சீரியஸா எழுதி இருக்கும்போது மொக்கையோனு தோணும். ஆனால் மொக்கை போடாம நம்ம பதிவு தான்னு எப்படி உறுதிப் படுத்தறது. அதுக்காகவும் ரொம்ப நாள் சந்தேகம் ஒண்ணுக்காகவும் இந்தப் பதிவு. இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாட்களா இருக்கு. தமிழ் மணம் எல்லாருக்கும் 2/2, 6/6 அப்படினு மதிப்பெண் கொடுக்கும்போது எனக்கு மட்டும் ஏன் 0/0 கொடுக்குது?? படிக்கிறச்சே கூட, ரொம்ப வருஷம் கழிச்சுக் கல்யாணம் ஆகிப் படிச்சுப் பரிக்ஷை எழுதின போது கூட 0/0 மதிப்பெண் எல்லாம் வாங்கினது இல்லை. தமிழ் மணம் எனக்கு மட்டும் இப்படித் தான் மதிப்பெண் போடுது, நானும் தெரிஞ்சவங்க பதிவுக்கெல்லாம் போறச்சே பார்த்துட்டேன். இந்த மதிப்பெண் விஷயம் எனக்கு என்னனு புரியலை! பரிந்துரை செய்யப் படும் பதிவுகளுக்கோ??? ஒண்ணுமே புரியலை உலகத்திலே! 0/0 மதிப்பெண் கொடுத்துட்டு நட்சத்திரமாக் கூப்பிடறாங்களேனும் யோசனையா இருக்கே???? அதுவும் யாருமே பரிந்துரை செய்யாத பதிவுகளை எழுதும் ஒருவருக்கு??? தமிழ் மணம் தான் பதில் சொல்லணும். அது என்ன கணக்கிலே இந்த மாதிரி போடறாங்க?? பதில் வரலைனா தலை வெடிச்சுடும்.
**************************************************************************************
இன்னிக்குத் தான் பார்த்தேன், கடைசிப் பதிவு சின்னதா இருக்கக் கூடாதாமே! நம்ம ஸ்டைலில் ஒரு மொக்கையோட நிறுத்தலாம்னு பார்த்தா இப்படிச் சொல்லி இருக்காங்க! என்ன எழுதறதுனு யோசிச்சேன். நம்ம இளைய தலைமுறைக்கு ஒண்ணுமே சொல்லலையே! அவங்களுக்கு ஏதாவது சொல்லிடலாம். பதிவும் நம்ம வழக்கம்போல் பெரிய பதிவா ஆயிடும். அப்பாடி நிம்மதி! எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும் திரும்பத் திரும்ப வரும் forwarded mail மாதிரி இதையும் திரும்பச் சொல்றேன்.
************************************************************************************
எந்த இந்துவும் மற்ற மதத்தின் கடவுளரை இழிவாய்ப் பேசுவதில்லை. எந்தவிதமான வழிபாட்டையும் பாவம் என்றோ அதனால் மரணம் சம்பவிக்கும் என்றோ கூறுவதில்லை. உலகின் அனைத்து மதங்களும், பலரும் செய்யும் ஆன்மீகப் பயணத்தை ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணமாகவே கருதுவார்கள். ஒரே ஒரு அளவில் தைக்கப் பட்ட சட்டையானது எப்படி அனைவருக்கும் பொருந்தாதோ, அவரவர் அளவுக்கேற்றபடி சட்டை எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அவரவர் மனநிலைப்படியும் தேவையான மதத்தையும், கடவுளையும் வழிபடுகின்றனர். இந்த சநாதன தர்மத்தின் விதிகளில் எங்கேயுமே இந்துக்கள் மட்டுமே கடைத்தேறுவார்கள், மற்றவர்கள் கடைத்தேற மாட்டார்கள் எனக் கூறவில்லை. எந்த இந்துமத குருவும் இவ்வாறு பிரசாரமும் செய்வதில்லை.
பல கண்டுபிடிப்புகளும் உலகிலேயே முதல்முறையாக இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுஸ்ருதராலேயே உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களின் உதவியால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. உலகிலேயே முதல்முறையாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுதல், கண் புரை நீக்கம், செயற்கை மூட்டு மாற்றம், எலும்பு முறிவுக்கு, சிறுநீர்க் கற்கள் போன்றவற்றிற்கு மட்டுமல்லாமல், இன்றைக்குப் பரவலாய் அறியப் படும் ப்ளாஸ்டிக் சர்ஜரியும் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.
அனாடமி என்னும் உடற்கூறு இயல், பிசியாலஜி என்னப் படும் மிருகங்கள், தாவரங்களின் உடல்கூறு இயல், ஏதியாலஜி(?) என்னப் படும் நோய்க்காரணங்களையும் அதற்கான மருந்துகளையும் கண்டறியும் அறிவு, எம்ப்ரியாலஜி என்னப் படும் கருத்தரித்தல் பற்றிய அறிவு, ஜீரணப் பாதைகள் பற்றியும் ஜீரணம் பற்றியும் கண்டறிதல், மெடபாலிஸம், ஜெனடிக்ஸ் ,நோய்த் தடுப்பு போன்றவற்றில் சிறப்பான அறிவு பெற்றிருந்தனர்.
உலகத்தின் மற்ற கலாசாரங்களின் மனிதர்கள் நாடோடிகளாய்த் திரிந்து கொண்டிருந்த கால கட்டத்திலேயும், அதற்கும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னாலேயே நாகரீகமும், அறிவும் , செல்வ வளமும் பெற்றுத் திகழ்ந்த நாடாக இருந்தது. பாஸ்கராசாரியார் பூமி சூரியனைச் சுற்றும் நாட்களைத் துல்லியமாய்க் கண்டறிந்த முதல் மனிதர் ஆவார். அவர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே கண்டறிந்து சொன்னது 365.258756484 நாட்கள் என. எல்லையற்றது பிரபஞ்சம் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். Theory of Continued Fractions கண்டறிந்தவர் பாஸ்கராசாரியார் 2 ஆவார். இந்தியர்களாலேயே அங்க கணிதமும், க்ஷேத்திர கணிதமும் முன்னேற்றம் அடைந்தது. அங்க கணித முறைகள் யஜுர்வேதத்தில் விளக்கப் பட்டிருப்பதாய் அறிகின்றோம். நியூட்டனுக்கு ஆயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்பே கோவிந்தஸ்வாமின் என்பவர் Newton Gauss Interpolation formulaவைக் கண்டறிந்தார்.
பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள ஈஸ்டர் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட சில புராதன எழுத்துகள் இந்து சமவெளி நாகரீக எழுத்துகளோடு ஒத்துப் போகின்றது. வான சாஸ்திரத்தின் புத்தகமான சூரிய சித்தாந்தம் நினைவுக்குறிப்புகளில் இருந்தே வாய்மொழியாகச் சொல்லப் பட்டது இன்றளவும் நிலைத்து நிற்கிறது. கடைசியாக இது தொகுக்கப் பட்டது கி.மு. முதல் நூற்றாண்டில் எனச் சொல்லப் படுகின்றது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது வழிவழியாக வாய்மொழியாக வந்திருக்கிறது. அதில் பூமியின் குறுக்களவு கிட்டத் தட்ட 7,840 மைல்கள் எனச் சொல்லப் பட்டிருப்பது இன்றைய நவநாகரீக அளவையின் 7,926.7 மைல்களோடு கிட்டத் தட்ட ஒத்தே போகின்றது.
கணிதத்தில் "பை" என்பதன் மதிப்பை முதலில் கண்டறிந்தவர் போதாயனர் ஆவார். ஆறாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய கணக்காளர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே இவர் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருப்பதோடு இது பிரிட்டனின் கணிதமேதைகளால் 1999-ம் ஆண்டில் உறுதியும் செய்யப் பட்டுள்ளது. அல்ஜீப்ரா, ஜியோமிதி, ட்ரிக்னாமெட்ரி, கால்குலஸ், க்வாட்ரிக் ஈக்வேஷன்ஸ் எல்லாமே இந்தியர்களாலேயே பிரபலப் படுத்தப் பட்டுள்ளது. ஸ்ரீதராசாரியாரால் க்வாட்ரிக் ஈக்வேஷன்ஸ் பதினோராம் நூற்றாண்டில் அறிவிக்கப் பட்டது.
ரிக் வேதத்தில் சூரியனைக் குறித்த ஒரு ஸ்லோகத்தில் சூரியன் அரை நிமிஷத்தில் 2,202 யோஜனைகள் பிரயாணம் செய்வதாய்ச் சொல்லப் பட்டுள்ளது. இது இன்றைய ஒளியின் அளவைக்குறிக்கும் குறியீட்டோடு ஒத்துப் போகினது. உலகின் முதல் கிரானைட் கோயில் தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில் ஆகும். உலகப் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் இந்தியாவை சேர்ந்தது. ஆங்கிலேய ஆட்சியின் போது இங்கிலாந்து அரசி விக்டோரியாவிற்கு இந்தியாவின் சார்பாகப் பரிசளிக்கப் பட்ட அது தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள கண்காட்சி சாலையில் உள்ளது. 1896-ம் ஆண்டு வரையிலும் உலகில் வைரத்தின் தேவையை அதிகம் கண்டறிந்ததும், வைரம் அதிகம் கிடைத்த இடமும் இந்தியா தான் என அமெரிக்காவில் உள்ள ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் கூறுகிறது. செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டைக் கண்டு பிடித்த முதல் நாடு இந்தியாவே.
பரமபதம் என்னும் விளையாட்டைக் கண்டறிந்ததும் இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஞானதேவர் என்பவரே. மோக்ஷபதம் என்ற பெயருடன் அறிமுகம் செய்யப் பட்டது. யோகக் கலையுடன் சம்பந்தப் பட்ட களரியாட்டம், வர்மக்கலை, மற்றும் பெண்களுக்கான பரதநாட்டியம், மோகின் ஆட்டம், மணிபுரி ஆட்டம், குச்சிபுடி போன்றவை பிறந்த இடம் இந்தியா தான். உலகின் பெரிய காப்பியமான மஹாபாரதம் இந்தியாவின் வேத வியாசரால் எழுதப் பட்டது.
எல்லாவற்றுக்கும் மேல் ஆதார சுருதியாகவும், முதல் சப்தமாகவும் கருதப் படும் "ஓம்" பிறந்த இடம் இந்தியாவே.
************************************************************************************
இந்தியராக இருப்பதில் பெருமைப் படுவோம்! இந்தியாவின் கலாசாரத்தைக் காப்போம்.
ஜெய்ஹிந்த்!
ஒருவாரம் பலரையும் படிக்க வைச்சாச்சு கட்டாயமாய். கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கலாம், இந்தக் கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கலாம். அனைவருக்கும் என் நன்றி, விடை பெறுகின்றேன். பொறுமையாய்ச் சகித்துக் கொண்ட அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றியும்.
0/0 = 1/1 = 2/2 = 100/100
ReplyDeleteகணக்கு கொஞ்சமே கொஞ்சம் சரியில்லை என்றாலும் உங்கள் மனத்திருப்திக்காக. :))
நானெல்லாம் உங்களை கூகிள் ரீடரில் படிக்கிறேன். திரட்டிகள் பக்கம் வந்து நாளாகிவிட்டது.
மத்தபடி இந்தப் பதிவு ரொம்பப் பெருசாக இருப்பதாலும் பலமுறை மின்னஞ்சலில் வந்த விஷயம்தான் என்பதாலும் சாய்சில் விட்டுவிட்டேன்! :))
கொத்து, மின்னஞ்சலில் வருது தெரியும், தெரிஞ்சும் திரும்ப எழுதறேன் அப்படினு இதுக்கு முந்தின பதிவிலே முதல் பாராவிலேயே சொல்லிட்டேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்னிங்கோ! சில முக்கியமான பதிவுகளைப் போட முடியலை!! நேரமும் இல்லை, அதுக்கான கருத்துக்கணிப்புகள், புள்ளி விவரங்கள் திரட்ட முடியலை, நேரமின்மையால். பார்க்கலாம்.:))))))))))))
ஹிஹிஹி, இந்தப் பதிவிலேயும் சொல்லி இருப்பேனே????
ReplyDeleteநல்லாயிருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteபடித்தவுடன் ஒரு ஒட்டு தமிழ் மணத்திலே போட்டு விட்டேன்.
நன்றி வண்ணத்து பூச்சியாரே!
ReplyDeleteஇன்னும் போட்டுக்கொண்டே போகலாமே..
ReplyDeleteஉலகின் முதல் quiz : யக்ஷனால் கேட்கப்பட்டது, தருமனால் சொல்லப்பட்டது.
உலகின் முதல் லைவ் டி.வி : மகாபாரத போரில் சஞ்ஜயனின் கண்கள்.
உலகின் முதல் லைவ் காமெண்டேடர்: சஞ்ஜயன்.
உலகின் முதல் குளொனிங்: வியாஸரால் காந்தாரிக்கு அருளப்பட்ட 100 பிண்டங்கள், சாரி, பிள்ளைகள்
இன்னும் நிறைய இருக்கு கீதாம்மா..
ரொம்பப் பேசினால் பழமையிலேயே பெருமை பேசுவார்கள் என்று சொல்லி விடுவார்கள்..
திவாகர்
//ரொம்பப் பேசினால் பழமையிலேயே பெருமை பேசுவார்கள் என்று சொல்லி விடுவார்கள்..//
ReplyDelete@திவாகர், அப்படீங்கறீங்க??? நான் போட்டதின் நோக்கமே வேறே! பெருமை பேசறதுக்கு இல்லை. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுப்பாங்க! :))))))))
திவாகர் சார்,
ReplyDelete//உலகின் முதல் லைவ் டி.வி : மகாபாரத போரில் சஞ்ஜயனின் கண்கள்.//
சிவபெருமான் கல்யாணத்தை அகத்தியர் பொதியமலையில் ஒரு மரத்தில் பார்த்தாரே; அது மகாபாரதத்துக்கு முந்தையதா பிந்தையதா?
விருத்தாசலத்தில் ஆற்றில் தங்கத்தைக் கொட்டிவிட்டு திருவாரூர் குளத்தில் எடுத்தாரே சுந்தரர் அது தானே முதல் ATM SERVICE?
மேடம், நிறைய எழுதி இருக்கிறீர்கள். ஒழுங்காகப் படித்து விட்டு வருகிறேன்; கண்டிப்பாக வருவேன்.
//சிவபெருமான் கல்யாணத்தை அகத்தியர் பொதியமலையில் ஒரு மரத்தில் பார்த்தாரே; அது மகாபாரதத்துக்கு முந்தையதா பிந்தையதா?//
ReplyDeleteரத்னேஷ், சஞ்ஜயன் பார்த்தது லைவ் ஷோ, இது மறு ஒளிபரப்பு. :)))))))) ஆகவே உங்க கேள்வியே தப்பு! :P:P:P:P
for youth??
ReplyDeleteok!!
\\ஒருவாரம் பலரையும் படிக்க வைச்சாச்சு கட்டாயமாய். கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கலாம், இந்தக் கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கலாம். அனைவருக்கும் என் நன்றி, விடை பெறுகின்றேன். பொறுமையாய்ச் சகித்துக் கொண்ட அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றியும்.\\
ReplyDeleteஎன்ன அதுக்குள்ள ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா!!!!!!
தலைவிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ;)0
எல்லா பதிவையும் படிச்சிட்டு வரேன் ;)
வல்லி, நானும் இளைய தலைமுறைதான்! :D
ReplyDeleteவாங்க கோபி, மெதுவாப் படிச்சுட்டு வாங்க, ஒண்ணும் அவசரம் இல்லை! இன்னும் சில போஸ்ட் போட நினைச்சது போட முடியலைனு வருத்தமா இருந்தது. முக்கியமா காந்தி பத்தின சில போஸ்டும், வீர சாவர்க்கர் பத்தியும் எழுதக் குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். போட முடியலை! :(((( ஆனால் எல்லாருமே மெதுவாப் படிச்சுட்டு வரேனு சொல்றதைப் பார்த்தா போட முடியாமல் போனது நல்லதுனு தோணுது. நேரம் கிடைச்சால் பார்க்கலாம்! :)))))
ReplyDeleteHi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
nalla vishyangal pala kudutha ungaluku nandri.. ethana vaati padichaalum namma natu perumaiya padikarthu oru perumai thaane
ReplyDeletePaattiiiiiii! naan vandhutten! enaku thaan advice a? padichuttu sollaren ;-)
ReplyDeleteஹை டிடி அக்கா, வாங்க, வாங்க, அத்தி பூத்தாப்பல இருக்கு உங்க வரவு, பாராட்டுக்கு நன்னிங்கோ!
ReplyDeleteஆஹா, போர்க்கொடி, உங்களை யாரு இளைய தலைமுறைனு சொல்றாங்க??? நீங்க தான் கொ.பா. ஆச்சே! :P:P:P:P:P:P
ReplyDelete