காலையில் கணினியைத் திறந்ததுமே கூகிளார் வந்து என்னோட டூல்பாரைப் பயன்படுத்தறதுக்கு நன்றினு சொல்லிட்டு, வேறே என்ன உதவி வேண்டுமோ கேளுனும் சொல்லிட்டுப் போனார். சரி, இது ஏதோ இன்னிக்கு வழக்கம் போலனு இருந்தால் கொஞ்ச நேரம் கழிச்சு யாஹூவார் வந்தார். கூகிளார் என்னோட சில தளங்களை ப்ளாக் பண்ணிட்டார். அதனால் நானும் உனக்கு செர்ச் எஞ்சின் சேவையை நிறுத்திட்டேன். உனக்கு அது வேண்டும்னா இங்கே வானு ஒரு இடத்தைச் சுட்டிக் கூப்பிட்டார். காலையிலே வீட்டு வேலையைக் கவனிக்கிறதா? இல்லை இவங்க சண்டையிலே மத்தியஸ்தம் பண்ணறதா? ஒண்ணும் புரியலை.
அதுக்குள்ளே கூகிளார் வேறே ஒரு இடத்தைக் காட்டி அங்கே வாங்கறார். என்ன செய்யறது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே. என்னை மாதிரி க.கை.நா.க்களுக்கு உதவும் தொழில் நுட்ப நல் உள்ளங்களே, என்ன செய்யணும்னு வரிசையா வந்து சொல்லுங்கப்பா பார்ப்போம்! ம்ம்ம்ம் ரெடி ஷ்டார்ட், ஒன், டூ, த்ரீ, வாங்கப்பா தொழில் நுட்ப ஆலோசர்கர்கள் எல்லாம். இந்தச் சண்டைக்கு ஒரு முடிவே இல்லையானும் தோணுது! :D
யார் பேச்சையும் கேக்காதீங்க.உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அது படி தட்டுங்க.தேவையானா அழைக்கிறேன்னு சொல்லி அனுப்பி விடுங்கள்.கூகிழார் யாஹூழார் எல்லாம் நமக்குச் சேவகம் செய்யும் நல்ல பணியாள்கள்தான்.
ReplyDeleteநாம ,சிவனே என்று, சேக்கிழாரைப் பார்ப்போம்
ஆலோசனை வழங்கும் அளவுக்கு இதில் அறிவு அனுபவம் இல்லை. ஆனால் சீக்கிரமே சமாதானக் கொடி பறக்க வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஎன்ன பதில் வருதுன்னு பார்க்க
ReplyDeleteஎந்த பிரவுசர் பயன்படுத்தறீங்க, எந்த இயங்கு தளம் (operating system) போன்ற விவரங்களையும் தெரிவிச்சிருக்கலாம். பொதுவா Firefoxஇல் இது போன்ற தொந்தரவுகளெல்லாம் வருவதில்லை. மேலும், Google toolbar போன்ற இணைப்புகளைக் கழட்டி விட்டு வேண்டும்போது Google தளத்திற்குச் சென்று தேடிக் கொள்வது சாலச் சிறந்தது.
ReplyDeleteஎனக்கும் இதுதான் பிரச்சனை, யாராது சொன்ன இரகஸ்யமாய் எனக்கும் சொல்லுங்க.
ReplyDeleteஅனேகமாக டூல்ஸ் ல போய் இண்டர்னெட் ஆப்சன்ஸ் ல கரண்ட் பேஜ் குகுள் செட் பண்ணா இந்த பிரச்சனை வராதுனு நினைகின்றேன்.
கணினியே திறக்காம இன்னிக்கு மட்டுமாவது சமையலை நீங்க செய்ங்க பாப்போம். சாம்பு மாமாவுக்கும் ரெஸ்ட் குடுத்த மாதிரி இருக்கும். :)))
ReplyDeleteதனக்கு ரெஸ்டே இல்லாத தவிப்பில் அம்பி சொல்லியிருக்கிறார்:))! அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க மேடம்:)!
ReplyDeleteவாங்க கோமா, சிவனேனு சேக்கிழாரையும், விஷ்ணுவேனு நம்மாழ்வாரையும் தான் பார்த்துட்டு இருக்கேன். ஊடால இவங்க சண்டை! :)))))))))
ReplyDeleteஅப்புறம் கோமா, பி.க.னா என்னனு கேட்டீங்களே, இப்போ உங்க ஒரு பின்னூட்டத்துக்கு நான் ரெண்டு பதில் கொடுத்திருக்கேனே அதான்! :))))))
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி, நான் எப்போவுமே வெள்ளைக்கொடிதான் பறக்க விடறேன், அதுங்கதான் ஆட்டி வைக்குதுங்க! :)))))
ReplyDeleteகொத்தனாரே, நீங்கதான் பரிந்துரை செஞ்சீங்களோ??? இருக்கும்! :P
ReplyDeleteவாங்க, வாய்ஸ், நல்லாவே வாய்ஸ் கொடுக்கிறீங்க, முன்னேயும் ஒருமுறை கொடுத்திருக்கீங்க. மறக்கலை, நான் இப்போ ஒரு வருஷமா நெருப்பு நரியிலேதான் உலாவறேன். எக்ஸ்ப்ளோரர் அதிகமாத் திறக்கறதில்லை. அதனாலே அதிலே தான் இந்தச் செய்தி வந்துச்சு.
ReplyDeleteஇயங்குதளம் windows தான்.
ReplyDeleteவாங்க பித்தரே, ரகசியம் எதுக்கு? பப்ளிக்காப் போட்டு உடைச்சுட மாட்டேன்? :))))))))))
ReplyDeleteஅ(வ)ம்பி, என்ன சமையல் செய்து அலுத்துடுச்சோ??? பாவம் நீங்க, அது சரி, இன்னும் புடைவை வந்தே சேரலையே?? எதிலே அனுப்பினீங்க??? :P
ReplyDeleteஹிஹிஹி, ராமலக்ஷ்மி, அம்பி குடும்பஸ்தராக ஆகிறதுக்கு முன்னாலே இருந்து பார்த்துட்டு வரேனே, இது தெரியாதா நமக்கு??? பாவம், அவர் சமையல் அவருக்கே பிடிக்கலைனு நாசுக்காச் சொல்லிக்கிறார். :)))))))
ReplyDeleteஉதவி உடன் பறந்து வரட்டும்னு
ReplyDeleteபரிந்துரை செஞ்சது நானு:(!
பாராட்டு இன்னொருத்தருக்கா:)?
ஹிஹிஹி, ராமலக்ஷ்மி, ஆமால்ல???? :)))))) அப்படியும் நாம அம்பியை எங்கே பாராட்டினோம்? ஸ்லைட்டா உ.கு. தானே கொடுத்திருக்கோம்?? :)))))))
ReplyDeleteஅம்பிக்கு எதுக்கு இப்போ பாராட்டு:))?
ReplyDeleteநான் சொல்ல வந்தது:
//கொத்தனாரே, நீங்கதான் பரிந்துரை செஞ்சீங்களோ??? இருக்கும்! :P //
தமிழ்மணத்துல பரிந்துரை செஞ்சா சீக்கிரம் நாலுபேர் பார்த்து உதவிக்கு வருவாங்கன்னு ஓட்டுப் போட்டேன்.
அப்பாட.. விளக்கியாச்சு:)! க்ரெடிட் எடுத்துக்கிட்டாச்சு:)!
:-)
ReplyDelete//ராமலக்ஷ்மி said...
ஆலோசனை வழங்கும் அளவுக்கு இதில் அறிவு அனுபவம் இல்லை. ஆனால் சீக்கிரமே சமாதானக் கொடி பறக்க வாழ்த்துக்கள்:)!//
வழிமொழிகிறேன்!
//உதவி உடன் பறந்து வரட்டும்னு
ReplyDeleteபரிந்துரை செஞ்சது நானு:(!
பாராட்டு இன்னொருத்தருக்கா:)?//
hihihiஆமால்ல, ராமலக்ஷ்மியின் பரிந்துரைக்கு நன்றி செலுத்துவதோடு அடுத்த உ.பி.ச. பதவிக்கான போட்டியாளர்களில் முன்னணியில் நிற்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
வாங்க சென்ஷி, உங்க வழிமொழிதலுக்கு நன்றிங்கோ!
ReplyDelete