இந்தப் பதிவுகளைப் பத்தி யாருக்கும் தெரியாமல் இருக்காது. தமிழ்மணம் நட்சத்திர வாரத்திலே பதிவுகளை அறிமுகம் செய்வது உண்டா என்பதும் தெரியாது. ஆனாலும் சில பதிவுகள் என்னைக் கவர்ந்தவை. சிலருடைய தமிழ்த் தொண்டும் என்னை ஆச்சரியப் படுத்த வைக்கிறது. அந்த அளவுக்கு என்னால் முடியாது என்பதாலும் இது பரவலாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும் என்னளவில் என்னைக் கவர்ந்த ஒரு சில பதிவுகளைப் பத்தி முதலில் சொல்லுகின்றேன். முதலில் வருபவர் தங்கமணி அம்மா.
தமிழ்க் கவிதைகள் எழுதும் தங்கமணி அம்மாவின் பதிவு இதோ!தங்கமணிஇங்கே. சந்த வசந்தம் குழுமத்தில் இருக்கிறாராம். 69 வயதாகும் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக இவரைப் பற்றிய குறிப்பு சொல்லுகின்றது. தமிழிலக்கணத்தை இப்போ சந்த வசந்தம் குழுமம் மூலம் திரும்பவும் கற்று மரபுக் கவிதைகள் எழுதி வருகின்றார். இவ்வளவு இலக்கணமும் நினைவில் வச்சுக்கிறதுனா எனக்குக் கஷ்டமா இருக்கும் போல் இருக்கு! அம்மா அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை! விடாமல் போய்ப் படிச்சுடுவேன். முதலில் அறிமுகம் செய்தது ஜீவா வெங்கட்ராமன். பட்டாம்பூச்சி விருதை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போத் தான் அவங்க வலைப்பதிவைப் பற்றித் தெரிய வந்தது. அதுக்கப்புறம் அவங்களோட பதிவுகளுக்குப் போகாமல் இருப்பதில்லை.மரபுக் கவிதைகளில் விருப்பம் உள்ளவர்கள் போய்ப்படிக்கலாம். எப்படி அருமையா எழுதறாங்கனு புரியும்.
அடுத்து ஈரோடு நாகராஜ் தன்னம்பிக்கை மிகுந்த இவர் ஒரு மிருதங்க வித்வான். அதற்கேற்ற தாள லயத்தோடு கூடிய பதிவுகள். பல்வேறு விஷயங்களையும் பற்றி எழுதி வரும் இவர் தங்கமணி அம்மாவின் பதிவுகளின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் கச்சேரிக்குச் செல்லும் ஊர்களைப் பற்றிய தொகுப்பும், அங்கே உள்ள முக்கியமான கோயில்கள் பற்றியும் தொகுத்து அளித்து வருகின்றார். பயணக் கட்டுரை, சங்கீதக் கட்டுரைகள், அன்றாட நிகழ்வுகள் என விதவிதமாகத் தருவதோடு அவ்வப்போது சிறு கவிதையும் எழுதுகிறார். இப்போ தொலைக்காட்சியில் வந்த நட்பைப் பற்றிய விவாதத்தைப் பற்றி எழுதி உள்ளார். சென்னை ஆன்லைன் தளத்திலும் இவரின் பதிவுகள் வருகின்றன. சங்கீதம் பற்றியும், அருமையான கச்சேரிகள் பற்றியும் விரிவாக எழுதுகின்றார். சங்கீத ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான ப்திவு இது.
அடுத்து நம்ம பழமை! பழமைபேசிரொம்பவே எழிலாய்க் கொங்குத் தமிழில் பழமை பேசிட்டுத் திரிகிறார். அதோடு அவரிடம் ஒரு தமிழ்ப் புதையலே இருக்குங்க! அதிலும் கணக்குகள் போடுவாரு பாருங்க, நான் அந்தச் சமயமாப் பார்த்து ஒளிஞ்சுக்குவேன். இதோ மாதிரிக்கு ஒரு கணக்கு!
ஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன், 300 படி பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழி(ஒரு படி)பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?இந்தக் கணக்குக்கு விடை கண்டு பிடிங்க! :))))) முடியாதவங்க பழமையின் பதிவிலே போய்ப் பார்க்கவும்! அரிய, அழகிய தமிழ்ச்சொற்களஞ்சியத்தையே இவரின் பதிவுகளில் காணமுடியும்.
அடுத்தது ரொம்பவே அருமையான புதையல் ஒன்று. இந்த இளைஞரின் உழைப்பும், ஆர்வமும், விடாமுயற்சியும், செய்வன திருந்தச் செய்யும் இயல்பும் என்னை அதிசயத்தில் ஆழ்த்தும். சிங்கப்பூரில் இருக்கும் கப்பல் கட்டுமானத் துறை(?) பொறியாளரான இவருக்குச் சிற்பங்களில் ஈடுபாடு. பல்லவர் காலச் சிற்பங்களிலும், பிற்காலச் சோழர் காலச் சிற்பங்களிலும் உள்ள நுணுக்கமான வேறுபாட்டைக் கூட கண்டறியும் அளவுக்குச் சிற்பக்கலை பற்றிய அறிவு இவருக்கு உள்ளது. சிற்பங்களையும், கல்வெட்டுக்களையும் ஆராய்வதோடு அல்லாமல் அவற்றின் சரித்திரப் பின்னணி, சிற்பம் செதுக்கும்போது என்ன நினைத்துச் சிற்பி இதைச் செதுக்கி இருப்பார் என்பதில் இருந்து எல்லாவற்றையும் பற்றி நன்கு யோசிக்கின்றார். தேர்ந்தெடுத்த சிற்பங்களைப் படம் எடுத்து, அதன் புராணக் கதைகளின் பின்னணியோடு ,அவற்றின் பொருத்தமான விளக்கங்களோடு நமக்குக் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தாக அளிக்கின்றார். திரு திவாகரின்வம்சதாரா எம்டன் நாவலுக்காக இவர் வரைந்த ஓர் ஓவியம் மிகவும் அற்புதமான உணர்ச்சிக் கலவை. அருமையான ஓவியரும் கூட இவர். இவரின் பதிவுகளைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இடுகின்றார். கல்லிலே கலைவண்ணம்கண்டான் எனத் தமிழ்ப் பதிவுக்குப் பெயர் வைத்துள்ளார். அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு பதிவு இது.
அடுத்து திரு தி.வா. அவர்கள் புதிதாக ஆரம்பித்திருக்கும் ஓர் பதிவு. இல்லம் குழும நண்பர், சென்ற மாதம் சதாபிஷேஹம் கண்டவர், திரு நடராஜன் ஒரு பறவைக் காதலர். பறவைகள் பற்றிய மிக அருமையான ஓர் ஆய்வே செய்து வருகின்றார். எந்தப் பறவையைப் பத்திக் கேட்டாலும் தூக்கத்தில் கூட அது பற்றிச் சொல்லுவார். பறவைக் காதலர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும் பிடித்தமான எழுத்து அவருடையது. அவர் எழுதும் எழுத்துக்களையும், அரிதான பறவைகளின் புகைப்படங்களையும், அவருக்குத் தொழில் நுட்பத்தில் சிறிது பிரச்னை இருப்பதால், திரு தி.வா. திரட்டி ஓர் கூட்டுப் பதிவாக மாற்றி திரு நடராஜனின் சதாபிஷேஹப் பரிசாய் அளித்துள்ளார். இதோ இங்கே உண்மையில் இதைவிடச் சிறந்த பரிசை தனது சதாபிஷேஹத்திற்கு திரு நடராஜன் பெற்றிருக்க மாட்டார். அவரின் எண்ணங்கள், எழுத்துகள், பறவைகளின் தொடர்கள் காலத்துக்கும் கணினியில் அனைவரும் காணக் கிடைக்கும் வண்ணம செய்திருக்கிறார் திரு தி.வா. அவர்கள். தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கு இடையில் இந்த மாதிரியான ஓர் உதவியையும் செய்ய தி.வா.வுக்கு இறைவன் நேரம் அளிப்பதும் இறைவனின் கருணையாலன்றி வேறென்ன???
அடுத்தும் திரு தி.வா. செய்து வரும் ஓர் முக்கியப் பணி பற்றியே. அது இடம் பெறும் தளம் தமிழ் மரபுஇந்தத் தளத்திலே போய் அல்லது கீழ்க்கண்ட சுட்டியைக் க்ளிக்கினால் வரும் பக்கத்தில் தி.வா. அவர்கள் புத்தகங்களை மின்னாக்கம் செய்யும் முறை பற்றி விளக்கம் கொடுத்திருப்பதைக் காணமுடியும். பல அரிய புத்தகங்களை இவ்விதம் மின்னாக்கம் செய்து தமிழ் மரபு அறக்கட்டளையின் நூலகப் பிரிவில் சேர்த்து வருகின்றார். மின்னாக்கப் பட்டறையும் அவ்வப்போது குழும நண்பர்களுக்காக நடத்தி வருகின்றார். கல்லூரி மாணவ, மாணவிகளும் இதில் சேர்ந்து பயனடைகின்றனர். மின் பதிப்பாக்கம்இது பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கேகாணலாம். புத்தகங்களை நூலகம் இங்கே காணமுடியும். இது தவிர லினக்ஸ் மொழிமாற்றமும் செய்து வருகின்றார். அது பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது. லினக்ஸ் புரிஞ்சுக்கற அளவுக்கு மூளை இல்லை. நாளாகலாம். இதைப் படிக்கும் நண்பர்களுக்குப் புத்தகங்களைச் சேமிக்கவேண்டி இருப்பின் இந்தப் பட்டறையில் சேர்ந்து பயனடையலாம். அல்லது புத்தகங்களை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அனுப்பி அவர்கள் மூலம் மின்னாக்கம் செய்ய உதவலாம். வருங்காலச் சந்ததியினருக்கு நிரந்தரமாக ஒரு புதையலை அளிக்கின்றனர் தமிழ் மரபு அறக்கட்டளையினர். தமிழ் மரபு அறக்கட்டளை செய்யும் தமிழ்ப் பணிகள் எண்ணிலடங்காதது. அடுத்துச் சில தளங்கள் பற்றி.
அற்புதமான தகவல்கள் கொடுத்து இருக்கிறீர்கள் கீதா. நானும் திவாவின் பறவைப் பதிவுதளத்தைப் பார்த்தேன். அழகான் தையல்கார பறவை உட்கார்ந்திருந்தது.
ReplyDeleteசந்தவசந்தம் இன்னும் பார்க்கவில்லை.
தகவல் களஞ்சியமகப் போய்க்கொண்டிருக்கிறது நட்சத்திர வாரம். நன்றி.
கீதாம்மா, நட்சத்திர வாரத்தில் ஒரு மினி வலைச்சரம் உருவாக்கி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுகள்
தாராளமாப் பதிவுகளை அறிமுகப்படுத்தலாம்.
ReplyDeleteஅருமையான பதிவு.
இதில் ஒன்னு ரெண்டை நான் பார்த்ததில்லை.
கவிதைன்னாவே............. ஹிஹி
நட்சத்திர வாரத்தின் சுவாரசியங்கள் புதுப்புது விபரங்களை அறியவைத்தல் மாத்திரமல்லாது அழகான வலைப்பூக்களையும் அறிமுகம் செய்தல்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி கீதாம்மா.. இதில் பழமைபேசியாரின் பதிவு மாத்திரம் நல்ல பழகிய இடம். மற்றவை புதிது.
நல்ல விவரங்கள்.
ReplyDelete* வாரத்துக்கு வாழ்த்துக்கள்.
////சிலருடைய தமிழ்த் தொண்டும் என்னை ஆச்சரியப் படுத்த வைக்கிறது////
எம்மைப் போன்றவர்கள் விடாமுயற்சியாக 'டமில்' தொண்டாற்றுவதற்கு இந்த மாதிரி ஊக்கம மிக அவசியம் ;)
நல்ல நல்ல தகவல்கள்...கீதா!
ReplyDeleteநேரமிருக்கும் போது படிக்க ஆசை.
ஒரு வாரம் நட்சத்திரம் மின்னட்டும்...ஜொலிக்கட்டும்!!
மிக்க நன்றி மேடம்,
ReplyDeleteராஜமுந்திரி வந்தபிறகு இணைய இணைப்பு நன்றாக இருப்பதால் நல்ல தளங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்ததற்கு உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்குப் பூர்வாங்க நன்றி.
பிரபலாமானவர்களின் சூரிய வெளிச்சத்தில் இந்த நட்சத்திரங்கள் என் போன்ற பார்வைக் குறைபாடுடையவர்களுக்குத் தெரியாமல் இருந்தது.
உங்கள் நட்சத்திர வாரம் முடிவதற்குள் அவற்றையும் மேய்ந்து விட்டு அர்த்தபூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன்.
வணக்கம்
ReplyDeleteமிக மிகத்தேவையான வலைதளங்களை பற்றிய அறிமுகங்கள்.
ரோம்ப அழகாகவும் தொகுத்து தந்துள்ளீர்கள். நன்றி
இராஜராஜன்
அருமையான வலைச்சர தொகுப்பு!
ReplyDeleteநன்றி வல்லி, இந்தப் பதிவைப் போடும் முன்னர் ரொம்ப யோசிச்சேன்,சாதாரணமாப் பதிஞ்சா எல்லாரையும் போய்ச் சேருகிறது கஷ்டம்னு தான் நட்சத்திர வாரத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஓரளவாவது வரவேற்பு இருப்பதில் மகிழ்ச்சியே. நன்றி பாராட்டுக்கு.
ReplyDeleteநன்றி கோவியாரே, முன்னரே திட்டமிட்டது தான் இந்தப் பதிவுகள் பத்திப் போடறது. தயார் செய்தும் வச்சிருந்தேன். வரவேற்பு இருப்பதுக்கு நன்றி. :))))))))
ReplyDeleteவாங்க துளசி, கவிதை பிடிக்காதா??? :)))) ஆச்சரியம் தான். என்றாலும் தங்கமணி அம்மா எழுதும் தமிழுக்காகவே போய்ப் பாருங்களேன். நன்றிப்பா.
ReplyDeleteவாங்க சென்ஷியாரே, உங்களுக்கும் பிடிக்கும் மத்தப் பதிவுகளும், ரொம்பவே பயனுள்ள பதிவுகளே. நன்றிப்பா வரவுக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteஅட??? "சர்வே"சன்னே வந்தாச்சா??? வாங்கப்பா, வாங்க, நன்றி, உங்க கருத்துக்கு.
ReplyDeleteநானானி, ஜொலிக்குமோ, மின்னுமோ, எல்லாருக்கும் பயனுள்ளதா அமையணும். அதான் கொஞ்சம் தயக்கம் ஆரம்பத்திலே. நன்றிங்க உங்க வாழ்த்துகளுக்கு.
ReplyDeleteரத்னேஷ், ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு வகை. முதல் இரண்டும் தமிழ்க் கவிதைகள், பழந்தமிழின் அருஞ்சொற்கள் அடங்கியது. அடுத்தது பழங்காலக் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் பற்றியது. அடுத்து பறவைகள். அடுத்து தான் ரொம்ப முக்கியமான தமிழ் சேவை செய்பவர்களின் வலைத் தளம். எல்லாமே என்னளவில் மிகவும் பயனளிக்கும் விஷயங்களே.
ReplyDeleteவாருங்கள், "வனம்"ராஜராஜன், முதல் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteஅட, வால் பையன், உங்க வால்தனமில்லாத (:D )பாராட்டுகளுக்கு நன்றிப்பா.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி. அறிமுகம் செய்துள்ள வலைப்பூக்களை சாவகாசமாகப் படிக்க வேண்டும்
ReplyDeleteஇந்த வார நட்சத்திர பதிவராக திகழ்வதற்கு வாழ்த்துக்கள் கீதாம்மா.
ReplyDeleteதாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விஜய்யின் கல்லிலே கலைவண்ணம் அடியேனுக்கும் பிடித்த வலைத்தளம்.
தங்கள் பெருமாள் கோயிலைப் பற்றி இட்டபதிவை படித்து கண்ணீர் விட்டு அழுதேன். கலிகாலம் என்பதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றதோ?
பகிர்வுக்கு நன்றி தலைவி...;)))
ReplyDeleteநட்சத்திரத் தலைவிக்கு வாழ்த்துகளும் வணக்கமும்!
ReplyDeleteவாங்க மெளலி, மெதுவாப் படிங்க. நேரம் கிடைக்கணுமே? :))))))
ReplyDeleteவாங்க கைலாஷி அவர்களே, என்னோட பதிவைப் படிக்கிறதுக்கு முதலில் நன்றி. விஜயின் கைவண்ணம் ரொம்பவே அற்புதமான ஒன்று. அதிலும் அவர் தேடற சரியான பொருள் அந்தச் சிற்பத்தில் இருந்து கிடைக்கிறவரைக்கும் விடமாட்டார். சிற்பத்திற்கும் புராணக் கதைகளுக்கும் பொருத்தம் இருந்தால் ஒழிய அதை வெளியிடவும் மாட்டார். authentication இருக்கணும்! நன்றி, பெருமாள் கோயில் பத்தின பதிவுக்கு.
வாங்க கோபிநாத், காணோமேனு நினைச்சேன்,
ReplyDeleteவாங்க பழமை, வந்ததுக்கும், வாழ்த்துக்கும், வணக்கத்திற்கும் நன்றிங்கோ!
எங்கள் தளத்தை பற்றிய அருமையான விமர்சனத்திற்கு நன்றி. இந்த தளத்தின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பல நல்ல உள்ளங்கள் உள்ளன. பலர் தங்கள் படங்கள், அனுபவங்கள், பிழை திருத்தங்கள் என்று தினம் தினம் உதவுகின்றனர். உங்கள் பாராட்டை அவர்களுக்கும் , அற்புத சிற்பங்களை செதுக்கிய நம் பெயர் தெரியா சிர்ப்பிகளுக்கும் அர்பணிக்கிறேன்.
ReplyDeleteநன்றி
விஜய்
www.poetryinstone.in
அன்புள்ள கீதா!
ReplyDeleteதமிழ்மணம் நட்சத்திர விருதுப் பெற்றதற்கு
என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!பெருமையாகவும்,மகிழ்வாகவும் இருக்கிறது!
உழைப்புக்கும்,ஆர்வமுள்ளத் தேடலுக்கும் கிடைத்த விருது!கீதா!
தமிழ்மணத்துக்கும் என்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறையத் தமிழ் வலைகள் பூத்துக் குலுங்குவதற்கு,
தமிழ்மணத்தின் ஊக்குவித்தலும் காரணம்.
கீதா நீங்கள் குறிப்பிட்ட வலைகளையும் பார்க்கிறேன்.
கீதா,எனக்கு இத்தனைப் பாராட்டா?என்நன்றி!
நான் மிகவும் சாதாரண,கவிதையைத் தேடும்
ஆர்வமுள்ளவள்.அவ்வளவே.
நிறைய இளைஞர்கள் தமிழில் ஒளிர்கிறார்கள்!எல்லோருக்கும் என்
பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.
அன்புடன்,
தங்கமணி.
விஜே, உங்கள் நன்றிக்கு நன்றி. மீண்டும் பாராட்டுகள்.
ReplyDeleteஅம்மா, தகுதியானவர்களைத் தான் பாராட்டி இருக்கிறேன், வரவுக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
ReplyDelete