அப்பாடா!!!!!!!! :))))))
நல்லவேளையா யாரும் பார்க்கலை. அ.கு.வா பப்ளிஷ் ஆகி இருக்கு ஒத்தை வரியோட! :)))) ஒரு வழியா ஊர் சுத்திட்டு இன்னிக்கு மத்தியானமாத் திரும்பி யதாஸ்தானம் வந்தாச்சு. அங்கே ஒரே குளிர், இங்கே வெயில் சுளீர்!!! அங்கே சூரியன் அடம் பிடிக்கும் பள்ளிக் குழந்தை போர்வைக்குள்ளிருந்து அரைக்கண்ணைத் திறந்து அம்மா என்ன செய்யறானு பார்த்துட்டுத் திரும்பப் போர்வையால போர்த்திக்கிறது போல அவ்வப்போது விளையாட்டுக் காட்டுகிறான்.
இங்கேயோ ஆசிரியர், மாணவ, மாணவிகளுக்கு முன்னால் வெகு சீக்கிரம் வந்து நின்று கொண்டு எல்லாரும் நேரத்துக்கு வராங்களானு சோதிக்கும் தலைமை ஆசிரியரைப் போலக் கடுமையாகச் சுட்டெரிக்கிறான். பருவங்கள் ஒரே நாட்டில் எப்படி மாறி, மாறி இருக்கிறதுனு நினைச்சாலே ஆச்சரியமாத் தான் இருக்கு. இன்னும் பிரயாண அலுப்புத் தீரவில்லை. ஒரு சில பதிவுகள் ஜி+இல் பகிர்ந்தவையும், மடலில் வந்தவையும் மட்டும் பார்த்தேன். மூணு நாளாச்சு கணினி கிட்டே வந்து. அதோடு இணையமும் அங்கே வேகம், வேகம், வேகம். இங்கே சொதப்பல், சொதப்பல், சொதப்பல். :)))) மெல்ல மெல்ல மற்ற விஷயங்களுக்கு வருவோமா?

ReplyDeleteவருக வருக வலது கையை எடுத்து வைத்து தருக ( பதிவுகள். கூடவே மீதிக்கதை ,,,,!)
சீக்கிரம் வாங்க அம்மா...
ReplyDeleteவந்தாச்சா மாமி.. பொறுமையாக வாருங்கள். கதைகளை கேட்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅ.கு.வா? அபுரி.
ReplyDeleteஉவமைகளில் கலக்கறீங்க!
விரைந்து வாருங்கள் கணினி பக்கம்.
ReplyDeleteஅ.கு.வா? புரியலையே!
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், முதல் ஆளாக வந்து வரவேற்றதுக்கும், விடாமல் மீதிக்கதை கேட்பதற்கும் நன்றி! :))))
ReplyDeleteவரேன் டிடி. :)
ReplyDeleteவாங்க ஆதி, வருகைக்கு நன்றி.
ReplyDeleteஹாஹா(அப்பாடா, ஒரு வழியா இப்படிச் சிரிக்க வந்துட்டது! பத்து நாளா கா கானு சிரிச்சுப் பல்லெல்லாம் சுளுக்கு! :P)
ReplyDeleteஸ்ரீராம், அ.கு= அவசரக் குடுக்கை.
கிளாஸ் எடுக்கணும் போலிருக்கே! ஒழுங்காப் பழைய பாடமெல்லாம் படிக்கிறதில்லையா? :)))))) ரிவிஷன் டெஸ்ட் கொடுக்கிறேன், இருங்க!
நன்றி ராஜலக்ஷ்மி மேடம்.
ReplyDeleteஹாஹா ரஞ்சனி, வாங்க, வாங்க, அ.கு=வின் அருஞ்சொற்பொருள் ஶ்ரீராமுக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க. :)))
ReplyDeleteதில்லி குளிர் உங்க கணினியையும் படுத்திடுச்சோ! :))))
ReplyDeleteஅதெல்லாம் இல்லை வெங்கட், அந்த கணினியின் செட்டிங்க்ஸ் வித்தியாசமாக இருந்தது. அதோடு தமிழ் ஃபான்ட் இல்லாததால், எல்லாத் தமிழ் இடுகைகளையும் படிக்க முடியவில்லை. சிலது படிக்க முடியும்.பல இடங்களில் வெறும் கட்டம், கட்டமாகவே தெரியும். :)))) நல்லவேளையா சுரதா வேலை செய்ததோடு, என்னோட பதிவுகளையும், மற்றச் சில பதிவுகளையு படிக்க முடிந்தது. :))))
ReplyDelete