
பூஜா மூலம் குரோர் பதம் = வழிபாட்டுக்கு உகந்தது குருவின் பாதாரவிந்தங்கள்
மந்த்ரார் மூலம் குரோர் வாக்யம்=ஜபிப்பதற்கு உகந்தது குருவின் வாக்கின் மூலம் கிடைத்த போதனைகள்
மோக்ஷமூலம் குரோர் க்ருபா!!= குருவின் அருளைப் பெற்றாலோ மோக்ஷமே கிடைத்துவிடுகிறது.
இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.

சக்திம் ச, தத்புத்ர பராசரம் ச,
வ்யாஸம், சுகம், கெளடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்தரம்,அதாஸ்ய சிஷ்யம்!
ஸ்ரீசங்கராசார்யம், அதாஸ்ய பதம்-
பாதம் ச, ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம், வார்த்திககாரம், அந்யாந்
அஸ்மத் குருந் ஸந்ததம் ஆநதோஸ்மி!
இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர்,


அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.
எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.
//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//
இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம்.
டிஸ்கி: கோபி சில நேயர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று இன்னும் இரண்டு நாட்களில் வரும். கோபி, இப்போ சரியா???:D
நல்ல விளக்கம் தலைவி...
ReplyDelete\\கோபி சில நேயர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று இன்னும் இரண்டு நாட்களில் வரும். கோபி, இப்போ சரியா???:D
\\
மிக்க நன்றி தலைவி...நேரம் கிடைக்கும் போது போடுங்கள் ;)
Could you please explain? கிளி மூக்கும், முகமும் வந்த கதை...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாங்க கோபிநாத், எழுதவே நேரம் கிடைக்கிறதில்லை. அதான் கண்ணனைக் கூடக் காக்க வச்சிருக்கும்படி ஆயிருக்கு. :((( கணினியிலே இருக்கிற நேரங்கள் குழும மடல்களைப் பார்ப்பதிலே போயிடுது! :(
ReplyDeleteவீரபத்ரன், கொஞ்சம் பொறுத்துக்கணும், சீக்கிரமா எழுதறேன்!
ReplyDeleteஸ்ரீஸ்ரீ ஸ்வாமி ஓம்கார் அவர்களே, மிக்க நன்றி.
ReplyDeleteவாஸ்தவம் மேடம். சொல்லித் தந்தவர் யாராயினும் குருவாக மதிப்பதும் மனதார அவர்தம் பாதார விந்தங்களுக்கு நன்றி சொல்வதும் அனைவரின் கடமையே!
ReplyDeleteஇப்போ உங்களுக்கு என்று சொன்னால் "ஐஸ்' தானே!