http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html#comment-form
காதல் செய்வதை விட அதைக் கல்யாணம் வரை கொண்டுபோவது
கடினம் எனில் அந்தக் கல்யாணம் நிலைத்திருப்பதும் பெண், பிள்ளை இருவர்
கைகளிலும் இருக்கிறது. அந்த விஷயத்தில் ரகுராமனுக்கும் சரி, ஜானகிக்கும்
சரி மன முதிர்ச்சி கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது. எதையும் எதிர்கொள்ளும்
மனப்பக்குவத்துடன் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராக இருக்கின்றனர். காதலர்
தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த மாறுபட்டக் காதல் கல்யாணம் குறித்துப்
படித்துப் புரிந்து கொள்ள நேர்ந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான
பெண்கள் இன்னமும் வாழ்வதாலேயே அவர்களாலேயே நம் பாரம்பரியமும், கலாசாரமும்,
ஆசார அநுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதும் கொஞ்சமாவது இருந்து
கொண்டிருக்கிறது. இது அவ்வளவு விரைவில் மறையக் கூடிய ஒன்றல்ல என்ற
நம்பிக்கையும் ஏற்படுகிறது.
முதல் பரிசை வாங்கிக்கொடுத்த விமரிசனம். இதை விட அழகாகத் திரு ரமணி அவர்கள் விமரிசனம் உள்ளது என்பதும், நம்ம டிடி அந்தப் பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியின் விமரிசனமும் போட்டியில் கலந்து கொள்ளாத ஒரு ந்பரால் எழுதப்பட்டுள்ளது. என்பதும் பார்க்கையில் எனக்குக் கிடைத்துள்ள முதல் பரிசை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அந்த ந்பர் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் முதல் பரிசைத் தட்டி இருப்பார். மீண்டும் வைகோவுக்கும் விமரிசனம் எழுதச் சொல்லிக் கொடுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வங்கி வேலை கிடைப்பதை விடக் கடினமானது அதைச் சரியாக நிறைவேற்றுவது.
இங்கே ஜானகி வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வண்னம் சேவையில் சிறந்தவளாக
இருக்கிறாள். இதிலிருந்தே அவளைப் பற்றி ஒரு மாதிரிப் புரிய ஆரம்பிக்கிறது.
இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக வங்கிக்கு
நற்பெயர் வாங்கிக் கொடுக்கும் விதத்தில் வாடிக்கையாளருக்குச் சேவை
செய்கிறாள். அங்கே எத்தனையோ வாலிபர்கள் வந்து போனாலும் அவர்கள் எவரையும்
இவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாருடனும் சகஜமாகப் பழகினாலும் தன் எல்லை எது
எனப் புரிந்து வைத்திருக்கிறாள்.
அப்போது தான் வருகிறார் ரகுராமன். பெயர்ப் பொருத்தமே
அசத்தல். ரகுராமன் - ஜானகி. என்றாலும் முதலில் அப்படி எல்லாம் எதுவும்
நடக்கவில்லை. சாதாரண வாடிக்கையாளராகத் தான் இருந்திருக்கார். ஆனால்
அவருக்கு வங்கி குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாது, முழுமையாக ஜானகியை
நம்பி வங்கியில் வாடிக்கையாளராகச் சேர்கிறார். ஜானகியும் ஒரு வங்கிக்
காசாளராகவே அவருக்கு வேண்டிய உதவிகள் செய்கிறாள்.
ரகுராமனைக் குறித்து ஜானகி அறிய நேர்ந்தது அவங்க
வீட்டில் நடந்த ஏதோ ஒரு சுப நிகழ்வில். வந்தவர் வைதிக பிரமசாரி என
அறிகிறாள் ஜானகி. குடும்பப் பாரம்பரியத்தின் மேலும் கலாசாரத்தின் மேலும்
ஓர் ஆழமான பிடிப்பு அவள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
முழுதும் மறையவில்லை. ஆனால் அது வெளிப்பட நேர்ந்தது ரகுராமனை ஜானகி
சந்தித்த பின்னர் தான். முதலில் அவருடைய படிப்பிலும், வித்வத்திலும்
ஏற்பட்ட பிரமிப்பில் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நினைத்தவள்,
தொடர்ந்து அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என நினைக்கிறாள். இது
தான் காதல். இது ரகுராமன் மனதிலும் பிரதிபலிக்கிறது.
ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரைப் பார்த்ததும், அவர்கள் மனதில்
உடனடியாகத் தோன்றுவது மாற்றுப் பாலினத்திடம் சாதாரணமாக ஏற்படும்
இனக்கவர்ச்சியே. ஆனால் காதல் என்பது பெண்ணின் மனதில் தோன்றும் அதே சமயம்
அதன் பிரதிபலிப்பு அவள் காதலிக்கும் அந்த ஆணிடமும் தோன்ற வேண்டும். இது
வயது வித்தியாசம் பார்க்காது, படிப்போ, வேலையோ, அழகோ, பணமோ எதுவும்
பார்க்காது. ஒருவரை ஒருவர் பார்ப்பதிலும், நினைப்பதிலுமே மனம் சந்தோஷம்
அடையும். ரகுராமன் நவநாகரிக இளைஞரே அல்ல. வங்கியிலோ, அல்லது வேறெங்குமோ
வேலை செய்யவில்லை. இந்தக்கால நவநாகரிக உடைகள் அணிபவரும் அல்ல. இத்தனையும்
மீறி ஆசார, அநுஷ்டானங்களைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ரகுராமன்
நவநாகரிகப் பெண்ணான ஜானகியின் மனதைக் கவர்ந்ததோடு அல்லாமல் அது கல்யாணம்
வரைக்கும் போய்விட்டது.
ஜானகிக்குத் தன் படிப்பெல்லாம் வெறும் ஏட்டுப்படிப்பு.
ரகுராமன் படிப்புத் தான் உண்மையில் வாழ்க்கைக்குப் பலன் தரக்கூடியது என்று
புரிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறது. இந்தக்கால இளைஞர்களின் போக்கும்
அவளுக்குப் பிடிக்கவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கும்
இந்த வாழ்க்கையை வெறுக்கிறாள். அதே சமயம் வங்கி வேலையை விடவும் தயாரில்லை.
சுகமான வாழ்க்கைக்குப் பணம் தேவைனு இருவரும் தெரிந்து கொண்டு தேவையான
பணமும் சேர்த்துக் கொண்டு பின்னரே கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதுவும்
ஜானகியின் பெற்றோர், உற்றார், உறவினரின் முழு சம்மதத்தோடு.
காதல் செய்வதால் இருவரும் ஊர் சுற்றவில்லை. ஹோட்டல்,
சினிமா, பார்க்குனு உட்கார்ந்து பேசலை. ரகுராமன் வங்கிக்குப் பணம் போட
வருகையிலே பார்ப்பது தான். அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.
எல்லாவற்றிலும் ஒரு நிதானம், அவசரமின்மை, திட்டமிடுதல், தேர்ந்தெடுத்துச்
செய்தல் என இருவரும் எல்லாவிதத்திலும் ஒத்துப் போய்க் கடைசியில் திருமணமும்
செய்துக்கறாங்க. கல்யாணம் ஆகிவிட்டது என்றாலும் வங்கி வேலையை விடாமல் அதே
சமயம் பாரம்பரியப் பழக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துத் தன் குல
வழக்கப்படி மடிசாருடன் வங்கி வேலைக்கு வந்து செல்கிறாள் ஜானகி. இதற்காக
வெட்கப்படவில்லை என்பது இங்கே முக்கியம். இப்போது அவளைப்
பார்ப்பவர்களுக்கும் மன நிறைவு. நமக்கும் மன நிறைவு.
பெண்ணால் தான் குடும்ப வழக்கங்கள், குல ஆசாரங்கள்
கடைப்பிடிக்கப்படும். ஆகவே அந்தப் பெண்ணுக்கு இப்படியான ஆசாரங்களையும்,
குடும்ப வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர் மாப்பிள்ளை ஆவதற்கு உதவும்
பெண்ணின் தாயும் போற்றுதலுக்குரியவரே. அவர் தன் வளர்ப்பு சரியானது என்பதை
அறிந்து கொண்டு மகிழ்ச்சியே அடைகிறார். தாயும், பெண்ணும் ஒரு தோழி போல்
மனம் விட்டுப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்வது இங்கே
கூர்ந்து கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு தாயும் தன் பெண்ணை எப்படி வளர்க்க
வேண்டும், அவள் கல்யாண வயதில் எப்படி அவளிடம் மனதைப் புரிந்துகொள்ளும்படி
பேச வேண்டும் என்றெல்லாம் இந்தத் தாயிடமிருந்து அறிய முடிகிறது.
திருமணத்தில் பெண்ணின் விருப்பம் எவ்வளவு முக்கியம் என்பதும் இங்கே புரிய
வருகிறது. குடும்ப வாழ்க்கையில் பெற்றோர் தலையிடும் இல்லை. ஒருவரை ஒருவர்
அநுசரித்துப் போகாமல் நினைத்தால் சண்டை, பிறந்த வீடு செல்வது, உடனே
விவாகரத்து என இருக்கும் இந்தக்கால கட்டத்துக்குத் தேவையான கதை.
முதல் பரிசை வாங்கிக்கொடுத்த விமரிசனம். இதை விட அழகாகத் திரு ரமணி அவர்கள் விமரிசனம் உள்ளது என்பதும், நம்ம டிடி அந்தப் பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியின் விமரிசனமும் போட்டியில் கலந்து கொள்ளாத ஒரு ந்பரால் எழுதப்பட்டுள்ளது. என்பதும் பார்க்கையில் எனக்குக் கிடைத்துள்ள முதல் பரிசை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அந்த ந்பர் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் முதல் பரிசைத் தட்டி இருப்பார். மீண்டும் வைகோவுக்கும் விமரிசனம் எழுதச் சொல்லிக் கொடுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
மிகவும் மகிழ்ச்சி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி டிடி. இங்கே தமிழ் அடிக்கக் கஷ்டமக இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியலை! :)
ReplyDeleteவாழ்த்தும் பூங்கொத்தும்!!
ReplyDelete//இங்கே தமிழ் அடிக்கக் கஷ்டமக இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியலை! :)//
ReplyDeleteபாவங்க தமிழ். ஏன் அடிக்கிறீங்க??
காகாகா பழமை, மாத்திடறேன்.:))))
ReplyDeleteதமிழ் அடிக்கக்
ReplyDeleteதட்டச்ச//என்று படிக்கவும். :)))) பழமைக்கு நன்றி.
நான் பயந்தேன்.. பழமைபேசி சொல்லிட்டாரு.
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதா மேடம்.
ReplyDeleteமுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் ஏற்று, தனிப்பதிவாக வெளியிட்டு அமர்க்களப்
ReplyDeleteப டு த் தி யுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
YOU ARE WELL DESERVED FOR IT.
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
எனக்குத்தகவல் தெரியாததால் என் வருகை சற்றே தாமதமாகிவிட்டது.
என் டேஷ்-போர்டில் பெரும்பாலும் ஒன்றுமே தெரிவது இல்லை. நான் வெளியிடும் பதிவுகளும் தெரிவது இல்லை. ஒருவிதத்தில் நிம்மதியாக உள்ளது.
இதுபோன்ற சிறப்புப்பதிவுகள் வெளியிடும்போது எனக்கு மெயில் மூலம் தகவல் தாங்கோ.
அன்புடன் கோபு
@அப்பாதுரை! :P
ReplyDeleteநன்றி ராஜலக்ஷ்மி.
ReplyDeleteவைகோ சார், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இனி தகவல் கொடுக்கிறேன்.:)
ReplyDeleteவிமரிசனப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விமரிசனம் எழுதுபவர் மீதிக்கதையும் எழுதலாமே.
ReplyDeleteமுதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிரு வை.கோ. அவர்களின் தளத்திலும் படித்து ரசித்தேன்!
ஜிஎம்பி சார், கதையைப் படிச்சுட்டு விமரிசனம் எழுதுவதற்கும் ஒரு கதையையே எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கே! :))) என்றாலும் முயற்சி செய்யறேன். :)))
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.
ReplyDeleteமுதல் பரிசுக்கு பாராட்டுக்கள்!
ReplyDelete