டெல்லி சலோ!
இங்கே விட்டிருந்தேன். சரியாக ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதலில் ட்ரம்பெட் ஊத, இரண்டு பெண் அதிகாரிகள் அணி வகுத்து வந்தனர்.
பெண் அதிகாரிகள் செல்கின்றனர்.
அவங்க இரண்டு பேரும் அந்த வாயிலுக்கு அருகே போய் நின்று கொண்டு தங்கள் வலக்காலைத் தூக்கி சல்யூட் கொடுத்தனர். வலக்கால் தூக்கினதுன்னால் எப்படினு நினைக்கறீங்க? நடராஜரின் ஊர்த்துவ தாண்டவம் போல வலக்கால் தலை உச்சியைப்போய்த் தொட்டது. அதே போல் இடக்காலும். பின்னர் அவர்கள் விறைப்பாக நின்று கொள்ள, மேலும் ஆறு ஆண் அதிகாரிகள் அணிவகுப்பில் வந்து இரு பக்கமும் அதே போல் காலைத் தூக்கி மரியாதை செய்துவிட்டு நின்றனர்.
ஆண் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு
இங்கிருந்து ஒருவரும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒருவரும் இரு வாயில்களுக்கும் இடையிலிருக்கும் பொதுவான இடமான நோ மேன்ஸ் லான்ட் பக்கம் போனார்கள். மற்றவர்கள் அணிவகுப்பை முடித்துக் கொண்டு இருபக்கமும் நின்று கொண்டனர். பின்னர் ட்ரம்பெட் முழங்க ஆரம்பித்தது.
இது அத்தனையும் இந்தியப் பகுதியில் நடைபெறும் அதே நேரம் அங்கே பாகிஸ்தான் பகுதியிலும் நடைபெறுகிறது. இருபக்கமும் ஒரே சமயம் வாயில் திறக்கப்படுகிறது. இப்போது ஒலி பெருக்கியில் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் சொல்லிவிட்டு, கொடியை இறக்கப் போவதால் அனைவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஆகவே அனைவரும் எழுந்து நின்றோம்.
கதவு திறக்கப்படுகிறது.
கொடி இறக்குவதற்கு உரிய முறையில் ட்ரம்பெட் இசைக்க இரண்டு பக்கத்துக் கொடியும் ஒரே சமயம் இறக்கப் படுகிறது. நாங்கள் அமர்ந்திருந்த பகுதியில் கதவின் எதிர்ப்பக்கம் இந்தியக் கொடியும் எங்கள் பக்கக் கதவின் பக்கம் பாகிஸ்தான் கொடியும் இருந்தது. இரண்டும் ஒரே சமயம் கீழே இறங்கி முழுவதும் இறக்கப்படும்போது ஒரு நொடி உரசிக் கொள்வது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த நொடியைப் படம் பிடிக்க முடியவில்லை. எல்லாரும் எழுந்து நின்றது ஒரு காரணம் மட்டுமில்லாமல் இடத்தை விட்டு அசையக் கூடாது என்ற நிபந்தனை வேறு. மேலும் இம்மாதிரி நடைபெறும் என்பதை எதிர்பாராததால் தயாராக இல்லை என்பதும் சேர்ந்து கொண்டது.
நடுவில் கொடிகளைத் தாங்கிச் செல்லும் ராணுவ வீரரும், அவருக்கு முன்னும், பின்னும் இரு ராணுவ வீரர்கள் அணி வகுத்துச் செல்வதும்.
பின்னர் கொடி தக்க மரியாதைகளுடன் உரிய முறையில் மடிக்கப்பட்டு ஒரு ராணுவ வீரரின் கைகளில் மிகவும் மரியாதையுடன் வைக்கப்பட்டது. பின்னர் எல்லைப்பாதுகாப்புப் படைக்கு உரிய கொடியையும் இருபக்கமும் அதே மரியாதையுடன் இறக்கினர். ஏற்கெனவே தேசியக் கொடியைக் கையில் வைத்திருப்பவரின் கைகளிலேயே அந்தக் கொடியும் மடித்து வைக்கப்பட்டது. கைகளை நீட்டிய வண்ணம் கொடிகளைப் பிடித்துத் தாங்கிய வண்ணம் அந்த வீரர் நடுவில் அணிவகுப்பில் வர, மற்ற வீரர்கள் முன்னும், பின்னுமாக அவரோடு அணி வகுத்துச் சென்றனர். அது வரை ட்ரம்பெட் முழங்கிக் கொண்டு இருந்தது. வாயிலைத் திறந்து கொண்டு சென்ற இரு ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு முகமன் கூற பின்னாலேயே நடந்து இந்தியப் பகுதிக்கு நம் வீரரும், பாகிஸ்தான் பகுதிக்கு அந்த வீரரும் செல்ல இருபக்கத்து வாயிலும் மூடப் பட்டது. கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என முழங்கக் கொடி அணி வகுப்பில் உரிய இடம் போய்ச் சேர்ந்தது. கூட்டம் சந்தோஷத்தோடும், பெருமையோடும் கலைய ஆரம்பித்தது. கூட்டத்தில் நெரிசல் இருக்குமோனு நினைச்சேன். ம்ஹூம், கப்சிப். அதெல்லாம் எதுவுமே இல்லை. ஜம்முனு தான் எங்க கார் நின்னுட்டு இருந்த இடத்துக்குப் போனோம்.
காரில் ஏறிக் கொண்டு சென்ட்ரல் வேர் ஹவுசிங் அலுவலகம் வந்து மைத்துனரின் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு எங்கள் கைப்பைகளை எடுத்துக் கொண்டு தங்கி இருந்த இடத்துக்குச் சென்றோம். டிரைவரிடம் மறுநாள் பொற்கோயில், ஜலியாவாலா பாக் பார்க்க நேரம் ஏற்பாடு செய்துவிட்டு அங்கே போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாப்பிட்டுட்டு வந்து படுத்தோம். மறுநாள் காலை தேநீர் அறைக்கே வந்தது. அதே போல் காலை ஆகாரமும் வேண்டுமானு கேட்டாங்க. ரங்க்ஸ் ஆலு பரோட்டாவும், எனக்கு சாதா பரோட்டாவும் சொன்னோம். எட்டரைக்கெல்லாம் அதையும் கொடுத்தாங்க. சைட் டிஷ் எதுவும் இல்லை. தயிர் மட்டும் ஒரு பெரிய பாத்திரம் நிறையக் கிட்டத்தட்ட அரைலிட்டர் இருக்கும். கொடுத்தாங்க. அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டுத் தேநீரும்வாங்கிக் குடித்துவிட்டு சாமான்களைப் பாக்கிங் செய்து கொண்டு கீழே இறங்கி அறையைக் காலி செய்து (பனிரண்டு மணி ஆகிவிட்டால் இன்னொரு 1,200 ரூ. கொடுக்கணும்) அங்கேயே ரிசப்ஷனில் உட்கார்ந்து வண்டிக்குக் காத்திருந்தோம். வண்டியும் வந்தது. முதலில் ஜலியாவாலா பாக்கில் இறக்கிவிட்டார் டிரைவர்.
இன்னும் சில படங்கள் நாளை பகிர்கிறேன். மின்வெட்டுக் கடுமையாக இருப்பதால் இணையத்துக்கு வருவது கடினமாக இருக்கிறது. :(
இங்கே விட்டிருந்தேன். சரியாக ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதலில் ட்ரம்பெட் ஊத, இரண்டு பெண் அதிகாரிகள் அணி வகுத்து வந்தனர்.
அவங்க இரண்டு பேரும் அந்த வாயிலுக்கு அருகே போய் நின்று கொண்டு தங்கள் வலக்காலைத் தூக்கி சல்யூட் கொடுத்தனர். வலக்கால் தூக்கினதுன்னால் எப்படினு நினைக்கறீங்க? நடராஜரின் ஊர்த்துவ தாண்டவம் போல வலக்கால் தலை உச்சியைப்போய்த் தொட்டது. அதே போல் இடக்காலும். பின்னர் அவர்கள் விறைப்பாக நின்று கொள்ள, மேலும் ஆறு ஆண் அதிகாரிகள் அணிவகுப்பில் வந்து இரு பக்கமும் அதே போல் காலைத் தூக்கி மரியாதை செய்துவிட்டு நின்றனர்.
இங்கிருந்து ஒருவரும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒருவரும் இரு வாயில்களுக்கும் இடையிலிருக்கும் பொதுவான இடமான நோ மேன்ஸ் லான்ட் பக்கம் போனார்கள். மற்றவர்கள் அணிவகுப்பை முடித்துக் கொண்டு இருபக்கமும் நின்று கொண்டனர். பின்னர் ட்ரம்பெட் முழங்க ஆரம்பித்தது.
இரு புறமும் வரிசையாக நிற்கும் ராணுவ வீரர்கள்
இது அத்தனையும் இந்தியப் பகுதியில் நடைபெறும் அதே நேரம் அங்கே பாகிஸ்தான் பகுதியிலும் நடைபெறுகிறது. இருபக்கமும் ஒரே சமயம் வாயில் திறக்கப்படுகிறது. இப்போது ஒலி பெருக்கியில் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் சொல்லிவிட்டு, கொடியை இறக்கப் போவதால் அனைவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஆகவே அனைவரும் எழுந்து நின்றோம்.
கொடி இறக்குவதற்கு உரிய முறையில் ட்ரம்பெட் இசைக்க இரண்டு பக்கத்துக் கொடியும் ஒரே சமயம் இறக்கப் படுகிறது. நாங்கள் அமர்ந்திருந்த பகுதியில் கதவின் எதிர்ப்பக்கம் இந்தியக் கொடியும் எங்கள் பக்கக் கதவின் பக்கம் பாகிஸ்தான் கொடியும் இருந்தது. இரண்டும் ஒரே சமயம் கீழே இறங்கி முழுவதும் இறக்கப்படும்போது ஒரு நொடி உரசிக் கொள்வது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த நொடியைப் படம் பிடிக்க முடியவில்லை. எல்லாரும் எழுந்து நின்றது ஒரு காரணம் மட்டுமில்லாமல் இடத்தை விட்டு அசையக் கூடாது என்ற நிபந்தனை வேறு. மேலும் இம்மாதிரி நடைபெறும் என்பதை எதிர்பாராததால் தயாராக இல்லை என்பதும் சேர்ந்து கொண்டது.
பின்னர் கொடி தக்க மரியாதைகளுடன் உரிய முறையில் மடிக்கப்பட்டு ஒரு ராணுவ வீரரின் கைகளில் மிகவும் மரியாதையுடன் வைக்கப்பட்டது. பின்னர் எல்லைப்பாதுகாப்புப் படைக்கு உரிய கொடியையும் இருபக்கமும் அதே மரியாதையுடன் இறக்கினர். ஏற்கெனவே தேசியக் கொடியைக் கையில் வைத்திருப்பவரின் கைகளிலேயே அந்தக் கொடியும் மடித்து வைக்கப்பட்டது. கைகளை நீட்டிய வண்ணம் கொடிகளைப் பிடித்துத் தாங்கிய வண்ணம் அந்த வீரர் நடுவில் அணிவகுப்பில் வர, மற்ற வீரர்கள் முன்னும், பின்னுமாக அவரோடு அணி வகுத்துச் சென்றனர். அது வரை ட்ரம்பெட் முழங்கிக் கொண்டு இருந்தது. வாயிலைத் திறந்து கொண்டு சென்ற இரு ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு முகமன் கூற பின்னாலேயே நடந்து இந்தியப் பகுதிக்கு நம் வீரரும், பாகிஸ்தான் பகுதிக்கு அந்த வீரரும் செல்ல இருபக்கத்து வாயிலும் மூடப் பட்டது. கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என முழங்கக் கொடி அணி வகுப்பில் உரிய இடம் போய்ச் சேர்ந்தது. கூட்டம் சந்தோஷத்தோடும், பெருமையோடும் கலைய ஆரம்பித்தது. கூட்டத்தில் நெரிசல் இருக்குமோனு நினைச்சேன். ம்ஹூம், கப்சிப். அதெல்லாம் எதுவுமே இல்லை. ஜம்முனு தான் எங்க கார் நின்னுட்டு இருந்த இடத்துக்குப் போனோம்.
காரில் ஏறிக் கொண்டு சென்ட்ரல் வேர் ஹவுசிங் அலுவலகம் வந்து மைத்துனரின் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு எங்கள் கைப்பைகளை எடுத்துக் கொண்டு தங்கி இருந்த இடத்துக்குச் சென்றோம். டிரைவரிடம் மறுநாள் பொற்கோயில், ஜலியாவாலா பாக் பார்க்க நேரம் ஏற்பாடு செய்துவிட்டு அங்கே போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாப்பிட்டுட்டு வந்து படுத்தோம். மறுநாள் காலை தேநீர் அறைக்கே வந்தது. அதே போல் காலை ஆகாரமும் வேண்டுமானு கேட்டாங்க. ரங்க்ஸ் ஆலு பரோட்டாவும், எனக்கு சாதா பரோட்டாவும் சொன்னோம். எட்டரைக்கெல்லாம் அதையும் கொடுத்தாங்க. சைட் டிஷ் எதுவும் இல்லை. தயிர் மட்டும் ஒரு பெரிய பாத்திரம் நிறையக் கிட்டத்தட்ட அரைலிட்டர் இருக்கும். கொடுத்தாங்க. அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிட்டுத் தேநீரும்வாங்கிக் குடித்துவிட்டு சாமான்களைப் பாக்கிங் செய்து கொண்டு கீழே இறங்கி அறையைக் காலி செய்து (பனிரண்டு மணி ஆகிவிட்டால் இன்னொரு 1,200 ரூ. கொடுக்கணும்) அங்கேயே ரிசப்ஷனில் உட்கார்ந்து வண்டிக்குக் காத்திருந்தோம். வண்டியும் வந்தது. முதலில் ஜலியாவாலா பாக்கில் இறக்கிவிட்டார் டிரைவர்.
இன்னும் சில படங்கள் நாளை பகிர்கிறேன். மின்வெட்டுக் கடுமையாக இருப்பதால் இணையத்துக்கு வருவது கடினமாக இருக்கிறது. :(
இது மிகவும் முக்கியமான மரபு; நிகழ்வு.
ReplyDeleteஊர்த்வ தாண்டவம் தான்..... காலை அப்படித் தூக்கி தரையில் மீண்டும் கொண்டு வரும் போது என்னவொரு வேகம்.....
ReplyDeleteபடங்கள் நன்று.
படங்களுடன் விளக்கமும் அருமை அம்மா...
ReplyDeleteவாகா எல்லை கொடி வணக்கம்!வாழ்க்கையில் காணவேண்டிய ஒன்றும் கூட! அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅங்கே அருகில் வசித்துவந்த உறவுகள் பலமுறைக்கூப்பிட்டும்போக முடியவில்லை தொலைக்காட்சியில்கண்டிருக்கிறேன் அருகில் இரு பக்க வீரர்களும் உரசுவது போல் இருக்கலாம் . ஆனால் தீ பற்றிக் கொள்ளக் கூடாது.
ReplyDeleteவாகா பார்டர் பற்றி என்னவர் சொல்லி கேட்டிருக்கிறேன். தோழி சென்று வந்து காணொளியை காட்டினார்கள்.தேச பக்தி பீறிட்டு கொண்டு எழும் இடமல்லவா... டெல்லி சலோ விடுபட்ட பகுதிகள் அனைத்தையும் படித்து விட்டேன்...:)
ReplyDeleteவருகைக்கு நன்றி "இ" சார்.
ReplyDeleteஆமாம், வெங்கட், காலைத் தூக்கி மீண்டும் தரையில் கொண்டு வரும் வேகம் நேரில் பார்த்தால் தான் புரியும். :)
ReplyDeleteநன்றி டிடி.
ReplyDeleteவாங்க தளிர் சுரேஷ், முடிஞ்சால் ஒரு முறையாவது போய்ப் பாருங்க. ஆகஸ்ட்-செப்டெம்பர், மார்ச்-ஏப்ரல் பத்து தேதிக்குள்ளாக வட மாநிலச் சுற்றுப்பயணத்துக்கு ஏற்ற காலநிலையாக இருக்கும். நாங்க பொதுவா அப்படித் தான் போவோம்.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ஆதி, எல்லாவற்றையும் படிச்சதுக்கு நன்றி. வந்து பல நாட்கள் ஆகின்றன. காணோமேனு நினைச்சேன். :))))
ReplyDeleteவர்ணனைகளில் நேரில் பார்ப்பது போலப் படித்தேன். உணர்ச்சி மயமாய் இருந்திருக்கும். இந்த உணர்வுகள் எப்படி நமக்குள் இறங்குகின்றன என்பது ஆச்சர்யம்! கொஞ்சம் தள்ளிதான் இருந்திருக்கிறீர்கள் போல! படங்கள் லாங் ஷாட்டில் அமைந்து விட்டன! :)))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், வருகைக்கு நன்றி. உண்மையில் இங்கெல்லாம் போகும்போது தேசபக்தி கொழுந்து விட்டுத் தான் எரிந்தது. :)))) கொஞ்சம் தள்ளி இல்லை; ரொம்பவே தள்ளிப் போய்விட்டோம். அதோடு எல்லாரும் எழுந்து நின்றதில் முன்னால் நின்ற ஐம்பது பேர்களும் மறைச்சாங்க! :))))
ReplyDeleteஉங்கள் வர்ணனையைப் படித்து படங்களையும் பார்த்து (புகைப்படங்களை பலமுறை பார்த்தேன்) என்றைக்கு நான் நேரில் காணப்போகிறேன் என்று தோன்றியது.
ReplyDeleteஇந்தியாவிலேயே எத்தனை இடங்கள் பார்க்க வேண்டும்!
வாங்க ரஞ்சனி, ஒரு முறையாவது கிளம்பிப் போய்ப் பார்த்துட்டு வாங்க. :))) ஹிந்தி தான் தெரியுமே உங்களுக்கு. பிரச்னை இல்லை.
ReplyDelete