எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 22, 2007

"நகாசு" பட்டு தான் தீபாவளிக்கு!

கொலு முடிஞ்சாச்சு, இனிமேல் வழக்கம் போல் மொக்கை போடலாமானு நினைச்சேன். இந்த தீபாவளி ஒண்ணு வருதே, அது பத்தி ஒண்ணுமே எழுதலைனு வலை உலக மக்கள் தவிக்க
மாட்டாங்களா? தீபாவளி பர்ச்சேஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சேன். சின்ன வயசிலே
அப்பா எடுக்கிறது பிடிக்காதுங்கிற நிலைமை வந்ததிலே இருந்து நான் தான் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச மாதிரியில் எடுக்க ஆரம்பிச்சேன். பேர் தான் எனக்குப் பிடிச்ச மாதிரினு, ஆனால் அப்பா முன்னாலேயே கடைக்காரர் கிட்டே சொல்லி வச்சுடுவார். அப்போ எல்லாம் அந்த வருஷம் என்ன லேட்டஸ்ட் ஃபாஷனோ அது தான்! அப்படினு சொல்லி அப்பா இஷ்டத்துக்கு ஒண்ணுக்கு ரெண்டா டிரஸ் கிடைக்கும்

அதுக்காகக் கடை கடையா ஏறி இறங்கற வழக்கம் எல்லாம் இல்லை. ஒரே கடைதான், அதுவும் குறைந்த பட்சமாய் 20 நிமிஷங்களுக்கு மேல் என்னோட பொன்னான நேரத்தைச் செலவிட்டதில்லை! உண்மை, நம்புங்கள். புடவை கட்ட ஆரம்பிச்சதிலே இருந்து புடவை கலருக்கு மாட்சிங் ப்ளவுஸ் என்றும் அலைந்ததில்லை. அது என்னமோ தெரியலை, அந்தப் புடவை சம்மந்தப் பட்ட ஏதோ ஒரு கலரில் என்னிடம் ப்ளவுஸ் இருந்து விடும். ஆகவே டெய்லரிடம் தீபாவளிக்குத் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு ப்ளவுஸுக்கு
அலைந்ததும் இல்லை.

அம்பி போன வருஷம் அவங்க அம்மாவுக்குப் புடவை எடுக்கக் கடை கடையாய் அலைந்ததை வர்ணித்தபோது எனக்குச் சிரிப்பாய் வந்தது. எனக்குக் கல்யாணம் ஆனதும்
தீபாவளி பர்ச்சேஸ் என்றால் விஜயதசமி அன்னிக்குத் தான் என்று , நானும், என்னோட
மறுபாதியும் முடிவு செய்து கொண்டோம். ரெண்டு பேரும் ஏற்கெனவே பேசி முடிவு பண்ணி
இருப்போம், எந்தக் கடைனு! என்ன அவர் முடிவு செய்வார், நான் தலை ஆட்டுவேன்,
அதான் நடக்கும். அநேகமாய் அம்பத்தூரிலேயே இருக்கும் எங்கள் குடும்பக் கடையான "அம்பிகா ஸ்டோர்ஸ்" தான். அங்கே தானே வீட்டிலே மொத்தப் பேருக்கும் கடனில் எடுக்க முடியும். அந்த ராஜஸ்தானத்தைச் சேர்ந்த கடைக்காரருக்கும் எங்களுக்கும் பூர்வஜன்ம பந்தம் ஏதோ இருந்திருக்கணும். நாங்க எப்போவாவது இந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் புரட்டி வெளியிலே எங்கேயாவது எடுக்கலாமானு நினைக்கறதுக்குள்ளே
அவர் கூப்பிட்டு விடுவார், ஏன் வரலைனு கேட்டு.

அதை விட்டால் இருக்கவே இருக்கு ஹாண்ட்லூம் ஹவுஸும், கோ-ஆப்டெக்ஸும். இதில்
கோ-ஆப்டெக்ஸில் நிஜமாவே எல்லாத் துணி வகைகளும், அதுவும் பட்டு நல்லாவே இருக்கும். ஆனால் அப்போதெல்லாம் வருகிற அடிப்படைச் சம்பளத்துக்குக் கொடுக்கிற கடனில் எனக்கு மட்டும்தான் பட்டு எடுத்துட்டு எல்லாரும் மாத்தி மாத்திக் கட்டிக்கும்படியா இருந்திருக்கும். அப்புறம் மத்தவங்க முக்கியமாய் ஆண்கள் எல்லாம் என்னத்தைக்
கட்டிக்கிறது? ஆகவே பாலியெஸ்டர் கூடக் கோ-ஆப்டெக்ஸிலேயே எடுத்துக் கட்டி
இருக்கேன். அது சலிப்பா இருந்தால் என்.டி.சி. என்.டி.சி. பாலியெஸ்டர் துணி
சூப்பர் துணி, கிழியவே கிழியாது. நானாய்க் கத்திரிக்கோல் எடுத்துக் கிழிச்சால்தான்
உண்டு.

கடைக்குப் போகும் முன்னர் எங்க வீட்டிலே ஒரு சின்ன டிஸ்கஷன் நடக்கும்.என் கணவர் கேட்பார் என் கிட்டே என்ன எஸ்டிமேட்னு முதலிலேயே சொல்லிடுனு,ஏதோ உலக வங்கி கிட்டே கடன் கேட்கும்படியா ஆயிடுச்சேங்கிற நினைப்பிலே. எனக்கு எப்படி முன் கூட்டியே இது தெரியணும்னு அவர் நினைப்பார்ங்கிறது இன்னி வரை எனக்குப் புரியாத புதிர். சிலசமயம் 500/-ரூக்குள் எடுக்கணும்னு நினைச்சால், அது 50, அல்லது 100 வரை கூட ஆகிறது உண்டு. அதுவும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கப் போவதும் இல்லை. நேரே
போய்த் துணியை எடுத்துட்டு ஃபார்மில் ஃபில்-அப் செய்து கொடுத்தால் தீபாவளிக்கு அடுத்த மாசச் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்க ஆரம்பிப்பாங்க.

அதிலேயும் கோ-ஆப்டெக்ஸுக்கு வருகை தரும் நம்ம மாதிரி நடுத்தர ஆத்மாக்கள்
சிலருக்கு எங்க ஃபார்மில் உள்ள தொகையே விஸ்வரூபமாய்த் தெரியும். புகை விடுறது நல்லாவே தெரியும். அப்போ அவங்க நிலைமை இன்னும் மோசம், நாம் பரவாயில்லைனு சமாதானப் படுத்திப்பேன். இந்த பட்ஜெட்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே! நான் ஒவ்வொருத்தர் பேரையும் எழுதி அவங்க பேருக்கு முன்னால் ஒருத்தருக்கு இத்தனை ரூபாய்
அதிக பட்சம்னு போட்டுக் கொடுப்பேன் முன்னாலேயே ஒரு 100ரூ வரை எல்லாருக்கும் ஜாஸ்தியாவே போட்டுடுவேன்.என்னோட கொட்டேஷனை, எங்க வீட்டு நிரந்தரப் பிரதம+நிதி அமைச்சர் (இன்னும் அவர்தான் கெட்டியாப் பிடிச்சுட்டு இருக்கார். :P) அதைப் பார்த்துட்டுச்
சில,பல கட் செய்துவிட்டு (எல்லாம் ஆப்பீச்ச்ச்சிலே ஆடிட் அப்ஜெக்க்ஷன் போட்டுப் போட்டு, கர்னல், பிரிகேடியரை எல்லாம் அலற விட்டதின் பாதிப்புத் தான், இ.கொ. இப்போப் புரியுதா? நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு, நான் என்ன சொன்னாலும் எதிராய்ச் சொல்லுவதே என் ம.பா.க்கு வேலைனு)

அப்புறமாய் நான் ஒரு ஓபன் டெண்டர் கொடுக்கணும். அதிலேயும் சிலபல டிஸ்கவுண்டுகள்
நடக்கும். அதுக்கப்புறம் கடைக்கு இரண்டு பேரும் கிளம்புவோம். என்னைப் பார்த்துப்
பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாத என் மாமியார் வெற்றித்
திலகம் இட்டு வழி அனுப்ப இரண்டு பேரும் போவோம். வழியில் ஒரு ஜூஸ்,
இல்லைனா ஒரு காஃபி, டிஃபன்? ஒரு கடலை மிட்டாய்? மூச்! சாயந்திரம் டிஃபனுக்கு வீட்டுக்கு வந்துடணும். நாங்க சாப்பிட்டுட்டுக் கிளம்பும்போதே மணி 12-00 ஆகி இருக்கும். 4 மணிக்குள் வீட்டுக்கு வரணும்னு முடிவு பண்ணிட்டு (அவர் தான் முடிவு பண்ணுவார் வழக்கம்போல்) போவோம்.

அங்கே பையன், பொண்ணு, அவரோட தம்பி, அப்பா, அம்மா வரை ஒண்ணும் பிரச்னை வராது. கடைசியில் அவருக்கு வேஷ்டி மட்டும் போதும்னு தியாகம் பண்ணிட்டு என்னோட
பட்ஜெட்டுக்கு வருவார். இந்தப் புடவையா, நல்லாவே இல்லைம்பார். எனக்கு
என்னமோ அது தான் உலகத்திலேயே உசத்தியாய்த் தெரியும். நாங்க புடவை
செக்க்ஷனுக்கு வரும்போதே 2-00 மணி ஆகி இருக்கும். இந்தக் கலர் உனக்கு
நல்லா இருக்காது, அந்தக்கலர் எனக்குப் பிடிக்கலைனு சொல்லிட்டுக் கடைசியில்
அவருக்குப் பிடிச்ச பச்சைக் கலரிலேயே எனக்கு ஒரு புடவை செலக்ட் செய்வார்.
ஏற்கெனவே அந்தப் பச்சையில் என் கிட்டே 6 புடவையாவது இருக்கும். சொன்னால் அதனால் என்ன? இது ஆலிவ் க்ரீன், மண்டு, உனக்கு இந்தக் கலர் நல்லா இருக்கும், இந்தக் கலரோ, டிசைனோ இதுவரை நீ கட்டினதே இல்லைனுடுவார். இப்போப் புரியுதா மாட்சிங் ப்ளவுஸுக்கு ஏன் அலையலைனு. அதான் பச்சை, பச்சையா ஏகப் பட்ட ப்ளவுஸ் இருக்குமே! ஆனால் ஒண்ணு, 15 லிருந்து 20 நிமிஷத்துக்குள்ளே எடுத்து முடிச்சுடுவோம். நானும் ஒருவழியா மனதைத் தேத்திட்டு வந்துடுவேன்.

இப்படியாக என் கணவருக்குப் பிடிச்சப் பச்சைக் கலரின் கிட்டத் தட்ட ஒரு 20,25
புடவையாவது கட்டி இருப்பேன். எங்க அப்பா வேறே மாதிரி. அவருக்குப் புடவை
என்றால் பட்டுத் தான். அதுவும் எனக்கு என்றால் அரக்குக் கலர் தான். அரக்கில்
என்ன எல்லாம் ஷேட் உண்டோ அதில் எல்லாம் வாங்கி விடுவார். அவரிடமும்
நம்ம பாச்சா ஒண்ணும் பலிக்காது. அப்படியே வேறே கலரில் வாங்கிட்டு வந்துட்டாலும் உடனேயே ஊரையே கூட்டி இந்தக் கலர் நல்லாவே இல்லை, உடனே மாத்தச் சொல்லுங்கனு சொல்லிட்டு அன்னிக்கு ஃப்ளாஷ் நியூஸிலும் போய்ச் சொல்லிட்டு வருவார்.

இப்போப் பையன் கொஞ்சம் மாடர்னா இருக்கானே, அவனாவது கொஞ்சம் மாறுதலாய் எடுத்துத் தருவான்னு நம்பினேன். கடைசியில் பார்த்தால் மஞ்சள் கலர் அவனுக்குப் பிடிக்குமா, அந்தக் கலரிலேயே ஒவ்வொரு முறையும் புடவை வாங்கி வர ஆரம்பிச்சான்.
வேணாம்பானுட்டேன். வெளியே போனால் பச்சைப் புடவை கட்டும்போது பச்சைக்
காளினும், அரக்குக் கட்டும்போது சிவப்புக் காளினும், மஞ்சள் கட்டும்போது மஞ்சள்
காளினும் இன்னும் எத்தனை நாள் யார் பேர் வாங்கறது? இந்த முறை வித்தியாசமாய்ப் புடவை வாங்கணும்னு நினைச்சேன். நல்லிக்கெல்லாம் வரமாட்டேனு எங்க வீட்டு சர்வாதிகாரி சொல்லிட்டதாலே அம்பிகா ஸ்டோர்ஸிலேயே திருப்தி அடைய வேண்டியதாப் போயிடுச்சு. விஜயதசமி அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை 4-30 லிருந்து 6-00 வரை ராகு காலம்னு 4 மணிக்கே புறப்பட்டோம். 4-10க்குக் கடைக்குப் போய்ப் புடவை எடுத்து பில் போட்டுப் பணம் கொடுத்து 4--30க்கு வீட்டுக்குத் திரும்பியாச்சு. கலர் என்னனு கேட்காதீங்க.
பச்சையில் இரண்டும், மஞ்சளில் ஒன்றும்.

:P :P :P

பி.கு. அம்பி, நீங்க எடுக்கிறதாச் சொன்ன "நகாசு" பட்டு மட்டும் வேறே கலரில் எடுத்துட்டு வந்துடுங்க. பச்சை, மஞ்சள், அரக்கு வேணாம். கல்யாணத்துக்கு எடுத்து வச்ச ரிவெர்சிபிள் புடவையும் மறக்காமல் எடுத்துட்டு வந்துடுங்க. டாங்ஸு, டாங்ஸு!

33 comments:

  1. //அம்பி, நீங்க எடுக்கிறதாச் சொன்ன "நகாசு" பட்டு மட்டும் வேறே கலரில் எடுத்துட்டு வந்துடுங்க//

    சாமியே சைக்கிளில் போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! :p

    இன்னும் தங்கமணிக்கே புடவை எடுக்கலை. பட்ஜெட்டுல துண்டு, வேட்டி, விழுந்தா கூட பரவாயில்லை, ஜமுக்காளம் விழக் கூடாதே!னு பயந்து போய் இருக்கேன்.

    முதல்ல என் மொய் பணம் 5001 எடுத்து வைங்க. மஞ்ச கலரில் மாட்சிங்க் பிளவுஸ் எடுத்து வரேன் பெங்க்ளூரில் இருந்து. :)))

    ReplyDelete
  2. மொத்தம் மூணு கலரு. அதுக்கு இம்புட்டு நீட்டி முழக்கலா? நல்லா இருங்கம்மா நல்லா இருங்க!

    ReplyDelete
  3. என்ன கொடுமை இது சரவணா! :P அம்பி, இதென்ன எடுத்து வச்ச புடைவையைக் கூட மறந்துடப் போறீங்க. உங்க பட்ஜெட்டிலேயே ஜமுக்காளம்னால் நான் எல்லாம் எங்கே போக? :P :P அப்புறம் அந்த 5,001-ல் முதலில் உள்ள 5 ஐயும் அப்புறம் கடைசியில் உள்ள 1 ஐயும் எடுத்துட்டு நடுவில் உள்ளது பத்திரமா உங்களுக்கே உங்களுக்குனு வச்சிருக்கேன்.

    ReplyDelete
  4. வேதா(ள்), கடமை உணர்ச்சி தவறாமல் நான் எழுதறேனே, அதைப் பாராட்டுங்க! :P

    இ.கொ. என்ன அடிக்கடி காணாமல் போறீங்க? இப்போக் கொஞ்சம் மாத்திக் கேட்டுட்டேன். சரியா? :P
    ஹிஹிஹி, அங்கே தீபாவளி பர்சேஸுக்குத் தங்கமணியோட நியூ ஜெர்சிக் கடைகள் எல்லாம் போயிட்டு வந்தீங்களாமே!

    ReplyDelete
  5. மேடம், எத்தனையோ முறை கடைகளுக்கு சென்றிருக்கிறேன், துணிகள் வாங்க.. எடுத்துப்போட்ட ஒன்றில் ஐந்தே நிமிடத்தில் என்னுடைய தேடுதல் வேலை முடிந்து போயிருக்கிறது.. என் அம்மாவுக்கு பட்டுப்புடவை எடுத்த போது கூட அப்படித் தான்.. அதிக நேரம் செலவு செய்தது கிடையாது.. அந்த புடவையை எல்லோருமே நன்றாய் இருக்கிறது என்று சொன்னார்கள்..அதில் சூட்சமம் என்னவென்றால், கொஞ்சம் அதிக நேரம் எடுக்கிறது என்றால் அதன் பிறகு நான் ஒன்றுமே வாங்காமல் வெளியில் வருவது தான் நிகழ்ந்திருக்கிறது எப்போதுமே.. நமது ஆஸ்தான சென்னைக் கடை சென்னை சில்க்ஸ் தான், மேடம்

    ReplyDelete
  6. // கொலு முடிஞ்சாச்சு, இனிமேல் வழக்கம் போல் மொக்கை போடலாமானு நினைச்சேன். //
    அட..நானும் குருவ பின்பற்றும் சீடனாயிருக்க வேணாமா?.அதனால இந்த வாரம் "மொக்கை" வ்வ்வாரம்(ஏப்பம் விடும் குரலில் படிக்கவும்).

    // குறைந்த பட்சமாய் 20 நிமிஷங்களுக்கு மேல் என்னோட பொன்னான நேரத்தைச் செலவிட்டதில்லை! //
    டீச்சர் அங்க பின்னாடியிருந்து சாம்பு மாமா.நம்பாதிங்க..நம்பாதிங்க ங்கிற மாதிரி சைலண்டா கையசைக்கிறார் பாருங்க...

    // நானும், என்னோட
    மறுபாதியும் // நல்லாயிருக்கே வார்த்தை..தமிழ் டீச்சர் -ன்னாக்கா சும்மாவா?

    // அவர் முடிவு செய்வார், நான் தலை ஆட்டுவேன்,// "நம்ப முடிய வில்லை,வில்லை,வில்லை "(ஒன்னுமில்ல ரேடியோவில பழய பாட்டுத்தேன்).

    //குடும்பக் கடையான "அம்பிகா ஸ்டோர்ஸ்" தான். ,கோ-ஆப்டெக்ஸில் நிஜமாவே எல்லாத் துணி வகைகளும், அதுவும் பட்டு நல்லாவே இருக்கும். //
    கீதா அக்கா.. இந்த அட்வடைஸ்மெண்டுக்கு எவ்வளவு பணம் வாங்கினிங்க?...


    //உனக்கு இந்தக் கலர் நல்லா இருக்கும், இந்தக் கலரோ, டிசைனோ இதுவரை நீ கட்டினதே இல்லைனுடுவார்.//
    உண்மையிலேயே நீங்க சாம்பு மாமாவை பாராட்டனும்.பல பேரு தன்ன கணவர்,அவருக்காக தான் செஞ்சிக்கிர சின்ன சின்ன அலங்காரத்த கூட கவனிக்கிறதில்லன்னு புலம்பரத்த கேட்டிருக்கேன்.அவரோ உங்க கிட்ட உள்ள புடவை முதல் கொண்டு,நெனப்பு வச்சிருக்கார்.

    அந்த நாகாசு பட்டு கெடச்சதும் ,புடவையோட படத்த பதிவுல போடுங்களேன்.நானும் அம்மாவுக்கு வாங்குவேனில்ல...

    ReplyDelete
  7. ambikku.....
    // இன்னும் தங்கமணிக்கே புடவை எடுக்கலை. பட்ஜெட்டுல துண்டு, வேட்டி, விழுந்தா கூட பரவாயில்லை, ஜமுக்காளம் விழக் கூடாதே!னு பயந்து போய் இருக்கேன். //

    ஹா..ஹா... அம்பி அப்படியே பட்டு பொடவையும் விழுதான்னு பாக்கவேண்டியது தான..நல்லாயிருக்கு..
    [நல்லவேளை நா இன்னும் பேச்சிலர் ..]

    ReplyDelete
  8. //கிட்டத் தட்ட ஒரு 20,25 //

    Enna comma thappa potutinga pola ;) 2,205 thaneh podanum :)

    ReplyDelete
  9. கர்னல், பிரிகேடியரை எல்லாம் அலற விட்டதின் பாதிப்புத் தான்
    அதெல்லாம் பழையகதை இப்போ அடக்கம் அமரருள் உய்க்கும் நாங்கதான் பாத்தோமே.

    இப்படி ஒரு உஸ்மான் ரோடு பக்கம் வந்து வாங்கறது.

    ReplyDelete
  10. கீதா, பச்சைக் காளி, பவளக் காளி, மஞ்சக்காளி இதெல்லாம் தஞ்சையிலே பிரபலம். நீங்க தஞ்சையா ?? ( என்னோட ஒரு பதிவிலே இது பத்தி எழுதி இருக்கென்)

    ம.பா முடிவெடுப்பாரா ?? யார் கிட்டே கதெ விடுறீங்க ? அவரைப் பாத்தாலே பாவமா இருக்கு.

    மாமா பிரதமர் + நிதி ...ம்ம்ம்ம்ம்ம்.
    நீங்க சோனியாவா ?? Good

    கடலை மிட்டய் கூட வாங்கித் தர மாட்டாரா சாம்பு மாமா ?? ம்ம்ம்ம் பாவம் நீங்க

    ReplyDelete
  11. //......போட்டுக் கொடுப்பேன்....//

    அப்ப இருந்தெ இப்படித்தானா?:-)

    கோபாலுக்கு பட்ஜெட் பிரச்சனை இல்லை.

    எப்படி?

    இங்கே எங்கூர்லேதான் புடவைக்கடையெ இல்லையே!

    (அதுக்காக விட்டுறமுடியுமா? இதைச் சொல்லிச்சொல்லியே இந்தியா வரும்போது நல்லி, சென்னை சில்க்ஸ்,குமரன்னு கொஞ்சம் பூந்து வெள்ளாடிருவேன்)

    ReplyDelete
  12. கார்த்திக், ரொம்ப நன்றி, பலநாட்கள் கழிச்சுத் தலையைக் காட்டினதுக்கு, அப்புறம் இங்கேயும் இதே கதைதான், நான் வாங்கற புடவை எல்லாம் எங்கே வாங்கினேன்னு அக்கம்பக்கத்திலே மண்டையை உடைச்சுக்கிறாங்க! :)))))))

    ReplyDelete
  13. ரசிகன், ஒவ்வொரு பதிவுக்கும் போய் என்னை உங்க தமிழ் டீச்சர்னு சொல்லிக்கிட்டு இருக்கிறதுக்கு உங்க மேலே அவதூறு வழக்குப் போட்டிருக்கேன். சம்மன் வரும். :P :P

    ReplyDelete
  14. @ரசிகரே, அம்பி கூட மட்டும் கூட்டு அல்லது கறியோ சேர்ந்தால் இருக்கு உங்களுக்கு! அது!!!!!!!!!! நினைப்பிருக்கட்டும்! :P :P

    ReplyDelete
  15. ஆணி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன? ஆணி கம்மியா இருந்தால் நான் தான் அகப்பட்டேனா? நறநறநறநற

    ReplyDelete
  16. @தி.ரா.ச.
    உங்க வீட்டை உஸ்மான் ரோடுக்கு மாத்திட்டீங்களா என்ன? :P அந்தக் கூட்டத்தில் யார் சார் வந்து வாங்குவாங்க? :P

    ReplyDelete
  17. @சீனா, அதான் வேலை மெனக்கெட்டு அபி அப்பா வீட்டுக்குப் போய்த் தஞ்சைக்கும் எனக்கும் என்ன உறவுனு தெரிஞ்சுட்டு வந்தாச்சு இல்லை? அப்புறம் இங்கே வந்து என்ன கேள்வி?
    என்னோட மறுபாதி தான் கும்பகோணம் மடத்துத் தெரு மாரியம்மன் கோவிலுக்கு வேலை மெனக்கெட்டுக் கூட்டிப் போய் எல்லாக் காளிகளையும் அறிமுகம் செய்து வைத்தார். :P :P போதுமா? சந்தேகம் தீர்ந்திருக்குமே? :))))))))))

    ReplyDelete
  18. ம்ம்ம்ம் துளசி, "கொடுத்து வைத்தவள் நீயே!" பாடிக்குங்க டி.எம்.எஸ். குரலிலே! :))))))))

    ReplyDelete
  19. Hello Geetha paati,
    //வெளியே போனால் பச்சைப் புடவை கட்டும்போது பச்சைக்
    காளினும், அரக்குக் கட்டும்போது சிவப்புக் காளினும், மஞ்சள் கட்டும்போது மஞ்சள்
    காளினும் இன்னும் எத்தனை நாள் யார் பேர் வாங்கறது//

    - unga kitta pudicha vishayamey ithuthaan, appappa unmayai ungavayala otthukkareengaley........:)
    Regards,
    Ganeshan

    ReplyDelete
  20. ஆஹா சூப்பரா எழுதியிருக்கீங்க
    //
    அப்பா எடுக்கிறது பிடிக்காதுங்கிற நிலைமை வந்ததிலே இருந்து நான் தான் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச மாதிரியில் எடுக்க ஆரம்பிச்சேன்
    //
    எனக்கு இந்த நிலை வற்றதுக்குள்ள 26 - 27 வயசாயிடிச்சு :-(

    இப்ப அதுக்கெல்லாம் சேத்து வெச்சு சில சமயம் மாசத்துக்கு 3,4 பர்ச்சேஸ் கூட ஆயிடுது. இப்பல்லாம் பசங்களொட ட்ரெஸ் விலை ரொம்ப 'சீப்'பா ஆன மாதிரி தெரியுது.

    //
    எந்தக் கடைனு! என்ன அவர் முடிவு செய்வார், நான் தலை ஆட்டுவேன்,
    அதான் நடக்கும்.
    //
    நம்பிட்டோம்

    //
    நடுத்தர ஆத்மாக்கள்
    சிலருக்கு எங்க ஃபார்மில் உள்ள தொகையே விஸ்வரூபமாய்த் தெரியும். புகை விடுறது நல்லாவே தெரியும்.
    //
    எனக்கு இது பத்தி தெரியலை போன வருசம் நானும் என் அக்காவும் போய் ஒரு பங்ஷனுக்காக ஒரு 10 பேருக்கு சிம்பிளா ட்ரெஸ் எடுத்தோம் நல்லி 100ல. க்ரெடிட் கார்ட்ல பாதி லிமிட் காலி
    //
    அவர் தான் முடிவு பண்ணுவார் வழக்கம்போல்
    //
    திரும்பவும் நம்பிட்டோம்

    பச்சை, அரக்கு, மஞ்சள் நல்ல கலர்தானே
    :-))

    ReplyDelete
  21. :)

    இந்த பஞ்சாய்த்துக்காக தான் டிரஸ் எடுக்க வீட்டில் இருப்பவர்கள் கூட நான் போக மாட்டேன்... கடை அடைக்கும் நேரம் 10 மணிக்கு மேல் போய் 10 நிமிசத்தில் எடுத்துட்டு வந்து விடுவேன்... அது போல புடவை எடுக்க என் கூட என் அம்மா வர மாட்டாங்க... சரியா பாக்க விட மாட்டேனாம்...

    அது போக நான் எப்பவும் பார்த்த பார்க்கும் விசயம் இது... கடைக்காரன் காட்டும் புடவைய பாக்காம, பக்கத்தில் இருப்பவர்கள் எடுக்க புடவைய பார்க்கும் பழக்கத்தை என்னிக்கு தான் விட போறாங்க... நம்ம தாய்குலங்கள்.

    ReplyDelete
  22. பேருதான் பெத்த பேரு:)))
    நிஜமாவே நகாசுனு நினைச்சேன்...
    ஏமாத்திட்டீங்களே கீதா.
    ரொம்ப அருமையா இருந்தது புடவை ஜவுளி மகாத்மியம்.
    மாமாவையும் ஒரு வேஷ்டிப்பதிவு எழுதச் சொல்லணும் பாவம்:)))

    @அம்பி , உங்களுக்கு ஞாபகம் இருக்கு இல்லையா. நானும் ஒரு பெரிய அத்தை.
    எனக்கும் ஒரு பங்கு உண்டு.
    ரிவர்ஸிபிள் எல்லாம் வேண்டாம்.
    அந்த ப்ரிகேட் ரோடில் ஒரு சோன்பப்டி கடை இருக்குமே.பெங்காலி பேரும்மா. அதை வாங்கிண்டு வாங்கொ போறும்.:))
    ஆங்...சப்பன் பாக்./:)))

    ReplyDelete
  23. @எழுதினாச் சொந்தப் பேரிலே எழுதறது தானே? :P எதுக்கு கணேசன் பேரை வீணாக் கெடுத்துட்டு! அவன் நல்லை பையன்! இப்படி எல்லாம் எழுதவே மாட்டான்.
    (கணேசா, நீ தொலைபேசினாப்பலேவே பதில் கொடுத்துட்டேன், சரியா?)

    வாங்க வாங்க மங்களூர் சிவா, நான் போன வருஷம் மங்களூர் வந்து சில நாட்கள் தங்கி இருந்தப்போ எங்கே இருந்தீங்கனு தெரியலை. தெரிஞ்சால் ஹோட்டல் பில்லையாவது தவிர்த்து இருப்பார் என்னோட ம.பா. :P
    நல்லி 100-க்கெல்லாம் போனதில்லைங்க, அதான் சொன்னேனே, குதிரைக்குக் கண்ணில் பட்டை கட்டறாப்பலேன்னு எனக்கு, பனகல் பார்க் நல்லி தான் தெரியும். கூடுதலாய் உங்களுக்கு மட்டும் ரகசியமாத் தெரிவிக்கிறேன். இந்தப் "போத்தீஸ்" இருக்கே, அங்கே காலையில் புளியோதரையோ அல்லது சுண்டலோ, மாலையில் "கேசரி" நெய் மணக்கும் கேசரி, சுடச் சுட முந்திரிப்பருப்போடு கொடுக்கிறாங்க. அதுக்காக அங்கே போனது உண்டு. வேறே என்ன கொட்டிக்கிறதுக்குத் தான். அம்பிக்கு இந்தக் "கேசரி" விஷயம் தெரிய வேண்டாம். மற்றபடி நான் சொல்லுவது நிஜமே நிஜம்! நம்புங்க!

    ReplyDelete
  24. புலி, நாங்களும் 10 நிமிஷம் தான் எடுப்போம் ஒரு புடவைக்கு. அநேகமாய் நான் கையில் வச்சிருக்கும் புடவைதான் மத்தவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதைக் கூட கவனிச்சிருக்கீங்களே? :P

    @வல்லி, அதான் தொலைபேசும்போது சொல்லாமல் சஸ்பென்ஸில் விட்டேன். இல்லாட்டி வந்து பார்ப்பீங்களா? :P ம்ம்ம்ம்., அதென்ன, சிம்பிளா சோன்பப்டியோட நிறுத்திட்டீங்க? அங்கே பங்களூரில் "நந்தினி" milk products அளிக்கும் தூத்பேடா, திரட்டுப் பால் ரொம்ப பிரசித்தம் அம்பியை ஒரு 5 கிலோ வாங்கிட்டு வரச் சொல்லுங்க, எனக்கு மட்டும். :P அதிலே இருந்து உங்களுக்கும் கொஞ்சம் தரேன்.

    ReplyDelete
  25. ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல...(அதான் எல்லோரும் சொல்லிட்டாங்கலே..) ;))

    ReplyDelete
  26. @valli madam, ஆஹா, இன்னும் எத்தனை பேர் இது மாதிரி கிளம்பி இருக்கீங்க? ஆனா உங்க பட்ஜட் சின்னது தான், so Granted. I think the shop name is K.C.Das.


    //அம்பிக்கு இந்தக் "கேசரி" விஷயம் தெரிய வேண்டாம்.//

    நான் சென்னைல மாம்பலத்துல இருந்த போது இதுக்காகவே போத்தீஸ் போவேனாக்கும்.
    கேசரி, அதுவும் ஓசி கேசரியின் சுவையே தனி தான்! :p

    ReplyDelete
  27. @கோபிநாத், கல்யாணம் ஆகட்டும், கவனிச்சுக்கறேன். :P :P

    @அம்பி, அதானே ஓசியிலே கிடைக்கிற ஒரு பொருள் அம்பிக்குத் தெரியாமல் இருக்கிறதாவது? இந்த தீபாவளிக்காவது திராச சார் வீட்டுக்குப் போகாதீங்க, மனுஷன் தொலைபேசும்போது உங்க தொந்திரவு தாங்கலைனு அழறார்! :P :P

    சார், நீங்க சொல்ல வேண்டாம்னு சொன்னீங்களோ? :)))))))

    ReplyDelete
  28. கீதா அக்கா மொதல்ல சம்மன் வரட்டும்...நீங்க தா என்னோட தமிழ் டீச்சர்ங்கரது எங்கிட்ட ஆதாரங்கள் இருக்கில்ல.. சாம்பிலுக்கு நம்ம " கவியரசி " வேதாவோட பதிவு பின்னூட்டத்தை பாக்கவும்.

    // ஏனுங்க நான் பீல் பண்ணி எழுதியது உங்களுக்கு காமெடியா இருக்கா? இதுக்கு உங்க தமிழ் ஆசிரியை வேற பின்னாடியே வந்து ரிப்பீட் கொடுக்கறாங்க :) //

    இதுக்கும் மேல பதிவுல வரிக்கு " ஒரு வார்த்தயாவது " எழுத்துப்பிழை இல்லாம எழுதியிருக்கேனே! அதிலிருந்தே நா உங்க ஸ்டுடண்டு ங்கரது எல்லாருக்கும் தெரியும்.(அப்ப.. மத்த வார்த்தைங்க..).

    நீங்க உங்க வழக்க வாபஸ் வாங்களனா? ..நீங்க ஆன்மீக பயணம் போயி பதிவு எழுதரத்துக்காக ,எனக்கு ஒழுங்கா பாடம் சொல்லித்தரலன்னு நா ஒரு பதில் சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும்ன்னு சொல்லிக்கிறேன்.
    [பின் குறிப்பு : அதுல நம்ம சாம்பசிவம் மாமாவயும் ஒரு சாட்சியாக சேக்க வேண்டியிருக்கும்: மன்னிச்சிருங்க மாமா இன்னிக்கு உங்களுக்கு வீட்டுல சாப்பாடு கெடக்காது போல?..]

    ReplyDelete
  29. OK ,அம்பியோட கூட்டும் சேரல,பொரியலும் சேரல...ஆனா அம்பி எனிக்கு வாங்கி தர்ர பஞ்சி முட்டாயும்,வெண்ணிலா ஜஸ்கிரிமும் நீங்களும் வாங்கித்தந்தாக்கா.. நா அம்பிக்கூட கூட்டு சேரல.. இது எப்டி இருக்கு?..ஹிஹி..
    [ அம்பி..கண்டுக்காதிங்க.. டீச்சர் வாங்கித் தற்ரதுல உங்களுக்கும் பங்கு இருக்கு..]

    ReplyDelete
  30. ஆங்... இன்னொரு ஆதாரம் கெடச்சிருச்சில்ல...

    // இந்த மாதிரி ஒரு சீடன் கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ? :P எங்கே போனாலும் தப்புத் தப்பா எழுதி மானத்தை வாங்கறார். நறநறநறநறநறநற //
    இன்னு நீங்களே என்னிய Tue Oct 23, 09:45:00 PM IST அப்ப புகழ்ந்திங்கல்ல...(அப்ப நறநறன்னதுல ரெண்டு பல்லுவேற கரைஞ்சிடுச்சாமே,சாம்பு மாமா சொன்னார்).
    இன்னும் ஆதாரங்கள திரட்ட நம்ம உளவு படைக்கிட்ட சொல்லியிருக்கு..என்ன சீக்கிரம் வழக்க வாபஸ் வாங்கிடுவிங்கல்ல....

    ReplyDelete
  31. //
    வாங்க வாங்க மங்களூர் சிவா, நான் போன வருஷம் மங்களூர் வந்து சில நாட்கள் தங்கி இருந்தப்போ எங்கே இருந்தீங்கனு தெரியலை. தெரிஞ்சால் ஹோட்டல் பில்லையாவது தவிர்த்து இருப்பார் என்னோட ம.பா
    //
    எப்ப மங்களூர் வந்தாலும் மறக்காமல் தொடார்பு கொள்ளுங்கள்
    98458 95200
    mglrssr@gmail.com

    ReplyDelete
  32. //
    நல்லி 100-க்கெல்லாம் போனதில்லைங்க, அதான் சொன்னேனே, குதிரைக்குக் கண்ணில் பட்டை கட்டறாப்பலேன்னு எனக்கு, பனகல் பார்க் நல்லி தான் தெரியும்.
    //
    இந்த நல்லி100ம் பனகல் பார்க்ல தான் இருக்கு நானும் மொத தடவையா அப்பதான் போனேன்.

    //
    போத்தீஸ்" இருக்கே, அங்கே காலையில் புளியோதரையோ அல்லது சுண்டலோ, மாலையில் "கேசரி" நெய் மணக்கும் கேசரி, சுடச் சுட முந்திரிப்பருப்போடு கொடுக்கிறாங்க
    //
    ஆஹா இப்படியெல்லாம் இருக்கா எனக்குத்தான் தெரியலை சென்னைலயே இருக்குற எங்க ஆளுங்களும் ஒண்ணும் சொல்லலியே
    :-((

    ReplyDelete
  33. @ரசிகன், அதான் உங்களைச் சிஷ்ய கோடிகளில் ஒருத்தரா அங்கீகாரம் பண்ணித் தொலைச்சாச்சு, இனிமேலாவது நான் உங்க தமிழ் டீச்சர்னு சொல்லி மானத்தை வாங்காதீங்க! அதென்ன ஐஸ்க்ரீம்? இங்கே மழை கொட்டுது இப்போ! அதெல்லாம் ஒண்ணும் கிடையாது! வெறும் வெந்நீர் தான் கிடைக்கும். :P

    மானநஷ்ட வழக்குத் தனி. சம்மன் வரும். தயாரா இருங்க! :P :P

    @மங்களூர் சிவா, சென்னையின் பூகோளமே தெரியலை, மங்களூரில் எப்படிக் குப்பை கொட்டறீங்களோ? நல்லி 100 இருப்பது (வடக்கு) உஸ்மான் ரோடில், அது பனகல் பார்க் எதிரே இல்லை! :P

    அப்புறம் இந்தக் கேசரி விஷயம் எல்லாம் அதுக்கான அலையற அம்பிக்கு இன்னும் நல்லாத் தெரியும்னு அவரே வந்து சொல்லி இருக்கார் பாருங்க. ஹிஹிஹி, நான் அலையலை, சும்ம்ம்ம்ம்மாஆஅஆஆ போனேனா, கொடுத்தாங்க, சாப்பிட்டேன்! அவ்வளவுதான்! 2-ம் முறை கூடக் கேட்கலாம்னு தான். என்னோட ம.பா. தான் "அல்பம்" சொல்லப் போறாங்கனு இழுத்துட்டு வந்துட்டார்! :))))))))))

    ReplyDelete