எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 08, 2007

இன்னும் கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணுங்க!




ரொம்பவே நாளாச்சு, நான் வந்து. எல்லாரும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்கனு தெரியுது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஒருத்தி கொஞ்சம் வேலைனு வரலைனா இத்தனை சந்தோஷமா? இன்னும் ப்ராட்பான்ட் கனெக்ஷன் வரலைங்கிறது ஒரு காரணம்னா, முக்கியமான காரணம், கொஞ்சம் வேலையும் அதிகம். எல்லா ஆணியையும் பிடுங்கிட்டு வரதுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இன்னும் சில ஆணிகளைக் கொஞ்சம் கொஞ்சமா பிடுங்கிக்கலாம். அதுக்குள்ளே நவராத்திரி வந்துடும்.

எலி வேறே ரொம்பவே தொந்திரவு பண்ணிட்டு இருக்கு. ஆறு மாசமா வாடகை கொடுக்காமல் குடி இருந்துட்டு, இப்போ எங்களையே மிரட்ட ஆரம்பிச்சிருக்கு. எப்படி வெளியே அனுப்பினாலும் உள்ளே வந்துடுது. அதுகளோட குஞ்சுகளை நான் வெளியே தூக்கிப் போட்டதுக்குக் கோபம் போலிருக்கு. கடிக்க வருது! ராத்திரி இதை நினைச்சே தூங்க முடியறதில்லை. ஆனால் நாங்க எங்கே போனாலும் இம்மாதிரித் தான் குடியும், குடித்தனமுமாய் இருந்திருக்கோம். இங்கே பரவாயில்லை. பகலில் எலி வெளியே வரதில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போக் கூடவே வந்து சமைக்கும். சாப்பிடும்போதும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்து கொண்டு அதுக்கும் ஒரு தட்டுப் போட்டு சாப்பாடு பறிமாறணும்னு சொல்ற அளவுக்கு ஸ்வாதீனமாய் இருக்கும். ஒரு சாமானை வெளியே வைக்க முடியாது.

ஒரு முறை இந்த எலிகளின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் மருந்து வச்சோம். எலியும் செத்து விழுந்தது. அப்போ ராத்திரி நேரமா? தூங்கிட்டு இருந்தோம். பையன் பார்த்துட்டுச் சொன்னதும் எல்லாரும் போய்ப் பார்த்துட்டு செத்துப் போனதை உறுதி செய்து கொண்டு, காலையில் எடுக்கலாம் குளிக்கும் முன்னர்னு முடிவு செய்து வந்து படுத்து விட்டோம் காலையில் எழுந்து பார்த்தால் எலியின் பாடியைக் காணோம். தமிழ் சினிமாவில் செத்துப் போன வில்லன் மறைந்து போவது போல் மறைந்து விட்டது. தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இன்னிவரையில் அது ஓர் மர்மம்.

அப்புறம் இந்தப் பால் வேறே தொந்திரவு. அர்ஜுன் அம்மா தான் வாங்கறாங்களே, அர்ஜுன் மாதிரி நமக்கும் புத்திசாலித் தனம் வரட்டும்னு 41/2ப் பால் வாங்க ஆரம்பிச்சேன். 41/2 அவுன்ஸ் காஃபி கூடக் குடிக்கப் பிடிக்கலை. எங்க பால்காரரைக் கோயில் கட்டிக் கும்பிடணும். பொதுவா எல்லாப் பால்காரங்களும் விலையை 2 வருஷத்துக்கு ஒருமுறையாவது ஏத்துவாங்க. வாடிக்கைக் காரங்க சண்டை போடறது உண்டு. இவரிடம் நாங்க விலையை ஏத்துங்கனு பத்து வருஷமா சண்டை போட்டு இப்போ ஜனவரி 2007-ல் இருந்து தான் லிட்டர் 12 ரூக்கு ஏத்தினார். இப்போ 15 ரூ கூடக் கொடுக்க ரெடியா இருக்கோம். பால் தான் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கலை. அமெரிக்காவில் தான் வேறே வழியே இல்லை. டின்னில் அடைத்த பால், இங்கே வந்தாவது புதிய பால் கிடைக்கும்னு நம்பினதுக்கு நல்ல ஏமாற்றம் தான்.

யு.எஸ்ஸில் 1%, 2% என்று ஆரம்பித்து, பரிட்சை மார்க்குகள் மாதிரி பாலின் சதவீதம் கூடிப் போனாலும், அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. நாங்களும் ஆர்கானிக் பால், ஹோல் மில்க், என்று எல்லாம் வாங்கிப் பரிட்சை செய்து பார்த்து விட்டுக் கடைசியில் ஹாஃப் அன்ட் ஹாஃப் பாலில்தான் காஃபி கொஞ்சம் குடிக்கிறாப்போல் இருக்கும்னு ஒரு ஆய்வே செய்து கண்டு பிடித்தோம். இந்த ஹாஃப் அன்ட் ஹாஃப் பால் பத்தி ஒரு சிறப்பு நிகழ்ச்சியே இருக்கு. அதை அப்புறமா எழுதறேன். மெளலிக்கு ரொம்பவே மண்டையைக் குடைஞ்சிருக்கு, மாடு வச்சிருக்கோமானு. இதுக்காக வேலை மெனக்கெட்டு ஆணி பிடுங்கிறதையும் விட்டுட்டு தொலைபேசித் தெரிந்து கொண்டார். மாடு இருக்குனு தெரிஞ்சால் அங்கே கூட ஒண்ணு ஓட்டி விட்டிருக்கச் சொல்லுவாரோ என்னமோ? :P அப்புறம் வல்லி அங்கே சாப்பிடக் கூப்பிட்டாங்க, அவ்வளவு தூரம் யார் போய்ச் சாப்பிடறது? ஒருவேளை மைலாப்பூருக்கேக் குடித்தனம் வந்தால் வந்து சாப்பிடறேன்னு சொல்லிட்டு வச்சேன், தொலைபேசியை. நம்ம அருமை உ.பி.ச.வும் ஊரிலிருந்து வந்ததும் வராததுமா பேசினாங்க. உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்கள் தெரிஞ்சுக்கறதுக்கு அவங்களை விட்டால் யாரு நமக்குச் சொல்லப் போறாங்க?

ரெண்டு பேருக்கும் ஒரு டைலமா! மணிப்ரகாஷுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு அவங்களும், இல்லைனு நானும் சொல்லிட்டு இருந்தோம். அவங்க போய் வாழ்த்திட்டு வந்து இருக்காங்க, இருந்தும் சந்தேகம் வந்துடுச்சு. இப்போ மணிப்ரகாஷ் தான் வந்து சொல்லணும். அப்புறம் வரேன். அதுக்குள்ளே வீட்டுக்குக் கனெக்ஷன் வரணும்னு நான் வேண்டிக்கிறேன். என்னோட மறுபாதி நான் தண்ணிரில் இருந்து எடுத்துப் போடப் பட்ட மீனைப் போல் தவிப்பதாய் பிட் நோட்டிஸ் அடிச்சு விநியோகம் செய்துட்டு இருக்கார். என்னத்தைச் சொல்றது? எல்லாம் என்னோட ஹெட்லெட்டர்! அது சரி, எங்கே அபி அப்பா காணோம்? நான் வரலைன்னதும் தப்புத் தப்பாப் போஸ்ட் போட ஆரம்பிச்சுட்டாரா என்ன?

என்னத்தைச் சொல்றது? இந்தக் கணினியும் சதி வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு! பாப்-அப் ப்ளாக் ஆகிப் படம் போட வரலை, ஜி3 செய்ய முடியலை. ஒரு 4 நாள் வரலைன்னதும் இதுவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிருக்கே, பாப்-அப்பை ரிமூவ் செய்து விட்டுப் படம் போட்டிருக்கேன். ரொம்பக் கஷ்டப் பட்டு ஜி3 செய்திருக்கேன், கடவுளே, ஏன் என்னோட அனுபவங்கள் மட்டும் விசித்திரமாயே இருக்கு? :P

10 comments:

  1. இந்த காப்பி + நெட் கனக்க்ஷன் மொக்கை இன்னும் எத்தனை நாளைக்கோ? :)))

    சொல்ல மறந்துட்டேனே, தாமிரபரணி மகாத்மியம் சேர வேண்டியவங்க கைல சேர்த்துட்டேன். :p

    ReplyDelete
  2. //சொல்ல மறந்துட்டேனே, தாமிரபரணி மகாத்மியம் சேர வேண்டியவங்க கைல சேர்த்துட்டேன்.//

    சேர்த்தது மட்டுமா?, பதிவிடவும் சொல்லவில்லையா? :-)

    கீதா மேடம், உங்களுக்கு இன்னுமொரு நீயுஸ், நானும் அம்பியும் தூரத்து சொந்தமாக்கும்...நேற்றுத்தான் தெரிஞ்சுது.....

    ReplyDelete
  3. //மெளலிக்கு ரொம்பவே மண்டையைக் குடைஞ்சிருக்கு, மாடு வச்சிருக்கோமானு. இதுக்காக வேலை மெனக்கெட்டு ஆணி பிடுங்கிறதையும் விட்டுட்டு தொலைபேசித் தெரிந்து கொண்டார். மாடு இருக்குனு தெரிஞ்சால் அங்கே கூட ஒண்ணு ஓட்டி விட்டிருக்கச் சொல்லுவாரோ என்னமோ? //

    கண்டிப்பா இல்லை...ஊர்ல பாட்டி வைத்திருந்தார்....அந்தமாதிரி நீங்களும் வெச்சிருக்கீங்களோன்னு ஒரு சந்தேகம்.....:-)

    ReplyDelete
  4. வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன் தலிவி வால்க:-))

    ReplyDelete
  5. அப்படியே ஆகட்டும் தலைவியே...

    ஆரோக்கியா பால் வேண்டாம் என்பது என் எண்ணம்.. ஆவின் பெட்டர்...

    ReplyDelete
  6. //இந்த காப்பி + நெட் கனக்க்ஷன் மொக்கை இன்னும் எத்தனை நாளைக்கோ? :)))//

    ரிப்பீட்டே!

    ReplyDelete
  7. \\கடவுளே, ஏன் என்னோட அனுபவங்கள் மட்டும் விசித்திரமாயே இருக்கு?\\

    அதுதான் எங்களுக்கும் புரியல....;)

    ReplyDelete
  8. //மணிப்ரகாஷுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு அவங்களும், இல்லைனு நானும் சொல்லிட்டு இருந்தோம். அவங்க போய் வாழ்த்திட்டு வந்து இருக்காங்க, இருந்தும் சந்தேகம் வந்துடுச்சு. இப்போ மணிப்ரகாஷ் தான் வந்து சொல்லணும். //

    vanthutten,

    amamm.enakku thirumanam mudinchuduchu.

    nanthan invitation nama groupku anupinene..

    Aug 27 than mudinchathu..

    matrapadi ungal valthukkalai ethir parthu kathu irukkum

    -thondan mani...

    ReplyDelete
  9. //ஊர்ல பாட்டி வைத்திருந்தார்....அந்தமாதிரி நீங்களும் வெச்சிருக்கீங்களோன்னு ஒரு சந்தேகம்//

    @m'pathi, ஹா ஹா! இதுக்கு பேரு தான் உள்குத்தா? :p

    @மணி, வாழ்த்துகளோட அப்படியே மொய்யும் சேர்த்து வாங்கிக்கோ! விட்ராத என்ன? :)))

    ReplyDelete
  10. அம்பி மொய் எல்லாம் மேடம் விஷயத்தில் பொய்.உனக்கே இன்னும் மொய்ப்பணம் வரவில்லை.

    இல்லாத நெட்கனெக்ஷனுக்கு 3 பதிவாஇது மொக்கை மட்டுமல்ல பொக்கைகூட

    ReplyDelete