"கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை தான். எல்லா ஆண்களுமே பெண்களைப் பார்த்துப் பல்லிளிக்கிறார்கள். அது போல் நீயும். ஆகவே நான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை." என்றாள் அவள்.
"பின்னர் ஏன் என் கடிதத்தை வாங்கிக் கொண்டாய்?" என்று அவன் கேட்க, அவளோ சிரித்துக் கொண்டே, "அது தானே உன்னை மாட்டிவிட எனக்கு இருக்கும் ஒரே ஆதாரம்! ஆகையால் வாங்கிக் கொண்டேன். உன்னிடம் உன் போக்கில் போய் என்ன செய்யப் போகிறாய் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே உனக்கு இணங்கியது போல் நடித்தேன். உங்களுக்கெல்லாம் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் கூப்பிட்டால் உடனே வந்துவிடுவாள் என்ற நினைப்பு! இதுவே உன் அக்காவோ, தங்கையாகவோ இருந்தால்? ஒத்துக் கொள்வாயா?"
"இப்படிப் பார்க்கும் எல்லாப் பெண்களிடமும் உங்களுக்குக் காதல் வந்துவிடுமா? காதல் என்றால் என்ன என்றாவது தெரியுமா? காதலிப்பது அவ்வளவு எளிதா? நீ என்னைக் காதலிக்கிறாய் என்றால் அந்தக் காதல் என் மனதிலும் பிரதிபலிக்க வேண்டாமா? அதன் தாக்கம் என்னுள்ளும் மாற்றங்களை நிகழ்த்த வேண்டாமா? ஏண்டா, என்ன படித்திருக்கிறாய் நீ? என்னை வைத்துக் காப்பாற்றி வாழ்க்கை நடத்தத் தேவையான சம்பாத்தியம் உன்னிடம் இருக்கிறதா? சரி, காதல் செய்கிறாய், கல்யாணமும் செய்து கொண்டுவிடுகிறோம். குழந்தை பிறந்தால் அதுக்குத் தேவையானதை உன்னால் செய்து தர முடியுமா? பிரசவ காலத்தில் மருத்துவமனைக்குச் செலவழிக்கப் பணம் இருக்கா உன் கிட்டே? அன்றாடம் குடித்தனம் நடத்த, வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், தயிர், நெய், உடம்பு சரியில்லை என்றால் தேவையான மருந்துகள் வாங்கப் பணம் வைச்சிருக்கியா?
"
ஏதோ பார்த்துப் பழகியதால் உன்னை நண்பனாக நினைத்தேன். உன்னோடு சிரித்துப் பேசினால் உடனே காதலா? ஏதோ பழகிய தோஷத்துக்குச் சிரித்துப் பேசினால் உடனே கடிதத்தை நீட்டி விடுகிறீர்களே. ஏன் ஐயா, நீ கூப்பிட்ட உடனே எந்தப் பெண்ணும் வருவாள் என்ற எண்ணமா? உங்களுக்கு ஒரு அக்காவோ, தங்கையோ இருந்து அவளுக்கு இப்படி ஒருத்தன் கடிதம் கொடுத்தால் நீங்கல்லாம் எப்படி நடந்துப்பீங்க? "
"போய்யா, போ, போய் உன் வாழ்க்கையில் முன்னேறும் வழியைப் பார். இன்னொரு முறை என்னைப் பார்த்துக் காதல், ஊதல் என்று சொல்லிக் கொண்டு வந்தாயானால், இந்தக் கடிதத்தையும், முன்னர் கொடுத்தாயே துண்டுக் கடிதம், அது எல்லாவற்றையும் போலீஸில் கொடுத்து உன்னை ஈவ் டீசிங்கில் உள்ளே தள்ளச் சொல்லிடுவேன். அதற்கான ஆதாரங்களுக்காகத் தான் இந்தக் கடிதத்தையே வாங்கிக் கொண்டேன். எனக்குக் குடும்பம் முக்கியம். என் பெற்றோர் முக்கியம். அதோடு எனக்குப் படிக்கணும். இன்னமும் படிப்பு இருக்கிறது. நல்லதொரு மருத்துவராக ஆகணும்னு ஆசை. மருத்துவ சேவையில் ஈடுபட நினைக்கிறேன். அதற்கெல்லாம் உன்னால் ஒத்துக் கொண்டு எனக்கு உதவியாக இருக்க முடியுமா? என்னைப் போல் மருத்துவ சேவை செய்யும் ஆணையே கல்யாணம் செய்து கொள்ளவும் எண்ணம். "
" அதே சமயம் என் பெற்றோரின் கருத்துக்கும் மதிப்புக் கொடுத்து அவங்க வேறு மாப்பிள்ளை பார்த்து அவன் எனக்குத் தகுதி என நினைத்தால் அவங்க காட்டும் பிள்ளையை எனக்குப் பிடித்திருந்தால் கல்யாணம் செய்துப்பேன். அந்தச் சமயம் அந்தப் பிள்ளை நீயாக இருந்தால் கூட. அதற்கும் இன்னும் நாலைந்து வருஷம் போகணும். ஆகவே அதுவரையிலும் என்னைத் தொந்திரவு செய்யாதே. பெண்களை நிம்மதியாகப் படிக்கவோ, வேலை செய்யவோ விடுங்கப்பா. உங்கள் மனதில் தோன்றும் பெண்ணாசைக்கு என் படிப்பு, என் லக்ஷியம் முடியும் முன்னே உங்களுக்கு பலியாகச் சொல்லாதீங்க.. கொஞ்சமாவது யோசிங்க. என்னை ஆயுள் வரைக்கும் காப்பாத்திப் பார்த்துக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கானு யோசிங்க. போய்த் தெளிவாக, நிதானமாக யோசிச்சுப் பாருங்க. இப்போ உங்களைப் போக அனுமதிக்கிறேன்."
"போங்கப்பா, உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு. இனி இம்மாதிரியான வேலைகளில் இறங்கும் முன்னர் யோசிங்க!"
வந்த வேகத்தில் அந்தக் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு விர்ரெனப் போய்விட்டாள் சந்தியா.
தொங்கிய முகத்துடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பாபு. அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதோ? ஆனால் கேட்கவில்லை எனில் அவள் மனம் புரிந்திருக்காதே! கேட்டவரையிலும் நல்லது தான். இந்த மட்டோடு விட்டாளே, பிழைத்தேன்! என எண்ணிக் கொண்டான்.
ஆனால் மனதில் ஒரு உறுதி பிறந்தது. எப்படியேனும் வாழ்க்கையில் முன்னேறி இதே சந்தியாவைப் பெண் கேட்டுச் செல்ல வேண்டும். தீர்மானமான முடிவோடு நடந்தான்.

ஒரு டீஸ்பூன்.... இல்லை, இல்லை... ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயில் போட்டாற்போல்....
ReplyDeleteஆறுதலாக தவறாக நினைக்கவேண்டாம் என்று கடைசி வரி!
முந்தைய பின்னூட்டத்தில் கீழ்க்காணும் சிம்பல் இணைக்க மறந்து விட்டேன் :
ReplyDelete:))))))))))))))
@Sriram, :))))))))
ReplyDeleteஅப்படி இல்லை, என்ன இருந்தாலும் அவனை ஏமாளியாகவும், வாங்கிக் கட்டிக் கொண்ட அசடாகவும் காட்ட மனம் வரலை. அதான் அவனுக்கே மனம் மாறி உறுதி பிறந்தது என முடிவை மாத்திட்டேன். முன்னால் வேறே முடிவு வைச்சிருந்தேன். :)))) அதைச் சொல்ல மாட்டேனே!
ReplyDeleteஇதே நம்ம அப்பாதுரை எழுதினார்ன்னா இன்னும் த்ரில்லிங்கா, இன்னும் சுவாரசியமா ஆழமா யோசிச்சு எழுதி இருப்பார். கற்பனை கண்டுக்கலாம். :))))
ReplyDeleteசுபமான முடிவு...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா...
நம்ம பாபு முத்துப்ப்ட்டன் வம்சாவளியோ !
ReplyDeleteஏண்டா, என்ன படித்திருக்கிறாய் நீ? என்னை வைத்துக் காப்பாற்றி வாழ்க்கை நடத்தத் தேவையான சம்பாத்தியம் உன்னிடம் இருக்கிறதா?
ReplyDeleteஅது இருந்தால் ஏன் அவளிடம் கடிதம் கொடுக்கப்போகிறான் ..??
வீட்டில் சொல்லி பெண்கேட்டிருப்பானே..!
இறுதிய்ல் அவனது மன உறுதி மகிழ்ச்சியளிக்கிறது ..!
வாங்க டிடி, காணோமேனு நினைச்சேன்.ஜெயிக்கிறோமோ இல்லையோ, பாவம் அவர் கேட்டுட்டே இருந்தார். அதான் நேத்திக்குப் பெண்கள் தினம் என்பதால் பெண்களுக்கு ஆதரவாகப்புதுமைப் பெண்ணின் நோக்கோடு (ஹிஹிஹி, அப்படினு நான் தான் சொல்லிக்கணும்)எழுதிட்டேன்.
ReplyDeleteவாங்க "இ" சார், இன்னும் முத்துப்பாட்டனை முழுதும் கேட்கலை. :))))
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, நீங்க சொல்றாப்போல் சம்பாத்தியம் இல்லைனா ஏன் காதலிக்கிறாங்க? புரியலை.பொழுது போக்காகவா? நினைக்கவே சரியா இல்லையே! என்னவோ போங்க, இந்தக் கால இளம்தலைமுறையினரின் போக்கே புரியவும் இல்லை, சரியாவும் இல்லை!:(
ReplyDeleteநானும் இந்தக் கதையை கொஞ்சம் அசை போட்டேன்.. எதுவுமே தோணலே.
ReplyDeleteஉங்க முடிவு நல்லா இருக்குங்க.
பெண் படிக்கணும் இதை சாதிக்கணும் அதை சாதிக்கணும்னு எதிர்பார்க்கறது சரி.. அதே வீச்சுல புருஷன் சாப்பாட்டுச் செலவுலந்து எல்லாத்தையும் செஞ்சு தன்னை வச்சுக் காப்பாத்தணும்னு எதிர்பார்க்கறது சரியா?
நல்ல அருமையான முடிவு.பெண்கள் இப்படி இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்லது.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ரசனைக்கு நன்றி.
ReplyDeleteஇப்போ உங்க கேள்விக்கு பதில்:
இன்னும் நம்ம நாட்டில் பெண்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சாலும் உன் சம்பாத்தியத்தில் உன் செலவு; என் சம்பாத்தியத்தில் என் செலவுனு பிரிவினை ஆரம்பிக்கலைனே நினைக்கிறேன். :)))))
அடுத்து என்ன தான் மனைவியும் சம்பாதிச்சாலும் கணவனானவன் மனைவிக்கு அவள் பிறந்த நாள், தங்கள் திருமண நாள், முக்கியமான பண்டிகைகளில் ஏதாவது வாங்கித்தரவாவது கையில் கொஞ்சம் காசு இருக்க வேண்டாமா? அட, ஒரு குழந்தையே பிறந்ததுனு வைச்சுக்குங்க, அந்தக் குழந்தைக்கு அப்பான்ற முறையிலே எதுவானும் வாங்கிக் கொடுக்க வேண்டாமா? :))))
அடுத்து இப்போக் கதையின் சூழலை நான் அமைத்திருக்கும் விதம் இருவரும் இன்னும் படிப்பை முடிக்கலை. படிப்புக்கே பெற்றோர் ஆதரவுடன் இருப்பதாகத் தான் அமைத்துள்ளேன். ஜிஎம்பி சார் எப்படி வைச்சிருக்கார்னு கவனிக்கலை.
ஆகவே இப்படி இருக்கும் இருவர் கல்யாணம் செய்துகொள்ளும் முன்னர் யாரானும் ஒருத்தருக்காவது சம்பாத்தியம் இருக்கணும். அது ஆணுக்கு இருந்தது எனில் கொஞ்சமானும் கெளரவம். இல்லை எனில் அந்தப் பெண்ணே அவனை மதிக்கமாட்டாள். இது நடைமுறை!
வாங்க ராஜலக்ஷ்மி, பல வீடுகளிலும் பெண்களின் காதலினால் பெற்றோர் மட்டுமில்லாமல் பின்னர் கல்யாணம் செய்து கொண்டு அந்தப் பெண்களும் படும் அவஸ்தையை நினைத்தே இப்படி ஒரு முடிவை யோசித்தேன். இரண்டு, மூன்று முடிவுகள் யோசித்ததில் இது பரவாயில்லை என்று பட்டது.
ReplyDeleteநல்ல முடிவு! :)
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....
நன்றி வெங்கட், முடிவை அறிவிச்சாச்சுனு தெரிய வந்தது. ஜிஎம்பி சார் பதிவிலே பார்க்கணும், பாலகணேஷ் பதிவிலே எதுவும் காணோம்.:))))
ReplyDelete