எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 16, 2009

மனம் கவர்ந்த பதிவுகளும், சில தளங்களும் -2

பூக்கள் என்றால் யாருக்குத் தான் ஆசையா இருக்காது?? அதிலும் இந்தப் பாரிஜாதம் என அழைக்கப் படும் பவளமல்லிப் பூக்களைப் பார்க்கணுமா?? இதோ இங்கே போங்க, இவங்களைப் பத்தின எந்தத் தகவலும் கிடைக்கலை. உமா ஆத்திரேயா என்று பெயர் மட்டும் கிடைத்தது. ப்ரொஃபைலுக்குப் போக முடியலை. போக முடிஞ்சவங்க சொல்லலாம், ஆனால் நான் பூக்களைப் பார்த்துட்டு வர இங்கே போவேன், அதுவும் புத்தம்புதிய தோட்டத்துப் பூக்கள்! My Garden நண்பர் ஆகிரா அறிமுகம் செய்தார் இந்த வலைப்பதிவை.


இப்போ எழுதப் போறது "அழகி" விஷி என்னும் விஸ்வநாதனைப் பற்றி. இவரை அறியாதவர்கள் இருக்கமுடியாது என்றாலும் இவர் கையில் மாட்டிய அழகி நாட்கள் ஆக, ஆக, மேலும் மேலும் புதுமையும், பொலிவும் பெற்று இன்னமும் மெருகேறி அழகாகவே இருக்கிறாள். மனித அழகிக்கு ஏற்படும் வயதான தோற்றம் இவளிடம் காண முடியாது. அழகியைக் காணவேண்டுமா?? இதோ இங்கே பாருங்கள்! அழகி எத்தனை அழகாகக் காட்சி அளிக்கின்றாள்??அழகோ அழகு

அழகியை வைத்து இத்தனை திறமை காட்டும் விஷியைப் பற்றி அறிய இதோ இங்கே!VISHYஅழகியின் அழகான முகம் பற்றி அறிய இதோஅழகிய அழகிஅழகி கொடுக்கும் புதிய வசதிகள் பற்றிய ஓர் எளிய அறிமுகம் கீழே:-
Azhagi - It's different - Easy Tamil Transliteration in ALL applications, Auto Transliteration, Reverse Transliteration, Dual Screen Transliteration and more - www.azhagi.com

As of Azhagi 6.0.7, one can try out transliteration in Hindi and other languages [in beta stage - Malayalam, Kannada, Telugu, Punjabi, Bengali, etc.] too in ALL applications.


அடுத்து திரு தமிழ்த்தேனீ என அழைக்கப் படும் கிருஷ்ணமாச்சாரிரங்கஸ்வாமி. இவரின் தாயார் ஆர்.கமலம்மாள், அந்தக் காலத்துப் பிரபலமான பெண் எழுத்தாளரில் முக்கியமானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருவதோடு, எக்ஸ்நோரா அமைப்பிலும் சேர்ந்து பணியாற்றி வருகின்றார். சுற்றுச் சூழல் மாசுபடுவதை எதிர்த்து நடக்கும் கருத்தரங்குகளிலும், தமிழ்ப் புத்தகங்கள் மின்னாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொதுசேவைகள் செய்வதிலும் முன்னணியில் இருக்கிறார்.தமிழ்த்தேனீ இந்திய மக்கள் தளத்தில் அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையிலும், கலைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் ஆகியன காணக் கிடைக்கும். உங்கள் படைப்புகளையும் அளிக்கலாம்.

அடுத்து ஆகிரா ராஜகோபாலன். இவர் மழலைகள். காம் என்னும் தளத்தின் ஆசிரியர். சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகக் கதைகள் மூலமும், பல்வேறு நீதிக்கதைகள், அயல்நாட்டுச் சரித்திரம், தெய்வீகக் கதைகள், தமிழ் இலக்கியம், வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கும், நம் நாட்டில் வாழும் பிள்ளைகளுக்கும் இணையம் மூலம் தமிழ் கற்றுக் கொடுத்தல் ஆகியன செய்து வருகின்றார். இவரிடம் உள்ள தனிச் சிறப்பு எந்தச் சம்பவத்துக்கும், எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்ற திரைப்படப் பாடல்களை ஒளி, ஒலி பரப்புச் செய்துவிடுவார். தொழில் முறையில் பொறியாளரான இவர் தற்சமயம் வெப் டிசைனிங்(தமிழில் என்னங்க??) செய்து வருகின்றார். இவர் பொறுப்பில் நிலாச்சாரல், சிஐடி இந்தியா. காம், ஏரோமாடிக் சிஸ்டம்ஸ், தமிழ்யூனிட்.காம், தமிழ் லிடரேசர்.நெட், எஜுகேஷனல்செர்விஸ்.நெட் , தமிழிசை.காம் போன்ற பல்வேறு தளங்களுக்கு டிசைனிங் செய்து வருகின்றார். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் கணினித் தமிழ், தமிழ் இலக்கணம், கவிதைகள், விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் போன்றவற்றையும் தொகுத்து அளிக்கின்றார். மழலைகள் தளம் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழியிலும் மாதம் இருமுறை வெளியிடுகிறது படைப்புகளை. உங்கள் குழந்தைகளின் படைப்புகளையும் வெளியிடலாம். சிறுகுழந்தைகளின் ஓவியங்கள், கதைகள், கட்டுரைகள் போன்றவையும் வெளியிட அனுப்பலாம். தளத்தின் முகவரி இதோ!மழலைகள் இங்கே சென்று பார்க்கலாம். மழலைகளின் ஆசிரியர் பட்டாளத்திற்கெனத் தனித் தனியாக அறிமுகப் பக்கங்கள் உள்ளன. :D

அடுத்தது எனக்கு மிகவும் பிடிச்ச, அடிக்கடி போய்ப் பார்க்கும், படிக்கும் தளம்னு சொல்லலாம், இந்தத் தளத்தை.Dharampal இப்போச் சில மாசமாப் போகலை என்றாலும் இதில் உள்ள செய்திகள் பெருமளவில் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என ஆசைப் படுகிறேன். பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இருந்த இந்தியாவின் நிலையும், அப்போது இந்திய மக்கள் எவ்வளவு படிப்பறிவு பெற்றிருந்தனர் என்பதும், விவசாயம் எத்தனை சிறப்பாகவும் சீராகவும் செம்மையாகவும் நடைபெற்றது எனவும் அறியவேண்டுமா?? பல வருஷங்கள் ஆய்வு நடத்திய காந்தீயவாதியான தரம்பால் அவர்களின் இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள். செங்கல்பட்டு மாவட்டம் 1770-களில் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய ஓர் வர்ணனை இதோ!

"The district of Chengalpattu had around 2,200 localities in it around 1770s10. A majority of the localities also had one or several sub- habitats situated at some distance from the main habitat. These localities largely were villages where the main economic activity was agriculture and animal husbandry. But quite a number had very little agriculture. Some of these latter were towns and places of great learning and many of pilgrimage, while others were centres of weaving, fishing, oil manufacture, stone work and other crafts. The twin towns of Kanchipuram were an ancient centre of learning and had been a centre of politics, administration, industry and commerce in Southern India until at least the 7th Century AD. Even in 1770, Kanchipuram was a major religious centre, as it also is today, and of people engaged in various other crafts. While around 2,200 localities are listed in this 1770 survey, the main data available pertains only to 1,910 localities. Amongst these 1,554 had human habiation, and 356 had no habitation at all around 1770. These 1,554 localities and 62,529 houses in them besides temples, shrines, centres of scholarship, resting places for travellers and the like. The number of temples and shrines in the district was around 3000 to 4000; some of their structures dated back to the 7th Century AD."

இது ஆங்கிலேய ஆதிக்கம் முழுமையடையும் முன்னர் உள்ள நிலைமை. நம்முடைய கோயில்களும் சரி, அதைச் சார்ந்த ஊர்களும் சரி மிக மிகப் புராதனப்பெருமை உள்ளவை. காலம் காலமாக அரசர்களும், மந்திரிகளும், மற்றவர்களும் இவற்றைப் பெருமையுடன் பராமரித்து நமக்குக் கொடுத்து வந்திருக்கின்றனர். எந்த அரசனும் கொடுமைப் படுத்தியோ, அல்லது துன்புறுத்தியோ, அல்லது வற்புறுத்தலின் பேரிலோ இந்த அழகான சிற்பங்களையும், சிலைகளையும், பிரம்மாண்டமான கோயில்களையும் கட்டியதாக வரலாறு சொல்லவில்லை. ஆனால் நாம் நம் வருங்கால சந்ததியினருக்கென என்ன வைத்திருக்கிறோம்?? இருக்கிறதையும் அழிக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லிக்கலாம். :(

13 comments:

  1. அருமையான பதிவு கீதா. ஆழமான கருத்துக்கள் . தெளிவுகள். வாழ்த்துகள்.
    (வாழ்த்து'க்'கள் என்று சொல்வது தவறு . உங்களை வாழ்த்தி நான் ஏன்.
    கள் குடிக்க வேண்டும்?

    ReplyDelete
  2. நீங்க படிக்கிற வலைப்பூக்கள் வகை வகையா இருக்கிறது ஆச்சரியமா இருக்கு!

    ReplyDelete
  3. மழலைகள் அருமை!

    நன்றி!

    ReplyDelete
  4. மேடம்,

    நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். குறிப்பாக DHARAMPAL. அடடா, சும்மா பார்க்கப் போய் மூன்று மணி நேரம் ஓடுவது தெரியாமல் ஓடி விட்டது.

    நிஜமாகவே படித்தேன் என்பதற்கு சான்று தருகிறேன்.

    //AN EARLY REPORT OF MENDING OF NOSES FROM PUNE c. 1794//

    இந்த முன்னேற்றம் ராமாயண காலத்தில் இருந்திருந்தால், சூர்ப்பனகை பிரச்னை எளிதாகத் தீர்ந்திருக்குமே! சேது பிரச்னையே வந்திருக்காதே!

    ReplyDelete
  5. நன்றி செந்தில் குமரன், வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நானும் கள் குடிப்பதில்லை! :)))))))))))))))) தெரிஞ்சவங்க கிட்டேயும் குடிக்காதீங்கனே சொல்லிடறது! :D

    ReplyDelete
  6. வாங்க திவா, வலைப்பூக்கள் வித விதமா இருக்கும்போது விதவிதமான பூக்களைத் தொடுத்தால் தானே மணமான கதம்பம்??? :))))))))))) எல்லாமே ஸ்வாமிக்குச் சார்த்தக் கூடிய ரகம்!

    ReplyDelete
  7. வாங்க வால்பையரே, நினைச்சேன், இந்தத் தளம் வால்பையருக்குப் பிடிக்கும்னு நினைச்சுட்டே தான் இருந்தேன், பதிவு பப்ளிஷ் ஆயிடுச்சானு பார்க்கும்போது! என்ன இருந்தாலும் வால் பையன் இல்லையா??? நன்றி.

    ReplyDelete
  8. நன்றி, ரத்னேஷ், நீங்க சான்று தராமல் சொல்லி இருந்தாலும் நான் உணர்ந்திருப்பேன், நீங்க படிச்சிருப்பீங்க என்று. ஆகவே சான்றெல்லாம் தேவை இல்லை. மீண்டும் நன்றி. முக்கியமாய் இளைஞர்களுக்கு இது போய்ச் சேரவேண்டும் என்பதே என் குறிக்கோள். யாராவது ஒருத்தரிடமிருந்தாவது பொறி கிளம்பாதா??? :)))))))))

    ReplyDelete
  9. அன்பு கீதா, உங்களது வாக்விலாசத்தைப் பற்றி சந்தேகமில்லை. இருந்தும் இவ்வளவு இடங்களுக்கு விசிட் கொடுக்கிறீர்கள் என்பது வெகு
    ஆச்சரியமாக இருக்கிறது. படிக்கப் படிக்க விருத்தியாகும் அறிவு.அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விதமும் அழகு.

    ReplyDelete
  10. நல்லபதிவுகள்.தொடரட்டும் உங்கள் தென்மதுரைத்தமிழ்ப்பணி.
    தமிழ்சித்தன்

    ReplyDelete
  11. தரம்பால் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    மற்ற பதிவர்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் தான்.

    ReplyDelete
  12. வல்லி, ரொம்ப நன்றிம்மா.

    தமிழ் சித்தரே, முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. வாங்க மஞ்சூர், சென்னை வந்திருந்ததாத் தகவல்கள் கசிய ஆரம்பிச்சிருக்கு??? தொடர்ந்து வ்ந்து பின்னூட்டம் போடுவதற்கு நன்றி.

    ReplyDelete