முதல் வகுப்பு ஏசினு பேரு. ஆனால் வண்டி டப்பாவா இருந்தது. போறாக்குறைக்கு ஒரு எலியை வேறே துணைக்கு வைச்சிருந்தாங்க. அதை மெதுவா எங்க கூப்பேயிலிருந்து வெளியே அனுப்பிட்டு அட்டென்டென்டைக் கூப்பிட்டு எலியைப் பார்த்துக்கச் சொல்லிட்டு சாப்பாடு விஷயமெல்லாம் கேட்டு வைச்சுண்டோம். சாப்பாடு, காஃபி ஆர்டர் எடுக்க ஆள் வந்ததும் காலை காஃபி ஆறரைக்கு வேணும்னு சொன்னால் பிடிவாதமாசாடே சாத் கோ ஹி ஆயகா சாப்! (ஏழரைக்குத் தான் சார் வரும்னு) சொல்லிட்டார். குறைந்த பக்ஷமாக ஏழுக்காவது கொடுப்பா, நாங்கல்லாம் நாலு மணிக்கே முழிச்சுட்டு உட்கார்ந்திருப்போம்னு சொல்லிட்டுப் படுத்தோம். விபரீதத்துக்கு மூணு மணிக்கே முழிப்பு வந்தாச்சு. வீட்டிலேன்னா எழுந்து ஏதானும் வேலையானும் செய்யலாம். இங்கே என்ன செய்யறது? காலைக்கடன்களை முடித்துக் கொண்டு மறுபடியும் படுத்தேன். நேரம் மெல்ல நகர ஒருவழியா ஆறரை மணிக்கு ஒரு காஃபி வென்டார் காஃபி எடுத்து வர அதை வாங்கிக் குடிச்சோம். அதுக்கப்புறமாக் கொண்டு போன புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.
காலை ஆகாரத்துக்கு இட்லி, வடை கிடைக்கும்னு சொல்லி இருக்கவே அது ஆர்டர் செய்திருந்தோம். காலை முதல் காஃபியோடு காலை ஆகாரமும் வந்து சேர்ந்தது. ரவை இட்லி போல் இருந்த அந்த இட்லியைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினேன். ரங்க்ஸ் என்னமோ இட்லியையே பார்க்காத மாதிரி ரசிச்சுச் சாப்பிட எனக்கு எரிச்சல் வந்தது. பின்னர் காஃபி குடிக்கலாம்னு ஃப்ளாஸ்கைத் திறந்து ஊற்றினால் சந்தேகமா இருந்தது. காஃபி போல் இல்லையே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குடிச்சால் தேநீர்! ஆனால் நல்லாவே இருந்தது. சரி போகட்டும்னு குடிச்சு வைச்சோம். மதியம் சாப்பாடும் அவங்க கிட்டேயே ஆர்டர் கொடுத்தாச்சு. சென்னையில் இருந்து சென்றதால் சாப்பாடு கையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகவே நான் முன்னெச்சரிக்கையாக உணவு விஷயத்தில் கவனமாக இருந்தேன். அதிகம் வேண்டாம்னு இரு பரோட்டாவும் சப்ஜி, தயிர் போதும்னு சொல்லிட்டேன்.
பரோட்டாவா அது! ரப்பர்! ஆனால் சப்ஜி காரமில்லாமல் இருந்தது. தயிர் தயிராகவே இல்லை. ஒரே தண்ணீர் மயம், புளிப்பு வேறே. சாப்பிட்டோம்னு பெயர் பண்ணினோம். இரவுக்கு ஒரு சாப்பாடு போதும்னு சொல்லிட்டேன். எனக்குச் சாப்பாடு வேண்டாம்னு முடிவு செய்துட்டேன். பழங்கள் இருந்தன. அதோடு ரயிலில் சூடாகப் பால் வேறே வரும். ஒன்பது மணிக்குக் கொண்டு வருவாங்க. அதை வாங்கிக் குடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டு இரவுக்கு அப்படியே செய்தேன். மறுநாள் காலை அரை மணி தாமதத்தில் ஹஸ்ரத் நிஜாமுதீன் போனது. ரயில்வே அட்டென்டன்ட் உதவி செய்ய சாமான்களை இறக்கினோம். நாங்க போக வேண்டியது குர்காவ்! ஆகவே லோதி ரோடு பக்கமாக வெளியேற வேண்டும். வண்டி நின்றதோ பனிரண்டாம் நடைமேடை. அங்கிருந்து ஒன்றாம் நடைமேடை வரை வந்து வெளியே செல்லணும்.
அதுக்குள்ளே ஒரு போர்ட்டர் வந்து 150 ரூபாய்க்கு சாமான்களை எடுத்துச் செல்வதாகக் கூற சரினு ஒப்புக் கொண்டோம். போர்ட்டரோடு வேகமாய் நடக்க என்னால் இயலாது என்பதால் ரங்க்ஸை போகச் சொன்னால், எங்கே! அவராலும் வேகமாக நடக்க இயலவில்லை. போர்ட்டர் போயே போய்விட்டான். இவர் எங்கேயோ போகிறார். நல்லவேளையாக உயரமாக இருப்பதால் எங்கே போகிறார்னு என்னால் கண்டுபிடிக்க முடிகிறது. இல்லைனா அந்தக் கூட்டத்தில் கஷ்டம் தான். அதோடு ஒரு குறிப்பிட்ட சந்திப்பில் இடப்பக்கம் திரும்பணுமா, வலப்பக்கம் திரும்பணுமானு வேறே குழப்பம். அப்புறமா ஓரிருவரிடம் கேட்டுக் கொண்டு சென்றேன். அப்படியும் சந்தேகம். கொஞ்ச தூரத்தில் ரங்க்ஸின் தலை தெரியவே அப்பாடி, சாமான் போனால் போகிறது, இவரானும் கண்ணில் தென்பட்டாரே என நினைத்துக் கொண்டு முடிந்தவரை வேகமாக நடந்தேன். அவரோ அப்போது படியில் இறங்க ஆரம்பிச்சிருந்தார். திடீர்னு ஆளையே காணோம்.

ரப்பர் ஒரு நாள் முழுக்க வயிற்றில் இருக்குமே...! திடீர்னு இப்படி முடிக்கலாமா அம்மா...? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹிஹி...
ReplyDeleteஆவலுடன்...
ரயிலில் காஃபி சாப்பிடாமலிருப்பதே நல்லது. சஹிக்காது. தேநீர் தேவலாம் ரகம். ரெடிமேட் இடியாப்பம் போலக் கொண்டு சென்றிருக்கலாம் நீங்கள். நடைமேடை அனுபவங்கள் அயோத்தி பயணத்தை நினைவு படுத்துகின்றன!
ReplyDeleteஓஹோ.நாங்கதான் இந்த ஆட்டத்தில் சூப்பர்னு நினைச்சேன். நீங்க இரண்டு பேரும் பிரமாதம். நல்ல வேளையில் குஎகாவ் போய்ச் சேர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்>}
ReplyDeleteவாங்க டிடி, ஆமாம், அதான் ராத்திரிச் சாப்பாட்டை விட்டுட்டேன். :)))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ரயிலில் vendors கொண்டு வரது தான் நல்லா இருக்காது. பொதுவா நாங்க வீட்டில் இருந்தே ஃப்ளாஸ்கில் காஃபிமுதல் எடுத்துச் செல்வோம். இது இரு இரவுகள் பயணம். அதோடு கிளம்பியது சென்னயிலிருந்து, இரவு பத்து மணிக்குக் கிளம்பும் வண்டியில்!:)))
ReplyDeleteரயிலில் முதல் வகுப்பு, 2 ஏசி போன்றவற்றுக்கு ஆர்டர் எடுத்துச் செல்பவர்கள் கொண்டு வருவது கொஞ்சம் சஹிக்கபிளாக இருக்கும். :)))))
ஹாஹா வல்லி, இந்த ஆட்டமெல்லாம் இல்லைனா எப்படி?? நல்லபடியாப் போய்ச் சேர்ந்துட்டோம் தான்! :)))))
ReplyDeleteஹிஹிஹி, டிடியோட பதிவிலே படிச்சுட்டு ஒரு சோதனை முயற்சியா ஜம்ப் ப்ரேக் போட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாடிக்கையா வரவங்க கூட வரதில்லை! ஆனால் ஹிட் லிஸ்ட் பார்த்தால் எகிறுது! :)))))) வரவங்க வரட்டும்னு விட்டுட்டேன். நமக்கு வேணாம் இந்த ஆசை, சீச்சீ,இந்தப் பழம் புளிக்கும்! :))))))) இன்னும் .காம் மாத்தலாமானு ஒரு யோசனை. ஆனால் தப்பா ஏதும் பண்ணிடுவேனோனு ஒரு பயம்! முன்னே ஒரு தரம் இப்படித் தான் மாத்தப் போய் மொத்தப் பதிவுகளுமே காணாமல் போச்சு! :)))))) வம்பு எதுக்குனு யோசிக்கிறேன்.
ReplyDeleteஇரண்டு நாள் பயணம்.... எந்த வகுப்பிலும் உணவு மகா மோசம் தான்!
ReplyDeleteகாபி/தேநீர் குடிக்காது இருப்பது உத்தமம்!
நீங்களாகவே குர்காவ்ன் சென்று விட்டீர்களா?
வாங்க வெங்கட், எப்போவுமே நாங்களாவே தான் குர்காவ் மட்டுமில்லை, மற்ற இடங்களுக்கும் சென்றிருக்கிறோம். மொழிப் பிரச்னை இல்லை என்பதால் தயக்கம் இருந்தது இல்லை. :)))
ReplyDeleteஅடடா.... ஜாலிதான் :))
ReplyDeleteஅப்புறம் திக் என்று ஆகிஇருக்குமே.
வாங்க மாதேவி, ஜாலியாத் தான் இருந்தது. :)
ReplyDelete