எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 10, 2014

மறுபடி ஒரு சீரியஸ் பதிவு! :)))))

பேராசிரியர் என்னையும் கேள்விகள் கேட்கச் சொன்னதால் வந்த வினையை எல்லாரும் அனுபவியுங்கள்.

1. இன்றைய சமூகம் ஆணாதிக்க சமூகம் தான்.  சந்தேகமே இல்லை.  ஆனால் பெண்களுக்குப் பணத்தினால் கிட்டும் வலிமையும், பேச்சுச் சுதந்திரமும் இருந்து விட்டால் ஆணாதிக்கம் ஒழிந்துவிடுமா? டவுட்ட்ட்ட்டு!!!!!!!!!!!!!!!  ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்த இது வழி வகுக்குமோ??? அப்போ செய்ய வேண்டியது என்ன?

2. பெண்கள் பலரும் நன்கு படித்து நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகளில் இருக்கின்றனர்.  தங்கள் திருமணத்தைத் தாங்களே நிச்சயம் செய்தும் கொள்ளுகின்றனர். எங்கு பார்த்தாலும் முன்னை விட அதிகமாய் அழகு நிலையங்கள். கூலித் தொழிலாளி முதல் கணினி கம்பெனியின் சி ஈ ஓ வரையும் பெண்கள் பங்கெடுப்பதைக் காண முடிகிறது.  ஆனாலும் உரிய மாற்றம் இன்னும் நிகழவே இல்லை என்றே சொல்கிறோம்.  இத்தனைக்கும் நம் நாட்டில் பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர்.  பெண் சபாநாயகர், பெண்கள் முதல் மந்திரிகளானது (மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, ஷீலா தீக்ஷித் நால்வரும்)  என்று பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. மத்திய மந்திரிகளிலும் பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இப்படி இருக்கையில் ஏன் இன்னும் குறை சொல்கிறோம்?  எல்லாராலும் முதல் இடத்துக்கு வர முடியுமா? பல்லக்கில் ஏறி உட்காரவே அனைவரும் விரும்புகின்றனர்!  பல்லக்கைத் தூக்குவது யார்?

3. பெண் குழந்தை, ஆண் குழந்தை இரண்டில் பெண்கள் அதிகம் விரும்புவது எந்தக் குழந்தையை?? ஆண் குழந்தையைப் பெற்ற பெண், பெண் குழந்தைகளைப் பெற்ற தாயை இழிவாகப் பார்ப்பது ஏன்?

4. பல பெண்களும் ஏற்கெனவே திருமணம் ஆன ஆணோடு உறவும் வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்து அவனுக்கு மனைவியாக இஷ்டப்படுவது ஏன்?

5. புதிய மருமகள் வீட்டுக்கு வந்தால் அவளைத் தன் பிள்ளையோடு சந்தோஷமாக இருக்க அனுமதிக்கும் தாய்மாரை விரல் விட்டு எண்ணலாம்!  பொறாமைப் படுபவர்களே அதிகம்!  பின் ஏன் அந்தத் தாய்மார் தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் செய்கின்றனர்?

6. மனைவி பேச்சைக் கேட்டுப் பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் மறந்துவிட்டு அவர்களைத் திண்டாட விடும் ஆண்களுக்கு என்ன பெயர்?  அப்படித் தன் கணவனை ஆட்டி வைக்கும் பெண்ணை என்ன சொல்லி அழைப்பது?

7. ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்கள் மீண்டும், மீண்டும் ஆண்களைப் பார்த்துக் காதலித்து, மனம் உருகித் திருமணம் செய்து கொண்டு வாழத் துடிப்பது ஏன்?

8. திருமணங்களில் பேரம் பேசுவது யார்?  ஆணா, பெண்ணா?  தாய்க்கு இஷ்டம் இல்லை என்பதால் தாயின் சொல்லைக் கேட்டுப் பெண்  பார்த்துப் பிடித்த பெண்ணை வேண்டாம் எனச் சொன்ன ஆண்கள் பலரை எனக்குத் தெரியும். ஏன் பெண்கள் இப்படிச் செய்கின்றனர்?

9. ஒரு பக்கம் மனைவியின் பிடிவாதம், இன்னொரு பக்கம் தாயின் அடம், இத்தனைக்கும் நடுவே சகோதரி இருந்தால் அவளுடைய ஆர்ப்பாட்டங்கள். இத்தனைக்கும் ஈடு கொடுப்பது யார்?  ஆணா, பெண்ணா?

10. இந்தக் கேள்வி ரொம்பவே நுணுக்கமானது.  நான் பொதுவாகவே கேட்கிறேன்.  யாரையும் புண்படுத்தக் கேட்கவில்லை.  இன்றைய நாட்களில் எத்தனை பெண்கள் உடல் உழைத்துக் கஷ்டப்பட்டுச் சமைக்கவோ, வலி எடுத்துப் பிள்ளை பெறவோ விரும்புகின்றனர்?  எங்கு பார்த்தாலும் திடீர் உணவு வகைகள்!  பிரசவம் என்றால் நாள், நக்ஷத்திரம் பார்த்து சிசேரியன். இது சரியானதா?


கேள்விகள் ஒருவேளை தொடரலாம். (எதிர்வினைகளைப் பொறுத்து)


இந்தக் கேள்விகள்  எல்லாம் குழுமத்தில் பெண்கள் தினச் சிறப்பு இழையில் என்னால் கேட்கப் பட்டவை.  ஆழ்ந்து சிந்தித்தால்  பதில்கள் மட்டுமின்றி எங்கே,எப்படி, ஏன், எதற்கு, எவ்வகையில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.  மற்றபடி இந்தக் கேள்விகளைப் படித்த ஒருவர் நான் பெண்களையே குற்றம் சொல்வதாகவும் கூறி இருந்தார்.  ஹிஹிஹிஹி, நல்லாப் படிச்சால், பெண்களைக் குற்றம் சொல்லவில்லை என்பதும், அவர்களின் மனமாற்றம் தான் தேவை என்பதும், பெண் சுதந்திரம், பெண் அடிமைஎன்பதெல்லாம்  ஒன்றுமே இல்லை என்பதும், பெண்ணின் மனமாற்றமே அவள் வாழ்க்கையை உயர்த்தும் என்பதும் புரிய வரும். 

இயன்றவர்கள் பதில் சொல்லலாம்.  கட்டாயம் எல்லாம் இல்லை. :)))))  இப்போதைக்கு மத்தியானம்  மறுபடி வர வரைக்கும்  மீ த எஸ்கேப்பு! :))))

27 comments:

  1. ம்ம்.... வர்றேனுங்க தலைவியார்... மறுக்காவும் வர்றேன் என் சிற்றறிவுக்கு எட்டின மறுமொழிகளுடன்! இஃகிஃகி!!

    ReplyDelete
  2. வரப்போகும் பதில்களுக்காக நானும் காத்திருக்கிறேன். :))

    ReplyDelete
  3. பத்தாவது உண்மையைப் போல நானும் ஒரு கேள்வி : இன்றைய (ஆணோ, பெண்ணோ) பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள்...? அஸ்திவாரமே சரியில்லையே அம்மா...!

    ReplyDelete
  4. 1. ஒழியுதோ இல்லையோ, அவர்களுக்கான பேச்சுச் சுதந்திரமும் பணமீட்டும் உரிமையும் அவர்களுக்கானது அல்லவா?? அவரவர் அவரவர் உரிமைகளைப் பெற்று வாழும் போது ஆதிக்கத்துக்கு எதிர்நிற்கவும் வலிமைதானாகவே வந்து விடும்.

    2. எத்தனை விழுக்காட்டுப் பெண்கள் இங்கு குறிப்பிட்ட வசதிகளைப் பெற்றிருக்கிறார்கள்? நகரங்களில், மேல்மத்திய, உயர்வருமானமுள்ள பெண்கள் மட்டுமே பெற்றிருப்பர். மேலும் முற்றிலும் மேம்பாடு காணப்படவில்லை என யார் சொன்னார்கள்? இன்னும் காணப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திச் சொல்வதாகத்தான் கருதப்பட வேண்டும்.

    3.காரணம், போதிய உரிமைகளற்ற குழந்தையைப் பெற்றவள் இவள் எனும் இளக்காரம்தான். ஆகவே இழிவாகப் பார்க்கும் பெண் அல்ல அடிப்படைக்காரணம். அந்த நினைப்புக்கு அடிப்படையாக இருக்கும் பெண் அவலநிலைதான் காரணம்.

    4. ஆணின் கயமைத்தனம்தான் காரணம். பெண்ணின் மனத்தை மூளைச்சலவை செய்தும், வசீகரிக்கும் பாங்கினை வலியப்புகுத்துவதும், முரணாக ஒத்துக் கொள்வதில் சரி பங்கும் அவனையே சாரும். அடுத்து, தனக்குப் பாதுகாப்புக்கு மற்றொரு ஆண் கிடைக்காதபட்சத்தில் கிடைத்தவனை விடக்கூடாது என்பதும். ஆக, பெண்ணின் பாதுகாப்புக்கும் துணை கிடைப்பதில் காட்டும் வரதட்சிணை போன்ற கட்டுப்பாடுகளும் இதற்குக் காரணம்.

    5. அவர்களாவது மகனின் மீதிருக்கும் அன்பின் மிகுதியால் பொறாமையும் முன்னுரிமை மனப்பான்மையும் கொள்கின்றனர். ஆனால் வீட்டிற்கு வரும் மருமகளைக் காமக்கண் கொண்டு பார்க்கும் இதர ஆண்களும் வீடுகளில் இருக்கின்றனரே? அதற்கு இது எவ்வளவோ மேல். பெண்ணை மட்டுமே குறி வைத்து உள்நோக்கத்துடன் கேட்ட கேள்வியிது. மன்னிக்கவும்.

    6. எல்லாருமாகச் சேர்ந்து கொண்டு வீட்டிற்கு மருமகளாக வரும் பெண்ணைச் சூறையாடும் சமூகச்சீர்கேடுதான் அவளை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வைக்கிறது. அதுவே மிகையாகும் போது விரும்பத்தகாததாய் இருந்து விடுகிறது. வீட்டிற்கு வரும் மருமகளை சகல உரிமைகளும் கொடுத்து அரவணைக்காத பாங்கே இதற்குக் காரணம்.

    7. இயற்கை முதல் காரணம். இயற்கையை மீறி ஆணாதிக்கத்தை எதிர்த்துத் துணை நாடாமல் இருப்பதற்கு, வைரத்தை வைரம் கொண்டு அறுப்பது போல ஆணாதிக்கத்தை இன்னொரு ஆணின் துணை கொண்டு வாழலாம் என்பதுதான் காரணம். அந்த ஆணும் ஆதிக்கத்துடன் செயல்படும் போது அவளது துயர் மேலும் கூடுகிறது.

    8. பெண் என்பவள் நலம் விரும்பி. தன் மகனின் நலம் விரும்புகிறாள். இது தவறா? அவளுக்குத் தெரியாதா என்ன?? எதோவொரு பெண்ணைத்தான் தன் மருமகளாகக் கொண்டு வர வேண்டுமென்பது. தன் மகனுக்கு ஏற்ற பெண் இவளல்ல எனும் முடிவுக்கான காரணங்கள் பலவாக இருக்கும். அடுத்து, வரதட்சிணை எனும் கோட்பாட்டை அவளுள் அவளே ஏற்றிக் கொள்ளவில்லை. அதை அவளுக்குள் ஏற்றிய ஆதிக்க சக்திகள்தான் வரதட்சிணைப் பேரத்துக்குக் காரணம்.

    9.அத்தனை பேரும் தன்னை அண்டி இருக்க வேண்டும் என்கிற ஆண்சார்பு நிலையைக் கட்டியமைத்ததுதான் காரணம். இந்த ஆணின் கடைக்கண் பார்வை தனக்கே இருக்க வேண்டும் எனும்படியாகக் கட்டியமைத்த ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம். பெண்களும் தத்தம் நலனைப் பேணும்படியான நிலை வருகிற போது, இது மறைகிறது.

    10. பொருளியல் தேடலுக்காக வெளியே செல்லும் போது ஆண்கள் சமையல் வேலையைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை. மாறாக, கடைகளுக்குச் செல்வதைத் தன் முறைக்காகப் பாவிக்கின்றனர். அடுத்து சிசேரியன் என்பதைப் பெரிதாக வியாபாரப்படுத்தியதே ஆணாதிக்கப் பொருளியல்தானே??

    //கேள்விகள் ஒருவேளை தொடரலாம். (எதிர்வினைகளைப் பொறுத்து)//

    இப்படி சொன்னால், அஞ்சியோடி விடுவோமா என்ன??

    ReplyDelete
  5. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிவே போடலாம் பெண்கள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன் இது ஒரு சாம்பிள் சுட்டி கீழே படித்துப் பாருங்கள்
    gmbat1649.blogspot.in/2012/05/blog-post_06.html ( மணவினை சிறை வாசம்)

    ReplyDelete
  6. 1-இது ஒத்தையா ரெட்டையா மாதிரி. எது கொஞ்சம் ஏமாந்ததோ அது ஒன்னொன்னுக்கு தலையாட்டிக்கிட்டு இருக்கும்.
    2- ஆண் அழகு நிலையங்கள் ஆண்களுக்கான பேஸ் கீரீம் இதைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன? அவரவர் தகுதிக்கு ஆசைப்படுகிறார் இதில் என்ன தப்பு?
    3- ஒன்று இருந்தால் இன்னொன்று ஜென்டர் மீது ஆசை வருமே தவிர, பெண் குழந்தை என்று கேவலமாய் பார்க்கும் பழக்கம் இன்னும் இருக்கா என்ன?
    4- சினிமா துறையிலும், அரசியலிலும் வெகு அதிகமாய் இருந்தது. ஆனால் காலம் மாறுகிறது, வெளியில் தெரிந்து இரண்டு மணம், மனைவி துணைவி எல்லாம் இப்பொழுது அற்வேயில்லை. சரிப்பட்டுவராமல் டிவோர்ஸ் செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்வதைப் தவறாக சொல்ல முடியாது. மத்தப்படி "தினத்தந்தி" செய்திகள் எப்பொழுயைவது வரத்தான் செய்யும். பெண்ணின் சூழ்நிலையை ஆண் பயன்படுத்திக் கொள்கிறான்
    5- இது யுகயுகமாய் தொடரும் பிரச்சனை. ஆனால் கவலைப்படாதீர்கள் கல்யாணம் என்பது மாறி, லிவ்விங் டூ கெதர் ஆகும்பொழுது மாறிவிடும்.:-)

    ReplyDelete
  7. ஜிஎம்பி சார், உங்க கதையின் முடிவு எழுதி உள்ளேன். பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. வாங்க உஷா, நீங்க தானா? அக்ஞாதவாசம் முடிஞ்சதா? உங்களிடமிருந்து இன்னும் விரிவாக அலசி ஆராய்ந்த பதில்கள் வந்திருக்கலாமோ? :)))))

    ReplyDelete
  9. பழமை, ஐந்தாவது கேள்விக்கு நீங்க சொல்லி இருப்பது உங்க கருத்து. நான் பெண்ணை மட்டும் சொல்லி இருப்பது இங்கே இப்போது பெண்கள் தினம் கொண்டாடுவதால் தான். ஆணால் மட்டுமே குடும்பத்தில் பெண் பாதிக்கப்படவில்லை. தன்னைப் போல் தனக்கு முன்னால் வாழ வந்த மாமியாராலும் பெண் பாதிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம். இதில் பெண்ணைக் குறி வைத்தல் எங்கிருந்து வருகிறது? :)))

    ReplyDelete
  10. அதோடு எல்லா வீடுகளிலும் மாமியார் கொடுமைகள் என்பது இல்லை தான். அதே போல் எல்லா வீடுகளிலும் வீட்டுக்கு வந்த மருமகளைக் காமக்கண் கொண்டு பார்ப்பதில்லை என்பதும் சரியே. ஒரு சில வீடுகளில் கணவனே மனைவியைத் தன் தந்தை, சகோதரரோடு சம்பந்தப் படுத்திக் கொடுமை செய்வதும் நிகழ்கிறதே! :))))))

    ReplyDelete
  11. ஸ்ரீராம், கேள்விகள் கேட்டதுக்குச் சமத்தா பதில் சொல்லணும். :)))))

    ReplyDelete
  12. டிடி, நீங்களும் சமத்தா பதில் சொல்லணுமாக்கும். :))))

    ReplyDelete

  13. கீதாம்மா போட்டிக்கு வந்த அனைத்துக் கதைகளையும் சென்னையில் திரு பாலகணேஷுக்கு அனுப்பி வைக்கிறேன். நான் ஏற்கனவே எழுதி இருந்தபடி என் முடிவுப் பகுதியையும் அவரிடம் கொடுத்து இருக்கிறேன் சென்னையில் பதிவர் சந்திப்பில் அவரிடம் முடிவினை அறிவிக்கக் கேட்டிருந்தேன். என் நிறைவுப் பகுதி நாளை மாலை என் வலைப் பூவில் பதிவாகும் . நாளை மறுநாள் திரு கணேஷ் முடிவினை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கிறேன். போட்டிக்கு வந்த கதைகள் எல்லாம் படித்து விட்டேன். கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி

    ReplyDelete

  14. //ஸ்ரீராம், கேள்விகள் கேட்டதுக்குச் சமத்தா பதில் சொல்லணும். :)))))//

    3) //ஆண் குழந்தையைப் பெற்ற பெண், பெண் குழந்தைகளைப் பெற்ற தாயை இழிவாகப் பார்ப்பது ஏன்?//

    அப்படியா பார்க்கிறார்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லை.

    7) ஹார்மோன்

    9) ஆண்.

    10) கேள்வியில் இருக்கும் விஷயம் உண்மை என்றால், பதில், 'சரியில்லை'.

    ReplyDelete
  15. ஆமாங்க தலைவியார். அது மட்டுமல்ல, முழுக்கவுமே என்னோட கருத்துதான்! என்னோட கருத்துதான்!! நான் மண்டபத்துக்குப் போகவே இல்லை!! இஃகிஃகி!!

    ReplyDelete
  16. ஏன் கவலையே இன்னும் இதை விவாதித்துக் கொண்டிருக்கிறோமே என்பதுதான். பெண்களும் மாறணும். ஆண்களும் மாறணும். நல்லவர்களை இங்கே சேர்க்கவில்லை. விதி மீறி செயல் படுபவர்களைத் தான் சொல்கிறேன் .

    ReplyDelete
  17. கேள்விகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் பதில் தான் யாரிடம் இருக்கிறதோ தெரியவில்லையே!என்னென்ன பதில்கள் வருகின்றன பார்க்கலாம்.

    ReplyDelete
  18. நன்றி ஜிஎம்பி சார், நீங்க பார்க்கலையோனு நினைச்சேன். :))))

    ReplyDelete
  19. ஶ்ரீராம், ஆண் குழந்தைகளே பெற்ற பெண், பெண் குழந்தைகளைப் பெற்றவர்களைக் கேலி செய்யும் வழக்கம் இன்னமும் இருக்கிறது என்பது முழு உண்மை! :))))) இதில் சொந்த அனுபவமும் உண்டு. :))))

    மற்றபடி பத்தாவது கேள்விக்கு பதில் முழு உண்மை என்பதே. ஆதாரங்கள் கூட கொடுக்க முடியும். தனிப்பட்டவர்களின் உரிமையில் தலையிட்டதாக ஆகிடும். :)))) அதோடு தொலைக்காட்சியில் வரும் உணவு குறித்த விளம்பரங்களையும் கூர்ந்து கவனியுங்கள். திடீர் உணவுத் தயாரிப்பில் உணவு தயாரிக்கும் தாயே சூப்பர் வுமன் எனக் காட்டுவார்கள். :)))))

    ReplyDelete
  20. பழமை, அப்படி ஒரு கருத்தும் வருதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் சொன்னது பெண்களைக் குறி வைத்துக் கேட்டிருப்பதாய் என்னைக்குறித்த உங்கள் பார்வையை! :))))) மத்தபடி மண்டபத்துப் பக்கமே நீங்க போறதில்லைனு தெரியுமே! :)))))))))))

    ReplyDelete
  21. வல்லி, இந்த விவாதம் முடிவடையாது. உலகில் ஏற்றத் தாழ்வுகளும், ஏழை, பணக்காரர்களும், சகஜம் என்பதும், எல்லாப் பெண்களாலும் அப்படி ஒண்ணும் முன்னேறி ஒரு இந்திரா நூயி போலவோ, மார்கரெட் தாட்சர், இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி, ஷீலா தீக்ஷித் மாதிரியோ, கமலா செல்வராஜ் மாதிரியோ இன்னும் பல பிரபலங்கள் போலவோ வர இயலாது. இதற்குக் காரண, காரியம் காட்டவும் இயலாது.

    படைத்தவன் ஒருவனே அறிவான். அதைப் புரிந்து கொள்ளும் வரையிலும் இந்த விவாதம் தொடரத் தான் செய்யும்.

    என்ன தான் ஃபேர் அன்ட் லவ்லி க்ரீம் போட்டாலும் எல்லாப் பெண்களும் சிவந்து விடுகின்றனரா? அல்லது தொலைக்காட்சியில் வர பெண்களைப் போல் அழகுப் பதுமைகளாக ஆகிவிடுகின்றனரா? இல்லையே!

    ReplyDelete
  22. ராஜலக்ஷ்மி மேடம், உங்க பதில்களும் முக்கியமாக்கும். ஆமாம், சொல்லிட்டேன். :))))))

    ReplyDelete
  23. இதைப்படித்த நண்பர் ஒருவரின் கருத்துகளை இங்கு பகிர்கிறேன். (அவர் எனக்கு அனுப்பி விட்டார்)

    1. the word chauvinism had been and is being associated with males only.
    If protection from males is not required any more financially and on personal safety grounds, protection would be meted out and always would receive criticism that females are not allowed independence [from what ?]

    2. Wherever a female qualifies for a job, there must be no qualms raised about her being chosen for the job.
    There are jobs that cannot be handled by women and likewise there are jobs that are really suitable for the ladies like teaching and nursing [the very words teacher and nurse bring to our minds a lady even though the words are equally applicable to both genders]
    Reservations may result in unhealthy trends like we are seeing currently - the competitiveness edge is lost when one is assured of a job [read salary as applicable to our country . after all who wants to work as much as receiving salaries ?]

    3. True. Mothers of male children place the ones with girl child a bit lower in the rung unless the latter are exceptionally rich or popular due to their chosen profession.
    This could be due to the current practice of marriages being used as property building exercise in the name of dowry. Most times we see mothers suffering from depression immediately after the marriage of their sons either due to sons marrying below expected dowry potential, marrying outside the community etc.
    It must also be mentioned there is an unhealthy increase in the number of divorces - some of them real corrections of hasty marriages decided by youngsters and a few of them decided and vetted by senior family members closing an eye for the defects of one of the spouses.

    4. This happens to be the theme of many serials and some films too. But in the real world only some women resort to this kind of tactics either due to the availability of free flowing funds or the companionship the husbands are not able to provide due to any reason.

    5. There are two sides to this issue. the MIL attitude which sees the DIL as competition that has come to share the love of the son and a DIL who had grown up in their house hearing caution spread thick and thin about the would be mamiyaar wanting to guard herself right from day one.

    ReplyDelete
  24. (Cont...d)

    6. May be the son is selfish and is looking for a reason to hang on like AK wanting to introduce the lokpal bill. Where there are more than one son, god save the oldies.
    This is a point that is often discussed among us brothers. How to ensure a quality of life for the aged. Can every one afford to cough out the initial deposit plus the 10 - 15k every month to maintain the aged ?
    My opinion is there is no harm in the aged chosing to live in a community where there is real medical attention, quality food, good neighbours and entertainment available [heaven ?] and visiting their wards in the festive season or summer vacation etc.

    7. This is always due to
    "enakku andha maadhiri ethuvum aagaathu" mentality - right from cigarette smokers to drunkards to high speed drivers.
    but are there not individuals who are not stamped with "male chauvinist" seal [like me for instance ?]
    If, for any reason, a lady who is qualified and has a mind to serve the society is denied opportunities in furtherment of career, property and social status simply because she a woman, she has all the freedom to walk out of the marriage and prove herself [how many Thilakavathies can you put your finger on ?]

    8. It may be due to good thinking on the part of the would be groom to say NO when he could rather than try to be a mediator for the rest of his[mother's?] life.
    I remember gss writing a blog on a diametrically opposite occurrence when a bride rejected a marriage a few days ago.

    9. There is no such thing as management of these things. We may have to borrow a few leaves here from Kamaraj and MGR. K always said "aagattum paarkkalaam" MGR waited for the problem to sort itself out.
    But in most households the DIL is the sufferer.

    10. Why ceasarian ? there are plenty of other methods including outsourcing !
    I really pity the households in which the mothers do not care to cook for the family even if the quality is wanting. Each one becomes an expert at some thing or other. Nothing wrong with eating out once in a while but when practiced regularly it gives rise to expenses, contamination, diseases and what not.

    I always insist on cooking at home and never hesitate to chip in with vegetable cutting etc.

    ReplyDelete
  25. ஶ்ரீராம், உங்க "நண்பரின்" பதில்களைப் படிச்சேன். மத்தியானமா மறுபடி அலசிட்டுப் படிக்கிறேன். என்னோட பதிவுகளையும் அவர் கூர்ந்து கவனிக்கிறார் என்பது நான் ஒரு திருமணம் நின்று போனதைக் குறித்துப் பதிவு போட்டதைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொண்டேன். அசந்துட்டேன்! :))))))

    என்னுடைய இந்தப் பதிவின் நோக்கம் ஆண்களைச் சாடுவதோ, பெண்களைச் சாடுவதோ அல்ல. இரு தரப்பிலும் இன்னமும் அநியாயங்கள் நடைபெறுகின்றன. ஆகவே மாறுதல் என்பது மனதில் ஆழத்திலிருந்து வர வேண்டும் என்று சுட்டுவதற்காகவே.

    ஒரு பக்கம் இன்னமும் வரதக்ஷணை கேட்கும் மாமியார், மாமனார்கள், மருமகளைப் படுத்தும் மாமியார் மாமனார்கள் என்றால் இன்னொரு பக்கம் கணவனைப் படுத்தும் மனைவிகளும் இருக்கத் தான் செய்கின்றனர். கணவன் வீட்டினரை அண்ட விடாத பெண்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

    அதே போல் பெண்ணைப் பெற்றவர்கள் அடங்கிப் போன நிலைமையும் மாறி விட்டது. இது வரவேற்கத் தக்கது என்றாலும் இப்போது அவர்கள் ஆடும் ஆட்டமும் கண்டிக்கத் தக்கது.

    எங்க வீட்டுப் "பையர்" ஒருத்தருக்குக் கல்யாணத்துக்குப் பார்த்து வருகின்றனர். சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின்னர் பெண் வீட்டார் "பையரின்" ஃபோட்டோவைக் கேட்க, எங்க வீட்டிலும் கொடுத்துட்டுப் பெண்ணின் ஃபோட்டோவையும் கேட்டிருக்காங்க.

    அதுக்குப் பெண்ணைப் பெத்தவங்க பெண்ணின் ஃபோட்டோவே இல்லை, எடுத்துத் தான் அனுப்பணும்னு சொல்லி இருக்காங்க. தற்செயலாக அந்தப் பெண்ணின் அத்தை என் கணவருக்கு உறவாக அமைய, என் கணவர் அந்த அத்தையிடம் சொல்லி ஃபோட்டோ எடுத்து சீக்கிரமா அனுப்பச் சொல்லுங்கனு ஒரு வார்த்தை சொல்லிட்டார்.

    இதான் சாக்குனு அந்தப் பெண் வீட்டினர் நேரடியாகப் பிள்ளை வீட்டுக்கு வந்து கோபமாய் சண்டை போட்டு, எங்க பொண்ணுக்கு இப்போ நேரம் இல்லை. அவ பிசியான வேலையிலே இருக்கா, எப்போ முடியுமோ அப்போத் தான் எங்களால் ஃபோட்டோ எடுத்து அனுப்ப முடியும். அதுக்குள்ளே நீங்க ஊரெல்லாம் போய்ச் சொல்லறீங்க. உங்க பிள்ளையை விட எங்க பொண்ணு 10,000 ரூபாய் அதிகமாச் சம்பாதிக்கிறா. இதுக்கே உங்களுக்கு இவ்வளவு அவசரம்னா எங்களாலே இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது. எங்க பொண்ணுக்கு இன்னும் பெரிய இடமாப் பார்க்கப் போறோம். னு சொல்லிட்டுப் போயிட்டாங்களாம்.

    இது ஆறு மாசம் முன்னர் நடந்த நிஜமானதொரு நிகழ்வு. :((((((

    இது போல் இன்னும் எத்தனையோ இருக்கு.

    ReplyDelete
  26. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் சில பெண் பிரபலங்கள் நடிகை ஷோபனா, பத்மா சுப்ரமணியம், மல்லிகா சாராபாய் இன்னும் நினைவுக்கு வராத சிலர்.

    இவர்கள் மூவரும் நாட்டியத்துக்கு எனத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

    ReplyDelete
  27. ஆண்கள் அடம்பிடிப்பார்கள் தான்.ஆனால் அவர்களால் இப்படித் தீவிரமாக ஈடுபட முடியாது என்றே நினைக்கிறேன். மேலும் இது ஆணாதிக்க சமூகம், பெண்ணுக்கு இங்கே நியாயம் கிடைப்பதில்லை, நீதி கிடைப்பதில்லை, சமத்துவம் கிடைப்பதில்லை என்றே சொல்லிக் கொண்டிருப்பதால் பெண்களும் செய்யும் தவறுகளைத் தான் சுட்டிக் காட்ட வேண்டுமேயன்றி ஆண்களின் குணத்தைச் சுட்டுவது அல்ல. ஆண்கள் தவறே செய்யாதவர்கள் என்று சொல்வது என் எண்ணமும் இல்லை. ஆனால் ஆண் குடும்பத்தில் பாசம் அதிகமாக இருந்தாலும் ஒட்டியும், ஒட்டாமலும் இருப்பான். வயதாக ஆகத் தான் அவனுக்குக் குடும்பத்தின் தேவையும், புரிதலும் தேவைப்படும். ஆதி முதலே அதைக் கொடுப்பவள் பெண்ணே. குடும்பத்தில் அவள் ஒட்டுவது மட்டும் அல்ல,குடும்பத்தில் தன்னை ஐக்கியமே செய்து கொண்டு விடுவாள். அவள் தான் குடும்பம். குடும்பம் தான் அவள். இதை நினைத்தால் எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணின் மேல் அநாவசியமாகப் பொறாமையோ,கோபமோ கொள்ள முடியாது.

    ReplyDelete