நம் கடவுளர் எல்லோரும் ஐடியல் இல்லை. நம் நம்பிக்கையின் உச்சபட்சம் என்ன கடவுள் சத்தியமா என்பது தானே.கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழிய போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட கடவுளர் தவறான உதாரணமாகலாமா? தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் குமரன் முன்கோபக்காரன். ஒரு மாக்கனிக்காக குடும்பத்தை பிரிந்தவன். கற்பு களவு என்று இருவிதத்திலும் மணம் புரிந்தவன்.
அவன் தந்தை ஈசனும் அப்படியே இரு மனைவி, தன்னை மதிக்காத மாமனார் வீட்டுக்கு போக கூடாது என்று மனைவியை அந்த உலக மாதாவை சொன்னவர். கோபம் வந்தால் மனைவியையும் சரி, உண்மைக்காக வாதாடும் நக்கீரனையும் சரி சுட்டெரிப்பவர்.
இவர் மைத்துனன் விஷ்ணுவோ ஆயிரம் நாமம் கொண்டவன், மனைவிமார்களுக்கு கணக்கே கிடையாது. ஒரு மனைவியிடம் மோதிரத்தை கொடுத்துவிட்டு முதல் மனைவியிடம் மணல்வெளியில் தொலைத்துவிட்டதாக கூறி மட்டையடி வாங்குபவர். இவர் ஒவ்வொரு அவதாரத்திலும் முறைமீறல்கள் ஒன்றா இரண்டா எல்லாம் சொல்லவே இந்த ஒரு பதிவு போதுமா?
பிரம்மனோ நான்கு முகம் கொண்டவர் இவருக்கும் மனைவிமார் இருவருரோ மூவரோ கதைப்படி. சரஸ்வதி,சாவித்திரி,காயத்ரி. ஆனா கும்பிடறங்கவங்க எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வரத்தை வாரி வழங்கி பின் அடுத்த கடவுளரிடம் போய் நிற்பது இவர் வழக்கம்.
சரி சரி அடிக்க வராதீங்க எல்லாத்தும் காரணம் இருக்கு. கடவுளர் யாரும் தவறான உதாரணங்கள் இல்லை அவர்கள் யாவரும் ஐடியல் தான்.
ஏதோ எனக்கு தெரிந்த விளங்களை தர முயல்கின்றேன். மாங்கனிக்காக குடும்பம் பிரிந்த குமரன் இளைஞர்கள் தன் பெற்றோரை சார்ந்தில்லாமல் தானே தன் காலில் நிற்கவேண்டும் என்ற கருத்தை எடுத்துக்காட்டுகின்றார். கற்பு களவு மணம் மேட்டருக்கு அப்புறம் வருவோம்.
இறையனார் ஈசன் முக்காலமும் உணர்ந்தவர் தாட்சயணிக்கு தந்தையால் அவமானம் நேரும் என்று தெரிந்தே தடுத்தார், தானென்ன ஆணவத்தால் அல்ல. இவர் கோபத்திற்கு பின்னால் தான் உணர்த்தப்பட்டது சக்தியும் சிவனும் ஒன்றென்று. அப்படி சுட்டெரித்த காரணத்தால் தான் தன்னில் பாதியாக சக்கியை கொண்டு அர்த்தநாதிஸ்வரர் ஆனார். நக்கீரனைக்கு நெற்றிக்கண் காட்டி தமிழுக்குகாக அவர் தன்னையும் தறுவார், கடவுள் என்றாலும் தமிழை காக்க குரல் தருவார் என்ற பெருமையை தான் பெற்று தந்தார் அந்த இறையனார். இவரின் கொஞ்சு தமிழில் வந்ததல்லவா "கொங்குதேர்" என்ற குறுந்தொகைப் பாடல். இரண்டு மனைவி விசயத்திற்கு அப்புறம் வருவோம்.
விஷ்ணு கணக்கிலும் மனைவிமார்கள் பிரச்சனையை பொதுவாக எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்த முறைமீறல் எல்லாமே அதர்மத்தை அதன் வழியே சென்று அடக்க தர்மத்தை நிலைநாட்டவே தான்.
பிரம்மாவின் இளகிய மனதுக்கும், "உலகில் எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகின்றதோ அங்கேல்லாம் நான் வருவேன்" என்பதன் ஊடுகோலே காரணம். "கடவுள் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான் கேட்டவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, திருந்த வாய்ப்பளித்து பின் திருந்தாவிட்டால் தண்டனை தரவே" இவர் வரம் தருவார். இவர் படைக்கும் கடவுள் ஆயிற்றே. காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளர் தம்தம் வேலையை செவ்வனே செய்வர்.
சரி இப்போது கடவுளர்க்கு பல மனைவிகள் இருப்பதற்கு என்ன நியாயம் கற்பிக்க. அதற்கும் தர்மம் இருக்கின்றது. ஒரு நாட்டை ஆள்பவர் எல்லா துறையையும் தன் கையில் வைத்துக் கொள்ள இயலாது. அந்த அந்த துறைக்கு ஒரு எஸ்பேர்ஸ் வேண்டும் அவர்களை எல்லோரையும் ஒருக்கிணைத்து நாட்டை நல்ல வழியில் செயல்படுத்தலாம் நாட்டை ஆள்பவர்.
அதை போல் தான் சரஸ்வதி கல்விக்கும், மந்திர சக்திக்கு காய்திரியும், அந்த மந்திர சக்திக்குள் இருக்கும் ஜோதி வடிவம் சாவித்ரி என்றும் வைத்தனர் முன்னோர். அப்படியாக புத்தி சம்மந்தமான ஆளுமைக்கு சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி இவர்களின் கணவர் பிரம்ம தேவன். ஆஹா சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி அனைவரும் புத்தி என்ற ஒரு விசயத்திற்குள் அடக்கம் அந்த வகையில் பார்த்தால் பிரம்மனுக்கு ஒரே ஒரு மனைவியின் பல பரிமாணங்களே காயத்ரி மற்றும் சாவித்ரி.
விஷ்ணுக்கு பல மனைவியர் இருப்பது போல தோன்றினாலும் அவர் அனைவரும் மஹாலஷ்மி, பூமாதேவி என்ற இருவருக்குள் அடங்கி விடுவர். மஹாலஷ்மி செல்வதிற்கு அதிபதி. பூமாதேவி நிலம் நீர் காற்று என்ற மற்றை செல்வங்களுக்கு அதிபதி. ஆஹ இவர்கள் எல்லாவித செல்வங்களுக்கும் கொடுக்கப்பட்ட தனித்தனி வடிவங்களே ஆயினும் ஒரே வடிவமே. ஆகையால் விஷ்ணுக்கும் மனைவி ஒருவளே. ஏகப்பத்தினிவிரதன் ராமன் மட்டுமல்லா எல்லா விஷ்ணு ரூபமும் அப்படியே.
சிவசக்தி வீரத்திற்கும் உடலில் அசையும் அனைத்து சக்திக்கு அதிபதி. கங்கை உயிர்வாழ் தேவையான தண்ணீர். தண்ணீரால் ஆனது தானே உடம்பும். உடல் முழுதும் ஓடும் ரத்தமும் தண்ணீர் கலவை தாமே. அகையால் சக்தியும் கங்கையும் இருவர் போல் தெரியும் ஒருவர்.
மேலும் கடவுளர் கணவன் மனைவி மாமன் மச்சான் என்று மனித சமுகத்தில் இருக்கும் உறவுகளோடான ஒப்பீட்டிற்கு அப்பற்பட்டவர்கள். கடவுளர் தர்மம் வேறு. நம் நடைமுறையோடு பார்த்து அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் விண் குழப்பமும் தேவையற்ற சிந்தனையுமே மிஞ்சும்.
மீண்டும் செல்றேன் கடவுள் என்கிற கருதுகோள் மூலமாக தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழிய போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை கடவுளர் தர்மம் என்று சொல்லி நம்பிக்கை வளர்க்க வேண்டும். மேல சொன்னது போல புத்திபூர்வமாக என்று நினைத்து விபரிதமாக யோசித்தால் கிடைக்கும் வெளிச்சம் பயம் தான் தரும். பின்வரும் கவிதை போல.
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
லஷ்மண்.
*****************************************************************************************************************************************************
இளைய தோழி லாவண்யாவின் மடல் இது. அவர்களின் சம்மதம் பெற்றே வெளியிடுகின்றேன். இதற்குத் தத்துவார்த்தமாய்ப் பலவிதமான பதில்கள் கூற முடியும் எனினும், நான் புராணங்களையே மேற்கோள் காட்டி பதில் கொடுத்திருக்கேன். எந்தவிதமான விவாதத்துக்கும் இல்லை இது. இன்றைய தலைமுறையின் தவறான புரிதலையும், அதைத் திருத்தவேண்டும் என்ற எண்ணத்திலுமே இருவர் சம்மதத்துடனே வெளியிடுகின்றோம். கடவுளை நம்பும் பலருக்கும், முரண்பாடுகள் கொஞ்சம் நெளிய வைக்கின்றன. கூடியவரை அதைத் தெளிய வைக்கும் ஒரு சிறு முயற்சியே இது. மற்றவரும் அவரவர் கோணத்தில் பங்கு கொள்ளலாம். நன்றி. பதில் பதிவும் அடுத்துச் சில மணி நேரங்களிலேயே வெளி வரும். பொறுமையாகப் படிக்கப் போறவங்களுக்கு என் நன்றி.
மேடம்,
ReplyDeleteஒன்று புரியவில்லை. இப்போது நீங்கள் வெளியிட்டிருப்பது லாவண்யா அவர்களின் மடலா அல்லது அதற்கான பதிலா அல்லது இனிமேல் தான் லாவண்யா அவர்களின் மடல் ISSUE ஆரம்பமாக இருக்கிறது; இது அதற்கான முன்னுரையா?
//நம் கடவுளர் எல்லோரும் ஐடியல் இல்லை.//
"நம்முடைய அளவுகோல்களின் படி" என்பது விடுபட்டுப் போயிருக்கிறதே!
லக்ஷ்மண் அவர்களின் கவிதை சூப்பர்.
ரத்னேஷ், லாவண்யா எனக்கு அனுப்பிய மடலை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்திருக்கேன். கீழேயே சொல்லி இருக்கேனே, இது அவங்களோடதுனு.
ReplyDelete//இளைய தோழி லாவண்யாவின் மடல் இது. அவர்களின் சம்மதம் பெற்றே வெளியிடுகின்றேன். இதற்குத் தத்துவார்த்தமாய்ப் பலவிதமான பதில்கள் கூற முடியும்//
ReplyDeleteஇதோ கீழே இதைப் படிக்க விட்டுப் போச்சோ?? :)))))) நான் திருத்தம் எதுவும் செய்யவில்லை, அதனால் இந்த அளவுகோல் விஷயம் இடம்பெறவில்லை. :))))))))
சரி ஒத்துக்கறோம். தவறான உதாரணங்கள் இல்லை. எல்லாவற்றிர்க்கும் காரணம் இருக்கிறது:0)
ReplyDeleteவாங்க வல்லி, அவங்க அவங்களுக்குனு சுய தர்மம்னு ஒண்ணு இருக்கே? :))))))
ReplyDeleteபுரிந்து கொண்டேன் மேடம், நன்றி. தொடர்ந்து வருகிறேன்.
ReplyDelete//புராணங்களையே மேற்கோள் காட்டி பதில் கொடுத்திருக்கேன். எந்தவிதமான விவாதத்துக்கும் இல்லை இது. இன்றைய தலைமுறையின் தவறான புரிதலையும், அதைத் திருத்தவேண்டும் என்ற எண்ணத்திலுமே இருவர் சம்மதத்துடனே வெளியிடுகின்றோம்//
ReplyDeleteகுழப்பமா இருக்கு.
இருவரில் ஒருவர் இளைய தலைமுறை லாவண்யா இன்னொருவர் யார்?
மேலே இருப்பது ‘காப்பி பேஸ்ட்’ன்னு சொல்லிட்டு கீழே ’மேற்கோள் காட்டி பதில் கொடுத்திருக்கேன்’ அப்படீன்னு வேற சொல்லியிருக்கீங்க.
அடுத்த பதிவையும் படிச்சுட்டேன். அதுக்கு அங்கேயே பின்னூட்டம். :))