இந்திய பாகிஸ்தானின் எல்லை மற்ற மாநிலங்களில் பிரிகிறாப்போல் இங்கே பஞ்சாபில் பிரியாது. இந்த எல்லைப் பகுதியின் ஒரே தரை வழி வாயில் இங்கே தான் உள்ளது. அடாரி என இந்தியாவிலும் வாகா என பாகிஸ்தானிலும் அழைக்கப்படும் இந்த இடம் மிக முக்கியமான ஒன்று. ராட்க்ளிஃப் ஏற்படுத்திய எல்லைக் கோடு இங்கே தான் குறுக்கே சென்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கிறது. இதன் மூலம் ஒன்றாக இருந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிந்து கிழக்குப் பகுதி இந்தியாவுக்கும், மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கும் சென்றது. இந்த எல்லையானது பாகிஸ்தானின் லஹோரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கிறது. இந்த கிராமம் 1947 இல் பிரிந்தது. இதன் பாகிஸ்தான் பகுதியே வாகா என அழைக்கப்படுகிறது இந்தியப் பகுதியை அடாரி என அழைக்கின்றனர்.
இங்கே இந்தியத் தரப்பில் நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல் காத்து வருகிறார்கள். இந்திய பாகிஸ்தான் எல்லையின் ஒரே தரைவழியிலான எல்லை இங்கே மட்டுமே அமைந்துள்ளது. கிராண்ட் ட்ரங்க் ரோடு எண் ஒன்று என அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையும் இங்கே அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய நெடுஞ்சாலையாகச் சொல்லப்படுகிறது.
இந்திய பாகிஸ்தானின் வியாபார வாயிலுக்கான நுழைவிடமும் இங்கே அமைந்துள்ளது. இந்தியப் பகுதியில் இந்தியாவின் சென்ட்ரல் வேர்ஹவுசிங்கினால் ஏற்படுத்தப்பட்ட மஹாப் பெரிய கிடங்குகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் சிமென்ட், கற்கள், ஜல்லி, பெரிய பாறைகள் போன்ற வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள், ஆஃப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியே வரும் உலர் கொட்டைகள், திராக்ஷைகள் போன்றவையும் பாகிஸ்தானின் பிரபலமான உப்பும், வெள்ளியும் இங்கே வந்து சேர்ந்து பின்னர் வியாபாரிகளுக்குப் போய்ச் சேருகின்றன. இந்த இடங்களை எல்லாம் பார்த்தோம். ஆனால் இங்கே ஃபோட்டோ எடுக்க முடியாது. எடுக்கக் கூடாது. இங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் அடாரி எனப்படும் எல்லைக் கிராமம்.
சம்ஜெளதா விரைவு ரயில் வண்டி இந்த அடாரியில் இருந்து தான் பாகிஸ்தானின் வாகாவுக்குச் செல்கிறது. தற்போது இந்திய பாகிஸ்தானின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளன. ஆனால் முதல் முதலாகப் பாகிஸ்தான் பிரிந்த போது அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆனவை எல்லைப் பகுதி ரயில்வழியாக ஒரு ரயில் முழுதும் இறந்தவர்களின் பிணங்கள். அதன் பின்னரும் இரு பக்கமும் இறுக்கமான நிலைமையே நீடித்துத் தற்போது தான் 2006-க்குப் பின்னர் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. தொடர்ந்து சுமுகமான நிலைமை நீடிக்கப் பிரார்த்திப்போம்.
இந்த எல்லையில் தான் தினம் தினம் காலையில் இந்தியப் பகுதியில் தேசியக் கொடியும், பாகிஸ்தான் பகுதியில் அவங்க கொடியும் ஏற்றப்படுகின்றது. அதை தினம் தினம் மாலை கொடியை ஒரே சமயம் இறக்குகின்றனர். இது கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே நடைபெறுகிறது. தினம் தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் இங்கே வந்து இதைப் பார்த்துச் செல்கின்றனர். அதுவும் இந்தியத்தரப்பில் தான் அதிகமான அளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் என வருகின்றனர் என்பதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தியத் தரப்பிலேயே அதிகம் வருகின்றனர். இனி இதைக் குறித்து படங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலுள்ள இரு படங்களுக்கு நன்றி விக்கிபீடியா! கீழுள்ள படம் நான் எடுத்தது. இந்தியத் தரப்பு வாயிலையும் அது பூட்டப்பட்டிருப்பதையும் காட்டுகிறது. பின்னால் தெரிவது லஹோரின் நுழைவாயிலும் அதன் மேல் பாகிஸ்தான் கொடி பறப்பதும்.
இங்கே இந்தியத் தரப்பில் நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல் காத்து வருகிறார்கள். இந்திய பாகிஸ்தான் எல்லையின் ஒரே தரைவழியிலான எல்லை இங்கே மட்டுமே அமைந்துள்ளது. கிராண்ட் ட்ரங்க் ரோடு எண் ஒன்று என அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையும் இங்கே அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய நெடுஞ்சாலையாகச் சொல்லப்படுகிறது.
சம்ஜெளதா விரைவு ரயில் வண்டி இந்த அடாரியில் இருந்து தான் பாகிஸ்தானின் வாகாவுக்குச் செல்கிறது. தற்போது இந்திய பாகிஸ்தானின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளன. ஆனால் முதல் முதலாகப் பாகிஸ்தான் பிரிந்த போது அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆனவை எல்லைப் பகுதி ரயில்வழியாக ஒரு ரயில் முழுதும் இறந்தவர்களின் பிணங்கள். அதன் பின்னரும் இரு பக்கமும் இறுக்கமான நிலைமையே நீடித்துத் தற்போது தான் 2006-க்குப் பின்னர் கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. தொடர்ந்து சுமுகமான நிலைமை நீடிக்கப் பிரார்த்திப்போம்.
இந்த எல்லையில் தான் தினம் தினம் காலையில் இந்தியப் பகுதியில் தேசியக் கொடியும், பாகிஸ்தான் பகுதியில் அவங்க கொடியும் ஏற்றப்படுகின்றது. அதை தினம் தினம் மாலை கொடியை ஒரே சமயம் இறக்குகின்றனர். இது கிட்டத்தட்ட ஒரு விழாவாகவே நடைபெறுகிறது. தினம் தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் இங்கே வந்து இதைப் பார்த்துச் செல்கின்றனர். அதுவும் இந்தியத்தரப்பில் தான் அதிகமான அளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் என வருகின்றனர் என்பதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தியத் தரப்பிலேயே அதிகம் வருகின்றனர். இனி இதைக் குறித்து படங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலுள்ள இரு படங்களுக்கு நன்றி விக்கிபீடியா! கீழுள்ள படம் நான் எடுத்தது. இந்தியத் தரப்பு வாயிலையும் அது பூட்டப்பட்டிருப்பதையும் காட்டுகிறது. பின்னால் தெரிவது லஹோரின் நுழைவாயிலும் அதன் மேல் பாகிஸ்தான் கொடி பறப்பதும்.
தகவல்கள் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஏதோ ஒரு முரளி (நடித்த) படத்தில் கூட இந்த இடத்தைக் காட்டுவார்கள். பார்த்திருக்கிறேன்!
ReplyDeleteமுரளி சிம்ரன் படம் ஸ்ரீராம்.பார்டர் பார்க்கும்போதெ மிரள்கிறமாதிரி விறைப்பாக இருப்பார்கள். இன்னோரு இந்திசினிமா வீர்சரா என்று நினைக்கிறேன்.அதிலும் இரு பக்க மக்களின் வருத்தங்களைக் காண்பித்திருப்பார்கள். நல்ல பதிவு நன்றி கீதா.
ReplyDeleteபல தகவல்களுக்கு நன்றி அம்மா... இன்னும் நிறைய படங்களை எதிர்ப்பார்க்கிறேன்...
ReplyDeleteசுருக்கமான, முக்கியமான தகவல்களை மட்டுமே கொடுத்திருக்கேன் தளிர் சுரேஷ். வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், என்ன படம்?? நான் பார்த்ததுஇல்லை. கீழே ரேவதி சொல்லி இருக்காங்க. :)
ReplyDeleteவாங்க ரேவதி, பல நாட்களாய்க் காணலையேனு நினைச்சுப்பேன். வரவுக்கு நன்றி. பார்டர் னு ஹிந்திப் படம் கூட வந்திருக்குனு நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க டிடி, வீடியோவா எடுத்திருக்கணும். காமிராவில் அதைக் கொண்டு வரத் தெரியலை. :( முன் ஒரு முறை தற்செயலா எதையோ அமுக்க வீடியோ வந்தது. அன்னிக்கு வரலை. படங்கள் இன்னமும் இருக்கின்றன.
ReplyDeleteஅங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது ரொம்பவே நன்றாக இருக்கும்.......
ReplyDeleteபடங்களும் நன்று.
நன்றி வெங்கட்.
ReplyDelete