எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 15, 2009

நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள்! 1

கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ப் பண்டிதர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் நந்தன் சரித்திரம் எழுதப் பட்டிருந்த வேளை. சேக்கிழாரால் எழுதப் பட்டிருந்த பெரிய புராணத்தில் வரும் "திருநாளைப் போவார்" என்னும் சரித்திரம் தான் பாரதியார் அவர்களால் நந்தன் சரித்திரமாய் எழுதப் பட்டது. அந்நாளில் பிரபலமாகக் கவி பாடும் திறன் பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள் சேக்கிழாரின் திருநாளைப் போவார் சரித்திரத்தில் உள்ள உண்மைக்கு மாற்றாகத் தாம் எழுதிய நந்தன் சரித்திரத்தில் பண்ணை மிராசுதார் நந்தனைத் தில்லைக்குப் போகாமல் தடுத்ததாய் எழுதி இருந்தார். உண்மையில் நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் தஞ்சை ஜில்லாவின் சில மிராசுதார்கள் தங்கள் வயல்களில் "பண்ணையம்" (விவசாயம்) செய்யும் உழவர்களை ரொம்பவே துன்புறுத்தி வந்ததைக் கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏழை மக்களும் பெரும்பாலும் துன்பத்தைச் சகித்துக் கொண்டே இருந்ததையும் கண்டார். ஏற்கெனவே நந்தனார் என்னும் கீழ்க்குலம் என்று சொல்லப் படும் குலத்தைச் சேர்ந்த ஒரு நாயன்மாரின் வாழ்க்கைச் சரிதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட அவரின் இரக்க உள்ளமானது, இந்த வாழ்க்கைச் சரிதத்தைக் கவிதையாக எழுத வைத்தது. அந்தக் கவிதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் சிருஷ்டித்தார் ஒரு வேதியரை. அந்த வேதியரை மிக்கக் கொடூர மனம் படைத்தவராய்ச் சித்தரித்தார். உண்மையில் சொந்தமாய் விவசாயம் பண்ணிக் கொண்டு ஊர், ஊராகச் சிவன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நந்தனாரை ஒரு வேதியரின் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.

நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும் இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய் இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர் நினைவில் வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார் பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்: இல்லை என்பதே! பின்னர் நடந்தது. நாளைக்குப் பார்க்கலாமா?

ஆதாரம்:உ.வே.சா. அவர்களின் நினைவு மஞ்சரி, மற்றும் தெய்வத்தின் குரல். பேராசிரியரும், மிகச் சிறந்த தமிழபிமானியும் ஆனவரும், பெரிய புராணத்தை ஆய்வு செய்து இந்த விஷயத்தை உறுதி செய்தவரும் ஆன அமரர் திரு அ.ச.ஞானசம்மந்தன் அவர்களும் ஒருமுறை இதைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

14 comments:

  1. ம்ம் உண்மைகள் வெளிவரட்டும்! பேப்பரில் வரதெல்லாம் உண்மைன்னு நினைக்கிறவங்க இன்னும் இருக்காங்க இது போல....

    ReplyDelete
  2. வாங்க திவா, உண்மை சொன்னால் யாருமே வரமாட்டாங்க, பாருங்களேன்! :))))))))))))))

    ReplyDelete
  3. ஆனாலும் நாம விடுவோமா???? சொல்லறதைச் சொல்லியே தீருவோமில்ல?? :)))))

    ReplyDelete
  4. ம், என்னவோ சொல்றீங்க, கேட்டுக்கறேன். முழுசாத் தெரிஞ்சுக்க இன்னொரு நாள் காத்திருக்கணுமா?

    ReplyDelete
  5. என்னவோ எல்லாம் சொல்லலை ரத்னேஷ், உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தம் சரித்திரத்தில் எழுதி இருப்பதையே சொல்லுகிறேன். :))))))

    ReplyDelete
  6. கோபாலகிருஷ்ண பாரதிக்கு ஏன் அறவழி தவறா இறைவழி நின்ற தமிழ்ப்பிராமணகுல பெருமக்களிடம் காழ்ப்புணர்ச்சி?

    அதையும் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  7. அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித்திரத்தையும் ஒரு தடவை படிச்சுட வேண்டியதுதான்.. காது வழி செய்தி பரவுவது என்பது பொல்லாதது. கடுகை மலையாக்கும். கண்ணால் பார்க்க்கும் மலையைக் கூட தவிடுபொடியாக்கும்.

    திவாகர்

    ReplyDelete
  8. முன்பே நீங்க இது பற்றி ஏதோ ஒரு பதிவில் சொன்னதாக நினைவு....தொடருங்கள்

    ReplyDelete
  9. திவாகர் சார்,

    //அட! பெரிய புராணத்தின் நந்தன் சரித்திரத்தையும் ஒரு தடவை படிச்சுட வேண்டியதுதான்.. காது வழி செய்தி பரவுவது என்பது பொல்லாதது. கடுகை மலையாக்கும். கண்ணால் பார்க்க்கும் மலையைக் கூட தவிடுபொடியாக்கும்.//

    நந்தனார் கதையும் மேல் விளக்கமும் http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_22.html என்கிற பதிவில் இருக்கின்றன.

    ReplyDelete
  10. நட்சத்திரத் தலைவிக்கு வாழ்த்துகளும் வணக்கமும்!

    ReplyDelete
  11. உண்மையான பதிவு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வாங்க வெண்தாடிவேந்தரே, ரொம்பவே நன்றி உங்க கருத்துக்கு.

    ReplyDelete
  13. திவாகர், இது பத்திப் பெரிய புராணத்திலே இருந்தே எடுத்து எழுதின கட்டுரையையும் மறுபதிவாப் போட்டிருக்கேன். பாருங்க. அதோட பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனோட பெரியபுராண ஆய்வுக்கட்டுரை கிடைச்சா அதையும் ஒரு முறை படிச்சுக்குங்க! :))))))

    ReplyDelete
  14. ஆமாம் மெளலி, இரண்டு வருஷம் முன்னே பதிவாப் போட்டேன். இப்போ மறுபடி அதையும் எடுத்துப் போட்டிருக்கேன் பாருங்க. :))))))

    ரத்னேஷ், உங்க பதிவையும் நீங்க கொடுத்திருக்கிற லிங்குக்கும் நன்றி. சேக்கிழார் எழுதிய சூழ்நிலையையுமே, அவர் அடியார்களாய்ச் சேர்த்திருப்பதையும் சந்தேகமாப் பார்த்து எழுதி இருக்கும்போது என் போன்ற நம்பிக்கையாளர்கள் இந்த வீண் விவாதத்தில் கலந்துக்கவேண்டாமோனு தோணுது. அதனால் உங்களுக்குப் பதில் இல்லை. அதோடு உங்க பழைய பதிவையும் ஏற்கெனவேயே படிச்சிருக்கேனே! :)))))))))))))))))))

    ReplyDelete