எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 15, 2009

பெரிய புராணத்தில் நந்தன் சரித்திரம்!

Sunday, February 18, 2007

212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா?
தியாக ராஜனுக்கு ஒரே கோபம். நந்தனாரைத் தடுத்தது வேதியர் யாரும்
இல்லை என்று நான் சொன்னதற்கு. அப்புறம் இன்று தற்செயலாகச் சக்தி
விகடன் படித்தபோது அதிலும் இந்தச் செய்தி (எனக்காகவே வந்தாற்போல்)
வந்திருந்தது. இருந்தாலும் நானும் பெரிய புராணம் புத்தகத்தை (ஓசி தான்) வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போ எழுதப் போறது என்னோட சொந்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதினதை அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.

திருஆதனூரையும், அதன் செழுமையையும் வர்ணிக்கும் சேக்கிழார் அங்கிருக்கும் புலைப்பாடியைப் பற்றியும் வர்ணித்து விட்டு இத்தகைய புலைப்பாடியில் முன் ஜென்ம வாசனையால் இறைவனான சிவனை நினைந்த வண்ணம் ஒருத்தர் இருந்தார் என்றும் அவர் பெயர் "நந்தனார்"
என்றும் கூறுகிறார். அதற்கான செய்யுள் பெரிய புராணத்தில் 1051-ம் எண்ணில் வருகிறது.

"இப்படித்தாகிய கடைஞர் இருப்பின்வரைப் பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வோடும் வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளரானார்."

என்று நந்தனாரைப் பற்றிக் கூறும் சேக்கிழார் நந்தனார் உணர்வு தெரிந்த நாள் முதலாய்ப் பிறைமதியான கண்ணி மாலை சூடிய பெருந்தகையான சிவனிடத்தில் சிந்தை செலுத்தித் தன் மனதைக் கட்டுப்படுத்தி மறந்தும் தீத் தொழில் செய்யாமல் சிவனின் கீழ் தான் அடிமை என்னும் நினைப்புடன் வாழ்ந்து வந்தார்.அவருடைய தொழில் ஊருக்காக வெட்டிமைத் தொழில் செய்வது. அதற்காக ஊரார் கொடுத்த மானிய நிலத்தின் வருவாயில் வாழ்ந்தார். அதைக் குறிக்கும் செய்யுள்

"ஊரில் விடும் பறைத்துடவை உணவுரிமையாக் கொண்டு
சார்பில் வருந் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில் தொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்."

-1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே (தன்னுடைய குலத் தொழிலின் காண் இயல்பாக விளைந்த அச்சத்தினால்) போகாமல் வெளியே நின்றே தொழுது ஆடிப்பாடி வந்தவர். இவருக்கு ஒரு முறை "திருப்புன்கூர்" என்னும் ஊரில் உள்ள சிவனைத் தரிசிக்கும் ஆவல் மேலிட்டது. கோயில் வாயிலில் நின்று இறைவனைக் குறித்த துதிகள் செய்து ஆடிப் பாடிய நந்தனாருக்கு இறைவனைக் காண தனக்கு நேரே காண ஆசை வந்தது. அப்போதெல்லாம் கோயிலில் வாயிலுக்கு நேரே நந்தியைத் தவிர ஏதும் மறைக்காமல் கோயிலைக் கட்டினார்கள் போலும். நந்தனாரின் ஆசையை உணர்ந்த இறைவன் அவருக்கு அருள் செய்ய விரும்பித்
தனக்கு எதிரே இருந்த நந்தியை விலகி இருக்குமாறு பணித்தது தான் இன்று
ரொம்பவே பிரசித்தி அடைந்து இருக்கும் "சற்றே விலகி இரும் பிள்ளாய்!" என்னும் சொற்றொடர். சேக்கிழார் இதைக் குறிப்பிடுகையில் சொல்கிறார்:

"சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும்பிட வேண்டும் என நினைத்தார்கது நேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்."
-1057-ம் பாடல்என்று கூறுகிறார்.

இனி நந்தனாரின் தில்லைப் பயணம் பற்றிப் பார்ப்போம்.நந்தனார் சிவபதிகள் பலவற்றுக்கும் போய் வணங்கி உண்மையான திருத் தொண்டைச்
செய்து வாழ்ந்திருக்கும் வேளையில் தில்லைக்குச் செல்ல வேண்டும் என்ற
பேராவல் அவர் உள்ளத்தே எழுந்தது. கோயில் என்றால் சைவர்களுக்குச்
"சிதம்பரம்" என்று தற்காலத்தில் அழைக்கப்படும் தில்லை தான். தில்லைவனம் சூழ்ந்த தில்லைச் சிதம்பரத்தில் ஆடும் நடராஜரின் திருவடி
தரிசனத்திற்காக நந்தனார் தில்லை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தாலும் "நம் குலத்துக்குப் பொருந்துமோ?" என எண்ணி வருந்தி "நாளைப் போவேன்!" எனக் கூறுகிறார். யாரும் அவரைத் தடுக்க வில்லை. அவராகவே தானே தனியாக எடுத்த முடிவு தான். அதைக் குறிக்கும் பாடல்

"அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிய அணை தருதன்மை உறுகுலதோடிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான் ஏவல் எனப்போக்கொழிவார்
நன்றுமெழுங்காதல் மிக நாளைப்போவேன் என்பார்."
-1061-ம் பாடல்

இப்படிச் சொன்னவர் ஒருநாள் தில்லைப் பயணம் மேற்கொண்டார். அங்கே தில்லை வாழ் அந்தணரின் ஒழுக்கத்தாலும், தவ நெறியாலும் கவரப்பட்டு,வேதங்கள் ஓதுகிற மடங்கள் இருப்பதையும் பார்த்து
யோசிக்கிறார் மேலே செல்லலாமா என. அதற்குரிய பாடல்:

"செல்கின்ற போழ்தந்த திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந்தீவளர்த்து பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெருங் கிடையோது மடங்கள் நெருங்கினவுங் கண்டு
அல்குந்தம் குலநினைத்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்." -1063-ம் பாடல்

இவ்வாறு மூவாயிரம் ஆகுதிகள் இருக்கும் வேதிகைகள் நிறைந்த இவ்வூருக்கு உள்ளே நான் போகலாமா என யோசித்தவாறே நகர் வலம் வருகிறார். இரவும் வந்தது. எவ்வாறு நடராஜப் பெருமானின் ஆனந்தக்
கூத்தைக் காண்பது என்ற நினைப்புடனே உறங்கும் நந்தனாரின் கனவில் பிறைசூடிய பெருமான் தோன்றி அருள் செய்கிறார். முக்கண்ணனார் கூறியதாக சேக்கிழார் எழுதுகிறார்:

"இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் என்ன மொழிந்து
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளானார் அருளி அம்பலத்தே மேவினார்." -1068-ம் பாடல்

நந்தனாரைத் தீக்குள் இறங்கிப் புனிதராக மாறி பூநூல் அணிந்த தில்லைவாழ்
அந்தணருடன் நீ கோயிலுக்குள் வருவாயாக எனக் கூறிய இறைவனார்
தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் அவ்வாறே தோன்றி நந்தனார் மூழ்கத்
தீஅமைத்துக் கொடுக்கும்படிக் கட்டளை இடுகிறார். அச்சத்துடன் நந்தனாரைத்
தேடிப் போகும் தில்லைவாழ் அந்தணரைத் தீமூட்டித் தருமாறு நந்தனார் வேண்ட அவர்களும் இறைவனைத் துதித்து அவ்வாறே செய்கிறார்கள். தீயில் மூழ்கிய நந்தனார் புதுப் பிறவி எடுத்தாற்போல் மீண்டு வந்து தில்லை வாழ்
அந்தணர்களுடன் அம்பலத்து ஆடுவானின் சன்னதிக்குச் சென்று இறைவனுடன் ஐக்கியம் ஆகிறார். அதற்குரிய பாடல்கள்;

"செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந்துபி நாதம்
வந்தெழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள்பொழிந்தார்." -1073-ம் பாடல்

திருவுடைய தில்லை வாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அருமறைசூழ் திருமன்றி ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாராம் மறை முனிவர்" -1074-ம் பாடல்

"தில்லைவாழ் அந்த்ணரும் உடன் செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்." -1075-ம் பாடல்

இது தான் பெரியபுராணத்தில் நாம் காணும் நந்தனாரின் சரித்திரம். தவிர, பெரிய புராணத்தில் சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். அவர்களின் தவநெறியைப் பற்றியும், சீலத்தையும், ஒழுக்கத்தையும், சிவனையன்றி சிந்தையில் எவரையும் கொள்ளாத பாங்கையும் போற்றித் தான் பாடி இருக்கிறார். அந்தப் பகுதி நான்
சிதம்பரம் தீட்சிதர் வரலாறு எழுத எண்ணி உள்ளேன். அப்போது விரிவாக
எழுதுகிறேன். இதைத் தவிர தேவாரம் பாடுவதைப் பற்றியும் கேட்டிருந்தார்.
தேவாரம் அங்கே தினமும் பாடப் படுகிறது, குறிப்பிட்ட நேரங்களில் தேவாரம் பாடாமல் ஆரத்தி எடுக்கப் பட மாட்டாது. தவிர மார்கழி மாதம் நடராஜர் திரு உலா வரும்போது தேவாரம் ஓதுவோர் முன் சென்று தேவாரம் ஓதிக் கொண்டு போக, பின்னே நடராஜர் அதைக் கேட்டுக்
கொண்டு போக அவர் பின்னே வேதம் ஓதுவோர் வேதம் ஓதிக் கொண்டு வரும் காட்சியை இன்றும் திருவாதிரைத் திருநாளில் காணலாம்.

*************************************************************************************

இரண்டு வருஷங்கள் முன்னால் முத்தமிழ்க்குழுமத்தில் ஒருவரின் கேள்விக்காகப் போட்ட பதிவு இது. திரு திவாகர் பெரியபுராணத்தைப் பார்க்கணும்னு சொல்லி இருக்கிறார். அதுக்காகவும் தனி மடல்களில் சில நண்பர்கள் கேட்டதுக்காகவும் ஓர் மறு பதிவாகப் போட்டுள்ளேன். நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் -பகுதி இரண்டும், மனதைக் கவர்ந்த சில பதிவுகளும், தளங்களும் இதை அடுத்து வெளியாகும்படியாக அமைத்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும்.

12 comments:

  1. நந்தனார் படம் அந்நாளில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்து வந்தது.
    நல்ல தம்பி படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், கிந்தனார் கதை என்று ஒரு கதா காலக்ஷேபம் செய்வார். அதில் நந்தனாரைப் பற்றியும் சொல்வார். வேறு எதிலும் அதன் பின் கேட்டதே இல்லை.
    மார்கழி மாதம் காலை பஜனையில் தேவாரம் பாடி வந்தார்கள். எல்லாம் மாறி விட்டது. நந்தனார் பற்றி நீங்கள் சொன்னதற்கு நன்றி

    சகாதேவன்

    ReplyDelete
  2. நந்தன் சரித்திரத்தை பெரியபுராணத்தில் இருந்து எளிமைப்படுத்தி உங்கள் பானியில் அழகாஅக எழுதி இருக்கிறீர்கள். அது குறித்த என்னுடைய கேள்விகள் உள்லிட்ட என்னுடைய பழைய பதிவொன்றிலிருந்து இப்போதைக்கு RELEVENT என்று நான் கருதிய பகுதிகளை மட்டும் தனிப்பதிவாக இன்று இட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து உங்கள் கோணத்தில் விளக்கம் அளிக்க இயலுமா? (http://rathnesh.blogspot.com/2009/07/blog-post_16.html)

    ReplyDelete
  3. "இப்போ எழுதப் போறது என்னோட சொந்தக் கருத்துக்கள் ஏதும் இல்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதினதை அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது."-

    உங்கள் கருத்துகள் விரவிக்கிடக்கின்றன்.

    ‘யாரும் அவரைத் தடுக்கவில்லை’ என்கிறீர்கள். அது உங்கள் கருத்து.

    அவர் குலத்தொழிலினால் அச்சப்பட்டார் என்கிறீர்கள். ஏன் அச்சப்படவேண்டும்? அவர் செய்தது பாவம் செய்யும் தொழிலா?

    குளித்து, புத்தாடையோ அல்லது கசக்கிக்கட்டிய கந்தாடையோ அணிந்து சென்றால், ஏன் சிவனுக்குப்பிடிக்காதா?

    சிவன் ஏன் அவரை ’அந்தணராக்க’ முன்றார்? அதற்கு ஏன் தீக்குளிப்பு? கொலை, கொள்ளையடித்தவன், தீக்குளிப்பு பண்ணியவுடன் அந்தணன் ஆகிவிட முடியும் என்றால் அது எவ்வளவு மலிவான விஷயமாகிறது?

    வேள்விமுழக்கம் எங்கும் கேட்க, இவர் அச்சப்படுகிறாராம்? ஏன் படவேண்டும்?

    அக்காலத்தில் ம்ட்டுமல்ல, இக்காலத்திலும் தலித்துகள் கோயிலுள் அனுமதிக்கப்படவில்லை. பார்ப்பனர் அப்படி அவர்களைப்பற்றி எழுதிவைத்து விட்டார்கள் நுழைந்தால் தீட்டு என்று. இது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் தொடர்ந்தது. இல்லையா?

    தான் நுழைந்தால் ஊரே தீட்டாகிவிடும் என அச்சப்பட்டார். தீட்டாகிவிடும் என அவரைப் பயமுறுத்தியவர்கள் யார் தோழி? என்றாவது அம்மக்களைப் பற்றி நீஙகள் நினைத்ததுண்டா?

    சேக்கிழார் எழுதியதை அப்படியே போடுவத்ற்கா வலைபதிவு? இங்கே படிக்காமல் அங்கேயே நேரே போய் நான் படித்துக்கொள்ளலாமே! உங்கள் க்ருத்தைப்படிக்கத்தான் உங்கள் வலைபதிவுக்குள் நுழைகிறோம்.

    வாழ்க்கையில் பார்ப்பனர் வைத்த் அடாவடிக் கொள்கையால் அடிபட்டு இறைவனையே தொழ முடியாமல் தவித்த நந்தனாருக்குத்தான் நாம் துதி பாடவேண்டுமே தவிர மற்றவர்களுக்கல்ல!

    நந்தனார் காலைத்தொட்டு வணங்கக்கூட இந்த சிதம்பரம் பார்ப்பனர்களுக்கு அருகதை இல்லை!!

    ReplyDelete
  4. வாங்க சகாதேவன், நான் பார்த்ததில்லை படம், ஆனால் சொல்லிக் கேட்டிருக்கேன். நன்றிங்க.

    ReplyDelete
  5. ரத்னேஷ், உங்க பதிவைப் படிச்சாச்சு, பதில் சொல்றதா இல்லை. அதுவும் திருஞானசம்பந்தரை பின் லேடன் அளவுக்கு எழுதி இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த "ஆலவாய்" புத்தகத்தில் திரு நரசையா அவர்கள் இதை சரித்திர ஆதாரங்களுடன் வன்மையாக மறுத்திருக்கிறார் என்பதை மட்டும் சொல்லிவிட்டு முடிச்சுக்கறேன். நன்றிப்பா. :D

    ReplyDelete
  6. வேந்தரே, தொடர்ந்த வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. மேடம்,

    //திருஞானசம்பந்தரை பின் லேடன் அளவுக்கு எழுதி இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த "ஆலவாய்" புத்தகத்தில் திரு நரசையா அவர்கள் இதை சரித்திர ஆதாரங்களுடன் வன்மையாக மறுத்திருக்கிறார் //

    சம்பந்தரை நான் பார்த்திருக்கிறேனா, நீங்க தான் பார்த்திருக்கீங்களா? எனக்கு அவர் மேல என்ன மேடம் வெறுப்பு இருக்கப் போகிறது, அவரைப் பற்றிப் பெருமையாக(!)ச் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அல்லாது? நரசையா அவர்களின் கட்டுரையை நான் படிக்க ஏதாவது வகையில் உதவ இயலுமென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்!

    //நன்றிப்பா. :D//

    கைகூப்பித் துரத்திவிடும் பாணியிலான வார்த்தை இல்லையே இது?

    ReplyDelete
  8. ரத்னேஷ், முதலில் நான் துரத்தி எல்லாம் விடலை என்பதைச் சொல்லிடறேன். சிரிப்பான் போட்டதே நான் சீரியஸா எடுத்துக்கலைனு காட்டவே. :)))))))))))

    அப்புறம் நரசையா அவர்களின் ஆலவாய் இப்போத் தான் வெளியிட்டிருக்காங்க. நான் படிச்சது தினசரிப் பத்திரிகைகளில் அதன் விமரிசனமும், மின் தமிழ்க் குழுமத்தில் ஒருவர் இட்ட விமரிசனமும். மின் தமிழ்க் குழுமத்தில் இட்ட விமரிசனக் கட்டுரை கிடைச்சால் உங்களுக்கு அனுப்பறேன். அதோடு திரு நரசையாவே ஆணித்தரமாய் மறுத்துள்ளார், சமணர்களைக் கழுவில் ஏற்றியது திருஞானசம்பந்தர் இல்லை என்பதை. அதோடு சமணர்கள் இப்போதும் இந்தக் காலத்திலும் தங்கள் உடலை வருத்திக் கொண்டே நீர் கூட அருந்தாமல் வடக்கிருந்து உயிர் விடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. பெண்கள் கூட அப்படித் தான் இருப்பார்கள். இதைப் பலவருஷங்கள் ராஜஸ்தான், குஜராத்தில் இருந்து பார்த்த அனுபவமும் உண்டு. துறவியாகும் முன்னர் அவர்கள் தலையை முண்டனம் செய்து கொள்ளுவது இப்போதும் அவர்கள் தங்கள் கைகளால் தங்கள் தலைமுடியைப் பிடுங்கித் தான். ஏன் இவர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி இருக்கக் கூடாது?? இதற்கான சான்றுகள் இருப்பதாகத் தான் நரசையா ஆலவாய் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    ReplyDelete
  9. மேடம்,

    //ரத்னேஷ், முதலில் நான் துரத்தி எல்லாம் விடலை என்பதைச் சொல்லிடறேன்.//

    நன்றிம்மா. :D

    //அப்புறம் நரசையா அவர்களின் ஆலவாய் இப்போத் தான் வெளியிட்டிருக்காங்க.//

    ஆலவாய் என்பது என்ன, பத்திரிகையா?

    // மின் தமிழ்க் குழுமத்தில் ஒருவர் இட்ட விமரிசனமும். மின் தமிழ்க் குழுமத்தில் இட்ட விமரிசனக் கட்டுரை கிடைச்சால் உங்களுக்கு அனுப்பறேன்.//

    முன்கூட்டிய நன்றி. முகவரி:
    pnmaran@yahoo.co.uk

    ReplyDelete
  10. கீதாம்மா!

    வழக்கம்போல அருமை. ஒரு மாபெரும் உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளீர்கள் என்ற வகையில் உங்களுக்கு ஒரு ஷொட்டு!!

    ஏன் தீயில் குளித்து முப்புரி நூல் அணிந்து ஒரு அந்தணனாக உள்ளே வரவேண்டும் என்று சேக்கிழார் (அவர் வேளாளர்) எழுதவேண்டும். அதற்கு சரியான பதில் இதுதான்.

    இறைவனைப் பூசிப்பதற்காகப் பணிக்கப்பட்டவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். இவர்கள் ஆதியில் (சிதம்பரம் ஆதி கோயில் கட்டப்பட்ட சமயத்தில்) தேவர்களின் வேள்விக்காக அழைக்கப்பட்டபோது கூட தில்லை அம்பலத்தானை தனியே விட்டு விட்டு தேவர்களின் வேள்விக்கு வரமுடியாது என்று மறுத்தவர்கள். சில நியதிகள் அவர்களுக்கென நியமிக்கப்பட்டபோது அதை மனதார ஏற்றுக் கொண்டவர்கள். அந்த நியதிப் படியே நந்தனாரைக் கூட இறைவன் அழைத்திருக்கவேண்டும் என்று சேக்கிழார் கருதியிருக்கவேண்டும்.

    மிகச் சரியான சிந்தனை நோக்கில் எழுதப்பட்டது திருத் தொண்டர்புராணம் என்பதற்கு இது ஒன்றே போதும்.

    சாதிகளின் தீவிரம் காலத்தின் கோலம். ஆனால் இறைவனுக்கு ஏது காலம். சாதிகள் ஏதேயாயினும் இறைவனுக்கு பக்தன் என்பவன் ஒன்றே.. அந்த பக்தன் நந்தனாராக இருந்தாலும் சரி, உமாபதி சிவனாக இருந்தாலும் சரி.. அவன் கணக்கில் ஒன்றே..

    இதை நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டும்.

    நல்லதோர் பதிவு.. போற்றிப் பாதுகாக்கவேண்டிய பதிவு இது.

    திவாகர்

    ReplyDelete
  11. ஆலவாய் பத்திரிகை அல்ல. ஒரு புத்தகம். பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து மதுரையின் கதையை எப்போ இருந்து தெரிய வந்ததோ அதிலிருந்து ஆரம்பிச்சு எழுதி இருக்கார். மதுரை பத்தின விஷயமாச்சே. எப்படியும் தேடிப் பிடிச்சுப் படிச்சுடுவேன். ஆயிரம் பக்கங்களாவது இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்! எப்போ கிடைக்குமோ? :(

    ReplyDelete
  12. திவாகர், உங்களோட தெளிவான கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete