எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 13, 2009

மின்னும் நட்சத்திரமா இருக்கணுமா?

நட்சத்திரங்கள் விண்ணில் மின்னுகின்றன. நிரந்தரமாகவும் இருக்கின்றன. பகலில் சூரிய ஒளி காரணமாய்த் தெரியறதில்லை. என்றாலும் நக்ஷத்திரங்கள் விண்ணில் நிரந்தரமாய் இருக்கின்றன. நமக்குத் தெரியறதில்லை. ஆனால் தமிழ்மணம் நட்சத்திரம் ஒரு வாரத்துக்கு மட்டுமே மின்னும். தமிழ்மணம் நக்ஷத்திர அழைப்பு வந்ததுமே கொஞ்சம் யோசனைதான். நம்மளாலே முடியுமா? தினம் ஒரு பதிவு கட்டாயமாய்ப் போடணும், அதுவும் தமிழ்மணம் விதிமுறைகளைச் சார்ந்து இருக்கணும். யோசனையாத் தான் இருந்தது. ஆனால் இம்முறை துணிஞ்சு இறங்கிட்டேன். அழைப்பு வந்ததுமே மறுபேச்சுப் பேசாமல் சரினு சொல்லியாச்சு. இத்தனை நாளா நம்ம பதிவுக்கு வராதவங்க இப்போத் தான் வரப் போறாங்களானும் தோணிச்சு. அதோட நம்ம கதைதான் ஊரறிந்த செய்தியாச்சே?? அழைப்பை ஏற்கும் முன்னர் என்னால முடியுமானே யோசனை. ஒரு வாரம் ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு எழுதணுமே! (ஹிஹிஹி, பெரிய எழுத்தாளி ஆயிட்டேன் இல்லை) ஆனால் என்னை விட அதிகம் கஷ்டப் படப் போறது படிக்கிறவங்க தானே. அதனாலே துணிஞ்சு இறங்கிட்டேன். இலக்கியம் படைக்கவானு என்னோட தோழி ஒருத்தியின் அழைப்பும் வந்தது. ஹிஹிஹி, நல்ல ஆளைப் பார்த்துக் கூப்பிடறாங்கனு மனசிலே நினைச்சேன். நாம எழுதறது, பேசறது, நினைக்கிறதுனு எல்லாமே இலக்கியம்தானே இன்னும் கொஞ்ச வருஷம் போனா! என்ன சொல்றீங்க????


உண்மையாகவே இலக்கியத் தரம் வாய்ந்த பல பதிவுகளுக்கு நான் போய்ப் படிச்சுட்டுப் பிரமிச்சுப் போயிடுவேன். திடீர்னு எல்லாம் ஒரு இரவிலே இந்த பக்திக்கதைகளிலே பற்று ஏற்படவில்லை. சின்ன வயசிலே இருந்தே ஊறிப் போனதே இவை எல்லாம். இது ஆன்மீகமும் இல்லை. உண்மையா ஆன்மீகம் எழுதறவங்க நிறையப் பேர் இருக்காங்க. நான் அதிலே சேர்த்தி இல்லை. நான் ஒரு கதை சொல்லி மட்டுமே! அதுவும் ஏற்கெனவேயே சொல்லப் பட்ட கதைகளே! புதுசா எதுவும் இல்லை. சிலர் ஆன்மீகம் பத்தி எழுதறதைப் பார்த்தாலும் அதே வியப்பு ஏற்படும். அந்த அளவுக்கெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நான் நன்கு அறியவில்லை என்றாலும் ஓரளவுக்காவது தெரிஞ்சு வச்சிருக்கிறது புராண, இதிஹாசங்கள் பத்தித் தான். சின்ன வயசிலே இருந்து கேட்டும், படிச்சும் ஓரளவுக்குப் புரியும். அதனாலே துணிந்து இதை ஆரம்பிச்சேன் என்றாலும் இந்தக் கால இளைஞர்களின் தவறான புரிதலும் ஒரு காரணம் ஆகும். எல்லாரும் சொல்லுவதைப் போல பெரியவங்க எல்லாம் முன்னாலே சொல்லி வச்சுட்டுப் போனதைத் தான் நான் திருப்பிச் சொல்லிட்டு இருக்கேன். புதுசா எதுவும் சொல்லவே இல்லை. சொல்லும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக்கவும் இல்லை. சில எழுத்துக்களைப் படிக்கும்போது என்ன இதுனு பிரமிப்பு ஏற்படும். அவங்க யாருமே இன்னும் நக்ஷத்திரம் ஆகாமல் இருக்காங்க. நக்ஷத்திரம் ஆனவங்கள்ளேயும் ஜாம்பவான்கள், ஜாம்பவதிகள் நிறைய உண்டு. அவங்க அளவுக்கெல்லாம் எழுதப் போகிறதில்லை. ஆகவே ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம். சில பதிவுகள் அர்த்தமுள்ள பதிவுகளாகவும் இருக்கும். நான் அந்த ரகமும் இல்லை. சிலதை வேண்டாம்னே தவிர்க்கிறேன்.

எங்க பகுதியிலே எப்போ மின்சாரம் வரும், எப்போப் போகும்? எப்போ உயர் அழுத்த மின்சாரம், எப்போ குறைந்த அழுத்த மின்சாரம்னு தெரியாது. இந்த அழகிலே இணையம் வேறே திடீர் திடீர்னு போயிடும். அதனால் இம்முறை அழைப்பு வந்ததுமே எந்த விஷயங்களைப் பற்றி முக்கியமான பதிவுகள் போடணும்னு நினைச்சதை வலை ஏத்தி வச்சுட்டேன். அது அது அந்த அந்தத் தேதிக்குத் தானா வந்துடும். நேரம் மட்டும் கொஞ்சம் சரி செய்யணும். பின்னூட்டங்கள் இப்போ அதிகமாய் வரதில்லை. அதனால் பிரச்னை இல்லை. மொக்கைகளுக்கே ஆதரவுனு சிஷ்யகேடிங்க முடிவு எடுத்திருப்பதால் நீங்க எழுதற ஆன்மீக/பக்தி விஷயங்களுக்கு யார் பின்னூட்டம் போடுவாங்கனு எல்லாரும் கேலி செய்யறாங்க. யார் படிக்கிறாங்கனு இதை எல்லாம் எழுதறேனு சிலர் கேட்கிறாங்க. ராமாயணம் எழுதும்போது இதைக் கேட்டே ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருந்தார். எங்கோ யாரோ ஒருத்தர் இரண்டு பேர் நான் எழுதறதில் உள்ளதைப் புரிந்து கொண்டால் போதும். முதல்லே எல்லாம் பின்னூட்டங்கள் வரலைனா கஷ்டமாத் தான் இருந்தது. ஆனால் போகப் போக பின்னூட்டங்களை எதிர்பார்க்கும் மனசும் இப்போ இல்லை. இதுதான் நீ செய்யவேண்டியதுனு யாரோ கட்டளை போட்டிருக்கிறாப்போல் ஒரு நினைப்பு. அதனால் எதையும் எதிர்பார்க்காமலேயே எழுதிட்டு இருக்கேன். வந்து பின்னூட்டம் போடறது மிகச் சிலரே. அந்த மிகச் சில பின்னூட்டங்களுக்கும் உடனடியாக பதில் எழுதலைனா தப்பா நினைக்க வேண்டாம். மின் தடை, அல்லது இணையத் தடை தான் காரணமா இருக்கும். மத்தவங்க ஆன்மீகம்னு நினைச்சுட்டு வரதில்லை. இது ஆன்மீகமே இல்லை. பக்திக் கதைகளே. இன்றைய இளைய தலைமுறைக்குப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ, அல்லது குடிமைப் பயிற்சியோ பாடத்திட்டத்தில் இல்லை. முக்கியமான இவைகள் சொல்லிக் கொடுக்காமல் ஒரு பாடத் திட்டம். இதிலே சமச்சீர் பாடத் திட்டம் கொண்டு வரணும்னு வேறே சொல்லிட்டு இருக்காங்க.

நான் பள்ளியில் படிக்கையிலே வாரம் இரு முறை நீதி போதனை வகுப்புகளும், வாரம் இருமுறை குடிமைப் பயிற்சி வகுப்புகளும் இருந்தன. நீதி போதனையில் மற்றக் கிறித்துவ மாணவிகளுக்கு அவங்க வேதாகமத்தில் இருந்து பாடம் என்றால் எங்களைப் போன்றவர்களுக்குப் பொதுவான நீதிக்கதைகள், பாடங்கள் என்று போதிக்கப் படும். குடிமைப் பயிற்சி அனைவருக்கும் பொது. அனைத்துக் கைவேலைகள், சாலை விதிகள், விருந்து சாப்பிடும்போது கடைப்பிடிக்கும் விதிகள், குழந்தைகள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள், சமூக நீதிகள் என அனைத்தும் போதிக்கப் பட்டு இவைகளுக்குத் தேர்வும் இருந்தது. ஆனால் இன்றைய பள்ளிகளில் கடவுள் வாழ்த்தே தடை செய்யப் பட்டுள்ளது. :((((((( இறைவனுக்குப் படைத்துவிட்டு உணவு உண்ணுவதையும் கேலி செய்கின்றனர். நிவேதனம் என்றால் கடவுள் வந்து உணவருந்துவார் என்று எண்ணக் கூடாது. அறிவிப்பு மட்டுமே அது. இன்றைய இந்த நேர உணவை நீ கொடுத்ததுக்கு உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற அறிவிப்பு.

பலருக்கும் புராணங்கள் பற்றிய தவறான கண்ணோட்டமே இருக்கிறது. ஒரே மனுஷியான நான் என்னோட அப்பா, அம்மாவுக்குப் பெண்ணாகவும், கணவருக்கு மனைவியாகவும், தோழிக்கு சிநேகிதியாகவும், குழந்தைகளுக்குத் தாயாகவும், மாமியார், மாமனாருக்கு மறுமகளாகவும் இப்படிப் பல்வேறு ரூபங்கள் எடுக்கவில்லையா? அதுபோலவே இருக்கும் ஒரே பிரம்மமே வேறு வேறு வடிவம் எடுக்கின்றது. ஒவ்வொருவருக்கும் பிடிச்ச வகையில். வீரம் பிடிச்சவங்களுக்கு வீரத்தில் சிறந்த முருகனும், காளியும் கடவுளாயும் எடுத்துக்கறாங்க. சிலருக்குக்கிருஷ்ணரைப் பிடிக்கும், அதிலும் பால கிருஷ்ணனைப் பிடிக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் என்பதால் இருக்கும் ஒரே பிரம்மமே பல்வேறு உருவங்களில் அவரவருக்குத் தகுந்தாற்போல் தோன்றுகிறார்.

பொதுவாய் நான் எழுதுவதில் எந்தவிதமான சமூக, ஆன்மீக, பெண்கள் பிரச்னைகளைத் தொடுவதில்லை. இந்தப் பிரச்னைகள் பற்றிய என்னோட கருத்துகள் கொஞ்சம் மாறுபடுவதால் விவாதங்களைத் தவிர்க்க எண்ணியே அவற்றைப் பற்றி ஏதும் எழுதுவது இல்லை. இதிஹாசங்கள், புராணங்களை அடிப்படையாக வைத்தே தகவல்களைக் கொடுத்து வருகின்றேன். ஏனெனில் பலரும் புராணங்களைப் புரிந்து கொள்வதில் செய்யும் தவறே காரணம். மற்றவை என்னோட பயணங்கள் பற்றி மட்டுமே. இப்போவும் அப்படித் தான் எழுதப் போறேன்னு நினைக்கவேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்னைகளை ஓரளவு ரொம்ப ரொம்ப லேசாக எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன். ரொம்ப ஆழமா எல்லாம் போகலை. முழுக்க ஆன்மீகமும் இல்லை, கவலைப் படாதீங்க.

ஆன்மீகம்னு நான் எழுதும் புராணக் கதைகளைச் சொல்ல முடியாது. உண்மையான ஆன்மீகமே வேறே. அதன் முதல் படியில் கூட நான் இல்லை. ஆனால் ஒன்று, இந்த பக்தியெல்லாம் திடீர்னு வந்தது இல்லை. அது மட்டும் நிச்சயம். சின்ன வயசிலே இருந்தே வந்த ஒன்று. ஆழமாய்ப் பதிந்து விட்டது. இன்றைய தலைமுறையினர் பல விஷயங்களில் ஒரே அவசரம், வேகம். எல்லாருக்கும் புராணக் கதைகள் பலவும் தெரிந்திருந்தாலும், புராணங்கள் பெரும்பாலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதற்கு என் இளைய சிநேகிதி லாவண்யா எனக்கு அனுப்பிய ஒரு மடலில் இருந்து காணலாம். கடவுள் இருக்கின்றான் என்று சொல்லும் ஆத்திகவாதிகளை நெளிய வைக்கும் அளவுக்குக் குறைகள், குற்றங்கள். இது புரிதலில் உள்ள கோளாறே காரணம். ஆத்திகவாதிகள் பலரும் கடவுளை நம்பினாலும் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்ளுவதில்லை தான். ஆனால் இதில் ஆழமாய்ப் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அதற்கான அவகாசம் யாருக்கும் இல்லைனு நினைக்கிறேன். விவாதம் செய்யணும்னு பார்த்தால் புராணங்களைப் புரிந்து கொள்வது கஷ்டம் தான். நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கடவுளில் தான் ஆரம்பம் ஆகிறது.

நாத்திகம் பேசுபவர்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்சாப்போல் இந்த விஷயங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. நம்மை மாதிரிக் கடவுளையும் நாம ஒரு மனுஷனா நினைப்பதிலே தான் இந்தக் கோளாறெல்லாம். கடவுள் இல்லைனு சொல்றவங்க, எங்கே கடவுள் காட்டுனு கேட்கிறாங்க. கடல் நீர் நிறைய உப்புத் தான் நிறைஞ்சு இருக்கு. வாயில் விட்டால் உப்புக் கரிக்கின்றது. ஒரு இடத்தில் உப்பு ஜாஸ்தி, மற்ற இடத்தில் உப்புக் கம்மினு சொல்ல முடியுமா? எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கின்றது. ஏன் அந்தக் கடல் நீரையே உப்புக்குப் பதிலாய்ப் பயன்படுத்திச் சமைக்கக் கூடாது? முடியாதுனு புரியுது இல்லையா? உப்பைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தறோம் அல்லவா? அப்போத் தான் உப்பு இருக்குனு நாம புரிஞ்சுக்கறோமா? அது இல்லை அல்லவா? உப்பு என்னமோ ஏற்கெனவே இருக்கிறது தான்.

அது போலத் தான் கடவுளும். எல்லா இடத்திலும் நிறைந்தே இருக்கின்றார். ஒரு இடத்தில் இல்லை, மற்ற இடத்தில் இருக்கார்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து உப்பை அதில் இருந்து பிரிச்சு எப்படி எடுக்கிறோம்? அதற்கு எவ்வளவு உழைப்புத் தேவை? அதே போல் நம் இறை உணர்வு என்னும் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து, நம் வழிபாடுகளாலும், செயலாலும், சொல்லாலும், நடத்தையாலும் இறை அருளைப் பெற வேண்டியது தவிர வேறு ஒன்றும் நினைக்காமல் இருந்தோமானால், நமக்கு கடவுள் என்னும் உப்புக் காக்ஷி கொடுக்கும். கடவுள் கிட்டே நாம் போய்ப் பரிபூரண சரணாகதி அடைய வேண்டும். இறைவன் ஒருவனே நாம்

"அழும்போது அணைக்கும் அன்னை
அறிவிலாது ஓடி ஆடி விழும்போது
எடுக்கும் அப்பன்"
ஆக இருக்கின்றான். கடவுளுக்கு நாம் ஒரு குழந்தையைப் போல என நண்பர் காழியூரர் கூறுவார். குழந்தை எவ்வாறு அம்மாவைத் தேடி எந்தத் தயக்கமும் இல்லாமல் ஓடிப் போய்க் கட்டிக் கொள்கின்றதோ அவ்வாறே நாம் கடவுளை நம் தாயாக நினைத்து நம் துயரங்களில் இருந்து காக்கவேண்டும் என அவனைத் தேடி ஓட வேண்டும். உண்மையான பக்தி உணர்வோடு ஒரு சொட்டுக் கண்ணீர் அல்லது மனசார ஒரு பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். நம்மை நம் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் தடுத்து ஆட்கொள்ளுவான். இப்போது அடுத்து நீங்கள் படிக்கப் போவது லாவண்யா என்னைக் கேட்ட கேள்விகள். அதற்குப் பதிலாக நான் எழுதிய பதிவு ஒன்று. இது ஏற்கெனவே ஒரு குழுமத்தில் வந்தது. ஆகவே அங்கே படிச்சவங்க கொஞ்சம் பொறுத்துக்கணும். மத்தவங்க படிப்பதற்காக இது ஒரு மீள் பதிவு.

66 comments:

  1. வாழ்த்துக்கள் கீதா மேடம்!

    //கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து, நம் வழிபாடுகளாலும், செயலாலும், சொல்லாலும், நடத்தையாலும் இறை அருளைப் பெற வேண்டியது தவிர வேறு ஒன்றும் நினைக்காமல் இருந்தோமானால், நமக்கு கடவுள் என்னும் உப்புக் காக்ஷி கொடுக்கும்.//

    அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  2. நக்ஷத்திர வார இடுகைகள் நாம தமிழ் மணத்துக்கு எப்போவும் போல் அனுப்பணுமோ??? ம்ம்ம்ம்ம்ம்?????? இது பத்தி யார் கிட்டே கேட்கிறது???

    ReplyDelete
  3. வாங்க ராமலக்ஷ்மி, சந்தேகமா இருந்தது, பதிவுகள் போகிறதா இல்லையானு, உங்க பின்னூட்டம் அந்த சந்தேகத்தைப் போக்கியது, நன்றி, வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் சேர்த்து.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நட்சத்திர வாழ்த்துக்கள் கீதா மேடம்!

    :))

    ReplyDelete
  6. வாங்க ஆயில்யன், நன்றி.

    ReplyDelete
  7. அட, மனசு, மறுபடி??? நன்றி. :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கீதாம்மா...

    ReplyDelete
  9. கீதாம்மா நட்சத்திர வாழ்த்துகள் !

    ***
    //நாத்திகம் பேசுபவர்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்சாப்போல் இந்த விஷயங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. //

    :)
    அவலும் மெல்லப் பல்லும் இருக்கும் வரை இதெல்லாம் இருக்கும்.

    ReplyDelete
  10. முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவி...;))

    அப்புறம் ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்...(சொல்லவேல்ல)

    \\நான் ஒரு கதை சொல்லி மட்டுமே! \\

    இந்த கதை சொல்லிங்கிறது மட்டும் என்ன லேசுல வந்துடுமா!!? அதுக்கும் பின்னால் நிறைய உழைப்பு இருக்கும்.அது எங்க தலைவிக்கிட்ட இருக்கு ;)

    மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  11. நல்வரவு கீதா.

    நட்சத்திரமானதுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    அடிச்சு ஆடுங்க......:-)

    வெயிட்டீஸ்.

    ReplyDelete
  12. தமிழ்மணத்துக்குன்னு தனியா அனுப்ப வேணாம் கீதா. பதிவு வெளியிட்டதும் வழக்கம்போல் தமிழ்மணத்தில் 'அளி'க்கணும். அம்புட்டுதான்:-)

    ReplyDelete
  13. நன்றி, மெளலி.

    ReplyDelete
  14. வாங்க கோவியாரே, இந்த மாதிரி முக்கிய நிகழ்வுகளிலே மட்டும் தலை காட்டறீங்க??:))))))))

    ReplyDelete
  15. ஹிஹிஹ்ஹி, கோபி, சொல்லக் கூடிய அளவுக்கு எழுதணும் இல்லை??? அப்புறமா அதிகமா எதிர்பார்த்துட்டு ஏமாற்றம் அடையக் கூடாதில்லை?? அதனால் சொல்லலை!

    ReplyDelete
  16. நன்றி துளசி, வாழ்த்துகளுக்கும், உதவிக்கும்.

    ReplyDelete
  17. மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. மனம் நிறைந்த வாழ்த்துகள் கீதா. நல்ல வாய்ப்பு எங்களுக்கெல்லாம். அருமையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள.

    நிறைய எழுதுங்க.மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அனைத்துக் கைவேலைகள், சாலை விதிகள், விருந்து சாப்பிடும்போது கடைப்பிடிக்கும் விதிகள், குழந்தைகள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள், சமூக நீதிகள் என குடிமைப் பயிற்சியில் நீங்கள் அன்று கற்றுக்கொண்டதையும் எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நன்றி, சந்தனமுல்லை, திகழ் மிளிர், முதல் வரவுக்கும், வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  22. வாங்க வல்லி, ரொம்பவே புகழறீங்க! :)))))) அதுக்குத் தகுதியா என்னை நான் இன்னும் நிறைய மாத்திக்கணும். பொறுப்புக் கூடுகிறது.

    ReplyDelete
  23. வாங்க சகாதேவன், கைவேலைகள்னா இன்னிக்கு அவ்வளவு ஒண்ணும் எல்லாரும் கத்துக்க ஆசைப் படறதில்லை. சாலைவிதிகள் தான் இப்போக் கடைப்பிடிக்கிறதே இல்லையே யாரும். நேத்திக்கு வண்டியிலே தி.நகர் போனப்போ அண்ணா நகர் ரவுண்டாணா,ப்ளூ ஸ்டார் இங்கெல்லாம் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது நாங்க சிலர் நின்று கொண்டிருக்க பலரும் வேக வேகமாய் பக்கவாட்டுத் தெருவில் இருந்து வண்டிகள் வருவதையும் மீறித் தாண்டிப் போனார்கள். இதிலே என்ன அவசரம்னு புரியலை. ஒரு பைக் மயிரிழையிலே தப்பியது! :((((((

    குழந்தைகள் நடந்து கொள்ளவேண்டியதை என் குழந்தைகளிடமே சொல்ல முடியுமா இப்போ அவங்க சின்னக் குழந்தைகளா இருந்தால்??? சந்தேகமே! :((((((

    ReplyDelete
  24. மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு ஏற்கனவே மூன்று சகோதரிகள் உண்டு. நான்காவதாக நீங்களும். இணையத்தில் உங்கள் கருத்து மிகுந்த பதிவுகளை எப்பொழுதும் படிப்பதுண்டு. பின்னூட்டம் போடும் பொறுமை இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் படிப்பேன்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் கீதா மேடம்!

    epdiyum oru 30 posts pottu thakida maattenga withn this week..? :p

    so Besides cooking, all household works also on the head of sambu mama this week.. :)))

    sorry or the English comment. :(

    ReplyDelete
  26. நட்சத்திர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  27. கடவுள் இருக்கின்றான் இப்ப தான் கிருபானந்த வாரியர் சொல்லும் வீடியோ பதிவு போட்டுவிட்டு இங்கு பார்த்தா அதை தொட்டு எழுதியிருக்கிறீர்கள்.
    நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    சொல்கிறதில்லை முன்னாலேயே?
    முதல்லே வழக்கமான பின்னூடமெல்லாம் போடுடரென்.
    அடிச்சி ஆடுங்க(யாரை?)
    நின்னு ஆடுங்க! (ஏன் பாவம் உக்காந்துக்கலாமே?)
    நக்ஷத்திர வாழ்த்துக்கள் (வாழ்த்துக்கள் லே த் உண்டா இல்லையாப்பா?)
    ரிபீட்டேய்!
    :-)))))))))
    மீதி றெம்ப்லேட் இ.கொ வந்து போடுவார்.

    ReplyDelete
  29. நீங்க எழுதறது ஆன்மீகம் இல்லைனா எதுன்னு புரியலே!

    ReplyDelete
  30. வழக்கம் போல மொக்கையும் உண்டுதானே?
    இல்லைனா ....நற, நற...

    ReplyDelete
  31. த ம வாரத்திலே ஆனை பத்தி பதிவு உண்டா இல்லையா?
    உண்டுன்னா தொடர்ந்து படிப்பேன். இல்லாட்டா....

    ReplyDelete
  32. கடல் பாத்தி நல்ல உதாரணம்.

    ReplyDelete
  33. இதையே பிரிச்சு நாலு பதிவா போடர கலை கைவரலையா உங்களுக்கு?

    ReplyDelete
  34. ஏதோ என்னால் ஆன நாலு பின்னூட்டம். சாக்லேட் உண்டு இல்லே?

    ReplyDelete
  35. அடுத்த பதிவுக்காக வெய்டிங்க்!

    ReplyDelete
  36. வணக்கம் ஆன்மீக சரஸ்வதி!

    //ஆனால் என்னை விட அதிகம் கஷ்டப் படப் போறது படிக்கிறவங்க தானே.//

    இப்படி அப்பட்டமா உண்மை எழுதறது தான் உங்க தனிச் சிறப்பே! ஹி ஹி.

    ReplyDelete
  37. //இன்றைய இளைய தலைமுறைக்குப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ, அல்லது குடிமைப் பயிற்சியோ பாடத்திட்டத்தில் இல்லை. முக்கியமான இவைகள் சொல்லிக் கொடுக்காமல் ஒரு பாடத் திட்டம். இதிலே சமச்சீர் பாடத் திட்டம் கொண்டு வரணும்னு வேறே சொல்லிட்டு இருக்காங்க.//

    பொறுப்பான கவலை. பெரிசுங்களே பேரன் பேத்திகளுக்குச் சொல்லித் தருவதை விட்டுவிட்டு சீரியலும் மானாட மயிலாடவும் பார்த்திட்டிருக்கங்களே!

    ReplyDelete
  38. //பொதுவாய் நான் எழுதுவதில் எந்தவிதமான சமூக, ஆன்மீக, பெண்கள் பிரச்னைகளைத் தொடுவதில்லை. இந்தப் பிரச்னைகள் பற்றிய என்னோட கருத்துகள் கொஞ்சம் மாறுபடுவதால் விவாதங்களைத் தவிர்க்க எண்ணியே அவற்றைப் பற்றி ஏதும் எழுதுவது இல்லை.//

    அப்புறம் எப்படி பின்னூட்டங்கள் வரும்?

    //இன்றைய தலைமுறையினர் பல விஷயங்களில் ஒரே அவசரம், வேகம். எல்லாருக்கும் புராணக் கதைகள் பலவும் தெரிந்திருந்தாலும், புராணங்கள் பெரும்பாலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன //

    ஆயிரம் முறை ஆமாம்.

    //இப்போது அடுத்து நீங்கள் படிக்கப் போவது லாவண்யா என்னைக் கேட்ட கேள்விகள். அதற்குப் பதிலாக நான் எழுதிய பதிவு ஒன்று. இது ஏற்கெனவே ஒரு குழுமத்தில் வந்தது. ஆகவே அங்கே படிச்சவங்க கொஞ்சம் பொறுத்துக்கணும். மத்தவங்க படிப்பதற்காக இது ஒரு மீள் பதிவு.//

    நல்லவேளை நான் "மத்தவங்க" லிஸ்டில் தான் இருக்கேன்.

    ReplyDelete
  39. நட்சத்திர வாழ்த்துகள் கீதா!

    ReplyDelete
  40. Anonymous13 July, 2009

    valzthukkal amma.

    -mani(manivilaas)

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் கீதா மேடம்! congrats

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் கீதா மேடம்

    ReplyDelete
  43. வாங்க சூப்பர் சுப்ரா, உங்க உதவியை மறக்க முடியுமா?? கட்டாயமாய் நீங்களும் எனக்கு சகோதரரே. ரொம்ப நன்றி, நினைவு வைத்துக் கொண்டு வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  44. Anonymous14 July, 2009

    நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. @ அம்பி, ரொம்பவே புகை விடாதீங்க. ஏற்கெனவே எனக்கு மூச்சுத் திணறலா இருக்கு!

    நீங்க செய்யறதெல்லாம் எங்க வீட்டிலேயும்னு நினைச்சுக்கறதா என்ன?? பாவம் த.ம.!!!!!! :P:P:P:P

    @தேவன் மாயம், வாங்க, பேருக்கேத்தாப்போல் மாயமாவும் மறைஞ்சுடறீங்க??? ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அதிகமோ??? :))))))))

    ReplyDelete
  46. வாங்க வடுவூர், சென்னை வந்திருக்கீங்க, சொல்லவே இல்லை, கடற்கரையிலே எடுத்த படங்களில் உங்களையும் காணோம்??? அப்புறமா எடுத்தாங்களோ?? அது என்ன ஸ்வீட் கொண்டு வந்தீங்க?? மண்டையைக் குடையுது, எல்லாரும் பாராட்டி இருக்காங்க.

    பை தி வே, இப்போ உங்க வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். :D

    ReplyDelete
  47. @திவா, உங்க முதல் கேள்விக்கு பதில் :P:P:P:P:P இதான்!
    அப்புறம் அது என்ன கொத்தனாரை வந்து போடச் சொல்றது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அப்புறம் நான் எழுதறது ஆன்மீகமே இல்லை. பக்திக் கதைகள் தான்! :))))))))

    ReplyDelete
  48. மொக்கை கொடுக்கறதா வேண்டாமானு யோசனை! சிஷ்யகேடிங்க விருப்பம் இருக்குங்கறது, உங்க கேள்வியிலே இருந்து தெரியுது. பார்ப்போம்! நற நற நான் சொல்லணும், காப்பிரைட் இருக்கு தெரியுமில்லை?? :P :P:P:P:P

    ஆனை பத்திப் பதிவு தனியா இல்லைனாலும் பிள்ளையார் வருவாரே!

    ReplyDelete
  49. ஹிஹிஹி,கடல் பாத்தி பத்தி ஒரு உபந்யாசத்திலே கேட்டது, அப்புறம் தெ.கு. புத்தகத்திலும்???? சரியாத் தெரியலை, படிச்ச நினைவு! இதை எல்லாம் பாராட்டி, என் மானத்தை வாங்கணுமா??? :)))))))))))

    ம்ம்ம்ம்ம் முதல்லே அப்படித் தான் நினைச்சேன். பிரிச்சும் வைச்சேன். அப்புறமா வேண்டாம்னு தோணித்து. ஒரே பதிவாப்போட்டுட்டேன்!

    ReplyDelete
  50. @திவா, இன்னிக்கு முக்கிய வேலையே இந்தப் பின்னூட்டம் போடறது தான் போல!!!! அப்புறம் அடுத்த பதிவு இதோ வந்திருக்கணுமே??? பார்க்கிறேன். சாக்லேட் எல்லாம் கிடையாது, உங்களுக்கு ஒத்துக்காதுனு நானே சாப்பிட்டுட்டேன். :)))))))

    ReplyDelete
  51. வாங்க ரத்னேஷ், 32 கேள்வி- பதிலைப் படிச்சுப் பாருங்க, அதிலே கூட வாக்குமூலம் கொடுத்திருக்கேன். இப்படிப் போட்டு உடைக்கிறது தான் நம்ம சிறப்புனு! :P:P:P:P

    ம்ம்ம்ம் நீங்க சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னிக்கு தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பவங்களைப் பார்த்தால் வருங்காலத்தைப் பத்திப் பயமாத் தான் இருக்கு. அதே சமயம் பொதிகையில் நந்தலாலா சேவா சமிதியின் ஒரு தன்னார்வலர் (இளைஞர்) பேசுவதைக் கேட்கும்போது நம்பிக்கைக் கீற்றும் பளிச்சிடுகிறது. அப்படி ஒண்ணும் ரொம்ப மோசமாகலையோனும் தோணுது.

    ReplyDelete
  52. மறுபடியும் ரத்னேஷ், நீங்களும் திவாவும் குத்தகை எடுத்துட்டீங்க போல! :D

    பின்னூட்டங்களை இப்போதெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அதனால் வரலைனா ஒண்ணும் தோணறதில்லை. பாருங்க, அடுத்த பதிவையும். ரொம்ப நன்றி.

    நன்றி ஷைலஜா,

    நன்றி மணிப்ரகாஷ், கைப்பெரிசு (நம்ம அதியமான்) :Dசொன்னார், நீங்க விசாரித்ததாகவும், சென்னைக்கே வந்துட்டதாகவும். நினைவு வச்சுக்கிறதுக்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  53. நன்றி சின்ன அம்மிணி!

    ReplyDelete
  54. கீதாம்மா, மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காகவே தினம் வந்து பின்னூட்டம் போட முயற்சி செய்யிறேன் (ஊர்ல இருக்கிற ஆணியெல்லாம் இப்ப நம்ம கடமை ஆயாச்சு வேற!)

    மொக்கை பதிவுன்னா கட்டாயம் பின்னூட்டம் போடுவேன்.

    நடத்துங்க, மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  55. @தமிழ் பிரியன்,
    நன்றிப்பா

    @தமிழ் நெஞ்சம், முதல் வரவுக்கு நன்றி.

    @ஸ்டார்ஜன், பேரே புதுசா இருக்கு. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  56. வாங்க கெபி, அது என்ன எல்லாருமே மொக்கைக்கே வாக்கு அளிக்கிறீங்க??? :P:P:P:P

    வாழ்த்துகளுக்கு நன்றிம்மா! ஆணியெல்லாம் பிடுங்கிட்டு மெதுவாவே வாங்க. இல்லைனா இரும்புக் கடையிலே போட்டுடுங்க ஆணியை! :)))))))

    ReplyDelete
  57. அன்புச் சகோதரிக்கு இனிய நட்சத்திர வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள் சகோதரி !

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள்!

    உப்பு உதாரணம் அருமை!

    ReplyDelete
  59. இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  60. இங்கு இருக்கேனே!!
    நீங்கள் யார் பதிவில் பார்த்தீர்களோ தெரியவில்லையே.
    சென்னைக்கு அடுத்த முறை வரும் போது சொல்கிறேன்.
    அந்த ஸ்வீட் “ரவா உருண்டை” தான் - மனைவி கை வண்ணம்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  61. நட்சத்திர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. நட்சத்திர வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  63. வாழ்த்துகளுக்கு நன்றி ரிஷான்,

    வாங்க புலி, வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    வாங்க மஞ்சூர், ஆளையே பார்க்கமுடியலை??? :(((((

    ReplyDelete
  64. வாங்க வடுவூர், நாங்க தலைவி இல்லை?? அதெல்லாம் உளவுப்படை வேலை, விஷயம் தெரிஞ்சது. மத்தபடி பதிவுகளைச் சில மாதங்களாய்ச் சரியாய்ப் படிக்க முடியலை. எனக்கும் வேலை அதிகம், மின் தடை, இணையம் இல்லாமை னு பல காரணங்கள். ரவா உருண்டையா?? அப்போ வேண்டாம், உருண்டையில் என்னோட சாய்ஸ் மாலாடும், லட்டும் தான்! :)))))))))))

    வாங்க மாதேவி, நன்றிங்க.

    வாங்க தமிழன் - கறுப்பி, இரண்டுபேரா, ஒருத்தருக்கே இரண்டு பேரா? இரண்டும் ஒரே பேரா??? குழப்பிட்டேனோ?? நன்றிங்க முதல் வரவுக்கு.

    ReplyDelete
  65. வாழ்த்துகள் கீதாம்மா. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா படிக்கிறேன்.

    ReplyDelete
  66. அடடா! மேடத்துக்கு வாழ்த்து சொல்ல ரொம்ப லேட்டா வந்துட்டேன், மன்னிக்கணும். த.ம முகப்புக்கு வராமலே ரீடரில் படிச்சிக்காலம்னு தள்ளிப்போடறதாலே வந்த கோளாறு.

    வாழ்த்துகள். நல்ல ஆரம்பம். மிச்சத்தை நிதானமா படிச்சு சொல்றேன்

    ReplyDelete