எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 04, 2009

உங்களுக்கும் 50% வேண்டுமா?

துளசி பிருகு முனிவரையும், பிருங்கி முனிவரையும் குழப்பிண்டப்போவே எழுதணும்னு வச்சிருந்தேன். ஆனால் நவராத்திரி வந்துடுச்சு. அது முடிஞ்சு இளைப்பாறவே இந்த முறை ஒரு வாரம் ஆயிடுச்சு. அதனாலே சும்ம்ம்மா இரண்டு மொக்கையோட நிறுத்திட்டேன். இப்போ எல்லாரும் முக்கியமாய் ஆந்திராவில் கொண்டாடும் கேதார கெளரி நோன்பைப் பற்றிய ஒரு விஷயம் எழுதப் போறேன். நோன்பு கொண்டாடும் அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும்தான் இந்த விஷயம். என்றாலும் தெரியாத மத்தவங்களுக்காக எழுதறேன். எனக்கும் இப்போ ஒரு நாலு வருஷம் முன்னாடிதான் இந்தக் கதை தெரிய வந்தது.

அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரராக ஆனதைப் பற்றிப் பல புராணக் கதைகள் இருக்கின்றன. அர்த்தநாரீஸ்வரராகத் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் தோற்றம் அளிப்பதையும் அந்த நேரத்தில் மலை உச்சியிலும், கோயில் கொடிக்கம்பத்தினருகேயும் தீபங்கள் ஒளி வீசிப் பிரகாசிப்பதையும் காண்கின்றோம். இந்த அர்த்த நாரீஸ்வரப்பதவி என்பது அம்மை தவம் இருந்து பெற்ற ஒன்று. உலகிலேயே முதல் முதலாக பெண்ணுக்கு சரிபாதி உரிமை தந்தவர் ஈசன் ஒருவரே. இப்போ அரசாங்கமே 33% கொடுக்கலாமா? குறைக்கலாமா? இல்லாட்டிப் பேசிட்டே இருந்தால் மட்டும் போதுமானு யோசிக்குது. ஆனால் ஈசன் யோசிக்கவே இல்லை. சரிபாதியைக் கொடுத்துட்டார். இப்போ விஷயத்துக்கு வருவோமா???

பிருங்கி முனிவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? ஈசன் ஒருவனைத் தவிர மற்ற யாரையும் அவர் வணங்கமாட்டார். ஈசனோடு சேர்ந்தே அம்மையும் காக்ஷி கொடுத்தாலும் அவர் அம்மையை வணங்காமல் வண்டு உருவெடுத்து ஈசனை மட்டும் பிரதக்ஷிணம் பண்ணுவார். எந்நேரம் வேண்டுமானாலும் திருக்கைலை சென்று சிவதரிசனம் செய்யும் பிருங்கி முனிவர் ஒரு சமயம் அவ்வாறு சென்றபோது அம்மையப்பனாக வீற்றிருந்த இருவரையும் கண்டுவிட்டுத் தம்மை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு அப்பனை மட்டுமே சுற்ற ஆரம்பித்தார். வண்டாகவோ, மனிதனாகவோ தனக்கு வேண்டிய சக்தியைக் கொடுப்பது அவள் அல்லவோ? அதை மறந்தார் பிருங்கி முனிவர். பார்த்தார் ஈசன். அம்மையும் பார்த்தாள். சிவமும், சக்தியும் ஒன்றையொன்று பரிபூரணமாய்ப் புரிந்து கொள்ள, அம்மை தன் சக்தியால் பிருங்கி முனிவரின் உடல் சக்தியை வற்றச் செய்தாள்.

நிற்கக் கூட முடியாமல் தடுமாறினார் பிருங்கி முனிவர். இவர் உடலில் ரத்தமோ, சதையோ இல்லாமல் வெறும் கூடு மட்டுமே இருந்தது. அந்நிலையிலும் அவர் ஈசனை மட்டுமே வணங்கி, தன் நிலைக்கான காரணத்தைக் கேட்க, ஈசன் அன்னையை வணங்காததால் அன்னை சக்தியை உறிஞ்சிவிட்டாள் எனச் சொல்ல, தங்களையே சரணம் என நினைக்கும் எனக்கு இந்தக் கதியா எனக் கண்ணீர் விட்டார் முனிவர். முனிவருக்குப் பாடம் புகட்டவேண்டும். அவர் திருந்துவதாய்த் தெரியவில்லையே? என்றாலும் ஈசன் முனிவருக்கு ஒரு ஊன்றுகோலை அளிக்க அதன் உதவியால் முனிவர் ஈசனை மட்டும் வணங்கிவர ஆரம்பிக்க, அன்னை வெகுண்டாள். சக்தியும், சிவமும் ஒன்று என்பதை இத்தனை தவம் செய்த இந்த முனிவன் அறியாமல் இருக்கிறானே என எண்ணிய வண்ணம் கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள் அன்னை. அங்கே தான் தவம் செய்யப் போவதாயும் சொன்னாள். கெளதம முனிவர் சகல செளகரியங்களையும் அன்னைக்குச் செய்து கொடுத்து க் கேதார கெளரி விரதம் என்றொரு விரதம் கடைப்பிடிக்கப் படுவதையும் நினைவூட்டினார். புன்னகை புரிந்த அன்னை, தாம் அந்த விரதமே இருக்கப் போவதாய்த் தெரிவித்துவிட்டு புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தனம் துவங்கி இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தாள்.

விரதம் நிறைவு நாளன்று ஈசன் அன்னையிருக்குமிடம் தேடி வந்து, தம் இடப்பாகத்தை அன்னைக்கு அளித்துப் பெருமை சேர்த்தார். அன்னையும், ஈசனும் பிரிக்கவே முடியாத அர்த்த நாரீஸ்வரக் கோலம் கொண்டனர். இந்த விரதம் முடியும் நாளையே ஆந்திராவில் நோன்பாய்க் கொண்டாடுகின்றனர். புரட்டாசிமாதம் விஜயதசமிக்குப் பின்னர் ஐப்பசி மாசம் தீபாவளி அமாவாசையன்று முடிவடையும் விதத்தில் இந்த நோன்பு அமைந்திருக்கும். சில சமயம் நவராத்திரிக் கடைசிநாட்கள் ஐப்பசி மாதத்தில் வந்தாலும் தீபாவளி அமாவாசை அதற்குப் பின்னர் இருபத்தோராம் நாளிலேயே வரும். ஆகவே ஒவ்வொரு தீபாவளி அமாவாசையிலும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள் தெலுங்கு பேசும் சகோதரிகள். இந்த விரதம் இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறந்து, கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பார்கள் என்று ஐதீகம்.

தெலுங்கு எழுத்துக்கள் கூட வாமபாகமாக அதாவது இடப்பக்கமாய்ச் சுழித்து வருவதாயும், இடப்பக்கமே அம்பாளுக்கு விசேஷம் என்பதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்கள் தெலுங்கிலேயே இருக்கும் என்றும் ஆந்திராவே சிவப் பிரதான க்ஷேத்திரம் என்றும் ஸ்ரீபரமாசாரியாளின் தெய்வத்தின் குரல் சொல்லுகின்றது. மற்ற இடங்களில் அக்ஷராப்பியாசத்தின் போது விஷ்ணுவின் எட்டெழுத்து நாமத்துடன் துவங்கினால், ஆந்திராவிலே சிவனின் ஐந்தெழுத்திலேயே துவங்கும் என்றும், அந்த மாநிலமே சுற்றிலும் காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோடிலிங்க க்ஷேத்திரம் என்ற மூன்று க்ஷேத்திரங்களுக்குள்ளேயே அடங்கி இருப்பதாயும், அதனால் த்ரிலிங்க க்ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பின்னர் தெலுங்கு என்று ஆகிவிட்டதாயும் ஸ்ரீபெரியவாள் தெரிவிக்கிறார். அதனாலேயே இந்த நோன்பும் அங்கே மட்டும் பிரதானமாய்க் கொண்டாடப் படுகிறது.

8 comments:

 1. ஸ்ரீ லங்கா விலும் தமிழர் கொண்டாடும் விரதம் இது. என் ( புட்டு) ஃப்ரெண்ட் 21 நாள் விரதம் இருப்பாங்க. அவங்க ப்ரசாதம், கலசத்துக்கு கயிறு கட்டறதுக்கும் ஏதோ கணக்கு சொல்வாங்க.எனக்கு இது கந்தசஷ்டிக்கு முன்னால வரும்னு நினைவு.

  ReplyDelete
 2. சிவன் ஆசுதோஷி ஆச்சே!!. ரொம்ப சீக்கிரமா எளிதா த்ருப்தி ஆகிவிடுபவர்.ஒரு சொட்டு தண்ணியும் , ஒரு வில்வமும் போரும். பாவம் அம்மாவை மட்டும் ஏன் இப்படி கடுமையா தவம் பண்ண வைத்தாரோ!!50% னாலயா?:))

  ReplyDelete
 3. 33% ன்னாலும் சரி, 50% ன்னாலும் சரி . போராடினாத்தான் கிடைக்கும்போல இருக்கு :)

  ReplyDelete
 4. எங்க அம்மா வீட்டிலும் இந்த நோன்பு செய்வாங்க.

  //ஒவ்வொரு தீபாவளி அமாவாசையிலும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள் தெலுங்கு பேசும் சகோதரிகள். இந்த விரதம் இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறந்து, கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பார்கள் என்று ஐதீகம்.//

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஐதீகம்தான்.

  ரெண்டுநாலைக்கு முன்னால் செய்தித்தாளில் பார்த்தேன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 50 சதம் தரணுமுன்னு யாரோ அரசியல்வாதி சொன்னாருன்னு.

  இதைத்தானே 'அப்போதிருந்தே' கரடியாக் கத்திக்கிட்டு இருக்கேன்.

  ஜனத்தொகைக் கணக்கின்படி நாம் சரிபாதிக்கு இருக்கோமா இல்லையா?

  ReplyDelete
 5. கந்தசஷ்டியே தீபாவளிக்கு அப்புறம் தானே? அதனால் கணக்கு சரியாய் இருக்கும்னு நினைக்கிறேன் ஜெயஸ்ரீ. தீபாவளி அமாவாசை அன்று ஆந்திராவில் மிகவிமரிசையாகக் கொண்டாடப் படும் நோன்பு இது. தீபாவளிப் பண்டிகையை விட இந்த நோன்பே அவர்களுக்கு மிகவும் முக்கியம்.

  ReplyDelete
 6. ஜெயஸ்ரீ, சின்ன அம்மிணி, நல்லாப் படிச்சால் தானே மார்க் வரும்? அலுவலகத்தில் திறமையைக் காட்டினால் தானே மேன்மேலும் உயரலாம்?? இந்த தவம் செய்வதையும் அப்படியே பார்க்கவேண்டும். மேலும் ஆண்கள் அப்படி எல்லாம் சட்டுனு வளைந்தும் கொடுக்கமாட்டாங்க இல்லையா? கொஞ்சம் பிகு பண்ணிப்பாங்க. இது அம்மாவின் எமோஷனல் ப்ளாக் மெயில்னு வச்சுப்போமே! :)))))))))))

  என்னதான் சுடுகாட்டில் ஆடினாலும் மனைவி பட்டினியாத் தபசு இருக்கானதும் மனசு இரங்கறது இல்லையா? அதுக்குத் தான்! இதை இந்தக் கோணத்திலே பார்க்கணுமாக்கும்! :)))))))))))))

  ReplyDelete
 7. ரெண்டுநாலைக்கு முன்னால் //செய்தித்தாளில் பார்த்தேன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 50 சதம் தரணுமுன்னு யாரோ அரசியல்வாதி சொன்னாருன்னு.//

  ஹிஹிஹி, நான் தான் என்னோட பதிவிலே சொல்லி இருக்கேன். :D

  //இதைத்தானே 'அப்போதிருந்தே' கரடியாக் கத்திக்கிட்டு இருக்கேன்.//

  தமிழிலே சொல்லி இருக்கணுமோ? கரடி பாஷையிலே சொன்னால் புரிஞ்சுக்க மாட்டாங்க இல்லை?? :P

  //ஜனத்தொகைக் கணக்கின்படி நாம் சரிபாதிக்கு இருக்கோமா இல்லையா?//

  இல்லைனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. அப்படிங்கறேளா மிஸஸ் சிவம். எனக்கு என்ன தோனும் தெரியுமா? அய்யா சாது, அன்போட மறுவடிவம்.இந்த அம்மா இருக்காங்களே அவங்களுக்கு தன் புருஷன் மேல அத்தனை அன்பு பெறுமை. யாரவது இந்த அய்யாவ குறைச்சு மதிப்புபோட்டுட்டா? அவர் கரைஞ்சுடுவார்னு அந்தாம்மாவுக்கு தெரியாதா என்ன . அவங்க யாரு? மஹாசாதுர்யனோட தங்கை!! அசயாத அந்த சிவம் வேண்டாமலே இந்தம்மா கோர தவம் பண்ணி பொன்னார் மேனியனொட மதிப்ப வைரமேனியன்னு ஆக்கிடுவாங்க.அந்த மாதிரி குணாதிசயம் இருக்கிற எந்த பொண்ணுக்கும் 50% கஷ்டமா கிடைக்கறது?

  ReplyDelete