எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 15, 2014

ஜிஎம்பி சாரின் கதைக்கு வேறொரு முடிவு! :))) பிடிச்சாப் படிங்க, இல்லைனா விடுங்க!

ஜிஎம்பி சாரின் கதைக்கு வந்த முடிவுகளில் நடுவர் என் கதையைப் பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  இதைத் தவிரவும் வேறு இரு முடிவுகள் யோசித்திருந்தேன்,  அவற்றை இங்கே பகிர்கிறேன்.

"கண்டதும் காதலா? எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் நீங்க ஏன் எனக்குக் கடிதம் கொடுத்துட்டு இதைக் கேட்கறீங்க?"

"என் கடிதத்துக்கு உங்கள் பதில் என்ன அம்மணி?"

"அம்மணி, அம்மணி என்றே கூப்பிடுகிறீர்களே, என்னோட பெயர் கூடத் தெரியாமலா காதலிக்க ஆரம்பிச்சிருக்கீங்க?  அது சரி, இப்படிக் கண்டதும் காதலில் உங்களுக்கும் உடன்பாடா? " என்று கேட்டாள் சந்தியா!

"அம்மணி நான் உங்களைக் காதலிக்கவே இல்லை.  உண்மையில் காதலித்திருந்தால் உங்கள் பெயரைத் தான் முதலில் தெரிந்து கொண்டிருப்பேன். " பாபு வசீகரமாய்ச் சிரித்தான்.

சந்தியாவின் முகம் கோபத்தால் சிவந்தது.  "என்ன காதலிக்கவில்லையா? அப்போ எதுக்கு என்னையே பின் தொடர்ந்து, முதலில் ஒரு சின்னத் துண்டுக்கடிதம் கொடுத்து சந்திக்கச் சொல்லிப் பின் நேரில் சந்தித்ததும் இந்தக் காதல் கடிதம்!  இதற்கு என்ன அர்த்தம்?  போலீசைக் கூப்பிடவா? பெண் என்றால் கிள்ளுக்கீரையாக நினைச்சீங்களா?  உங்க இஷ்டத்துக்குக் காதல் கடிதம் கொடுத்துட்டு அப்புறமாக் காதலிக்கவே இல்லைனு சொல்வீங்க, நாங்க என்ன ஏமாளிங்க, பொண்ணுங்கனா ஏமாத்தலாம்னு ஒரு எண்ணமா?  சந்தியா பொரிந்தாள்.

பாபு சிரித்தான்.  நிதானமாகவே "அம்மணி, நான் ஒரு தொலைக்காட்சி நிருபன். நிலாத் தொலைக்காட்சிக்காக நாங்கள் கொடுக்கப் போகும் சிறப்பு நிகழ்ச்சி இது. இந்தக் காலப் பெண்கள் ஒருவன் காதல் கடிதம் கொடுத்தால் உடனே அதற்கு எப்படித் தங்கள் மனதைக் காட்டுகின்றனர், அவர்களின் எதிர் விளைவுகள் என்பது குறித்து ஒரு சர்வே நடத்துகிறோம். அதற்குத் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். அகில உலகப் பெண்கள் தினத்தில் இன்றைய இளம்பெண் காதல் வசப்படுவாளா, ஒரு கடிதத்திலேயே ஆணுக்கு வசமாகிவிடுவாளா, சிந்திப்பாளா என்றெல்லாம் தெரிந்து கொண்டு பேட்டி எடுக்க எங்கள் ஆசிரியர் என்னைப் போல் இன்னும் சிலரையும் அனுப்பி இருக்கார்.  அவங்க எல்லாம் மற்றக் கல்லூரிகள், அலுவலகங்கள், ஐடி கம்பெனிகள் பக்கம் சுத்துவாங்க.  நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். சொல்லுங்க, கண்டதும் காதல் என்பதில் உங்களுக்கு உடன்பாடா?"  அவள் உடை அலங்காரத்திலோ, அவள் அழகிலோ சிறிதும் பாதிக்கபடாதவனாக பாபு மீண்டும் கேள்வி கேட்க, ஒரு நிமிஷம் அவள் மனதில் எரிச்சல் மிகுந்தது.

இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என நினைத்தாள்.  ஆனால் பாபு கை காட்ட, அங்கே அப்போது மறைவிடங்களில் இருந்து திடீரெனத் தோன்றிய காமிராக்காரர்களைப் பார்த்ததும் மனம் மாறினாள்.  ஆனால் இந்த பாபு!  அவள் அழகினால் சலனம் அடையவே இல்லையே!

அவள் பேசத் தொடங்கினாள்.  "கண்டதும் காதல் என்பது வராது தான்.  பெண்ணுக்கு முதலில் ஆணைக் குறித்து முழுதும் தெரிய வேண்டும்.  அவன் எங்கே வேலை செய்கிறான், படிக்கிறான் என்றால் படிப்பு குறித்து முழுத் தகவல்கள், அவனால் அவளை வைத்துக் குடும்பம் நடத்தும் அளவுக்குத் தகுதி உள்ளவனா என்பதெல்லாம் பார்ப்பாள்.  பொருளாதார ரீதியாகப் பாதுகாப்புக் கிடைக்குமா என யோசிப்பாள்.  அதன் பின்னர் தான் அவளுக்கு அந்த ஆணின் அழகு, படிப்பு, தகுதி, குடும்பச் சூழ்நிலை குறித்துச் சிந்திப்பாள்.  பாதிப்படிப்பில் படிப்பை விட்டுட்டுக் கல்யாணம் செய்துக்கத் தயக்கம் இருக்கும்.  அப்படி மீறிப் போனால் அது உண்மையான காதலாக இருக்காது.  வெறும் உடல் கவர்ச்சி தான். " என்றாள் சந்தியா.

"நீங்கள் யாரையானும் காதலித்திருக்கிறீர்களா?" என்று பாபு கேட்க, "இது வரை இல்லை.  இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். என் காதல் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றாள் சந்தியா.

"யார் அந்த அதிர்ஷ்டசாலி? பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா?" பாபு கேட்க அவள் சுட்டு விரல் அவனை நோக்கி நீண்டது.

"என்ன நானா? மேடம், இது லைவ் ஷோ, எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க!" என்று பாபு பதற, "பார்க்கட்டுமே, எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. முக்கியமா உங்க அணுகுமுறை.  எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த திடம், உறுதி, நிதானம் எல்லாமும் பிடிச்சிருக்கு.  இப்போதைக்கு என் காதலை மட்டும் தான் சொல்லி இருக்கேன்.  நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா இல்லையானு தெரியாது.  ஆனால் அதுக்காக வற்புறுத்த மாட்டேன்.  நீங்களே என்னிடம் வந்து சொல்லும் வரை பொறுமையாக் காத்திருப்பேன். " என்றாள் சந்தியா.

படப்பிடிப்புக் குழுவினர் உற்சாகத்துடன் கை தட்ட பாபுவின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. சந்தியாவை நோக்கிக் கை நீட்டினான்.  நீட்டிய அவன் விரல்களைப் பற்றிக் கொண்டாள் சந்தியா.

இந்தக் கதைக்கு நான் ஏற்கெனவே எழுதி இருந்த முடிவு பரிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இங்கே

17 comments:

 1. இதுவும் நல்லாயிருக்கு அம்மா... அசத்துறீங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. எனக்கென்னவோ அதைவிட இது நல்லாயிருக்கு!

  ReplyDelete
 3. வாங்க டிடி, நன்றிப்பா.

  ReplyDelete
 4. ஶ்ரீராம், இதான் அனுப்பலாம்னு நினைச்சேன். :)))) இன்னொரு முடிவும் இருக்கு! :))))

  ReplyDelete
 5. //இன்னொரு முடிவும் இருக்கு!//

  விட்டா யோசிச்சுகிட்டே போவீங்க போலேருக்கே...!

  ReplyDelete
 6. ஹிஹிஹி, சரி பயமுறுத்தலை, விட்டுடறேன். :)))))

  ReplyDelete
 7. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. இது கூட நல்லா இருக்கு......

  ReplyDelete
 9. இதான் டாப்பு.

  ReplyDelete
 10. வாங்க மாதேவி, நன்றிம்மா.

  ReplyDelete
 11. வெங்கட், நன்றிப்பா.

  ReplyDelete
 12. அப்பாதுரை, எனக்கென்னமோ இது சினிமாத்தனமாப் பட்டது. அதான் இதை அனுப்பலை! :))))

  ReplyDelete

 13. ( பிடிச்சாப் படிங்க இல்லைனா விடுங்க) படிச்சாத்தானே தெரியும்.

  ReplyDelete
 14. வாங்க ஜிஎம்பி சார், படிச்சாச்சா? பிடிச்சதா? :))))

  ReplyDelete
 15. இந்த முடிவில் நீங்கள் சொன்னது போல் மெலிதாய் ஒரு நாடகத்தனம் தெரிகிறது. பரிசு பெற்ற முடிவே என் மனத்துக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் மாறுபட்ட சிந்தனை என்ற வகையில் இந்த முடிவும் ரசிக்கத்தக்கதாகவே உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள் மேடம்.

  ReplyDelete
 16. வாங்க கீதமஞ்சரி, முதல் வரவுக்கு நன்றி. ஆமாம், இந்த முடிவு கொஞ்சம் செயற்கையாகவே இருந்தது. அதனால் தான் இதை அனுப்பலை. இப்போத் தான் கொஞ்சம் நேரம் முன்னர் ஜிஎம்பி சார் மிகச் செலவு செய்து அனுப்பின பரிசுப் பொருள் வந்து சேர்ந்தது. அதைப் படம் எடுத்திருக்கேன். இப்போ வேலை இருப்பதால் நாளை கணினியில் அப்லோட் செய்து பகிர்கிறேன்.

  உங்களுக்கும் வாழ்த்துகள். வைகோ சாரின் விமரிசனப் போட்டியில் உங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு எனக்கு மகிழ்ச்சியே. தொடர்ந்து நீங்கள் பரிசுகளைப் பெறவும் வாழ்த்துகள்.

  ReplyDelete