எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 06, 2009

"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"


இந்த வலைப்பக்கத்தில் எல்லா விஷயங்களையும் எழுதுகிறேன். இங்கே தான் அதிகமாய் நண்பர்கள் வந்து பார்க்கின்றனர். மற்றப் பக்கங்களுக்கு வருவதில்லை. அதனாலேயே இந்தப் பக்கத்தில் முதலில் ராமாயணமும், இப்போது பாகவதக் கதைகளை திரு முன்ஷி எழுதி இருக்கும் விதத்திலும் கொடுக்கிறேன். இங்கே வரவங்க படிக்கணும்னு. பின்னூட்டம்னு அதிகம் வராட்டியும், தனிமடல்கள் மூலம் நிறையப் பேர் படிக்கிறது தெரிய வந்து சந்தோஷமாவே இருக்கு. ஏனெனில் இப்போதைய நம் நாட்டுக்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது. தர்மம்,வீரம், விவேகம், காதல், அன்பு, பாசம், கருணை, இரக்கம், நட்பு என அனைத்துத் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்லுகின்றான் கண்ணன். ஒரு மனிதன் எவ்வாறு நேர்மையுடனும், நெறியுடனும் இருக்கவேண்டும் என ஸ்ரீராமன் நிரூபித்தானோ அவ்வாறே, அனைவரையும் அவரவர்களின் குற்றங்குறைகளோடு அவற்றைப் பாராட்டாமல், தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு கண்ணன் நடமாடி இருக்கின்றான். பழிகளையும் சுமந்திருக்கிறான். அதற்காகச் சற்றும் வருந்தவில்லை.

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்,
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!”

கண்ணனின் திரு அவதாரமே உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கெனப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போ நாட்டில் தர்மம் நிலவுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். மிகவும் பலஹீனமான ஆட்சி நடக்கிறது இப்போது. இத்தகைய ஆட்சியில் தர்மம் நிலைப்பது எங்கே? நம் கதையில் கண்ணன் தர்மத்தை நிலைநாட்டவெனத் தன் அவதாரக் காரணத்தை நிலைநாட்டக் கிளம்பப் போகின்றான்.
நாம கண்ணனைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இதோ நாளையிலிருந்து தொடர்ந்து வருவான். ஆனால் துவாபர யுகத்தில் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணன்இப்போ அவதாரம் எடுத்து வந்தே ஆகணும்கிற சூழ்நிலை நம் நாட்டில் இப்போது நிலவுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் நம் கதைத் தொடரில் கண்ணன் கம்சனை அழிக்கப் போகின்றான். தானும், தன் மனைவி, குழந்தைகளுமே வாழவேண்டும், தனக்கு அடங்கி இருப்பவர்களை அடிமை போல் நடத்தவேண்டும் என்றே சுய அபிமானத்துடனும், சுயநலத்துடனும், கொடூர புத்தியுடனும், தனக்கு எதிராய் யார் வந்தாலும் அவர்களைப் பூண்டோடு அழித்துவிடுதல் போன்ற கொடுமையான காரியங்களைச் செய்தவனும், பச்சிளங்குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் அநேக குழந்தைகளைக் கொன்றவனும் ஆன கம்சன் அழியவேண்டியவனே என்பதால் அவன் கொல்லப் பட்டான். கண்ணன் அவதாரம் செய்த காலத்தில் மக்கள் அனைவரும் கம்சனின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து செய்வதறியாது திகைத்துக் கொண்டு, தங்களை வாழவைக்கப் போகும் கடவுளுக்குக் காத்திருந்தனர். திரு அவதாரம் செய்தான் கண்ணன். தர்மத்தை நிலைநாட்டினான். நம் நாட்டிலும் இப்போது அம்மாதிரியான ஒரு அசாதாரணமான சூழ்நிலையே நிலவுகிறது. மிகவும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.

அடுத்த வீடான நாடுகளை சிநேகிதம் செய்து கொண்டு அதன் மூலம் நம் நாட்டை மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு அண்டை நாடு ஆன சீனா பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்நேரம் என்ன செய்தி வருமோ என்று பிரதமர் கவலைப்படுகிறாரோ இல்லையோ, நமக்குக் கவலையாய் இருக்கு. பத்தாததுக்கு தீவிரவாதிகளின் மிரட்டல். நாட்டின் ஆதாரமான கலாசாரச் சீரழிவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சி சானல்கள் மூலம், மற்றப் பிரசாரங்கள் மூலமும் நடக்கின்றது. வெளிநாட்டுக் கலாசாரம் வெகுவேகமாய்ப் பரவிக் கொண்டிருப்பதோடு, அதுவே உயர்ந்தது என்றும் அத்தகைய கலாசாரத்தைப் பின்பற்றும் இளைஞர்கள், இளைஞிகள் எடுத்துக்காட்டாகவும் வெளிப்படுத்தப் பட்டு, அவர்கள் புகழே பாடப் படுகின்றது. அத்தகையோரே ஒரு முன்னுதாரணமாகவும் சித்திரிக்கப் படுகின்றனர். இது கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தை அடியோடு அழிப்பதாய் இருக்கிறது. வேறு எந்தவகையிலும் மாற்ற முடியாத நம் நாட்டுக் கலாசாரம் இன்று தொலைக்காட்சிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு வெற்றிகரமாய் அழிக்கப் பட்டு வருகிறது. அனைவரும் எப்படியோ, எந்தவிதத்திலோ தொலைக்காட்சிகளில் தங்கள் முகம் தெரிந்தால் போதும் என்ற எண்ணத்திலே இருக்கின்றனர். முக்கியமான பண்டிகைகள் என்றால் அன்று முழுதும் தொலைக்காட்சி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக, நடிகையர் அந்தப் பண்டிகை எவ்விதம் கொண்டாடுகின்றனர் என்பதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றனர். நம் வாழ்க்கையின் முக்கிய ஆதாரம் அதுவே என நினைத்துக் கொண்டு, பண்டிகைக்கு வாழ்த்த (அதுவும் இப்போதெல்லாம் அபூர்வம்) வரும் விருந்தினர்களை உதாசீனம் செய்துவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியே கதி என உட்கார்ந்து கொள்கின்றோம்.

சூப்பர் சிங்கர் யார்னு ஒரு சானல் போட்டி வச்சால், நாட்டிய தாரகை யாருனு இன்னொரு சானல் போட்டி வைக்கிறது. மற்றோர் சானலோ மேலும் ஒருபடி போய் ஆதர்சத் தம்பதிகளுக்குள் ஒளிவு, மறைவு இருக்கா இல்லையானு பட்டி மன்றமே நடத்தித் தம்பதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. முன்னே எல்லாம் நாட்டியமோ, பாடலோ, நன்கு கற்றுக் கொண்டு திறமை இருந்தாலே அரங்கேறலாம் என்பது போய் இன்று தாத்தா, பாட்டி கூட குடும்ப நிகழ்ச்சி என்ற பெயரில் இத்தகையதொரு அற்பமான ஆசைக்கு உட்பட்டு ஆடுகின்றதையும் பல பத்திரிகைகள் மூலம் பார்க்க நேரிடுகிறது. உண்மை பேசுகிறேன் என்ற பெயரிலே குடும்பங்கள் சீரழிக்கப் படுகின்றன. அந்தரங்கங்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப் படுகின்றன. போதாதுக்கு செல்போன் என்னும் ராக்ஷசன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனைவர் கையிலும் தவழ்கிறான். குடும்ப ரகசியங்களைப் பொது இடங்களில் அனைவரும் கேட்கும்படியாகப் பேசுகின்றனர். இதனால் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படப் போகும் தீங்கைக்குறித்து யாருமே நினைத்துப் பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது. செல்போனில் பேசிக் கொண்டு சாலையைக் கடந்த, ரயில் தண்டவாளத்தைக் கடந்த இளம்பெண்கள், இளைஞர்கள் விபத்தில் பலியாகி இருக்கின்றனர். என்றாலும் இன்று கட்டுப் பாடு என்பது தேவையில்லை என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி ஒன்று சிரிப்பு என்ற பெயரில், தெருவில் சாதாரணமாய் நடந்து செல்பவர்களையும், பேருந்துகளில் ஏறுபவர்களையும் தடுத்துப்ப் பயமுறுத்தி விளையாடுகிறது. இதனால் ஒருவருக்கு அவசரமாக வெளியூர் செல்ல ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இன்னொருவருக்கு வேறுவிதமான தொந்திரவு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் யோசிக்கவேண்டும்.

வெளிநாடுகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் விழித்துக் கொண்டு நாட்டைக் காக்கப் போராடும் வீரர்களைக் கெளரவிப்பதில்லை. எங்கே காஷ்மீரிலும், பாகிஸ்தான் இந்தியா எல்லையிலும், அஸ்ஸாம் எல்லையிலும் இறந்து போகும் வீரர்களைப் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் ஒரு மூலையில் வருகின்றன. அத்தோடு சரி. பலரும் அதைப் படிப்பது கூட இல்லை. தொலைக்காட்சி சானல்களும் சினிமா நடிகருக்கும், நடிகைக்கும் வெளிநாட்டில் கஸ்டம்ஸில் சோதனை நடப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இம்மாதிரியான செய்திகளுக்குக் கொடுப்பதில்லை. இம்மாதிரிச் செய்திகளையே ஒளிபரப்புவது கிடையாது. வெளியே அந்நிய சக்திகள் ஆக்கிரமிப்பு என்றால் உள்நாட்டில் கலாசாரச் சீரழிவு தலை தூக்கி ஆடுகிறது. இப்போ நாடு இருக்கும் நிலைமையில் நம்மைக் காக்கவேண்டியவன், கண்ணன் ஒருவனே. அவனே மறுபடியும் பிறந்து வந்தால்தான் நமக்கு விடிவுகாலம் என்று தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு நல்ல விஷயத்துக்காக சுதந்திரம் பெறவேண்டும் என்ற உன்னத லக்ஷியத்துக்காக மக்கள் போராட்டம் செய்தனர். அத்தகையதொரு உணர்வு இப்போதும் வரவேண்டும். இது இன்னொரு வகை சுதந்திரப் போராட்டம். இதையும் நாம் நடத்திக் காட்டவேண்டும். அந்த சுதந்திரப் போராட்ட நாட்களில் திலகர் ஆன்மீக வழியில் மக்களைத் திசை திருப்பி அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்தார் என்பார்கள். அதுபோல் இப்போது நம்மை அழித்துக் கொண்டிருக்கும் அசுர சக்திகளிடமிருந்து நமக்கு விடுதலை கிட்டி உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டிய மனோ வலிமையைக் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி கடவுளிடம் பிரார்த்திப்பது ஒன்றே. நம் நாட்டின் உந்நதமான தர்மத்தைக் காக்கவும், கலாசாரத்தைப் பேணவும் உறுதி பூண்டு, பக்தி வழியில் அதே சமயம் தேவையான சமயம் உறுதியையும், வீரத்தையும் காட்டி நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்தும், உள்நாட்டைப் பீடித்திருக்கும் கலாசாரச் சீரழிவில் இருந்தும் காக்கவேண்டும். இந்தத் தொலைக்காட்சி, சினிமா மாயையில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடவேண்டும்.

சுதந்திரப் போராட்டம் போல இப்போ இதுவும் ஒரு வகைக் கலாசாரப் போராட்டமே. இந்த அடிமைத் தளையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளவேண்டும். இது நம்மால் மட்டுமே முடிந்த ஒன்று. முக்கியமாய்ப் பெண்களும், அவர்கள் பெற்றெடுத்த செல்லங்களும், குழந்தைகள் தொலைக்காட்சியில் தோன்றுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப் படத் தயாராய் இருக்கும் தாய்மார்கள், அவங்க நல்வாழ்வுக்காகவும் கஷ்டப் படத் தயாராகவேண்டும். இறைவன் அருளால் இந்த போலியான, பொய்யான கலாசார மாயையில் இருந்து நாம் விடுபட இறைவனைப்பிரார்த்திக்கிறேன். இனி போரடிக்காமல் நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.

7 comments:

  1. தொல்லைக்காட்சியும் சல்லியம் பிடிச்ச செல்லுஃபோனும்......

    சீன்னு இருக்குப்பா.
    எங்கே நிம்மதி..............ன்னு பாடணும்.

    செல்லில் பேசிக்கிட்டே தெருவோரம் 1 போகும் மாக்களை என்ன செய்வது?

    தெருவில் கால்வைக்கவே அருவருப்பா இருக்கு(-:

    ReplyDelete
  2. பஜனை போதும்!
    தமிழன் வேறு-
    இந்தியன் வேறு:
    கலக்க முடியாது

    ReplyDelete
  3. \\நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.\\

    ரைட்டு ;)

    ReplyDelete
  4. பாரத நாடு பழம்பெரும் நாடு. பழந்தமிழர் பலரையும் பதுமையாய் கொன்றாழித்த நாடு

    ReplyDelete
  5. வாங்க துளசி,
    ttpian,
    கோபி,
    Mark K Maity,

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நொச்சூர் வெங்கட்ராமன் பிரவசனத்திலே சொல்லுவார்: கண்ணன் கதையை படிச்சு பாருங்கோ! எங்கேயும் அவன் அழுததா இருக்கவே இருக்காது!
    சமநிலை மனசோடேயேதான் நம்மை சுத்தி இருக்கிற விஷயங்களை சரி செய்யப்பாக்கணும்.

    ReplyDelete
  7. வாஸ்தவம் தான் உங்க மன குறை.எனக்கு இப்பல்லாம் என்ன தோனறதுன்னா நாம பிறத்தியார திருத்த முடியாது ஆனா நம்பளை திருத்திக்க முடியும். ஏன்னா அது நம்ப கயில தான் இருக்கு.என் அளவுல மத்தவா இப்படி அப்படி செய்யறாங்கற கோணத்துல பாக்காம நான் mindful ஆ எது உசிதமோ அத செய்ய ஆரம்பித்தேன்னா That is the beginning of my reformation. அப்படி எத்தனையோ பேர் நினைக்க ஆரம்பிக்கலாம். அப்போ it is the beginning of a revolution. அது எல்லாரோட அட்டென்ஷனை ட்ரா பண்ணிதுன்னா , எல்லாரும் பண்ண ஆரம்பிச்சா that is a transformation!!. A beginning of an era indeed நு தோனும்.

    ReplyDelete