந்தோஷமா இருக்கும். அவங்க சதி பலிச்சுடுச்சுனு. ம்ம்ம்ம்., புயல் போல் பொங்கி, கடல் அலை போல் வீறு கொண்டு எழுந்து, இதோ வந்துடுவேன். அதுவரை எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!! மறந்துட்டேனே, கொலுவுக்குச் சுண்டல் தினமும் உண்டு, உங்க எல்லார் பேரையும் சொல்லிட்டு நான் சாப்பிட்டுக்கறேன்!

கொலு படம் கடனாக் கொடுத்தப் "பிரியமான நேரம்" "கண்ணாளனே" "பிரியா"வுக்கு நன்றி.

8 comments:

  1. '"நானும் சேர்ந்து உட்கார்ந்தால் படி தாங்காதேனு தோணும்."

    எந்தப்படி மாடிப்படியா கொலுப்படியா தெளிவாச் சொல்லுங்க!
    அப்படியே சுண்டல் படமும் போட்டிருக்கலாம்.கொலு நல்லா இருக்கு.
    உங்களை என்னுடைய கொலுவுக்கு கூப்பிடவே பயமா இருக்கு வந்தால் மொத்த சுண்டலையும் சுட்டுண்டு போயிடுவீங்க

    ReplyDelete
  2. அதானா பார்த்தேன்... என்னடா படம் ஒரு மாதிரி இருக்கு.. இவங்க எழுதி இருப்பது எல்லாம் வேற மாதிரி இருக்கேனு....

    ஏதோ... சுண்டல நல்லா சாப்பிடுங்க....

    ReplyDelete
  3. எனக்கு அந்த படம் தெரியலியே

    ReplyDelete
  4. சூப்பர்..

    பொம்மையெல்லாத்தையும் பரண்லேந்து எடுக்கறுதுலேந்து அடுக்கி வைக்கிறது வரைக்கும் போரே அடிக்காத ஜாலியான அநுபவம்.

    இதுல பார்த்து பார்த்து எடுத்து வச்சப்புறம் ஏதோ ஒரு அஞ்சாம் க்ளாஸ் பையன் வந்து மூக்கு உடைஞ்சிருக்கு, தசாவதாரம் மாத்தி வச்சிருக்கீங்க அப்டி இப்டின்னு கேள்வி கேட்டு நம்ம பிராணனை எடுத்திரும்.. :((

    கடசியீல கொலு வீட்ல வச்சது இல்லியா??? :)

    ReplyDelete
  5. கொலு paathachu. Nalla irukku

    Sundal parcel anuppidunga. :)

    ReplyDelete
  6. இங்கே(யும்) சுட்ட கொலுவா?

    நம்ம வீட்டுலே எப்பவும் 'ஒரே' தீம் கொலுதான்.

    யானை & பூனை.

    நேரம் கிடைச்சா ஒரு எட்டு வந்துட்டுப்போங்க.

    எலி விஷம்? நோ நோ

    ReplyDelete
  7. ஆன்டி, நல்லா இருக்கு கொலு

    ReplyDelete
  8. கீதாம்மா! கொலு சூப்பராருக்கு!
    கீழே உள்ள செட்டிங்கஸும்தான்
    நானும் வெச்சிருக்கேன். கட்டாயம் வரணும்.!

    ReplyDelete