எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 17, 2014

டெல்லி சலோ! வாகா எல்லையில் தினசரி நடக்கும் ஒரு சடங்கு! :)

சும்மாவே நமக்கு தேசபக்தி கொஞ்சம் தூக்கலாவே இருக்கும்.  அப்போப்பா எட்டிப் பார்த்து மிரட்டும்.  இப்போ இந்த மாதிரி ஒரு இடத்துக்குப்போறதுனா கேட்கணுமா? சென்ட்ரல் வேர்ஹவுசிங் அலுவலகத்தில் மைத்துனரின் நண்பரைப் பார்த்துப் பேசிட்டுக் கிளம்பும் வரை தவிப்பான தவிப்பு.  ஒரு வழியாக் கிளம்பினோம்.  நல்லவேளையா மைத்துனரின் நண்பர் அங்கெல்லாம் கைப்பை எடுத்துச் செல்லக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டார்.  அலுவலகத்தின் அலமாரியிலேயே எங்கள் கைப்பைகள் வைக்கப்பட்டுப் பூட்டப் பட்டன. காமிரா எடுத்துக்கலாம்னு சொன்னதன் பேரில் கையில் காமிரா மட்டுமே. மற்ற எதுவும் அனுமதி இல்லை.


விஐபி நுழைவாயிலில் 


எல்லையை நோக்கி விரைந்தோம்.  அங்கிருந்த காவலர் கூண்டில் முதலில் அநுமதிச் சீட்டு வாங்கிப் பின் அலுவலகம் சென்று விஐபி பாஸ் வாங்கி அவர்கள் அனுப்பும் ஆளோடு சென்று நிகழ்ச்சியைப் பார்க்கச் செல்ல வேண்டும். அப்படியே முதலில் காவலர் அனுமதி பெற்று வந்த எங்கள் வண்டி டிரைவர் பின்னர் அலுவலகத்திலும் பாஸ் வாங்கினார்.  காரில் எல்லை வாயில் வரை செல்ல முடியாது;  பாதியிலேயே நிறுத்திடுவாங்க.  என்றாலும் அவங்க அனுமதிக்கும் தூரம் வரை செல்லலாம்னு காரில் அழைத்துச் சென்று காவலர் தடுக்கும் தூரம் வரை கொண்டு விட்டார். அங்கிருந்த இன்னொரு வயதான நடக்க முடியாத பெண்மணியையும் எங்களுடன் காரில் அழைத்துச் சென்றோம்.  காரில் இருந்து இறங்கியதும் சுமார் அரை கிலோ மீட்டர் நடக்கத் தான் வேண்டும்.  எங்களுடன் வந்த பெண்மணியின்   கணவர் முழு தூரமும் நடந்து வந்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக  இந்த தினசரிக் கோலாகலத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.  குறிப்பிட்ட எல்லைக்கப்பால் ஒரு வாயில் கதவு இருக்கிறது.  அதை மூடி விடுகின்றனர்.  அந்த வாயில் கதவுக்கும், எல்லை வாயில் கதவுக்கும் இடையில்  கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் தோற்றம் அளித்த இளைஞர்களும், இளம்பெண்களும் மூடி இருந்த எல்லைக் கதவில் இருந்து ஓட்டமாய் ஓடி நகரின் பக்கமாய் அமைந்திருக்கும் கதவு வரை வந்தனர்.  பின்னர் திரும்ப அதே போல் ஓடி எல்லைக்கதவை அடைந்தனர்.  ஓடுகையிலேயே உற்சாகமாய் ஜெய்ஹிந்த், வந்தேமாதரம் என முழங்கிக் கொண்டே ஓட, வந்திருக்கும் அனைவரும் அதை எதிரொலித்தார்கள்.



தூரத்தில் தெரிவது நகர்ப்பக்கம் உள்ள வாயில். இதைத் தாண்டி இன்னொரு வாயிலும் உண்டு. அங்கே உள்ள காவலரிடம் தான் நுழைவுச் சீட்டு பெற வேண்டும்.  கூடி இருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டும் பார்வைக்கு.

கிரிக்கெட் விளையாட ஏற்படுத்தியிருக்கும் காலரிகள் போல் படிப்படியாக அமைந்திருந்தன. அவற்றில் மக்கள் வெள்ளம். பாகிஸ்தான் தரப்பிலும் மக்கள் உட்கார்ந்திருந்தார்கள் என்றாலும் அங்கே கொஞ்சம் உற்சாகக் குறைவு தான். அவ்வப்போது அங்கிருந்தும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் குரல்கள் ஒலித்தன. இங்கே வயது வந்த பெண்கள் கூட ஆடிப்பாடிக் களித்தனர். தேசபக்திப்பாடல்கள் அங்கிருந்து எல்லைப்பாதுகாப்புப் படை அலுவலகத்தில் இருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கக் கூடவே அனைவரும் பாடிக் கொண்டிருந்தனர்.  அவ்வப்போது ஜவான்கள் மக்களை அமைதிப் படுத்தி வரிசையை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டனர்.  நாங்கள் இருவரும் எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த ஆளுடன், ஒவ்வொரு பாதுகாப்புச் சோதனையாக முடித்துக் கொண்டு விஐபி நுழைவாயில் அருகே வந்தோம்.


முன்னால் தெரியும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் தான் நாங்கள் அமர்ந்தோம்.  அதன் பின்னர் இன்னமும் முப்பது பேர் வந்துவிட்டனர். 


எங்கள் அனுமதிச் சீட்டைப் பார்த்துவிட்டு முன் வரிசையில் அமைந்திருந்த நாற்காலிகளில் சென்று அமரச் சொன்னார் அந்த ஜவான். ஆஹா, கிட்டக்க இருக்கேனு நினைச்சோம்.  ஆனால் பாருங்க , போகப் போகக் கூட்டம் ஜாஸ்தியாக முன் வரிசைக்கும் இன்னமும் முப்பது பேர் வர, எங்களுக்கு முன்னால் நாற்காலிகள் போட்டு அவங்களை அமர வைக்கும்படி ஆகிவிட்டது.  நாங்கள் கொஞ்சம் பின்னால் போய்விட்டோம்.  வாயிலுக்கு அருகே யாரும் செல்ல முடியாது.  கொஞ்சம் தூரத்தில் இருந்து தான் படங்களை எடுத்தாகணும்.  வேறு வழியில்லை.  அதற்குள்ளாக மணி ஐந்தரை ஆக நிகழ்ச்சியும் ஆரம்பித்தது.


மூலையில் கூட்டமாகத் தெரிவது நடனம் ஆடிய ஆண்களும், பெண்களும். அந்த இடத்துக்குச் சென்று படம் எடுக்க முடியவில்லை.  ஜவான் அனுமதிக்கவில்லை. அவங்க திரும்ப நாங்க உட்கார்ந்திருந்த பக்கம் வருவாங்கனு நினைச்சா அவங்க வரதுக்குள்ளே இங்கே நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.


அங்கே போனதிலிருந்தே தேசபக்தி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.  அந்தச் சூழ்நிலையைப் பார்த்துட்டு எப்போவும் சும்மா இருக்கும் ரங்க்ஸ் கூட வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்னு எல்லாம் கத்திட்டே இருக்கையிலே நாம சும்மா இருப்போமா!  நம்ம பங்குக்கு நாமும் கத்தினோம். இப்போ ஜவான் ஒருத்தரே மைக் மூலம் மக்களை எல்லாம் பாரத் மாதா கி ஜய், வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் னு எல்லாம் சொல்லச் சொல்ல, அனைவருக்கும் இன்னும் உத்வேகம் ஜாஸ்தியானது.  இடிமுழக்கம் போல் அனைவருமாய்க் கத்தினார்கள்.  இவ்வளவு கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு எப்படித் திரும்பப் போவது என்னும் கவலையும் என்னைப் பீடித்தது.  ரங்க்ஸுக்குக் கோபம் வந்து, "அதை அப்போப் பார்த்துக்கலாம், இப்போ இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்!" னு சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.


எங்களுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த விஐபிக்கள்.  நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போவதால் மக்கள் குறுக்கே வரக்கூடாது என ஜவான் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.



இரு வாயில்களும் தயார் நிலையில்.   பாகிஸ்தான் தரப்புக் கதவுக்கும், இந்தியத் தரப்புக் கதவுக்கும் இடையில் உள்ள இடம் பொதுவானது.

நாளை மற்றபடங்களும் நிகழ்ச்சி குறித்த சிறிய விளக்கமும்.

16 comments:

  1. அந்த இடத்திற்குப் போனாலே நமக்குள்ளும் இந்தியன் என்ற உணர்வு பீறிட்டு வெளிக்கிளம்பும்.....

    நீங்கள் தடுத்தாலும் உங்கள் வாய் வந்தேமாதரம், பாரத் மாதா கி ஜே கோஷங்களை வெளியிடும்.....

    இந்தக் காட்சியை காணொளியில் பார்க்கும்போதே நன்றாக இருக்கும், அதுவே நேரில் பார்த்துவிட்டால்! இரண்டு முறை சென்றிருக்கிறேன்......

    ReplyDelete
  2. அருமையான நிகழ்வை அழகாய் படம்பிடித்துக் காட்டிய பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்...

    வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்...

    வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்...

    ReplyDelete
  4. வாங்க வெங்கட், உண்மைதான். பொதுவா தேசபக்திப் படங்களைப் பார்த்தாலே பீறிடும் நமக்கு! இப்போக் கேட்கணுமா! :)))))

    ReplyDelete
  5. வாங்க தளிர் சுரேஷ், மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாங்க டிடி, உங்களையும் தேச பக்தி பிடிச்சுண்டதா?

    வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  7. நாங்களும் வாகா சென்று வந்தோம்.
    அங்கு எல்லோருக்கும் ஏற்படும் தேசபக்தி பார்க்கும் போது மனம் பரவசம் ஆகிவிடும்.
    நம் வாயும் தானாக சொல்லும்

    வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்! என்று.
    படங்கள், பதிவு இரண்டும் அருமை.

    ReplyDelete
  8. பலநாட்கள் கழித்து என் பதிவில் உங்களைப் பார்த்தமைக்கு மகிழ்ச்சி கோமதி அரசு. நல்வரவு. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  9. இந்த தேச பக்தியின் வெளிப்பாடு அந்தப் பக்கமும் இருந்ததா.? அதாவது தேசபக்தியில் போட்டி.

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், இந்தியப் பகுதியின் உத்வேகமும், ஆர்வமும் மகிழ்ச்சியும் அந்தப் பக்கம் கொஞ்சம் குறைவு தான். இதை அங்கே சென்று வந்த பலரும் உறுதி செய்கின்றனர். :)))) மனிதர்களும் அந்தப் பக்கம் குறைவாகவே வருகின்றனர்.

    ReplyDelete
  11. லேட்டா வந்திருக்கேன். நேற்று கொஞ்சம் நெட் கனேகஷ்ன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.
    " ஜெய்ஹிந்த்"
    பாகிஸ்தான் பக்கம் எப்படி ? அங்கே இவ்வளவு ஆர்பாட்டம் இருந்ததா.டெல்லியில் பல வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும் வாகா எல்லைக்குப் போக நான் "திருநாளைப் போவார்" தான். அமையவேயில்லை.உங்கள் புகைப்படம் பார்த்து திருப்தியடைந்தேன்

    ReplyDelete
  12. ஓஹோ! ஜோரா இருக்கே. நான் வாகா பார்டர் போனது 1956ல்'

    சலுகை இருந்தது. 'நோ மேன் லேண்ட்டை' கடந்து பாகிஸ்தான் வீரருடன் கை குலுக்கி விட்டு வந்தோம். இரண்டு நிமிஷம் தான் அலெள்ட். இரு தரப்பு எல்லை விரர்களிடமும் லவலேசமும் காழ்ப்புணர்ச்சி இருக்கவிலை.

    நன்னா ஊர் சுத்தறேள்.

    ReplyDelete
  13. வாங்க ராஜலக்ஷ்மி, லேட்டா வந்தால் என்ன? வரவுக்கு நன்றி. பாகிஸ்தான் பக்கம் இந்த உத்வேகம் இல்லைனு தான் சொல்லணும். :)))

    ReplyDelete
  14. ஹிஹிஹி "இ"சார், 1956 இலா?? அப்போ இந்த செரிமனி ஆரம்பிக்கலையோ? மீ, அப்போக் குட்டிக் குழந்தை! :))))

    கொஞ்ச நாட்களுக்கு எந்த ஊரையும் சுத்தப் போறதில்லை! :))))

    நீங்க போனப்போப் பிரிவினை வந்து சிலவருடங்கள் தானே ஆகி இருந்தது. அப்போ இருந்தவங்க எல்லாம் இங்கே இருந்து போனவங்க தானே! இப்போ நிச்சயமா அப்படி இருக்காதுனு நம்பறேன். மூணு தலைமுறை ஓடிப் போச்சே, மக்கள் மனம், கொள்கை எல்லாமும் மாறி இருக்கும், மாறி இருக்கிறது, மாறிவிட்டது. :(

    ReplyDelete
  15. //அங்கே போனதிலிருந்தே தேசபக்தி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.//

    :))))

    ஜவானின் விசிறித் தொப்பி விநோதமாக இருக்கிறது. (நான் சொன்ன முரளி படத்திலும் பார்த்திருக்கிறேன்)

    படங்கள் நிறைய பகிர்ந்திருப்பதுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  16. வாங்க ஶ்ரீராம், நன்றி"கள்" வேண்டாம். நன்றி போதும். செரியா? :)))))

    பார்டர் செக்யூரிடிக்கு மட்டும் இப்படி விசிறித் தலைப்பாகை உண்டு.

    அதோட பஞ்சாப் மண்ணை மிதிச்சதில் இருந்தே தேசபக்தி ரத்தம் கொதியோ கொதினு கொதிச்சுச் சூடேறி மறுநாள் ஜலியாவாலாபாக் போனப்புறமாத் தான் கொஞ்சம் அடங்கியது. :)))))

    ReplyDelete